Thottal Thodarum

Jan 12, 2014

புத்தக கண்காட்சி -2

வழக்கமாய் முதல் நாளே ஆஜராகி விடுவேன். தொட்டால் தொடரும் படத்தின் டப்பிங் வேலைகள் காரணமாய் முடியவில்லை. பொங்கல் விடுமுறைக்காக எல்லாம் பேக்கப் செய்யப்பட்டதால் மாலையில் முதல் விஜயம். வழக்கம் போல வாசலிலேயே பார்க்கிங் ஏற்பாடு டூவீலர்களுக்கு. கார்களுக்கு ஊரைச் சுற்றி பின் பக்கம். ஆனால் போன முறை போல உள்ளே போகும் வழிகள் எல்லாம் தெளிவாய் வரவேற்பு வளைவுகள் எல்லாம் வைத்து அசத்தியிருந்தார்கள்.  முன் பக்க விழா மேடை இம்முறை கொஞ்சம் விசாலமாய் இருந்தது.  வழக்கம் போல் வண்டியை பார்க் செய்துவிட்டு திரும்பிய போது எழுத்தாளர் இளங்கோ அவரது மனைவியுடன் எதிர்பட்டார். சிறிது நேரம் பொதுவாய் பேசிவிட்டு கிளம்பும்போது அவரது உங்களது விமர்சனமில்லாமல் மொக்கை படத்துக்கெல்லாம் போய்  மாட்டிக் கொள்கிறோம் என்றார். அவர்கள் சென்ற பிறகு இன்னொரு நண்பர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களது சாப்பாட்டுக்கடை படித்துவிட்டு எல்லா கடைகளிலும் என் குடும்பத்துடன் சாப்பிடுவேன் என்றார்.  மகிழ்ச்சியாய் இருந்தது.


நுழைவாயிலுக்கு சற்றே முன்னால் உதவி இயக்குனர் ராம் சந்தித்தார். வழக்கம் போல சினிமா குசலங்களை முடித்துக் கொண்டு கிளம்பினேன். நண்பர் ராஜன் எனக்காக காத்துக் கொண்டிருந்தார்.  கையில் வேர்க்கடலை பாக்கெட்டோடு. அதற்குள் மணிஜியின் தம்பிக்கு எப்படித்தான் மூக்கு வேர்த்ததோ.. எங்க புக் ஃபேர்லயா இருக்கீங்க? என்று அவரின் கடைக்கு வழி சொன்னார். டிக்கெட் விலையை ஏற்றி விட்டார்கள் பத்து ரூபாயாம்.  உள்ளே நுழைந்த மாத்திரத்தில் என் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங், பதிவர் ஆதி, மணிஜியுடன் நின்று கொண்டிருந்தார். பதினைந்து நிமிடம் அளவளாவிட்டு ஒளிப்பதிவாளரும், ஆதியும் கிளம்பிவிட, மணிஜியின் புத்தக அரங்கிற்கு வந்தேன். வழியில் அய்யப்ப மாதவன் என்னை சந்தித்து என் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். அரங்குகள் சென்ற முறை போலில்லாமல் கொஞ்சம் காற்றோட்டமாய், விசாலமாய் இருந்தது. அவ்வளவாய் கூட்டமில்லை.  மணிஜியின் கடையில் கொஞ்சம் நேரம்  இருந்துவிட்டு நானும் நண்பர் ராஜனும் கடைகளை சுற்றிப் பார்க்க கிளம்பினோம் வழியில் சிவா என்றொரு வாசக நண்பர் அமெரிக்காவிலிருந்து வந்து வாழ்த்திவிட்டு போனார். இதை விட வேறென்ன வேண்டுமெனக்கு என்று தோன்றியது. பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ் பவன் சிவகுமார், ஆரூர் மூனா, ஆவி சுரேஷ் என நண்பர்கள் பட்டாளம் ஆளூக்கொரு புத்தகங்களை வாங்கி வந்திருந்தார்கள். கிழக்கு பதிப்பகம் பத்ரியை சந்தித்து அவரது புதிய வெளியிடான மணிரத்னம் படைப்புகள் ஒர் உரையாடல் பற்றி சிலாகிஹ்தேன். டிஸ்கவரி வேடியப்பன், நேசமித்ரன், கார்த்திகை பாண்டியன், அனுஜன்யா,  போன்றோர்களை சந்தித்தபடியே நானும் என் நண்பரும் புத்தகங்களை வாங்கினோம். நான் இன்னமும் எழுதி முழுமையடையாமல் இருக்கும் நான் -ஷர்மி - வைரம் நாவலை வெளியிடுவதற்கு மூன்று பதிப்பகங்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு என் நன்றிகள். முதல்ல எழுதி முடிக்கிறேன் அப்புறம் புக்கு போடலாம் என்றேன் அவர்களிடம்.

நான் வாங்கிய புத்தகங்கள்

வெண்கடல் - ஜெயமோகன்
வெள்ளையானை - ஜெயமோகன்.
ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
கர்ணனின் கவசம் -கே.என். சிவராமன்
பிக்ஸல் - சி.ஜே. ராஜ்குமார் - இது பப்ளிஷர்/ எழுத்தாளர் அன்புடன் ரிவ்யூவிற்காக கொடுத்தார்கள்.

இவையனைத்துக்கு பணம் கொடுத்து இன்னும் வேணுமின்னா வாங்கிக்கங்கன்னு ஊக்கப்படுத்திய நண்பர் புரவலர் ராஜனுக்கு நன்றிகள் பல. அவர் முழுக்க, முழுக்க, எஜுகேஷன் சம்பந்தப்பட்ட தொழில்களைப் பற்றிய நூல்களைத்தான் வாங்கியிருந்தார்கள். வழக்கம் போல விகடன் ஸ்டாலில் கூட்டமிருந்தது. வேடியப்பன் கடையிலும், அகநாழிகை வாசு கடையிலும் நண்பர்கள் கூட்டமிருந்தது. வெளியே வந்தால் சுரேகா கன்சல்டாக இருக்கும் ஒர் ஐஸ்கிரிம் கடையில்  வந்து பேச  ஆரம்பித்தோம். வித்யாசமான ஒர் ஐஸ்க்ரீமை கொண்டு வந்து கொடுத்தார். அதிக ஸ்வீட் இல்லாமல் வித்யாசமான சுவை.  என்னுடய புத்தகங்களான, லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும், சினிமா வியாபாரம், மீண்டும் ஒர் காதல் கதை, கொத்து பரோட்டா, சினிமா என் சினிமா, தெர்மக்கோல் தேவதைகள், கேபிளின் கதை, மற்றும் சாப்பாட்டுக்கடை ஆகியவை புத்துபுனல்/ அகநாழிகை ஸ்டாலிலும், மதி நிலையத்திலும், டிஸ்கவரி புக் பேலஸிலும் கிடைக்கிறது.

டிஸ்கவரி புக் பேலஸ் - 307- 308, 353-354

அகநாழிகை - 666 - 667

மதி நிலையம் - 587 - 588
நிவேதிதா புத்தகப் பூங்கா - 671



Post a Comment

3 comments:

Seeni said...

Pakirvukku nantri!

'பரிவை' சே.குமார் said...

சென்று வந்த விபரம் பகிர்வாய்...
பதிவுலக நண்பர்களின் புத்தகங்களை வாங்கவில்லையா?
பிரபலங்களின் புத்தகங்களை மட்டும் வாங்கியது போல் தெரிகிறது....

Desingh said...

Sir waiting for you movie... :)