Thottal Thodarum

Apr 23, 2014

2 States

நல்லாருக்கு, இல்லை மொக்கை  என பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும், முதல் மூன்று நாட்களில் முப்பது கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது இப்படம். ஏற்கனவே சேத்தன் பகத் எழுதிய நாவலை படித்து ரசித்தவன் என்கிற வகையிலும், படிக்கும் போதே இது சினிமா மெட்டீரியல் சரியா எடுத்தா செம்ம ரொம்மாண்டிக் கதையா இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். எடுத்தே விட்டார்கள். ஆனால் ரொமாண்டிக்காக இருந்தா என்று கேட்டால் பதில் சொல்லத்தான் முடியவில்லை.ஒர் பஞ்சாபி இளைஞனுக்கும், தமிழ்நாட்டு சென்னைப் பெண்ணுக்குமிடையே ஆன காதல். காதலுக்கு எதிரியாய் அவர்களுடய கலாச்சாரம், குடும்பம், குடும்பப் பின்னணி ஆகியவை இருக்க, பெண்ணோ.. குடும்பம் ஒத்துக் கொண்டால்தான் கல்யாணம் என்றுவிட, சென்னைக்கு வேலை வாங்கிக் கொண்டு, அவள் வீட்டில் தம்பிக்கு ட்யூஷன் எடுத்து, அம்மாவுக்கு பாட வாய்ப்பு வாங்கி கொடுத்து, அப்பாவுக்கு பாங்கில் ஒர் ப்ரெசெண்டேஷனுக்கு உதவி செய்து ஒரு வழியாய் கரெக்ட் செய்ய, பெண்ணை தன் வீட்டிற்கு வரவழைத்து கரெக்ட் செய்ய கூட்டி வருகிறான். பின்பு என்ன ஆனது என்பதை தியேட்டரில் சென்று பார்த்து கொள்ளுங்கள்.

அர்ஜுன் கபூர் அழகாய் இருக்கிறார். கண்ணாடியெல்லாம் போட்டுக் கொண்டு சோபர் பையனாய் காட்டிக் கொள்ள விழைகிறார். ஆனால் அவர் ஸ்கீரின் ப்ரெசென்ஸும், பாடிலேங்குவேஜைப் பார்க்கும் போது கண்ணாடி இல்லாமலயே  அப்படித்தான் இருக்கிறார். படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.. ஹீரோயின் அலியா பட். சவுத் இந்தியன்/ மதராஸி பெண் வேடத்திற்கு சரியாய் பொருந்தியிருக்கிறார். பார்த்த மாத்திரத்தில் அவரின் அழகில் வீழ்ந்தவர்கள் அவரின் மைனசான ஒரே மாதிரியான ரியாக்‌ஷன்களை கவனிக்க தவறுவது இயல்பு. பட்.. இன்னும் பெட்டரா பண்ணியிருக்கலாம். சென்னைன்னு சொல்லிட்டு பாண்டிச்சேரியிலேயே ஷூட் பண்ணியிருக்கிறார்கள்.

ஆகாஷ் பட்டேல், பினோத் பிரதானின் ஒளிப்பதிவு ரிச் மற்றபடி பெரிதாய் சூப்பர் என்று சொல்வதற்கு ஏதுமில்லை. சங்கர் இஷான் லாயின் இசையில் பாடல்கள் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும். என்னாச்சு? சங்கர். 

சேத்தன் பகத்தின் கதையை அப்படியே பெரிதாய் மெனக்கெடாமல் திரைக்கதையாக்கி இயக்கியிருக்கிறார் அபிஷேக் வர்மன். ஒர் வகையில் கதை படித்தவர்களுக்கு சரியென்று பட்டாலும், கதையாய் படிக்காதவர்களுக்கு சலிப்படையச் செய்யும் என்றே தோன்றுகிறது. படித்த எனக்கே.. இளமையான துள்ளல் நடையோடு படித்த போது இருந்த பரபர உணர்வு படம் பார்க்கையில் நத்தைத்தனமாய் ஊர்ந்தது. எனிவே அழகிய அலியா பட்டுக்காக பார்த்து வைக்கலாம். ஐபிஎல்லின் போது இரவு காட்சியெல்லாம் காலியாக இருக்கிறது என்று சொல்வார்கள். திங்கட் கிழமை இரவு காட்சி சத்யமில் ஃபுல்.
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

sanjay said...

// ஒர் வகையில் கதை படித்தவர்களுக்கு சரியென்று பட்டாலும்,//

இப்படி எல்லா இடத்துலயும் "ஓர்" போடணுமா??

RAJATRICKS - RAJA said...

படம் பார்த்துடுவோம் ....

RAJATRICKS - RAJA said...

இன்று
தயவு செய்து ஓட்டு போடாதிங்க !!

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

hayyram said...

///ஒர் பஞ்சாபி இளைஞனுக்கும், தமிழ்நாட்டு சென்னைப் பெண்ணுக்குமிடையே ஆன காதல்.//

இந்த சேத்தன் பகத் எப்பவுமே தமிழ் பெண்களை வடக்கத்தி ஆண்களுக்கு தாரைவார்க்கும் கதைகளையே எழுதுகிறார். தமிழ்பெண்கள் மீது அவ்ளோ ஆசையா?