Thottal Thodarum

Jan 6, 2014

கொத்து பரோட்டா - 06/01/14-Uyyala Jampala, நம்ம கிராமம், தந்தி டிவி, புத்தக வெளியீடு, தொட்டால் தொடரும்

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள். எங்கு பார்த்தாலும் புத்தக வெளியீட்டு விழாவாய் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது மூன்றாவது புத்தகம் வெளியிடுகிறவர்களுக்கும், முதல் புத்தகம் வெளியிடுகிறவர்களுக்கும் என் வாழ்த்துகள்.  தொட்டால் தொடரும் பட டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் நிறைய நண்பர்கள் அவர்களது புத்தக வெளியீட்டிற்கு அழைத்திருந்தும் போக முடியவில்லை. . அதையும் மீறி ஒளிப்பதிவாளர், நண்பர் சி.ஜே. ராஜ்குமாரின் “பிக்ஸல்” புத்தக வெளியீட்டிற்கு அவர்கள் ப்ரசாத் லேப்பை காலி செய்வதற்கு முன் சென்று வாழ்த்தினேன். சற்று முன்னர் வந்திருக்கலாமென்று சி.ஜே. ராஜ்குமார் வருத்தப்பட்டார். புத்தகம் நன்றாக வந்திருப்பதாகவும் நல்ல விற்பனையென்றும், நான்கைந்து கூட்டங்களிடையே நல்ல கூட்டமும் கூட என்று வேடியப்பன் சொன்னார். மகிழ்ச்சி. அதையேத்தான் மனுஷ்யபுத்திரனும் ஃபேஸ்புக்கில் கூறியிருந்தார்.ரெட்டிப்பு மகிழ்ச்சி. அனைவரையும் புத்தக கண்காட்சியில் பார்க்கலாமென்று நினைக்கிறேன். என் புதிய புத்தகமான சாப்பாட்டுக்கடை சென்ற மாதமே வெளியாகிவிட்டது. மதி நிலையத்தில் மட்டுமில்லாது பரவலாய் பல ஸ்டால்களில் கிடைக்கும் விவரங்கள் வந்தவுடன் பகிர்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



தந்தி டிவியில் புத்தாண்டு அன்று தமிழ் சினிமாவில் தமிழ் கலாச்சாரம் சீரழிகிறாதா? என்ற தலைப்பில் நானும், மூடர் கூடம் நவீன், இயக்குனர் தயாரிப்பாளர் வி.சேகர் ஆகியோர் கலந்து கொண்டோம். ஆமாம் சீரழிக்கிறது என்று 91 சதவிகிதம் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி சொல்லியிருப்பதாய் தகவல் சொன்னார்கள். இதே தலைப்பில் நான் உரையாடுவது மூன்றாவதோ, நான்காவது முறை என்று நினைக்கிறேன். ஒரு முறை இயக்குனர் விஜய் கிருஷ்ணராஜ். கலாச்சாரம் கெட்டுப் போச்சு என்று பேச, நடுவில் அவர் திரைக்கதை அமைத்த ரோசாப்பூ ரவிக்கைக்காரியை போட்டு கலாய்த்தேன். ப்ரேக்கில் அவர் அனுமதியுடன்.. நிகழ்ச்சியில் பேசியதை நான், நவீன், பாண்டே, கருப்பசாமி, ஆகியோருடன் வி.சேகருடன் பேசிய தனிப் பேச்சு படு சுவாரஸ்யம். மனுஷர் தகவலாய் சொல்லி அசத்துகிறார். அதிலும் அரசியல், சினிமா, வரலாறு என.. பல தரப்பட்ட விஷயங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
அந்த டிவி நிகழ்ச்சிக்காக என்னை அழைத்து செல்ல வந்திருந்த டிரைவருடன் பேசிக் கொண்டே வந்தேன். டிபிக்கல் திருநெல்வேலி ஸ்லாங். ஒர் டீக்கடையில் நிறுத்தச் சொல்லி டீ சாப்பிட்டுக் கொண்டே நீங்க கடைசியா பார்த்த படம் எது என்றேன்? சட்டென யோசிக்காமல் சிங்கம் 2 என்றார். அதுக்கப்புறம்? என்றேன். யோசித்து ஏதும் பாக்கலை என்றவர். நம்ம ஹரி நம்மூரு பக்கத்தூருக்காராரு.. நாடாரு.. அதான் அவரு படம்னா மட்டும் பாத்துருவேன் என்றார். ஜாதிப் பற்று.. ம்ஹும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒளிப்பதிவாளர், நண்பர் விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவில் விரைவில் வெளிவர இருக்கும் அழகு குட்டிச் செல்லம் படத்தின் டீசர்
@@@@@@@@@@@@@@@@@@@@@
Uyyala Jampala
கிறிஸ்துமஸுக்கு ரிலீசான சின்ன பட்ஜெட் படம். படம் தான் சின்ன பட்ஜெட்டே தவிர தயாரிப்பாளர்கள் பெத்தராயுடுக்கள். அன்னபூரணா ஸ்டூடியோ நாகார்ஜுனும், வெங்கடேஷின் அண்ணனும் தயாரித்திருக்கிறார்கள். கதையாய் பார்த்தால் வெகு சுமாரான கதை. முறைப் பொண்ணு, பையனுக்கிடையே ஆன காதல் தான். வழக்கமாய் தெலுங்கு, தமிழ் படங்களைப் பார்க்கும் அத்தனைப் பேருக்கும் அடுத்து வரும் காட்சி ஈஸியாய் சொல்லக் கூடிய அளவில் தான் திரைகக்தையென்றாலும், மிக இயல்பான கதாநாயகனின் நடிப்பு. நம்மையே இளைமையாய் பார்த்த அந்த சந்தோஷம் இதெல்லாம் படம் பார்க்கும் போது கிடைப்பதால் ரசிக்க முடிகிறது. அதிலும், நாயகியும், அவளது தோழியும் ஒரு சேர ஹீரோ தன்னைத்தான் காதலிக்கிறான் என்று ப்ரூவ் செய்து கொள்ள நடத்தும் போட்டிக் காட்சி க்யூட். அண்ட் ஃபீல் குட்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நம்ம கிராமம்
சென்ற வருடத்திய தேசிய விருது பெற்ற படம். தமிழிலும், மலையாளத்திலும் பைலிங்குவலாய் எடுத்திருக்கிறார்கள். மதுஅம்பாட், லெனின் என்று பெரிய டெக்னீஷியன்கள் பட்டாளம் வேறு. 1937 ஆம் ஆண்டில் கதை நடக்கிறது. டிபிக்கல் பாலக்காட்டு பிராமண குடும்பத்தைப் பற்றியும், அக்குடும்பத்தின் தலைவர் மணி அய்யரின் ஆணாதிக்கத்தை, பர ஸ்திரி சிநேகத்தை, குழந்தைத் திருமணம், மற்றும் விதவை மறுமணம் பற்றி பேசுகிறது. கேரளத்தில் நான்கைந்து அவார்டுகளை அள்ளியது ஒன்றும் ஆச்சர்யமில்லை. அதிலும் சிறந்த குணச்சித்ர நடிகையாய் மறைந்த நடிகை சுகுமாரிக்கு கொடுத்தது மிகச் சரி. க்ளைமேக்ஸ் ஒன்று போதும். அவார்ட் படங்களுக்கே உரிய காட்சிகள் ஆங்காங்கே இருந்தாலும், ஒர் நல்ல திரைப்படத்தை பார்த்த திருப்தி நிச்சயம் கிடைக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் நானும் நண்பர் சேதுராமனும் க்ரீன்வேஸ் ரோட்டில் உள்ள ஒர் அமைச்சர் ஒருவரை சந்திக்க போயிருந்தோம். திரும்பி வருகையில்  ஆட்டொவில் போகலாம் என்று முடிவெடுத்த போது “என்ன ஒரு 250 ரூபா கேட்பானா?” என்றார். மீட்டர் போடச் சொல்லுவோம் என்றேன். சட்டென எதிர் திசையில் ஆட்டோ ஒன்று கடக்க, கை நீட்டி அழைத்தேன். உடன் திரும்பி வந்த ஆட்டோ எங்கே போகணும் என்று கூட கேட்கவில்லை. நான் தான் வடபழனி போகணும் என்றவுடன் எதும் பேசாமல் மீட்டரை ஆன் செய்து வண்டியை கிளப்பினான். நான் சென்னையில் தான் இருக்கிறேனா? என்று ஒரு கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். க்ரீன்வேஸ் சாலையிலிருந்து வடபழனிக்கு வெறும் 127 ரூபாய்தான். மக்களே.. கேளுங்க.. மீட்டார் போடக் கேளுங்க.. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ஆங்காங்கே மலையாள டப்பிங் வாசனையிருந்தாலும், நிஜமாகவே நம் தலைமுறைக்கு செய்தி சொன்ன படம். நம்ம கிராமம்.
  • எல்லோருக்கும் தெரிந்த கதை, தெரிந்த க்ளைமேக்ஸ், ஆனாலும் படம் சுவாரஸ்யம். #உய்யாலா ஜம்பாலா.. தெலுங்கு படம்

  • அவனோ பிச்சைக்காரன். ஆனால் அவனிடம் நான்கு கட்டை பைகள். அவனுக்கு சொத்திருக்கு

  • நிகழ்ச்சியில் பேசியதை விட தனிமையில் நீயூஸ் எடிட்டருடன் நாங்கள் பேசியது படு சுவாரஸ்யம்.
  • @@@@@@@@@@@@@@@@@@@@@@@
  • அடல்ட் கார்னர்
  • HOW 2 SATISFY A WOMAN;caress, excite,cuddle, fascinate, spoil, kiss, rub, tease, pamper,console, worship, respect & love.HOW 2 SATISFY A MAN; blow job

  • கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

Unknown said...

நண்பர் கேபிள் சங்கர், இனியதமிழ் திரட்டியை ஆதரிக்க வேண்டுகிறோம். (http://www.eniyatamil.com )

rajamelaiyur said...

உங்கள் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

இன்று
எது மதசார்பின்மை ?

உண்மை said...

உங்க இயக்குனர் பணி 'தொட்டால் தொடர' வாழ்த்துக்கள். உங்களிடம் இருந்து வருடத்துக்கு ஒரு திரைப்படம் எதிர்பார்க்கிறோம்.

/ சிங்கம் 2 என்றார். அதுக்கப்புறம்? என்றேன். யோசித்து ஏதும் பாக்கலை என்றவர். நம்ம ஹரி நம்மூரு பக்கத்தூருக்காராரு//

எல்லாம் டைரக்டர் பத்தியும் நியூஸ் வருது, ஆனா ஹரி பத்தி ரொம்ப வருவதில்லை. அவர் படத்தில பெரிய நடிகர் யாரும் நடிகிறதில்லை ஏதாவது காரணம் உண்டா?