Thottal Thodarum

Jun 19, 2012

கேபிள் ஆப்பரேட்டர் என்கிற வர்கத்தையே ஒழிக்கப் போகும் மத்திய அரசும் மாநில அரசும்.



அட என்ன தலைப்பே காண்டர்வர்சியா இருக்கே? என்று யோசிப்பவர்களுக்கு ஆம் காண்டர்வர்சி மட்டுமல்ல ஒட்டு மொத்த சென்னையே வருகிற ஜுன் 30 நள்ளிரவுக்கு பிறகு சென்னையில் உள்ள அத்துனை கேபிள் இணைப்பு பெற்ற தொலைக்காட்சி பெட்டிகளும் அணையப் போகிறது. அடுத்த நாள் முதல் அத்துனை டிவிக்களும் தெரிய வேண்டப்பட வேண்டுமென்றால் டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் முறையில் சுமார் நாற்பது லட்சம் வீடுகளில் செட்டாப் பாக்ஸ் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் சென்னையில் டி.டி.எச் எனப்படும் நேரடி ஒளிபரப்பு வைத்திருப்பவர்களும், ஏற்கனவே கண்டீஷனல் ஆக்சஸ் திட்ட்த்திற்காக செட்டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே பார்க்க முடியும். இது என்ன கலாட்டா என்று இது பற்றி எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பது போல தோன்றினாலும், சென்னையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் ஆப்பரேட்டர்கள் தங்கள் வாழ்க்கையின் மிக மோசமான நிலையில் தினமும் ஒரு மீட்டிங், தினமும் ஒரு ஏற்பாடு ஏதாவது செய்ய முடியுமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன முடிவு என்று தெரியாமல். இருப்பது இன்னும் 15தே நாள்தான். அதற்கு ஊரில் உள்ள் டிடிஎச் கம்பெனிகள் எல்லோரும் இருக்கும் வாடிக்கையாளரை சுவாஹா செய்ய தயாராக இருப்பார்கள் என்று தெரியும்.

இந்தத் திட்டம் இதற்கு முன்னமே தெரியாதா? ஏன் இப்படி திடீரென வந்த்து போல சொல்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு. இந்த்த்திட்டம் சென்ற வருடமே ஆரம்பிக்க வேண்டியது. சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் முழுக்க முழுக்க டிஜிட்டல் நெட்வொர்க்காக மாற்றப்பட வேண்டிய அவசியத்தை சொல்லி, மாற்றி ஆக வேண்டிய காட்டாயத்திற்கான காரணத்தைச் சொல்லி, அதற்கான தேதியையும் சொல்லி, பின்பு அதற்குள் ஆகாது என்ற கோரிக்கையையும் ஏற்று, ஜூன் 30 என்று ட்ராய் பிக்ஸ் செய்த்துதான். அதான் ஏற்கனவே முன்பே அறிவிக்கப்பட்ட்துதானே பின்ன என்ன? என்று கேட்கிறீர்களா? ப்ரச்சனையே அங்கு தான். மற்ற ஊர்களில் எல்லாம் செட்டாப்பாக்ஸை வீட்டிற்குள் இயங்க வைப்பதற்கான ப்ரச்சனையே தவிர கொல்கத்தா தவிர, டெல்லி தவிர, கொஞ்சம் மூச்சு பிடித்து இழுத்தால் ஒரு மூன்று மாத்த்திற்குள் வைத்துவிடலாம் என்ற நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் அப்படியல்ல. இங்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் அரசு கேபிள் நிறுவனம் என்று ஆப்பரேட்டர்கள் மத்தியில் சொன்னால் நிச்சயம் ஆச்சர்யப்படுவீர்கள்.  இரண்டாவது காரணம். ஆப்பரேட்டருக்கும், எம்.எஸ்.ஓவுக்குமான புதிய கட்டணவிகிதாசார ப்ரச்சனை. சம்பந்தப்பட்ட ஆப்பரேட்டர்களை கலந்துரையாடாமல் சென்ற மாத்த்தின் கடைசியில் திடீரென அறிவிக்கப்பட்ட ரெவென்யூ ஷேரிங் விஷயம் பற்றி இன்னும் பேசப்படவேயில்லை.

அரசு கேபிள்
அரசு கேபிள் தன் தன்னிகரில்லாத சாதனை மூலம் தமிழகத்தின் எல்லா ஏரியாக்களிலும் எழுபது ரூபாய்க்கு கேபிள் டிவி சர்வீசைக் கொடுத்து வெற்றி பெற்றிருக்கும் நிலையில் சென்னையில் மட்டுமே எப்படி கடைசி நிலை ஆப்பரேட்டர்களை அழிக்கப் போகிறது?

சென்னையில் மட்டும் ஆரம்பிக்காமல் வெளீயூர்களில் மட்டுமே அரம்பித்ததன் காரணம் அங்கே சென்னையில் உள்ளது போல கண்டீஷனல் ஆக்ஸ்ஸ் சிஸ்டமில்லை என்பதாலும், சென்னை போன்ற ஊர்களில் அரசே கண்ட்ரோல் ரூம் அமைத்தாலும், ட்ராயின் சட்ட்திட்டங்களுக்குள் தான் ஆரம்பிக்கப் படவேண்டியதன் அவசியம் என்பதாலும், செட்டாப் பாக்ஸ் வசதியுள்ள கண்ட்ரோல் ரூம் அமைப்பதில் உள்ள செலவும், அப்படியே அமைத்தாலும் உடனடியாய் ஜூன் மாதம் முதல் சென்னையில் முழுக்க, முழுக்க டிஜிட்டல் செட்டாப் பாக்ஸு முறையில் ஒரு கண்ட்ரோல் ரூம் அமைத்து நெட்வொர்க்கை ஆன் செய்ய பல கோடிகள் ஆகும் என்பதாலும் கொஞ்சம் யோசனையாகவே இருந்த்து.  இந்நிலையில் சென்னையில் உள்ள இரண்டு எம்.எஸ்.ஓக்களான எஸ்.சி.வியும், ஜாக்கும் மட்டும்தான். இருவருமே கண்டீஷனல் ஆக்ஸ்ஸ் சிஸ்டம் உள்ள நெட்வொர்க்குகளை வைத்திருக்கிறார்கள். மக்களுக்கு அதன் மூலம் சேவையையும் அளித்து வருகிறார்கள். நாள் நெருங்க நெருங்க.. மக்களிடம் புதிய சேவையை அறிமுகப்படுத்த அந்த நெட்வொர்க்குகள் விளம்பரப்படுத்த ஒவ்வொரு கேபிள் செட்டாப்பாக்சுக்கும் ஆயிரம் ரூபாய் என்று விலை நிர்ணையித்து அதை வசூல் செய்து பாக்ஸ் ஆர்டர் செய்தால்தான் ஜூன் 30ஆம் தேதிக்கு முன் மக்களுக்கு அவர்களின் தேவையான சேனல்களை தர ஏற்பாடு செய்ய முடியும் என்பதால் அதற்கான வேலைகளை ஆரம்பித்த்து. ஆனாலும் தங்களுக்கு தேவையான பாக்ஸுகளை ஆர்டரின் பேரில்தான் இறக்க முடியும் என்கிற செய்தியோடுதான். இது நடந்த்து சென்ற மாதம். அதாவது மே மாதம்.

ஆனால் அதுவரை ட்ராயிடமிருந்து எப்படி சேனல்களைத் தரப்போகிறார்கள். வருமான பகிர்வு போன்ற பல விஷயங்களுக்கு விளக்கமேயில்லை. இந்நிலையில் அரசு கேபிள் ஒரு அறிவிப்பை அறிவித்த்து. சென்னையில் உள்ள ஆப்பரேட்டர்கள் அனைவரும் தங்களை தங்கள் நிறுவனத்துடன் இணைத்துக் கொள்ள ஆன்லைன் மூலம் ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும் என்று. இதைப்பார்த்த்தும் சென்னையின் முன்னணி எம்.எஸ்.ஓக்கள் இருவரும் அமைதியானது. உடனடியாய் ஆப்பரேட்டர்கள் ரிஜிஸ்டர் பண்ண, அதன் பிறகு அரசு கேபிள் நிறுவனத்திடமிருந்து கிணற்றில் கல்.  ஆப்பரேட்டர்களுக்கு ஒரே குழப்பம். அரசு கேபிள் நிறுவனம் ஆரம்பிக்கும் நிறுவனத்தில் இணைந்து டிஜிட்டல் கண்ட்ரோல் ரூம் அமைப்ப்பதா? இல்லை ஏற்கனவே அவரவர்க்ள் இருக்கும் நெட்வொர்க்கில பேசி அடுத்த கட்ட இம்ப்ளிமெண்டேஷனை செய்வதா? என்ற குழப்பத்தில் இருக்கும் நேரத்தில் பதிலேயில்லை அரசு கேபிள் நிறுவனத்திடமிருந்து. விரைவில் உலக லெலவில் தரம் கொண்ட டிஜிட்டல் கண்ட்ரோல் ரூமை அமைக்கவிருக்கிறோம் என்றும் அதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். ஆப்பரேட்டர்கள் கொஞ்சம் அசுவாசடைந்தார்கள். ஆனால் அதுவும் வெறும் ரெண்டு நாள் கூத்துதான். கேபிள் ஆப்பரேட்டர்களின் தொடர் ப்ரெஷரால் எப்போது ஆரம்பிப்பீர்கள் என்ற தொடர் கேள்வியின் ப்ரெஷர் தாங்காமல் நாங்கள் ஆரம்பிப்பத்ற்கு ஜூலை ஆகஸ்ட் ஆகும். என்றும் நாங்கள் சென்னையில் டிஜிட்டல் கண்ட்ரோல் ரூம் முழுவதுமாய் அமைப்பதற்கு மூன்று மாதம் டைம் கேட்டிருக்கிறோம் என்ற ஒரு அறிக்கையிஅ விட்டார்கள்.  இதை பத்திரிக்கைகளிலும் செய்தியாய் வர, சென்னையின் செட்டாப்பாக்ஸ் ப்ரச்சனையை அரசு கேபிள் தள்ளிப் போட்டிருக்கிறது என்பது போல செய்தியாய் அது மக்களிடையே கசிந்து இன்று கட்டாகட்டும் பார்க்கலாம் என்ற நிலையில் மக்கள் இருக்க, மீண்டும் அரைகுறை நிலையில் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கிறார்கள் ஆப்பரேட்டர்கள்.


இதற்குள் சென்னையில் இருக்கும் ஆப்பரேட்டர்கள் எல்லோரும் ஆளாளுக்கு குழம்பிப் போய் அரசு கேபிளை ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் எஸ்.சி.வியையும் இன்னொரு பக்கம் ஜாக்கையும் தொங்கிக் கொண்டிருந்தாலும், ட்ராயின் கட்டாயம் காரணமாய் மற்ற எம்.எஸ்.ஓக்கள் டிஜிட்டல் கண்ட்ரோல் ரூமை அப் செய்தால் என்ன செய்வது என்ற கேள்வியே வாழ்க்கையில் மாபெரும் கேள்வியாய் திகைத்துப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள் ஆப்பரேட்டர்கள். 

சரி.. அப்படி ஆப் ஆனால் என்ன? உடனடியாய் யார் யாருக்கு டிஜிட்டல் பாக்ஸ் தேவைப்படுகிறதோ அதை வாங்கிக் கொடுப்பதில் என்ன சிக்கல் என்றால் அதில்தான் பெரிய சிக்கல் இருக்கிறது. சென்னையில் மொத்தம் சுமார் முப்பது லட்சத்திலிருந்து நாற்பது லட்சம் செட்டாப்பாக்ஸுகள் தேவை. இருப்பதோ இரண்டே இரண்டு எம்.எஸ்.ஓக்கள். அவர்களும் முன்னால் கட்டினால்தான் இம்போர்ட் செய்ய முடியும் என்கிற கட்ட்த்தில் தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஒருவேளை அரசு கேபிள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டால் அவர்களுடய இன்வெஸ்ட்மெண்டுகள் முடங்கிப்போக வாய்ப்புகள் உள்ள நிலையிலும், ஆப்பரேட்டர்கள் நிச்சயம் அரசு கேபிளுக்கு ஆதரவு கொடுக்க விழைந்தால் அவர்க்ள் நிலை  மிக மோசம் என்பதால் தான். அப்படியே அவர்களிடம் இருக்கும் சில ஆயிரம் பாக்ஸுகளை வாங்கி அதில் சேன்லக்ளை ஆக்டிவேட் செய்து கஸ்டமரிடம் இம்ப்ளிமெண்ட் செய்ய நாட்கள் அல்ல வாரங்கள் ஆகும். மீண்டும் ஏற்படும் டிமாண்டுகளுக்கு கிட்ட்த்தட்ட மாதக்கணக்கில் ஆகும். அந்நிலையில் டிடிஎச் அப்பரேட்டர்கள் தங்கள் பங்குக்கு அவரக்ளது டிஷ்களை விற்க தொடங்கியிருப்பார்கள். ஆனால் அவர்களுடயது அவ்வளவு சுலபம் அல்ல. ஆப்பரேட்டரின் வேலையை விட கடினம்.

சரி நல்லதோ கெட்ட்தோ, இருக்கும் எம்.எஸ்.ஓவிடம் போய் பணம் கட்டி வேலையை ஆரம்பிப்போம் என்றால் மீண்டும் அரசு கேபிள் நிறுவனம் டைம் கேட்டாகிவிட்ட்து செப்டம்பரில் ஆரம்பிப்போம் என்று அறிக்கை விடுகிறது. ஆனால் இதுவரை டெண்டரைக்கூட ஓப்பன் செய்யவில்லை என்றுதான் சொல்கிறார்கள்.

ஆப்பரேட்டர்களின் குழப்பம் இப்போது உச்சம். அவர்களின் முக்கிய ப்ரச்ச்னை இந்த திட்டம் சென்னையில் அமுலுக்கு வருகிறதா இல்லையா? எம்.எஸ்.ஓவைக் கேட்டால் அமுலுக்கு வருகிறது என்றுதான் சொல்கிறது. அப்போது பாக்சுகு பணம் கட்டுங்கள் தருகிறோம். சரி. பண பங்கீடு பற்றி பேசணுமே அதைப் பற்றி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்? என்கிறார்கள். சரி அது பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்றாலும், அரசின் தொடர் அறிவிப்பின் மூலமாய் மக்கள் வராது என்ற எண்ணத்தில் இருக்க, சிக்னல் கட்டாகட்டுமென்று காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் காத்திருப்பெல்லாம் அன்று காலை வரையில்தான் இருக்கும் மதியமே பணத்தக் கொடுத்துவிட்டு பாக்ஸை கொடு என்றால் சுமார் தொண்ணூறு நாட்கள் வரை ஆகும் இம்போர்ட் செய்ய.  சரி.. இருக்கிறவர்க்ளுக்கு வாங்கிக் கொடுப்போம் என்றால் அப்படி வாங்கிக் கொடுத்துவிட்டு மீண்டும் அரசு கேபிள் ஆரம்பித்து அவர்களின்ன் சிக்னலைக் கொடுக்க வேண்டியிருந்தால் இந்த பாக்சுகள் வேலை செய்யாது. அவை இரண்டுமே வேறு வேறு சாப்ட்வேர்களில் வேலை செய்யப்படும் பாக்ஸுகள். அவைகள் இசைந்து இயக்க வைக்க முடியுமென்றாலும் அதற்கு இருவரும் சம்மதிப்பார்களா? என்ற மில்லியன் டாலர் கேள்வி வேறு இருப்பதால் மீண்டும் வாங்கியவர்களுக்கே பாக்சுகளை யார் வாங்கிக் கொடுப்பார்கள்.?


இப்படிப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர் சங்கங்களோ அரசு கேபிளுக்கு சப்போர்ட்டாகவோ, அல்லது எதிராகவோ அறிக்கை விடாமல் ஆளாளுக்கு தினமும் கட்டாகுமா கட்டாகாதா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு மத்திய அரசிடமோ, மாநில அரசிடமிருந்தோ சரியான பதிலைப் பெறாமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இது பற்றி பேச சென்ற வாரம் அம்பிகா சோனி எம்.எஸ்.ஓக்களை அழைத்திருக்க, அரசு கேபிள் சார்பில் ஒருவரும் விரைவில் ஆரம்பிக்க இருக்கும் ஒரு எம்.எஸ்.ஒவிலிருந்து ஒருவரும் மட்டுமே போயிருக்கிறார்கள். மக்களின் நிலையை, மாநிலத்தின் நிலையை அவர்கள் சொல்லியும் ஒரு தீர்மானமான முடிவில்லாமல் அரைகுறையாய் கிளம்பிவிட்டாராம் அம்பிகாசோனி. எஸ்.சி.வியோ, ஆப்பரேடர்களின் தலைவர்களோ அங்கே செல்லவில்லை. என்ன கொடுமைடா.. இது சிக்னல் கொடுத்துக் கொண்டிருக்க கூடிய எம்.எஸ்.ஓக்கள் போகவில்லை. கேள்வி கேட்க்க்கூடிய சங்க நிர்வாகிகள் போக வில்லை. இன்னமும் ஆரம்பிக்கவே ஆரம்பிக்காத ரெண்டு நிறுவன்ங்கள் போய் டைம் கேட்டால் என்ன நினைத்து பதில் சொல்வார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் இன்னமும் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள் ஆப்பரேட்டர்கள்.

சரி கட்டாகிவிட்டாலும் தாமே ஒரு முப்பது சேனல் கண்ட்ரோல் ரூமை அமைத்துக் கொண்டு உடனடியாய் அனலாக் நெட்வொர்க்கை ஆரம்பிக்க நினைத்தால் அது சட்டப்படி குற்றம். சரி சட்ட்ட்தை விடுங்கள். அப்படி உடனடியாய் ஆரம்பித்து நட்த்த முடியுமென்றாலும் அடுத்த நிலை என்ன? என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. வரப் போகிறதா இல்லியா என்ற நிலையை தெளிவாக இன்னும் இரண்டு நாட்களுக்குள் தெரியாவிடில் சென்னையின் அப்பரேட்டர் இனமே குழப்பத்தின் உச்சியில் மண்டையைப் பிய்த்துக் கொண்டு நடுத்தெருவில் நிற்பது நிஜம்.  இதில் காமெடி என்னவென்றால் கொல்கத்தா, டெல்லி ஆகிய மாநிலங்களிலும் அவரவர்கள் உடனடியாய் இம்பளிமெண்ட் செய்ய முடியாது என்று டயம் கேட்டிருக்க. அவர்களுக்கும் அதே பதில்தான். ஆனால் அவர்கள் அங்கே உடனடியாய் அமல் செய்ய மாட்டார்கள். அதற்கு காரணம் அரசு அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவு ஆனால் இங்கே ப்ரச்சனை ஆப் செய்தால் உடனடியாய் இருக்கும் பாக்ஸுகளை வைத்து இம்ப்ளிமெண்ட் செய்யலாம். ஆனால் தொடர்ந்து செயல்பட அரசு ஆதரவு இருக்குமா என்ற பயம் ஆப்பரேட்டர்களூக்கு. கடைசி செய்தியாய் சென்ற வாரம் மினிஸ்ட்ரியிடம் நான்கு அரசு நிர்வாகிகளும் ஒரே நாளில் சுமார் ஒன்னரை கோடி டிவிக்களுக்கு சிக்னல் இல்லாமல் போய் அதனால் ஏற்படப்போகும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏன் தேவையில்லாமல் இழுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதனால் நிச்சயம் எக்ஸ்டென்ஷன் வேண்டுமென்றும் சொல்லிவிட்டார்கள். அரசும் இன்னும் ஒரு வாரத்தில் பதில் சொல்வதாய் சொல்லிவிட்டு போயிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் இன்று காலையில் மத்திய அரசை நேரம் நீட்டிப்புக்காகவும், அடிப்படை பணத்தை அப்படியே ஆப்பரேட்டர்களுக்கு வரும் படியான மாற்றம் செய்ய வேண்டுமென்று இன்று ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கிறது. மத்திய அரசின் ட்ராய் உட்டாலக்கடியைப் பற்றி அடுத்து பார்ப்போம்.
கேபிள் சங்கர்

Post a Comment

31 comments:

வவ்வால் said...

கேபிள்ஜி,

எஸ்சிவி ஏற்கனவே செட் டாப் பாக்ஸ் மூலமா தானே கேபிள் டீ.வி கொடுக்குது.

இப்போ சென்னையில செட் டாப் பாக்ஸ் இல்லாத இணைப்புகள் கம்மியா தான் இருக்கணும்.

அதான் எஸ்சிவி அலட்டிக்காம இருக்கு.

இப்போ செட் டாப் பாக்ஸ் இல்லாத இணைப்புகள் வச்சிருக்கவங்க எஸ்சிவி கிட்டே போய் சரண் அடையணும் இல்லைனா ,சிக்னல் கட் ஆனதும் ,மக்களை எஸ்.சிவி கவர் செய்துவிடும், அதற்கு ஏற்ற அளவில் செட் டாப் பாக்ஸ் கையில் இருக்கணும் ,ஒரு வேளை அவர்கள் டிடிஎச் செட் டாப் பாக்ஸ் நிறையா இருந்தாலும் அதனை கேபிளுக்கு மாற்றிக்கொடுக்கவும் முடியும் என நினைக்கிறேன்.

டிடிஎச் செட் டாப் பாக்ஸ் பின் புறம் கோ ஆக்சியல் கேபிள் ஜாக் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

எப்படி ஆக்டிவேட் செய்கிறோம் என்பதை பொறுத்து பயன்ப்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் சன் குழுமம் கூலாக இருக்கணும்.

அரசு கேபிள் வந்தால் அனைவரும் அவர்களிடம் வாங்க வேண்டும் என்று கட்டாயமாக இருக்கிறதா, ஏன் எனில் அரசு கேபிள் சென்னை தவிர பிற இடங்களில் மலிவு என்பதால் ஓடுகிறது. சென்னையில் மலிவாக இருக்க வாய்ப்பில்லை. மேலும் சன், ஜாக் எல்லாம் மூடவும் மாட்டார்கள்.

அரசு எப்போ வந்தால் என்னனு சன், ஜாக்கில் சிக்னல் வாங்கிக்கொள்ளலாமே.

அவர்கள் சரியாக வருவாய் பிரித்து தர மாட்டார்கள் என்ற பயத்தினால் வேண்டாம் என அரசு கேபிளுக்காக காத்திருந்தால் , சிக்னல் கட் ஆனதும் மக்கள் இடம் மாறிவிடுவார்களே.

Cable சங்கர் said...

டிடிஎச் பாக்சில் இந்த என்கிரிப்ஷன் வராது.

அதுவும் இன்னும் யாரும் செட்டாப்பாக்ஸ் அரசு கேபிள் கந்தாயத்தால் இறக்குமதி செய்யவில்லை.

தமிழ்நாட்டில் மட்டுமே இந்த அரசியல் ப்ரச்சனையோடு குழப்பம்.

விரைவில் சென்னையில் மட்டும் ஆப்பரேட்டர்களின் கண்ட்ரோல் ரூம் வரப் போகிறது.

சிக்னல் கட்டாகாது. :))

எஸ்.சிவியிடமோ, ஜாகிடமோ பாக்ஸுகள் இல்லை.

Cable சங்கர் said...

சென்னையில் இது வரை சுமார் 3 லட்சம் பாக்ஸுகள் உள்ளது. அனைத்து பேரையும் டிஜிட்டல் ஆக்குவதற்கு சுமார் 35-40 லட்சம் பாக்ஸுகள் தேவை.

யுவகிருஷ்ணா said...

விரிவான இச்சமயத்துக்கு அவசியமான பதிவு கேபிள்.

சன் குழுமம் ஒட்டுமொத்தமாக இலவச டி.டி.எச். இணைப்புகள் தரும் புரட்சி திட்டத்தை முன்னெடுக்கப் போவதாக ஒரு வதந்தி ஊருக்குள் கிளம்பியிருக்கிறது :-)

சிவகுமார் said...

!!! சன் குழுமம் ஒட்டுமொத்தமாக இலவச டி.டி.எச். இணைப்புகள் தரும் !
Confirm .
New setup ku ennga areala 1000Rs Demant panaraga - Kattuakkam.

கா.கி said...

சார், நெறைய டெக்னிகல் வார்த்தைகள். எனக்கு சரியா புரியல.
டிவி பாக்கற என்ன மாதிரி சராசரி ஆளுக்கு, இதனால என்ன பிரச்னை / பிரச்சனை இல்லை???

வவ்வால் said...

கேபிள்ஜி,

3 லட்சம் செட் டாப் பாக்ஸ்கள் என்பது குறைவா இருக்கு. நிறைய் டிடிஎச் கு மாறிட்டாங்க ,கேபிள் இணைப்பிலும் ,பலர் செட் டாப் பாக்ஸ் தான்.

டிடிஎச்,& கேபிள் இரண்டிலும் அபார்ட்மெண்ட்களுக்கு என தனியாக அமைத்து ,ஒரே செட் டாப் பாக்ஸ் அனைவருக்கும் சேனல் என அமைத்து விடுகிறார்கள்.

எனவே நிறைய கணக்கில் இல்லாமல் போக வாய்ப்பிருக்கு.

இப்போது செட்டாப் பாக்ஸ் இல்லாத இணைப்புகள் என சென்னையில் 25 % இருந்தாலே அதிகம்.

மேலும் டிடிஎச் இல் என்கிரைப்ஷன் உண்டு , அதனால் தானே பல தேர்வு செய்யாத சேனல்கள் வருவதில்லை, பே பெர் வியு எல்லாம் ஓடுது.

தனியாக கண்ட்ரோல் ரூம் அமைக்கவில்லை எனில் அனைவரும் டிடிஎச்,அல்லது சன் போன்றவற்றிற்கு மாறிவிடுவார்கள்.

R. Jagannathan said...

எனக்கு ரொம்ப குழப்பமாகத் தான் இருக்கிறது! இருந்தாலும் எங்கள் ஏரியாவின் கேபிள் ஆபரேட்டர் ஒன்றும் சொல்லவில்லை. எப்படியும் சரியான அரசு முடிவுகள் இல்லாத வரையிலும், தேவையான செட் டாப் பாக்ஸ்கள் ஸ்டாக் வரும் வரையிலும் இப்போது இருக்கும் கேபிள் கனெக்‌ஷன் அப்படியே தொடரும் என்று தான் நினைக்கிறேன். அரசு சார்பிலோ, வீட்டில் கனெக்க்ஷன் வைத்திருப்பவரோ கோர்ட்டுக்கு சென்று ட்ராய் முடிவிற்கு தடை உத்தரவு வாங்கி விடுவார்கள்!

-ஜெ.

Cable சங்கர் said...

yuvakrishna

சன் குழுமம் இலவசமாய் தருவதெல்லாம் உட்டாலக்கடி. மாக்சிஸ் ப்ரச்சனைக்கு பிறகு அவர்களால் செட்டாப்பாக்சுகளை இம்போர்ட் செய்யவே தடையிருக்கும் நிலையில் சென்னைக்கு இலவச செட்டாப்பாக்ச் எல்லாம் எந்த கொம்பனாலும் நடக்க செய்ய முடியாத் காரியம் ஆகும். கடந்த ஆறு மாதமாக சன் டைரக்ட் விளம்பரே செய்ய வில்லை என்பதை நீங்கள் உற்று கவனித்தால் தெரியும். அத்தோடு.. இலவசமாய் தருவார்கள் என்ற பேச்சே எல்லாவற்றிலும் காசு பார்க்கும் அவர்களிடம் நடக்கவே நடக்காது. அது மட்டுமில்லாமல் கடந்த அரசு கேபிள் இம்பாக்க்டின் மூலம் சன் இழந்தது, இழந்து கொண்டிருப்பது பல கோடி ரூபாய் பேசேனல் வருமானமும். சேனலின் ஜி.ஆர்.பியும். ஒரேடியாய் ஆயிரம் பாயிண்டுகளூக்கு மேல் போயிந்தி.

Cable சங்கர் said...

கேபிள்ஜி,

3 லட்சம் செட் டாப் பாக்ஸ்கள் என்பது குறைவா இருக்கு. நிறைய் டிடிஎச் கு மாறிட்டாங்க ,கேபிள் இணைப்பிலும் ,பலர் செட் டாப் பாக்ஸ் தான்.//

ithu ஒரு நினைப்புத்தான். மொத்தமாய் கேபிள் செட்டாபாக்சுகள் 3 லட்சமும், மற்ற டிஷ் கம்பெனிகளின் டிஷ்களின் செட்டாப்பாக்சுகள் சுமார் 3 லடசமும், அதில் பெரும்பாலான பாக்ஸுகள் ஆக்டிவேஷன் இல்லாமல் இருப்பதுதான் நிஜம்.மிச்ச மொத்தாமும் அனலாக் தான்.

டிடிஎச்,& கேபிள் இரண்டிலும் அபார்ட்மெண்ட்களுக்கு என தனியாக அமைத்து ,ஒரே செட் டாப் பாக்ஸ் அனைவருக்கும் சேனல் என அமைத்து விடுகிறார்கள்.

எனவே நிறைய கணக்கில் இல்லாமல் போக வாய்ப்பிருக்கு.

இப்போது செட்டாப் பாக்ஸ் இல்லாத இணைப்புகள் என சென்னையில் 25 % இருந்தாலே அதிகம்./

இன்னும் இந்தியாவின் மொத்த கேபிள் இணைப்புகளின் அளவின் டிடிஎச். வெறும் பத்து சதவிகிதத்த கூட எட்டவில்லை என்பத்தான் உண்மை.

மேலும் டிடிஎச் இல் என்கிரைப்ஷன் உண்டு , அதனால் தானே பல தேர்வு செய்யாத சேனல்கள் வருவதில்லை, பே பெர் வியு எல்லாம் ஓடுது.


கேபிளிலும் என்கிரிப்ஷன் உண்டு. டிடிஎச்சை விட பன் மடங்கு டெக்னாலஜி கேபிளில்தான் சாத்தியம்.

Cable சங்கர் said...

சன் அல்ல எந்த ஒரு டிடிஎச் நெட்வொர்க்கும் இலவசமாய் தராது. ஏனென்றால் ஒரு பாக்ஸ் விற்று அதன் அசல் கிடைக்கவே அவர்களுக்கு சுமார் ஐந்து வருடம் ப்ரேக் ஈவன் வேண்டியிருந்தது ஒரே ஒரு கம்பெனி இருந்த போதே.

யுவகிருஷ்ணா said...

கேபிள்,

டிடிஎச் வசதியை இலவசமாக தருவது சாத்தியமே என்று நினைக்கிறேன். நானெல்லாம் அவர்களது 500 ரூபாய் திட்டத்தில்தான் இணைந்தேன். 500 ரூபாய்க்கே கட்டுப்படி ஆகிறது எனும்போது மாஸ் அளவில் இலவசமாகவே தந்தாலும் (அம்பானி போன் தந்த மாதிரி) சன் எதிர்காலத்தில் எல்லாவற்றையும் அள்ளு, அள்ளுவென அள்ளுவதற்கு வாய்ப்பியிருக்கிறது.

//டிடிஎச்,& கேபிள் இரண்டிலும் அபார்ட்மெண்ட்களுக்கு என தனியாக அமைத்து ,ஒரே செட் டாப் பாக்ஸ் அனைவருக்கும் சேனல் என அமைத்து விடுகிறார்கள்.//

வவ்வால் சார் சொல்லியிருக்கும் இக்கருத்து எப்படி சாத்தியப்படுகிறது என்று தெரியவில்லை.

ஒரே டி.டி.எச். ஒரே செட்டாப் பாக்ஸ் என்றால் அபார்ட்மெண்டில் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே சேனல்தான் பார்க்கமுடியும். ஒருவர் சூப்பர் சிங்கர் பார்க்க விரும்பும் நேரத்தில் இன்னொருவர் மானாட மயிலாடவோ, வேறு எதையோ பார்க்க விரும்பினால் இது எப்படி சாத்தியப்படும்?

Cable சங்கர் said...

//கேபிள்,

டிடிஎச் வசதியை இலவசமாக தருவது சாத்தியமே என்று நினைக்கிறேன். நானெல்லாம் அவர்களது 500 ரூபாய் திட்டத்தில்தான் இணைந்தேன். 500 ரூபாய்க்கே கட்டுப்படி ஆகிறது எனும்போது மாஸ் அளவில் இலவசமாகவே தந்தாலும் (அம்பானி போன் தந்த மாதிரி) சன் எதிர்காலத்தில் எல்லாவற்றையும் அள்ளு, அள்ளுவென அள்ளுவதற்கு வாய்ப்பியிருக்கிறது.//

வாய்ப்பே கிடையாது. ஏனென்றால் அவர்களைப் பொறுத்த வரை ஒரு செட்டாபாக்ஸ் மற்றும் டிஷ்ஷுக்கு ரூபாய்.. 1000 வரை செலவாகிறது. உங்களைப் போன்று இன்னமும் ரீசார்ஜ் செய்து கொண்டிருப்பவர்களால்தான் கம்பெனிக்கு மூச்சே.. இல்லாவிட்டால் சங்குதான்.


//டிடிஎச்,& கேபிள் இரண்டிலும் அபார்ட்மெண்ட்களுக்கு என தனியாக அமைத்து ,ஒரே செட் டாப் பாக்ஸ் அனைவருக்கும் சேனல் என அமைத்து விடுகிறார்கள்.//

வவ்வால் சார் சொல்லியிருக்கும் இக்கருத்து எப்படி சாத்தியப்படுகிறது என்று தெரியவில்லை.

//ஒரே டி.டி.எச். ஒரே செட்டாப் பாக்ஸ் என்றால் அபார்ட்மெண்டில் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே சேனல்தான் பார்க்கமுடியும். ஒருவர் சூப்பர் சிங்கர் பார்க்க விரும்பும் நேரத்தில் இன்னொருவர் மானாட மயிலாடவோ, வேறு எதையோ பார்க்க விரும்பினால் இது எப்படி சாத்தியப்படும்?//

ஒரு டிஷ் மல்டிபிள் பாக்ச் சிஸ்டம் லக்கி. அது மீண்டும் குழப்ப சிஸ்டத்துக்கே போகும். ஆனாலும் முடியும் ஆனால் இது வரை அது பல இடங்களில் பெயிலியர் தான். ஏனென்றால் லீனியாரிட்டி மற்றும் சிக்னல் ஸ்டெரெந்த். சுமமா காத்தடித்தாலே சிக்னல் மாறும் டிடிஎச்.. வேலைக்காகாது.

Cable சங்கர் said...

//கேபிள்,

டிடிஎச் வசதியை இலவசமாக தருவது சாத்தியமே என்று நினைக்கிறேன். நானெல்லாம் அவர்களது 500 ரூபாய் திட்டத்தில்தான் இணைந்தேன். 500 ரூபாய்க்கே கட்டுப்படி ஆகிறது எனும்போது மாஸ் அளவில் இலவசமாகவே தந்தாலும் (அம்பானி போன் தந்த மாதிரி) சன் எதிர்காலத்தில் எல்லாவற்றையும் அள்ளு, அள்ளுவென அள்ளுவதற்கு வாய்ப்பியிருக்கிறது.//

வாய்ப்பே கிடையாது. ஏனென்றால் அவர்களைப் பொறுத்த வரை ஒரு செட்டாபாக்ஸ் மற்றும் டிஷ்ஷுக்கு ரூபாய்.. 1000 வரை செலவாகிறது. உங்களைப் போன்று இன்னமும் ரீசார்ஜ் செய்து கொண்டிருப்பவர்களால்தான் கம்பெனிக்கு மூச்சே.. இல்லாவிட்டால் சங்குதான்.


//டிடிஎச்,& கேபிள் இரண்டிலும் அபார்ட்மெண்ட்களுக்கு என தனியாக அமைத்து ,ஒரே செட் டாப் பாக்ஸ் அனைவருக்கும் சேனல் என அமைத்து விடுகிறார்கள்.//

வவ்வால் சார் சொல்லியிருக்கும் இக்கருத்து எப்படி சாத்தியப்படுகிறது என்று தெரியவில்லை.

//ஒரே டி.டி.எச். ஒரே செட்டாப் பாக்ஸ் என்றால் அபார்ட்மெண்டில் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே சேனல்தான் பார்க்கமுடியும். ஒருவர் சூப்பர் சிங்கர் பார்க்க விரும்பும் நேரத்தில் இன்னொருவர் மானாட மயிலாடவோ, வேறு எதையோ பார்க்க விரும்பினால் இது எப்படி சாத்தியப்படும்?//

ஒரு டிஷ் மல்டிபிள் பாக்ச் சிஸ்டம் லக்கி. அது மீண்டும் குழப்ப சிஸ்டத்துக்கே போகும். ஆனாலும் முடியும் ஆனால் இது வரை அது பல இடங்களில் பெயிலியர் தான். ஏனென்றால் லீனியாரிட்டி மற்றும் சிக்னல் ஸ்டெரெந்த். சுமமா காத்தடித்தாலே சிக்னல் மாறும் டிடிஎச்.. வேலைக்காகாது.

வவ்வால் said...

கேபிள்ஜி,

நீங்க சொல்ற கணக்கைப்பார்த்தால் ரொம்ப கம்மியாக செட்டாப் பாக்ஸ் இருக்கும் என நினைக்கிறேன்.சன் டிடி எச் 20 லட்சம் கனெக்‌ஷன் என போன ஆண்டே பீற்றிக்கொண்டதே எப்படி?

அந்த மல்டிபிள் கனெக்‌ஷன் விளக்கம் நீங்களே சொல்லிட்டிங்க. அதில் ஆம்பிளிபயர் எல்லாம் இருக்காம் ,நல்லா தான் தெரியுது.சென்னையில் பெரும்பாலான அபார்ட்மெண்ட்களில் ,கேபிள்,லாண்ட் லைன் ,நெட் என அமைத்து விடுகிறார்கள்.மெயிண்டனன்ஸ் ஆட்கள் காசு வாங்க்கொள்வார்கள்.

ஹோட்டல்களில் ஒவ்வொரு அறைக்கும் இப்படி தான் டீ.வி கனெக்‌ஷன் கொடுத்து இருக்கிறார்கள்

-------

செட் டாப் பாக்ஸ் பிரேக் ஈவன் எடுக்க 5 ஆண்டு ஆகுமா ரொம்ப அதிகமா இருக்கே.

ஒரு செட் டாப் பாக்ஸின் தைவான்,சைனா தயாரிப்பு 100 ரூ போலத்தான் என எப்போதோ படித்தேன், இந்தியாவுக்கு இறக்குமதி ,வரி செலவை எல்லாம் சேர்த்து 200-250க்குள் முடிந்துவிடும்.

மேலும் இன்ஸ்டாலேஷன் சார்ஜ் என சன் 800 ரூ வாங்கினார்கள்,500 என சொல்லிவிட்டு.முதல் 6 மாத ஸ்டார்ட்டர் பேசிக் பேக் 720 என நினைக்கிறேன். 500 ரூ என சொல்லி 1850 ரூ வாங்கினார்கள்.

அதே போல செட் டாப் பாக்ஸ் இலவசம் என சொல்லி மறைமுகமாக வசூலித்துவிடும் சன்.

முன்னர் ஹாத்வேயை ஒழித்துக்கட்ட அவர்கள் செட் டாப் பாக்ஸ் ஐ சரண்டர் செய்து சன்னுக்கு மாறினால் செட் டாப் இலவசம் எனக்கூட கொடுத்தார்கள்.

டிடிஎச் இல் கூட ஒரு எக்ஸ்சேன்ச் இருக்கு, டிஷ் பழையதையே பயன்ப்படுத்திக்கொண்டு புதிய செட் டாப் போட்டு கனெக்‌ஷன் மாற்றிக்கொண்டால் 200 ரூ தள்ளுபடி.

முன்னர் ரிலையன்ஸ் பிக் டீ.விக்கு இல் பழைய டிஷ்,செட்டாப் கொடுத்து கனெக்‌ஷன் எடுத்தால் 500 ரூ தள்ளுபடிக்கொடுத்தார்கள்.

எனவே நம்ம வீட்டில் வைக்கும் பொருட்கள் அவ்ளோ வொர்த்துனு எனக்கு தோன்றவில்லை. அதிகபட்சம் 500 ரூ பொருட்களாகத்தான் இருக்கும்.

------------

லக்கி சார்,

மருவாதிலாம் பலமா இருக்கு, :-))

யோவ் வவ்வால் என்றாலும் ஆனந்தமே.

Cable சங்கர் said...

வவ்வால் இதெல்லாம் வெறும் கணக்குத்தான். டிடிஎச்சை பொறுத்தவரை நம்பர் ஆப் பாக்ச் ஆன்லில் இருப்பதுதான் கணக்கு. விற்றது எல்லாம் 500 ரூபாய் க்கு கொடுத்துவிட்டு கண்க்கு மட்டுமே. முக்கால் வாசி பாக்ஸுகள் அன் ஆக்டிவேடட் பாக்சுகள். இதில் சன் மடுமல்ல எல்லா கம்பெனியும் சேர்த்துதான்.

ஐந்து வருடம் என்பது கம்பெனியின் ப்ரேக் ஈவன்.

இன்றைக்கு இருக்கும் ஒரே டிடிஎச் வருமானம் ஒவ்வொரு சேனலின் கேரேஜ் ஃபீஸ் மட்டுமே.. அது மட்டுமில்லையென்றால் டிடிஎச் என்றோ ஊத்தி மூடிக் கொண்டிருக்கும். இப்போது வர இருக்கும் டிஜிட்டல் கேபிள் மூலம் அதுவும் காலி.. ஏனென்றால் ஒவ்வொரு வீட்டிலும் சுமார் ஐந்நூறுலிருந்து எழுநூறு சேனல்களை டிஜிட்டல் முறையில் தெள்ளத்தெளிவாக, மிகச் சுலம்பமாக இருக்கும் டெக்னால்ஜியை வைத்தே கொடுக்கப் போகிறார்கள்.

renown world said...

Nice...

Tamil Movies | Tamil Songs

naren said...

சார், இதில் ஒரே வருத்தம், இனிமேல் உங்கள் பெயரை “ சங்கர் நாராயணன் @ டி.டி.எச் சங்கர் @ செட்டாப்பாக்ஸ் சங்கர்” என மாற்ற வேண்டிய நிலை வந்தாலும் வரலாம்.
settopboxsankaronline.com நல்லாதான் இருக்கு.

ப்ரியன் said...

//.சன் டிடி எச் 20 லட்சம் கனெக்‌ஷன் என போன ஆண்டே பீற்றிக்கொண்டதே எப்படி?//

இது மொத்த இந்திய கணக்கு , கேபிளார் பேசிக் கொண்டிருப்பது சென்னை கணக்கு.

வவ்வால் , இந்தியாவில் முதன்முதலாக ஆரம்பித்த Dish TV (Zee குழுமம்) கூட இன்னும் ப்ரேக் ஈவனை தொடவில்லை.

சங்கர்ஜி, மேக்ஸிஸ் விவகாரத்தில் சன்னுக்கு தடை இருக்கா என்ன அப்படி இருப்பதாய் தெரியவில்லை (ஏதும் செய்தி வந்ததாய் நினைவில்லையே)

வவ்வால் said...

நரேன்,

அவ்ளோ தூரம் எல்லாம் சுத்த வேண்டால் cableஐ தூக்கிட்டு cas= conditional access sankar @cas.sankaronline.com ஆகிடுவார் :-))

உங்களைப்போல சிலப்பேர் "கேஸ்"சங்கர்னு ட்விஸ்ட் செய்தாலும் செய்வீர் :-))

------
பிரியன் ,

5 அண்டுகள் என்பது பிரேக் ஈவன் அடைய போதும் என நினைக்கிறேன்,ஏன் எனில் அவர்கள் வழங்கும் கருவிகளுக்கும் அதிகம் செலவில்லை ,சும்மா வெளியில தான் ஆயிரக்கணக்கில் விலை சொல்லிக்கிறாங்க,மற்றபடி மலிவு தான்.

கேபிள்ஜி சொன்ன கேரேஜ் பீஸ் என்பது இதை தான் என நினைக்கிறேன், டிடிஎச் உள்ள நிறுவனத்தினரிடம் மற்ற சேனல்கள் சேட்டலைட் அப்லின்க் & டிரான்ஸ் மிஷனுக்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். அந்த கட்டணம் செலுத்தாததால் தான் பல ஃப்ரி டு ஏர் சேனல்களும் டிடிஎச் இல் தெரிவதில்லை.

மேலும் டிடிஎச் உள்ளவர்களின் சொந்த சேனல்களை நன்கு புரோமோட் செய்து டிஆர்பி,ஜிஆர்பி ரேட்டிங்க் உயர்த்தி காட்டி அதிக விளம்பர வருவய் எடுப்பார்கள். சன் டிடிஎச், கேபிள் என பிடித்து தொங்கிக்கொண்டு இருக்க காரணமே சேனல்களை முன்னிலைப்படுத்தி அதிக வருவாய் ஈட்டவே.

இதை விட எளிய வழியில் போட்ட மொத்த மூல தனத்தினையும் எடுத்துவிடுவார்கள் ,அது பங்கு சந்தை மூலம். எனவே டிஷ், சன் எல்லாம் இன்னும் பிரேக் ஈவன் அடையவில்லை என்பது சும்மா தியரிக்கு தான். போட்ட முதலீடு எப்போவோ கைக்கு வந்திருக்கும்.

டாடா,ரிலையன்ஸ் போன்ற சேனல் இல்லாமலே டிடிஎச் வைத்திருப்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் என்றாலும் , மேற் சொன்ன ஏதோ ஒரு முறையில் முதலீட்டை எடுத்திருப்பார்கள்.

பங்கு சந்தையில் எப்படி பணத்தினை அள்ளுவார்கள் என்பதினை அறிய எனதுப் பங்குசந்தையால் பலனடைவது யார் ?முதலிய பதிவுகளைப்பாருங்கள்.

Chandrasekaran said...

கேபிள்ஜி சில கேள்விகள்

அனலாக் ஒளிபரப்பு ஜூலை1 இல் சரியாக நின்று விடுமா ? சிறிது காலத்திற்கு வர வாய்ப்புள்ளதா ?
ஏற்கனவே செட் டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்களுக்கு ஏதும் பிரச்னை இருக்குமா ? அல்லது மாற்றப்பட வேண்டுமா ?
ஒரே வீட்டில் இரு டிவி வைத்திருப்பவர்களால் இஷ்டத்திற்கு சேனல்களை பார்க்க முடியாதல்லவா ? அல்லது வேறு ஏதேனும் மாற்று வழி உள்ளதா ?

Cable சங்கர் said...

@Chandrasekaran

நிச்சயமாய் கட் ஆகாது. ஏற்கனவே கேபிள் செட்டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் புதிய பாக்ஸை வாங்கத் தேவையில்லை. பழையதே போதுமானது. புதிய டெக்னாலஜி ஹெச்.டி பாக்ஸ் மாற்ற விரும்பினால் அன்றி தேவையில்லை. இரு டிவி வைத்திருந்தால் இன்னொரு டிவிக்கு பாக்ஸ் வாங்கியே தீர வேண்டும் அனலாக் இல்லையென்றால்.

ப்ரியன் said...

வவ்வால்ஜி , Dish TV listed company

http://www.moneycontrol.com/india/stockpricequote/mediaentertainment/dishtv/DTV

இதுவரைக்கும் லாபம் இல்லை நட்டத்தில் குறைவு அவ்வளவே...

DTH ல் போட்டி அதிகம் , இன்று ஒரு DTH வாங்கும் நபர் நாளை வேறு ஒரு DTH சலுகை தந்தால் மாறுவதும் அதிகம் அதனால் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவே...மேலும் tax உம் அதிகம்...இப்படி நிறைய காரணங்கள்...

கிருஷ்ணன் வைத்தியநாதன் said...

இருக்குற சேனலையே பாக்க டைம் இல்லை பொறுமையும் இல்லை. இதுல 700 சேனல் வந்து என்னவேணும் ? நான் பாக்குற சானலுக்கு மட்டும் பணம் கொடுத்தா போதும். தமிழ்ல விஜயும் ( வேற எல்லா சானலும் குப்பை ), டிஸ்கவரி, என்ஜீசி, பாக்ஸ் ட்ராவலர், ஹிஸ்டரி, ஸ்டார் மூவீஸ், ஹெச்பிஓ, சோனி பிக்ஸ், வார்னர் பிரதர்ஸ், ஜீ ஸ்டுடியோ, ஸ்போர்ட்ஸ் சானல் ஒரு நாலஞ்சு இதுபோதாது ? ஒருத்தன் பத்து முதல் இருபது சானல்தான் பார்பான். தமிழ்நாட்டுல இருக்குற பவர்கட்டுல பாதிநேரம் வீட்டுல கரண்ட் இருக்காது. மீதி நேரம் கேபிள்காரன் கிட்ட கரண்ட் இல்லாம டிவி தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் கிளாரிட்டி இல்லை. கூப்பிட்டா சரி பண்ண வரவே மாட்டான். கூட்டி கழிச்சு பாத்தா டிடிஹெச் தான் சரி. அப்படியா மழை நேரத்துல டிடிஹெச் வழியா டிவி தெரியாம இருக்குறது நல்லதுதான். அவ்வளவுக்கு வந்தவங்க கிட்டயும் வீட்டுல இருக்குறவங்க கிட்டயும் பேசலாம். இடி விழுந்து டிவி நாசமாகாம தப்பிக்கலாம்.

நம்பள்கி said...

ரெவெரி சொல்வது அத்தனையும் வடிகட்டின பொய்கள்; உண்மையை மறைத்து இந்தியனைப் பற்றி சொல்லும் பீ-த்த பெருமைகள்-பொய்கள். படியுங்க...மேலும்...

அமெரிக்கா ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் நாடு!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_14.html

அமெரிக்க ஏழை பணக்கார இந்தியனை விட சொகுசாக வாழ்கிறான்! லிங்க்...
http://www.nambalki.com/2012/06/blog-post_4241.html

அமெரிக்கநாய்க்கும் அரசாங்க புகலிடம், Govt.Shelter, குளுகுளு A/C வசதி!லிங்க்...
http://www.nambalki.com/2012/06/govtshelter-ac.html

என்ன கேள்வியை வேண்டுமானாலும் eஎன்னிடம் கேளுங்கள். உங்கள் அபிமான ரெவெரியிடம் விவாதம் செய்ய நான் ரெடி! ரெவெரி ரெடியா? கேட்டு சொல்லுங்கள்!

அன்புள்ள,
நம்பள்கி!
www.nambalki.com

பொன் மாலை பொழுது said...

அதெல்லாம் சர்தான் தலீவா! எனக்கு இன்னா ஆசைன்னா........சொன்னா போர்வை போட்டு மூடி அடிசிப்புடாதீக....

ஒரு பத்து இருபது நாளுக்கு நாட்ல டி. வீ.யே இல்லாகாண்டி இன்னா கெட்டுபூடும்??

நம்ம சிங்கார சென்னைய அப்டி பாக்க ஆசயாக்கீது.......

நம்ம தாய்குலங்க எல்லாம் இன்னாத்த பண்ணிக்கும்?

டமஷாதாகீது .

வவ்வால் said...

ப்ரியன்,

லாபம் குறைவுனு கணக்கு காட்டுவாங்க,ஆனால் முதலீட்டை எடுத்து இருப்பாங்க, 10 ரூ முகமதிப்பு பங்கினை 50 ரூ என புக் பில்ட்டிங்கில் ஏற்றியே விற்பார்கள், அப்புறம் இதர வருமானம் என காசு பார்த்துவிடுவார்கள், எல்லாம் வரி ஏய்க்கவே நஷ்ட கணக்கு சொல்லுவது. நீங்கள் இன்னும் இந்திய முதலாளிகளை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை.

சன் டிடிஎச் மீது அமலாக்க துறை வழக்கு என்னவெனில் ,அவர்கள் பங்கினை மேக்சிஸ் அதிக விலைக்கு வாங்கியதே. எனவே சன் டிடிஎச் கு போட்ட காசு வந்துவிட்டது, இது போன்ற பல கோல்மால்கள் செய்தாவது போட்ட காசை எடுத்துவிடுவார்கள்.

----------
கிருஷ்ணன்,

//அப்படியா மழை நேரத்துல டிடிஹெச் வழியா டிவி தெரியாம இருக்குறது நல்லதுதான். //

மழையில் டிடிஎச் தெரியாமல் போக காரணம், டிஷ் இல் உள்ள ரிசிவர் யூனிட் நனைவதால் எனவே ஒரு குளிர் பான பெட் பாட்டிலை பாதியாக கட் செய்து ரிசிவர் யூனிட் மீது தொப்பி போல மாட்டிவிட்டால் மழையிலும் டிடிஎச் டீ.வி தெரியும் :-))

இது போல நிறைய பேர் செய்திருப்பதைக்காணலாம், நாங்க எல்லாம் வில்லேஜ் விஞ்ஞானிகள் பாஸ் :-))

ப்ரியன் said...

//மழையில் டிடிஎச் தெரியாமல் போக காரணம், டிஷ் இல் உள்ள ரிசிவர் யூனிட் நனைவதால் எனவே ஒரு குளிர் பான பெட் பாட்டிலை பாதியாக கட் செய்து ரிசிவர் யூனிட் மீது தொப்பி போல மாட்டிவிட்டால் மழையிலும் டிடிஎச் டீ.வி தெரியும் :-))

இது போல நிறைய பேர் செய்திருப்பதைக்காணலாம், நாங்க எல்லாம் வில்லேஜ் விஞ்ஞானிகள் பாஸ் :-))//

இதெல்லாம் வேலைக்காகாது.

மழைகாலங்களில் Signal கட் ஆவதற்கு காரணம் செயற்கைகோள் வழியாக வரும் signal களை மேகமூட்டமோ , பெருமழையோ தடுப்பதே ஆகும்..சின்ன மழைக்கு கூட சில நேரங்களில் கட் ஆகும் அதற்கு காரணம் \\\\\\ வரும் signal க்கு எதிர் பக்கத்தில் இருந்து மழை //////// இப்படி வந்து தடுப்பதே ஆகும்...இது DTH பயன்படுத்தும் Ku band signal களைளேயே அதிகம் பாதிக்கும் (12-18 GHz) , இதே மழைகாலத்தில் Cable ஆபரேட்டர்கள் பெறும் சிக்னலில் தடை இருக்காது ஏன் எனில் அவர்கள் பெறுவது C Band சிக்னல்.

இதே மாதிரி Sun Outage ன்னும் ஒண்ணு இருக்கு வருடத்தின் சில மாதங்களில் ஏற்படும் அது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை நீடிக்கும்...அந்த நேரத்தில் ஏந்த சேனலும் தெரியாது...இது எல்லா Band சிக்னலுக்கும் பொருந்தும் ஏன் என்றால் இது செயற்கைகோளிலேயே ஏற்படுவது.

ப்ரியன் said...

வவ்வால் , உண்மைதான் நட்டம் காட்டினால்தான் அவர்களின் பிழைப்பு ஓடும்...ஆனால் , நீங்கள் நினைப்பது மாதிரி முதலீடு கொஞ்சமல்ல...ஒவ்வொரு DTH உம் 1 TP Space க்கு மட்டும் குறைந்து வருடத்துக்கு 5 கோடி செலவு செய்யவேண்டும். அது அன்றி uplink station setup and maintainence உம் அதிகம்....இந்தியாவில் 1-2 DTH இருந்திருந்தால் குறைந்தகாலத்திலேயே லாபம் எடுத்திருப்பார்கள். ஆரம்பத்தில் Dish உம் TATA Sky உம் எல்லா செலவையும் மக்கள் தலையில் கட்டிவிட்டு நல்லா கல்லா கட்டிக் கொண்டிருந்தார்கள்...சன் வந்து setup box free , மாத கட்டணம் 75 (இப்போ அது 140 என்பது வேறு விசயம்) என்றதும் அரக்க பறக்க விலையை குறைத்தார்கள் அதனால்தான் அவர்களின் வருமானம் குறைந்தது.

DTH பொறுத்தவரை ஒரு வாடிக்கையாளரை பெற DTH நிறுவனங்கள் குறைந்தது 1000 ரூ செலவு செய்ய வேண்டியதாக இருக்கிறது (stb cost , dealer கான பங்கு etc) அந்த வாடிக்கையாளர் அதை DTH ல் தொடர்ந்து 1-2 வருடம் இருந்தால்தான் அந்த வாடிக்கையாளர் மேல் DTH போட்ட காசையே திரும்ப எடுக்க முடியும்.இதேதான் DAS ன் நிலைமையும் DAS ல் அலைவரிசை தட்டுப்பாடு என்ற பிரச்சனை இல்லை , அதனால் DAS வந்தால் வரப்பிரசாதம் எல்லோருக்கும் ஆனா , அதுக்கு முன்னாடி சென்னை கேபிளில் இருக்கும் அரசியல் ஒழியணும்.

ப்ரியன் said...

யுவா, Free DTH சாத்தியமே. DD Direct+ இல்லையா? ஆனால் அதிலும் DTH நிறுவனம் நல்ல காசு பார்க்கலாம் carriage fee வழியாக. ஒரு TP க்கு வருடம் 5 கோடி செலவு , மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து மொத்தம் 10 கோடி என்றாலும். குறைந்த பட்ச carriage fee 50 இலட்சம் என்று வைத்தாலும் 30 சேனலுக்கு 15 கோடி. DD Direct ன் Bidding ல் carriage fee 1.5 கோடி வரை போகிறது. எப்படி பார்த்தாலும் இலாபமே.

வாடிக்கையாளரிடம் Free DTH பார்க்க நீயே Dish + STB வெளி சந்தையில் வாங்கிக்கோ என்று சொல்லிவிடலாம் அந்த காசும் மிச்சம்...அதே நேரத்தில் கட்டண சேனல்களை பார்க்கணுமா STB ஐ மட்டும் என்னிடம் மாற்றிக்கோ என்று சொல்லிவிடலாம்...

சன் குழுமத்தில் ஏதாவது ஒரு சேனலை இலவசமாக கொடுத்துவிட்டு (சன்னை) அதில் கட்டண சேனல்கள் பாரக்கணுமா என்று விளம்பரம் விட்டால் போதும். தமிழ் கட்டண சேனல்கள் மட்டும் 30 ரூ என்றும் பிக்ஸ் செய்யலாம்.

இது நல்ல பிசினஸ் மாடல் , ரொம்ப நாளா ஏன் இப்படி பண்ண மாட்டேன்னு சொல்லுறாங்கன்னு மனசுல நினைச்சுட்டு இருந்த மேட்டர் ;).

ப்ரியன் said...

எதிர்பார்த்தபடி DAS 31st Oct வரை தள்ளி போயிருக்கிறது...அதற்குள் அரசு கேபிள் பற்றி தெளிவான முடிவெடுத்தால் சரி...

"The ministry of information and broadcasting has decided to modify the 30th June deadline for a complete switch over to 31st October 2012," a statement issued by the I&B ministry on Wednesday said.

"All the TRAI regulations for digital addressable system will come into effect from 1st November, 2012," the statement added.