இந்த முறை பிக்பாஸ் 9 போட்டியாளர்களைப் பார்த்து சமூக வலைதளத்தினர் குறிப்பாய் பேஸ்புக், டிவிட்டர் களங்களில் கரித்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆல் ஓல்ட் பாய்ஸ். இன்ஸ்டாவில் உலாவுகிறவர்களுக்கு கொண்ட்டாமாய் இருக்கிறது என்கிறார்கள். மொத்த நிகழ்ச்சியையும் பார்க்கலாம் என்று ஹாட்ஸ்டாரில் ஆர்ம்பித்தால் அவன் இது தான் சாக்கு என மூணு மணி நேர நிகழ்ச்சிக்கு ஒரு மணி நேரம் விளம்பரம் வாங்கி 10 நிமிஷத்துக்கு ஒரு தரம் விளம்பர இடைவேளை போட ஆரம்பிச்சிட்டான். அதுவும் ஒரே விளம்பரம் ரெண்டு வாட்டின்னா போடா மயிருன்னு க்ளைமேக்ஸுக்கு போய் கூட்டமா உட்கார்ந்திருக்கிறவங்க பேரை படிச்சிட்டு வந்திட்டேன். ரைட். அடுத்த விஷயத்துக்கு வருவோம். நம்ம பலூன் அக்கா, வாட்டர்மெலன், ரெண்டு மூணு டிவி ஸ்டார்ஸ். ஒரு திருநங்கை, அகத்தியன் பொண்ணு, மீனவ இனத்திலேர்ந்து ஒரு பெண், ஒரு அரை குறை சாமியார்னு ஒருத்தன். அவனுக்கு வயசே 25 தான் ஆகுதாம் கல்யாணம் ஆகி 3 பசங்களாம். இந்த ஆளு யூடியூபுல பொண்டாட்டி பத்தி பேசுனதும் பொண்டாட்டி இவனைப் பத்தி பேசுனதும் பார்த்திருந்தாங்க்ன்னா.. நம்ம ப்ரவீன் காந்த். நல்ல காலத்துலேயே டிவி சேனல்ல அந்த கத்து ...