Thottal Thodarum

Apr 10, 2009

ஆனந்த தாண்டவம் – திரைவிமர்சனம்

ananda-thandavam1-500x411
மறைந்த எழுந்தாளர் தல சுஜாதா எழுதிய விகடனில் தொடர்கதையாய் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் நாவல். அதுவும் நாவலின் க்ளைமாக்ஸை மாற்ற சொல்லி கேட்டு வந்த கடிதங்கள் எவ்வளவோ என்றனர். அப்படி பட்ட நாவலை காந்திகிருஷ்ணா இயக்குகிறார் என்றதும் சுஜாதாவின் ரசிகர்களுக்கு எல்லாம் எதிர்பார்ப்பு எகிறி போனதென்னவோ நிஜம் தான். அன்று உன் அருகில் என்கிற நாவலை மிக அழகாய் படமெடுத்தவர்தான் இந்த காந்திகிருஷ்ணா.. அதனால் இன்னும், இன்னும் எதிர்பார்ப்பு.. கூடியது. மொத்தமாய் எதிர்பார்ப்பு பானையை ந்டு ரோட்டில் உடைத்துவிட்டார். என்றுதான் சொல்ல வேண்டும்.

 anandha-thandavam-wallpaper07
வேலை தேடி அலையும் ரகுபதி, பாணதீர்த்ததில் அவனும் அப்பாவும் மட்டுமே இருக்க, உயர் அதிகாரி கோபிநாத்தின் மக்ள் மதுமிதாவை பார்த்த மாத்திரத்தில் ரகுபதி காதலிக்க ஆரம்பிக்க, நிச்சயம் வரை போன காதல், தீடீரென ராட் என்கிற அமெரிக்க ராதாகிருஷ்ணன் புயல் போல வந்து மதுமிதாவை கவர்ந்து போக, சுயமாய் எந்த முடிவும் எடுக்க தெரியாத, விளையாட்டு தனமான மதுமிதா, ராதாகிருஷ்ணன் என்கிறா புயலில் தூக்கி போகப்படுகிறாள். காதலில் தோற்ற ரகுபதி, என்ன முடிவு எடுக்கிறான். மீண்டும் மதுவை சந்தித்தானா, அவனை காதலித்த ரத்னா என்னவானாள் என்பது பற்றி விரிவாய் திரையில்.
anandha-thandavam-wallpaper13

மதுமிதாவாய் தமன்னா..  இருபது வருடஙக்ளுக்கு முன் என் மனக்ண்ணில் ஓடிய மதுமிதாவை கண் முன்னே வலைய வர விட்டிருக்கிறார் இயக்குனர். தமன்னாவுக்கு டப்பிங் கொடுத்த பெண்ணுக்கு சுத்தி போட சொல்லுங்க.
 anandha-thandavam-photos47

மீனாட்சியாய் பொம்மலாட்டம் ருக்மிணி, சரியான சாய்ஸ் எனக்கென்னவோ இவர் மட்டும் கொஞ்சம் சதைபோட்டு சரியான வேடம் கொடுத்தால் பின்னியெடுப்பார் என்றே தோன்றுகிறது..

இவர்களை தவிர அருமையா கேரக்டராகவே இயல்பாய் இருப்பவர் கிட்டி, தன் மகனால் அவ்வப்போது ஹர்ட் ஆகும் போதாகட்டும், கோபமாகட்டும், இயல்பாய் மெக்னானிமஸாய் நண்பனை போன்ற தகப்பனை கண் முன்னே கொண்டு வ்ந்திருந்தார்.

ஹீரோ சித்தார்த், கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாத ஒரு முகத்தை வைத்து கொண்டு, ஆடவும் முடியாமல், நடிக்கவும் முடியாமல் முதல் படத்து சூர்யாவை விட மோசமான நடிப்பு நடித்திருக்கிறார்  லாங் வே டு கோ.. சித்தார்த்

அமெரிக்க மோகன்ராம் கேரக்டருக்கு  சரியான தேர்வு. அதே போல் மீனாட்சியின் பாட்டி, தாத்தா, அப்பா எல்லாருமே குறையொன்றுமில்லை. மார்க்ராய் சார்லி சரியான சாய்ஸ்.anandha-thandavam-wallpaper15

இசை ஜி.வி. பிரகாஷ் படு மோசமான பிண்ணனி இசை, அதிலும் பாடல்கள் அனைத்தும் மிஸ் ப்ளேஸ்ட். கனா காண்கிறேன் பாடலை தவிர பெரிதாய் மனதில் நிற்கவில்லை.

ஷங்கரின் ஒளிப்பதிவு ஆகா ஓகோ என்று சொல்ல முடியவிலலை.

.
tamanna-03

படம் முழுவதும் சுஜாதாவின் வசனம் மிளிர்கிறது. ஆனால் மோசமான நடிப்பும், திரைக்கதை சொதப்பல்கள், ஃபைவ் ஸ்டார் கிருஷனாவின் காமெடி சுத்த போர். ராட்டாக வரும் ராதாகிருஷ்ணைன் உச்சி மண்டையை எதுக்காக் ஷேவி செய்திருக்கிறார்கள்?

வரிக்கு வரி சிந்தாமல் சிதறாமல் பிரிவோம் சந்திப்போம் நாவலை திரைக்கதையாக்கும் வகையில் சொதப்பிவிட்டீர்களே.. எப்படி நீங்கா இப்படி ஒரு ஹீரோவை செலக்ட் செய்தீர்கள். ஏன் பல இடங்களில் ஜம்ப், பேசும் போதே கட் செய்யப்பட்டு அடுத்த க்ளோசப் ஏன்? நிறைய இடஙகளில் லிப் சிங்க் ரொம்ப கேவலம்.  மதுமிதா கேரக்டரை சரியாக சொல்லவில்லை. நாவலை படித்தவர்களுக்கு மட்டுமே உணர முடியும்.  ஏன் உணர்வு பூர்வமாய் வரவேண்டிய காட்சிகளை எல்லாம் ஏன் இப்படி  ஆர்டிஸ்டின் ரியாக்‌ஷன்கள் இல்லாமல் எடுத்திருக்கிறீர்கள்? இப்படி பல ஏன்களுடன்.. இப்படி ஏமாத்திட்டீங்களே காந்தி கிருஷ்ணா…

ஆனந்த தாண்டவம்  -  ஸ்லிப் ஆயிடுச்சு

 

டிஸ்கி:
நல்ல வேலை தல சுஜாதா செத்து போயிட்டாரு. மதுமிதாவை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் பார்க்க போகலாம். மற்றவர்கள், மீண்டும் பிரிவோம் ச்ந்திப்போம் இரண்டு பாகங்களையும் மீண்டும் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.


அயன் திரைவிமர்சனத்தை படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..


Post a Comment

45 comments:

ஜுர்கேன் க்ருகேர் said...

படத்தை அக்கக்கா பிரிச்சு பட குழுவினர் எல்லாத்துக்கும் "சூடு" போட்டுட்டீங்க!
படத்தின் டீட்டைல் விமர்சனத்துக்கு நன்றி

ஜுர்கேன் க்ருகேர் said...

நடு இரவு பனிரெண்டு மணிக்கும் பதிவு போடற உங்க கடமை உணர்வை நினைச்சா ............

vinoth gowtham said...

//நடு இரவு பனிரெண்டு மணிக்கும் பதிவு போடற உங்க கடமை உணர்வை நினைச்சா ............//

engala kaapatha enna enna ellam pannuringa..
great tala..
padam sothappal thaanu rendu moonu review padichen.

Venkatesh subramanian said...

நானும் ரொம்ப எதிர்பார்த்த படம். கடைசியில் பெரிய சொதப்பல் போல நல்லவேலை இன்னக்கி போகலாம்னு நினைத்திருந்தது போக முடியவில்லை. தப்பித்தேன் நன்றி

அறிவிலி said...

நல்ல விமர்சனம். திரும்பவும் சுஜாதா கதையை சொதப்பி விட்டார்கள் என்ற ஆதஙகம் தெரிகிறது.

சுஜாதா கதையை படிக்காத, எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாத ஒரு சாமான்ய சினிமா ரசிகனின் பார்வையில் படம் தேறுமா?

thevanmayam said...

பட விமரிசனம் அருமை நண்பரே!!

thevanmayam said...

நல்ல வேலை தல சுஜாதா செத்து போயிட்டாரு. மதுமிதாவை பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் பார்க்க போகலாம். மற்றவர்கள், மீண்டும் பிரிவோம் ச்ந்திப்போம் இரண்டு பாகங்களையும் மீண்டும் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்///

மீண்டும் நாவலே படித்துவிடலாம்!!

Cable Sankar said...

//சுஜாதா கதையை படிக்காத, எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாத ஒரு சாமான்ய சினிமா ரசிகனின் பார்வையில் படம் தேறுமா?//

படித்த நம்ம நிலைமை பரவாயில்லை.. அட்லீஸ்ட் படிச்ச கதையோட ஃபீலில் படம் பார்த்து கொள்ளலாம். ஆனால் புதியவர்கள் மிக பாவம். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இரு காதலர்கள் அவர்க்ளின் நண்பருக்கு போன் செய்து பேசுகையில்..” நான் தெரியாம ஆனந்ததாண்டவம்” படத்துல வ்ந்து மாட்டிகிட்டேன்டா..

Vajra said...

//
ராட்டாக வரும் ராதாகிருஷ்ணைன் உச்சி மண்டையை எதுக்காக் ஷேவி செய்திருக்கிறார்கள்?
//

வழுக்கையா ?

Cable Sankar said...

//வழுக்கையா ?
//

உச்சி மண்டையில் மட்டும் ஷேவி விட்டிருக்கிறார்கள்.

டக்ளஸ்....... said...

சூப்பர் விமர்சனம் தல...
கொஞ்சம் வார்த்தைகளின் தாக்கங்களை குறையுங்கள்!

ஷண்முகப்ரியன் said...

:(

shortfilmindia.com said...

//சூப்பர் விமர்சனம் தல...
கொஞ்சம் வார்த்தைகளின் தாக்கங்களை குறையுங்கள்!//

நான் இந்த படத்தின் உதவி இயக்குனரிடம் படம் பார்த்த பின் பேசிய வார்த்தைகளின் தாக்கத்தைவிட இதில் ரொம்பவே குறைச்சலாய்தான் எழுதியிருக்கிறேன். எவ்வளவு எதிர்பார்ப்போடு போனேன்.????

கார்க்கி said...

போச்சா.. பயந்துட்டே இருக்கேனு நேத்துதான் போட்டேன்.. கல்லில் ஆடும் பூவே பாட்டு எப்படி?

T.V.Radhakrishnan said...

//நல்ல வேலை தல சுஜாதா செத்து போயிட்டாரு//

_(((

Anbu said...

படம் போச்சா..நான் இன்று செல்லலாம் என்று இருந்தேன்..நல்ல வேளை காப்பாத்தீட்டிங்க அண்ணா..

ஆதிமூலகிருஷ்ணன் said...

வட போச்சா..?

வித்யா said...

அப்ப பார்க்க வேணாங்கறீங்க.நாவலின் அழகு மனதை விட்டு மறைந்துவிடுமோ என்று பயந்துதான் வாய்ப்பு கிடைத்தும் படம் பார்க்க போல:(

அப்புறம் தமன்னா. வேணாம் சொன்னா கோச்சுக்கப்போறீங்க

வண்ணத்துபூச்சியார் said...

நன்றி....

டிஸ்கி சூப்பர்.

narsim said...

ம்.சுஜாதா இருந்திருந்தால் க.பெ.வில் “ காந்தி கிருஷ்ணா நல்ல டைரக்டர்தான்,என் போதாத காலம் அவருக்கு சிறுமூளையில் ஏதோ கட்டி வந்து தொலைத்துவிட்டது” என்ற ரேஞ்சில் கலாய்த்திருப்பார்..

Cable Sankar said...

//ம்.சுஜாதா இருந்திருந்தால் க.பெ.வில் “ காந்தி கிருஷ்ணா நல்ல டைரக்டர்தான்,என் போதாத காலம் அவருக்கு சிறுமூளையில் ஏதோ கட்டி வந்து தொலைத்துவிட்டது” என்ற ரேஞ்சில் கலாய்த்திருப்பார்//

:)

Cable Sankar said...

//நன்றி....

டிஸ்கி சூப்பர்.//

மிக்க நன்றி வண்ணத்து பூச்சியாரே..

Cable Sankar said...

//நடு இரவு பனிரெண்டு மணிக்கும் பதிவு போடற உங்க கடமை உணர்வை நினைச்சா ............//

மிக்க நன்றி ஜூர்கேன், வினோத்கவுதம்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

Cable Sankar said...

//நானும் ரொம்ப எதிர்பார்த்த படம். கடைசியில் பெரிய சொதப்பல் போல நல்லவேலை இன்னக்கி போகலாம்னு நினைத்திருந்தது போக முடியவில்லை. தப்பித்தேன் நன்றி

12:57 AM
//

வேற வேலை எதுனாச்சும் இருந்தா பாருங்க..

Cable Sankar said...

நன்றி தேவன்மயம், வஜ்ரா, டக்ளஸ், ஷண்முகப்பிரியன் சார், ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும்

Cable Sankar said...

//போச்சா.. பயந்துட்டே இருக்கேனு நேத்துதான் போட்டேன்.. கல்லில் ஆடும் பூவே பாட்டு எப்படி//

பாட்டு வீட்டுல கேசட்டுல கேட்டுக்கங்க..

Cable Sankar said...

//அப்ப பார்க்க வேணாங்கறீங்க.நாவலின் அழகு மனதை விட்டு மறைந்துவிடுமோ என்று பயந்துதான் வாய்ப்பு கிடைத்தும் படம் பார்க்க போல:(//

நான் முன்னமே உங்களுக்கு சொல்லியிருந்தேன் வித்யா படம் பாக்கறதுக்கு முன்னாடி படிச்சிருங்க. நல்ல வேளை படம பாக்கல.. நானெல்லாம் நொந்து போயிட்டேன்.

//அப்புறம் தமன்னா. வேணாம் சொன்னா கோச்சுக்கப்போறீங்க//

யாருப்பா அது தமன்னாவை பத்தி பாராட்டுறது.. ஹி..ஹி.. பாராட்டுனா கோச்சிக்க மாட்டேன்.

Cable Sankar said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, அன்பு, ஆதிமூலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் சார்.

pappu said...

vaaya pilnathu wait panitu irunthavana yemathitangappa. sujatha, kathai nu nenachen. sothapiyacha? super

அத்திரி said...

ஏண்ணே இவ்ளோ சூடா விமர்சனம்................?????????????/

தராசு said...

//நடு இரவு பனிரெண்டு மணிக்கும் பதிவு போடற உங்க கடமை உணர்வை நினைச்சா ............//

நினைச்சா......, நினைச்சா......., நினைச்சா.......,

வேண்டாம் விடுங்கண்ணே.

தராசு said...

சரி, நம்மனால தான் படம் பார்க்க முடியாது, உங்க விமர்சன்ம் மூலமாவது தெரிஞ்சுக்க்கறேன்.

Cable Sankar said...

//ஏண்ணே இவ்ளோ சூடா விமர்சனம்................?????????????/

//

அவ்வளவு சூடாவா இருக்கு அத்திரி. என்ன பண்றது வயித்தெரிச்சல் தாங்கல..

மிக்க நன்றி பப்பு

Cable Sankar said...

//சரி, நம்மனால தான் படம் பார்க்க முடியாது, உங்க விமர்சன்ம் மூலமாவது தெரிஞ்சுக்க்கறேன்//
அப்படி எந்த ஊர்ல நீஙக் இருக்கீங்க.. தராசு..

’டொன்’ லீ said...

அடடா...இம்முறையும் சுஜாதா கதையை சொதப்பி விட்டார்களா...? :-(

புருனோ Bruno said...

பாக்க வேண்டாம் என்று சிம்பிளாக கூறிவிட்டீர்கள் :)

Cable Sankar said...

//பாக்க வேண்டாம் என்று சிம்பிளாக கூறிவிட்டீர்கள் :)//

ஞாயமா பார்த்தா நான் இதை சொல்லக்கூடாதுதான். ஆனா தல சுஜாதாவோட ரசிகர்கள் எல்லாம் பார்த்துட்டு நொந்து போயிட்டாங்கண்ணா என்ன செய்யிறதுன்னு தெரியல.. அதனாலதான். புருனோ..

Cable Sankar said...

///அடடா...இம்முறையும் சுஜாதா கதையை சொதப்பி விட்டார்களா...? :-(//

ஆமாம் டோன்லீ

Sukumar Swaminathan said...

நேற்று தான் இந்த கொடுமையை தியேட்டரில் பார்த்தேன். உங்கள் பதிவினை ஒரு நாள் முன்னரே படித்திருந்தால் சுஜாதா கதை நல்லா இருக்கும் என சொல்லி நான் அழைத்து சென்றிருந்த இரண்டு நண்பர்களின் தர்ம அடியை தவிர்த்திருக்கலாம்.

Sukumar Swaminathan said...

கடந்த ஆறு மாத காலமாக பல திரை அரங்குகளில் இந்த பிரமாண்ட படைப்பிற்கு(!) அருமையான டிரைலர் போட்டு காண்பித்தனர். அதை நம்பி படத்திற்கு செல்ல விழையும் தமிழ் நல் உலகிற்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் . கண்ணா அது வெறும் டிரைலர் தான்... மெயின் பிச்சர் நீ இன்னும் பாக்கல... பார்த்தா ... செத்தே போய்டுவ....

Murali said...

வணக்கம் சங்கர், முதல் நாளே பார்த்து தொலைத்து விட்டேன். நானும் நண்பர் மது மற்றும் செல்வம் மூன்று பேருமே படம் பார்ப்பதற்கு முன்பே ஒருவித சந்தேகத்துடன் பேசிக்கொண்டிருந்தோம். பிரிவோம் சிந்திப்போம், இதை எப்படி படமாக்கியிருப்பார்கள் என்று. அப்பா...தாங்கமுடியல .....
நல்ல வேலை இந்த சாபத்திற்கு தல ஆளாகவில்லை. அதுவரையில் மகிழ்ச்சி.

Cable Sankar said...

//... மெயின் பிச்சர் நீ இன்னும் பாக்கல... பார்த்தா ... செத்தே போய்டுவ....
//

:):)

Cable Sankar said...

//நல்ல வேலை இந்த சாபத்திற்கு தல ஆளாகவில்லை. அதுவரையில் மகிழ்ச்சி.
//

:):)

அக்னி பார்வை said...

போச்சு இந்த படமும் அடாசா?

Chandru said...

சுஜாதாவோட கதைகள் ரொம்ப live-ஆ எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி இருக்கும்... அதையே எடுக்க தெரிலயா... இவர்கள் எல்லாம் என்ன படைப்பாளிகள்.. நல்ல வேளையாக சுஜாதா உயிருடன் இல்லை.. அவருடைய எழுத்தின் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் நிச்சயம் கோபத்தை உண்டாக்கும்..