Thottal Thodarum

Jun 14, 2012

நான் - ஷர்மி - வைரம் -18


18 ஷர்மி
பையன் ரொம்ப நல்ல பையனா இருக்கான். நீன்னா அவனுக்கு உசிருன்னான். பத்து நாளா அவன் தான் நம்ம வீட்டு செலவயெல்லாம் பாத்துக்கறான். பேசாம அவனை நீ கல்யாணம் பண்ணிக்கயேன்என்றதைக் கேட்டுத்தான் எனக்கு கோபம் வந்தது.



உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்காம்மா.. என்னை பாத்ரூமில வச்சி ப்ரச்சனை பண்ணவனை நடுவீட்டுல கூட்டி வந்து உக்கார வச்சி, அவனோட காசுலதான் நான் ரெண்டு நாள் சாப்டேன்னு சொல்றியெ. உன்னால எப்படிம்மா முடியுது?

இதையெல்லாம் யோசிச்சுத்தான் நாம தினம் வாழ்ந்திட்டிருக்கோமா?என்ற அம்மாவின் முகத்தை பார்த்து ஏதும் பேசத் தோணவில்லை. அவள் கேட்பது ஞாயம்தான் என்றே தோன்றியது. அப்பாவின் நிலைக்கு பிறகு நடப்பதெல்லாம் எது எங்கள் விருப்பபடி நடக்கிறது? இல்லை இதற்கு முன்னால் தான் நடந்த்தா? அதுவும் மாமாவின் ஆட்டத்திற்கு பிறகு இதைப் பற்றியெல்லாம் யோசிப்பதில் ஒரு விதமான குரூரத்தனமும், வக்கிரத்தனமும்  இருப்பது போலக்கூட தோன்றியது. ஆனாலும் என்னை அவனுடன் சேர்த்து வைத்து பேசியது பிடிக்கவில்லை. ப்ப்புகளில் கண்டவனோடு முயங்க இருக்கும் விருப்பம் கூட இவனிடம் ஏன் வர மாட்டேனென்கிறது என்று புரியவில்லை. அங்கே இருப்பவன் பணம் கொடுக்கிறவன் நான் என்ற திமிருடன் தான் என்னை அழைப்பான். ஒருவிதமான் ஆரகன்ஸ், டாமினெண்ட்ஸ், வல்லுறவுக்கான அழைப்ப்பிருக்கும். அவனை சமாளிப்பதும், வெர்ஜினிட்டியை இன்னும் பொத்தி வைத்திருப்பதும் ஒரு விதமான சாகசமே என்று கூட தோன்றியது. ஒரு வேளை இவன் என்பின்னே பூஞ்சையாய் அலைவதால் அவனை அலைய வைக்கத் தோன்றுகிறதோ என்ற ஒரு எண்ணமும் உள்ளுக்க்குள் தோன்றத்தான் செய்த்து.

இவன் பிரச்சனை பூதாகாரமாய் வெடிக்கும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. வெடித்தது. முதலில் வெடித்த்து மாமாவின் மூலமாய். அம்மாவின் அன்றைய பேச்சுக்கு பிறகு  அர்ஜுனைப் பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் விட்டிருந்தேன். அவனின் ஆதிக்கம் என் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் அவிழத் தொடங்கியிருக்க, மாமாவின் மூக்குக்கு அடியில் எரிச்சல் ஆரம்பமாகியிருந்தது. ஒரு நாள் வீட்டில் மாமாவுக்கும், அர்ஜுனுக்கும் உருண்டு பிரண்டு சண்டை. வீடே அல்லோல கல்லோலமாயிருந்தது. மாமா நன்றாக தண்ணியடித்திருந்தார். அர்ஜுன் மிக ஆக்ரோஷமாயிருந்தான். மாமாவின் மூக்கிலும், அர்ஜுனின் தலையிலிருந்தும் ரத்தம் வந்து கொண்டிருந்தது. அம்மா ஏதும் பேசாமல் ஒரு மூலையில் அவர்களை அதிர்ச்சியோடு பாத்துக் கொண்டிருந்தாள். மாமாவின் அடி பெரியது என்று தோன்றியது.

த்தா.. ஆத்தாளும் மகளும் ஓக்குறதுக்கு சின்னதா பையன் கிடைச்சதும் களட்டி விடுறீங்களா? த்தா.. அறுத்துப் போட்டுருவேன்.

ச்சீ.. மாமா என்னா பேச்சு பேச்சு பேசுறீங்க?

த்தூ.. நீ பேசாதடி.. ஊருல இருக்கிற ப்ப்புல எல்லா ..பிட்டு வர்றவதானடி.. பெரிய பத்தினி மாட்டம் நடிக்கிற. உங்களுக்கு எவ்வளவு செஞ்சிருக்கேன். எத்தனை லட்சம் கொடுத்திருப்பேன். எவ்வளவு விசுவாசமா இருந்திருப்பேன். இப்போ என்னை விட பணக்காரனா ஒரு பையன் வந்தா அவனை வச்சிட்டு என்னை தாட்டி விடுவீங்களா? உசுரோட கொளூத்திருவேன். எல்லாரையும் கொளுத்திருவேன். தபாரு.. நாளைக்கு வருவேன் எனக்கு நீயும் உங்கம்மாளும் வேணும். இவன் இங்க இருக்க்க்கூடாது. மீறி இருந்தா கொலைத்தான். ஆமா.. சொல்லிட்டேன்.என்று திரும்பத் திரும்பத் சொல்லி போதையில் கிளம்பினார். போகும் போது  அவரின் எண்ணம் என்பதை என்னிடம் சொல்லிவிட்டேன் என்பதை புரிய வைத்த பார்வையை பார்த்துவிட்டு போனார். வீட்டில் ப்ப் விஷயமெல்லாம் பேச எனக்கு விருப்பமில்லாத்தால் அமைதியாய் இருந்தேன்அர்ஜுன் அப்படியே ஏதும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். கொஞ்சம் பார்க்க பாவமாயிருந்த்து. மெல்ல அவனிடம் போய் உட்கார்ந்தேன். சட்டென தள்ளி உட்கார்ந்தான்.

உனக்கென்ன வேணும். என்கிட்ட, சொல்லு, லவ்... கல்யாணம், செக்ஸ்.. ?

அவனிடமிருந்து பதில் இல்லை. நான் தான் உன்னைமதிக்க்க்கூட மாட்டேன்குறேன் இல்லை ஏன் என் பின்னடியே சுத்துற?. இப்படி ப்ரச்சனையில மாட்டிக்கிற? நாளைக்கு உன் வீட்டுல இதனால பிரச்சனை வந்தா அதுக்கு காரணம் நாங்கத்தானு எல்லாரும் சொல்லுவாங்க. மாமா ரொம்ப வருஷமா வீட்டோட இருக்கிறவரு. ஆனால் நீ அப்படியில்லை

அவன் ஏதும் பேசாமல் எழுந்து நின்றான். முடியவில்லை. அப்படியே சரிந்தான். போதையும், அடியும் அவனை வீக்காக்கியிருக்க வேண்டும். அம்மா என்னைப் பார்த்தாள். அவனை என் அறைக்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்தேன். இப்போது அவன் மேல் அருவருப்போ கோபமோ ஏன் வரவில்லை என்று என்னையே கேட்டுக் கொண்டேன். பதிலில்லை. அம்மா அதிர்ந்து போயிருந்தாள். அருகே போய் அவளை தொட்டு எழுப்பியதும் வென சத்தமில்லாமல் அழுதாள்.

இப்படி பொம்பளையா பொறந்து இவனுங்க கிட்ட மாட்டிட்டு அவஸ்தை படறோமே?என்று உடைந்து அழுத போது குரல் காய்ந்துப் போய் புரியாமல் கேட்ட்து. ஏதுவும் பேசாமல் அவளை அறையில் தூக்க வைக்க மாத்திரைக் கொடுத்துவிட்டு, ஹாலில் வந்து உட்கார்ந்தேன். இந்த வீடும், இரண்டு பெண்களை தங்கள் கையில் வைத்துக் கொண்டு போராட ஆசைப்படும் ஆண்களின் வேகம் தான் எங்களை துரத்துகிறது என்று புரிந்தது. முழுக்க மூழ்காமல் முக்காடு போட வேண்டியதால் இவர்களை அண்டியிருக்க வேண்டியிருக்கிறது. போடா பொங்கிப் பசங்களா என்று ஒரு முறை திமிரிவிட்டால் பயந்துவிடுவார்கள் என்று கூட தோன்றியது. ஆனால் அதை எப்படி செய்வது என்று யோசிக்க வேண்டும். அதற்கு முக்கியமா எங்கள் செலவை நாங்களே பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு எங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இனி அம்மாவிடம் மறைத்து பிரயோஜனமில்லை. அர்ஜுனை பற்றி ஒரு முடிவெடுத்தாக வேண்டும். இவன் பூஞ்சை இவனுக்குள் நிச்சயம் காதலில்லை. அப்படியிருந்திருந்தால் என்னை அடைய என் வீட்டின் மூலம் அப்ரோச் செய்திருக்க மாட்டான். மாமாவின் இன்னொரு முகம். பணக்கார முகம். ஆளுமை முகம். மிகவும் டயர்டாக இருந்தது. அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டேன். எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. திடீரென ஒரு மூச்சுக்காத்து என் முகத்தின் அருகில் சூடாய் விழுந்த்தால் திடுக்கிட்டு விழித்தேன். அம்மா. என்னை அணைத்தபடி படுத்திருந்தாள். வெளியே நன்றாக விடிந்த்திருந்தது. ஆனால் அன்றைய காலை எங்களுக்கு அப்படி விடியவில்லை. வரும் போதே மாமா போலீஸுடன் வந்திருந்தார். வந்த போலீஸை எனக்கு தெரியும். மாமாவின் அல்லக்கை. எங்கடீ அவன்... எங்கடீ..என்று எங்களைத் தாண்டி என் அறைக்குள் நேரே நுழைந்து அவனை அடித்து இழுத்து வந்தார். அர்ஜுன் தூக்க்க் கலக்கத்தில் ஏதுவும் புரியாமல் விதிர்த்துக் கொண்டே பின் வர, ஹாலில் எங்களைப் பார்த்த்தும் புரிந்து, மாமாவிடமிருந்து விலகி, என்ன.. என்ன பிரச்சனை? யார் வேண்டும் உங்களுக்கு?என்று வந்திருந்த போலீஸிடம் கேட்டான். அவன் குரலில் இருந்த ஆளுமையான தோரணையை இதுவரை நான் கேட்டதில்லை.

தம்பி.. நீங்களா? அப்பா செளக்கியங்களா?

ம்ம்.. என்ன விஷயம்?

ஓண்ணுமில்லை தம்பி. சார் நம்ம ப்ரெண்டு ஏதோ ப்ரச்சனைன்னு சொன்னாரு.. நான் பார்த்துக்கறேன் தம்பிவாங்க.. என்று மாமாவை தள்ளிக் கொண்டு போனார். மாமா ஒன்றும் புரியாமல் அவருடன் நகர, அர்ஜுன் சொடக்கு போட்டு அவரைக் கூப்பிட்டான். இன்ஸ்பெக்டர் சட்டென நின்றான்.

எங்க ப்ராப்ளம் கொஞ்சம் ப்ர்சனல். இனிமே இன்வால்வ் ஆக வேண்டாம்னு சொல்லிடு. நான் பார்த்து முடிச்சிக்கிறேன்.என்று பையிலிருந்து ரெண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை எடுத்து அருகே போய், மாமாவைவின் அருகில் போய் நின்று பார்த்தபடி அவரின் பையில் வைத்தான். மாமா தலை குனிந்தார். இருந்தாலும் நேத்து நீ நல்லாத்தான் சண்டைப் போட்டையாஎன்று நக்கலாய் சிரித்தபடி, சட்டென எதிர்பாராமல் அவர் மூக்கின் மேல் குத்தினான். பொலக்கென ஒரு சத்தம் வந்தது. மாமா முகத்தை மூடி அப்படியே உட்கார்ந்தார். சத்தமேயில்லை. இன்ஸ்பெக்டர் மாமாவை தரதரவென இழுத்துப் போனார். எனக்கு அதிர்ச்சியாய் இருந்த்து. மெல்ல அருகே வந்தான். என்னை முழுக்க, ஏற் இறங்க பார்த்தான். நன்றாக மூச்சிழுத்தான்.

தோ பார்.. நீ எனக்கு வேணும். இனி காத்திருக்க மாட்டேன். ஒரு வாட்டி. அன்னைக்கு நான் அடைஞ்ச அவமானத்துக்கு பதிலா. உன்னை பஞ்ச் பண்ணியே தீரணும் அந்தக் கிழக்கூதி தொந்தரவு இல்லாமல் நிம்மதியா நீ செட்டிலாகணுமின்னா நான் சொல்றத கேட்டா உனக்கும் நல்லது எனக்கும் நல்லது. நாளைக்கு வர்றேன். புல் செட்டில்மெண்டோட.. ஒண்டைம் செண்ட்டில்மெண்ட். ஓகே கண்ணு.. என்னடா இது ஒரே சினிமா சீன் போல இருக்கேன்னு யோசிக்கிறியா? நான் கொஞ்சம் அப்படித்தான். வர்றேன்.என்று சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு வெளியேறினான்அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெண்ணாய் என்னால் என்ன செய்ய முடியுமென புரியாமல் நின்ற இடமிது. யோசிக்க ஆரம்பித்தேன்.  
கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

குரங்குபெடல் said...

" அந்தக் கிழக்கூதி தொந்தரவு இல்லாமல் நிம்மதியா நீ செட்டிலாகணுமின்னா "


அண்ணே திரும்பவும் எங்கேயோ போயிட்டிங்க . . .

Cable சங்கர் said...

தம்பி.. இங்க பெரியவங்க படிக்கிற க்ளாஸ் இன்னைக்கு நீ பேயாம ஓடிப்போயிரு..:))

Sivaraman said...

Picking up good... Couldn't wait ...

mahi said...

Pesama “Kai adika thoondum kathai “nu peru vachirukalam.

Cable சங்கர் said...

vachikungakelen mahi

Cable சங்கர் said...

vachikungakelen mahi

srinits78 said...

Nice

srinits78 said...

Nalla irukkae