குட்டிக்கதை -1

வண்டியின் முன் பக்க நம்பர் ப்ளேட்டின் ஸ்க்ரு கழண்டு விழுந்துவிட்டது. சரி அதை டூவீலர் மெக்கானிக்கிடம் பிக்ஸ் செய்து கொள்ளலாம் என்று ஒரு மெக்கானிக் கடையை பார்த்து அங்கிருந்த மிடில் ஏஜ் ஆளிடம் “இந்த போர்ட்டு விழுந்திருச்சு. கொஞ்சம் மாட்டிக் கொடுங்க” என்றேன். அவன் வண்டியின் ப்ளேட் இருக்கும் இடத்தைப் பார்த்து “எய்ட் எம்.எம். ஸ்க்ரூ வாங்கிட்டு வாங்க மாட்டிடலாம் என்றார்.

“கடை எங்கிருக்கு?” என்றதும் எதிர் கடையை காட்டினான். நேராக அந்தக் கடைக்குப் போய் ஸ்க்ரூ வாங்கி, அவர்களிடமே ஒரு ஸ்குரூ ட்ரைவரை வாங்கி பிக்ஸ் செய்துவிட்டு கிளம்ப எத்தனித்த போது. “என்ன சார் வாங்கிட்டீங்களா?” என்றார் எதிர்கடை மெக்கானிக். ”வாங்கிட்டேன். ஆனா நானே மாட்டிட்டேன். உன் சோம்பேறித்தனத்துனால எனக்கு இருபது ரூபா லாபம் ரொம்ப நன்றி தம்பி” என்று சொல்லிவிட்டு வண்டியை கிளப்ப, அவன் முகம் போன போக்குத்தான் பாவமாய் இருந்தது.

கேபிள் சங்கர்

Comments

Anonymous said…
Kalakkal Cable..Oru 8 MM screw la business tactics!!!
a said…
இது எப்படி சோம்பேறித்தனமாகும். ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கறதுல கமிஷன் அடிக்கிறாங்கன்னு நாம மெக்கானிக்க திட்டுறதுனாலதான் நம்மலயே வாங்கிட்டடு வர சொல்லுறாங்க..

{
குட்டிக்கதைக்காக நாம கொஞ்சம் ஓவராத்தான் பொங்கிட்டமோ???
}
usss . . .

yabbaaa . . .
சூப்பர் பஞ்ச்!
Hi did u meet Madam Jeya or Rajini
குட்டிக்கதை அருமை...
நீங்க இப்டி எல்லாம் கதை சொல்றத பாத்தா பயமா இருக்கு...இத மாதிரி பண்ணிறாதீங்க...ஏன்னா தொட்டா தொடரும் னு சொல்லுவாங்க...
நலம் கருதி தான்..வேற உள்நோக்கம் இல்லை...
sakthivijay said…
Super
Unknown said…
நச்சுன்னு நாய்க்குட்டி மாறி கீதுபா...