Thottal Thodarum

Apr 21, 2014

கொத்து பரோட்டா - 21/04/14 -கேட்டால் கிடைக்கும், அடல்ட் கார்னர், தேர்தல்

மின்சார தட்டுப்பாட்டுக்கு காரணம் யாரோ சதி செய்து அனல் மின் நிலையங்களை எல்லாம் பழுதடைய செய்துவிடுகிறார்கள் என்கிறார் முதலமைச்சர். இத்தனை நாள் இல்லாமல் இப்போது பவர் கட் தொடர்வது பற்றி எத்தனை நாள் தான் முந்தைய அரசை குறை சொல்வது என்று புரியாமல் இப்படி பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் கூறுவது. சரியா என்ற கேள்வி படித்த வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சியினால் தான் நாட்டுக்கும் உங்களுக்கும் நன்மை செய்ய முடியும் என்று வேறு ஆளாளுக்கு கோஷிக்கிறார்கள். மோடி வேறு தன் திருமண விஷயத்தை இத்தனை வருடங்கள் மறைத்து வந்திருக்கிறார். கடவுள் இல்லைன்னு நான் எங்க சொன்னேன் இருந்தா நல்லாருக்கும்னுதானே சொன்னேன் என்பது போல இத்தனை வருடங்களாய் தன் திருமணத்தை பற்றி சொல்லவில்லையெ தவிர திருமணமே ஆகவில்லை என்று எப்போது சொன்னேன் என்றும், அவரது சகோதரரோ..குடும்பத்துக்காக நடந்த சடங்கு அது என்று ஒரு பக்கம் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் ஆர்.எஸ்.எஸில் பிரம்மச்சாரிகளுக்கு மட்டுமே இடம் என்ற எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டிருக்கிறார். சரி..  என்னவோ போங்கப்பா.. இத்தனையும் எலக்‌ஷன் வரைக்கும்தான்.. அதுக்கு அப்புறம் எவன் என்ன சொன்னா என்ன..? பப்ளிக் மெமரி
@@@@@@@@@@@@@@@@@@@@கேட்டால் கிடைக்கும்
ஐநாக்ஸ் விருகம்பாக்கத்தில் படம் பார்க்க போயிருந்தேன். மொத்த மாலில் ஒரே ஒரு வியாபார நிறுவனம் தான் செயல் படுகிறது. அது பாண்டலூன். இருக்கிறவன் எல்லோரும் காலி செய்து போய்விட்டிருக்க, ஐநாக்சும், பாண்டலூனும் ஒரு வீடியோ கேம் கடை மட்டுமே மிச்சம். ஐநாக்ஸ் மட்டும் பேமை வாங்காமல் விட்டிருந்தால் இந்த மால் அதோ கதிதான். சரி விஷயத்துக்கு வருவோம். இதுநாள் வரை பைக் பார்க்கிங்குக்கு ஒரு மணி நேரத்துக்கு பத்து ரூபாய் வீதம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது ப்ளாட்டாய் மூவி பாஸ் என்று நாற்பது ரூபாய் வாங்குகிறார்கள். சரி.. படம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு சென்றிருந்தால் கூட அப்படி வாங்குவது ஓகே.. இல்லை மாலில் சுற்றிப் பார்க்க ஏதாவது இருந்தாலாவது மூவி பாஸ் வாங்கிக் கொண்டு சுற்றிவிட்டு வருவார்கள் என்று கூறலாம். அதுவும் சரியாய் படம் ஆரம்பிக்கும் நேரத்தில் உள்ளே செல்கிறவர்களிடம் மூவி பாஸ் என நாற்பது ரூபாய் வாங்குவது நியாயமே இல்லை. நான் ஹவர் டிக்கெட் மட்டும் வாங்கிக் கொண்டு படம் பார்த்துவிட்டு, வெளியே வந்தேன். மூன்று மணி நேரத்திற்கு முப்பது ரூபாய் தான் ஆகியது. ஆனால் இதை சொல்லி நான் டிக்கெட் கேட்ட போது பின்னால் இருந்த வண்டிக்காரர். பத்து ரூபாயில என்ன சார் வந்திரப் போவுது? என்றார்.. ஏன் ஒரு பத்து ரூபா கொறைச்சு கொடுங்களேன் உள்ளே விடுறாங்களா? பார்ப்போம் என்றேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் அனல் பறக்கும் வெய்யில் திநகரிலிருந்து சாலிகிராமத்துக்கு வந்து கொண்டிருந்த போது, கோடம்பாக்கம் ப்ரிட்ஜ் திருப்பதில் டிராபிக் போலீஸ் ஃபீரி லெப்டை செக் செய்து கொண்டிருக்க, அவர்கள் தடுத்த வண்டி ஒன்றிலிருந்து பரட்டை தலையுடன் கொஞ்சம் லோக்கலாய்  தெரிந்த இளைஞன் ஒருவன் திடு திடுவென சார்ஜெண்டை நோக்கி ஓடி வந்தான். அதே நேரத்தில் திநகரிலிருந்து கோடம்பாக்கம் ப்ரிட்ஜுக்கு ஒர் கார் மெதுவாகத் திரும்ப, காரின் முன் ஓடி வந்த வேகத்தில் தடுமாறியவன் பானட்டின் மீது சரிந்து தரையில் விழ, கார் திருப்பத்தில் இருந்ததால் ஷண நேரத்தில் காரின் பின் சக்கரம் அவனின் முகத்தின் மீது மெதுவாக ஹைஸ்பீடில் ஏறி இறங்கியது. காரில் இருந்தவர் முதல் அதை கண்ணால் பார்த்த என் வரையில் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தோம். அந்த இளைஞனின் தலை மட்டும் வலது இடதுமாய் அழற்சியில் ஆட, பதட்டம் அடைந்தோம். அவனுக்கு உதவ கீழே இறங்கலாம் என்று நினைக்கும் போது சட்டென எழுந்த இளைஞன் நேராக சார்ஜெண்டை நோக்கி எகிறியபடி, என்னை கொன்னுருப்பீங்களே சார்.. என்று கத்த ஆரம்பித்தான். சார்ஜெண்ட் கொஞ்சம் வெளிறித்தான் இருந்தார். ட்ராபிக் காரணமாய் அதற்கு மேலும் அங்கே நிற்காமல் நான் கிளம்பிவிட்டேன். கீழே வீழ்ந்த நொடிகளில் அவனின் பாடிலேங்குவேஜும், அதன் பின்னர் அவர் எகிறியதை வைத்துப் பார்க்கும் போது முகத்தில் ஏறிய கார் நிஜமென்றாலும் அவனின் நடிப்பு சிறப்பாகவே இருந்தது. மேலும் போலீஸுக்கு ஒர் வேண்டுகோள். ஃபீரி லெப்ட் குறித்து பிடிக்க ஏன் மறைந்து நின்று பிடிக்க வேண்டும்?.  திரும்பத்திற்கு முன்பே நின்றிருந்தால் அட்லீஸ்ட் வண்டியோட்டுகிறவர்கள் போலீஸ் இருக்கிறது என்று சட்டத்தை மதிப்பார்கள். குற்றம் நடக்காமல் இருக்கத்தானே போலீஸ்?. நடக்க விட்டு பின்பு பிடிப்பது முறையல்லவே? யோசிங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
பீனீக்ஸ் மாலில் பைக் பார்க்கிங் செய்வதற்கு வார நாட்களில் 50 ரூபாயும், வார விடுமுறை நாட்களில் 70 ரூபாய் வாங்குகிறார்கள். மால் கலாச்சாரம் வளர, வளர, அங்கே வருகின்ற இளைய தலைமுறையினரிடம் காசு பிடுங்குவதையே குறிக்கோளாய் வைத்துக் கொண்டு செயலபடுகிறது மால் நிர்வாகம். முதலில் மணி நேரத்திற்கு 10 ருபாயும், அதற்கு மேல் ஆகும் மணி நேரத்துக்கு 5 ரூபாய் வைத்தது சிட்டி செண்டர். அதை யாரும் கேட்காமல் போக, மெல்ல, பிவிஆரில் மணிக்கு 20 ரூபாய் சார்ஜ் செய்ய ஆரம்பித்தார்கள்.  பின்பு ஈ.ஏவிலும் அதை பின்பற்ற ஆரம்பித்தார்கள். அப்போதும் யாரும் கேட்கவில்லை. என்ன தான் மால்களில் மக்களுக்கு இலவசமாய் பார்க்கிங் விட்டால் சத்திரம் போல வண்டியை விட்டுவிட்டு வெளியே சுற்றி விட்டு வருவார்கள் என்றும், அவனவன் ஏசியில் டைம் பாஸ் செய்ய மால் சுற்ற வருவார்களென்றும் காரணங்கள் சொன்னாலும், இங்கிருக்கும் ஹோட்டல்களுக்காகவோ, அல்லது ஷாப்பிங் செய்வதற்காகவோ மக்கள் வருவதில்லை. அங்கிருக்கும் தியேட்டர்களுக்காக வர ஆரம்பிக்கும் மக்கள் மற்ற பொழுது போக்கு விஷயங்களையும் கவனம் செலுத்த ஆரம்பிக்க, வியாபாரம் வளருகிறது. இந்த பார்க்கிங் விஷயம் கஸ்டமரின் கையை கடிக்க, ஆரம்பித்ததன் பொருட்டு, பல மால்களில் உள்ள உணவகங்கள், மற்றும் வியாபார நிறுவனங்கள் அவர்களின் சாப்பாட்டு பில்லிலோ, அல்லது ஷாப்பிங் பில்லிலோ பார்க்கிங் சார்ஜை கழித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த பார்க்கிங் சார்ஜுக்கும், அங்கே தியேட்டர்கள் நடத்துகிறவர்களுக்கும் சம்மந்தமில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும், இவர்களை சொல்லி அங்கே அதிக பார்க்கிங் சார்ஜ் வாங்குகிறார்கள் என்று சொல்வதற்கு காரணம் அவர்களின் பெயரை வைத்துத்தான் மாலின் அடையாளம் எனும் நிலையில் இருப்பதால் தான். ஏற்கனவே சினிமாவின் வசூல் நிலை மிகவும் பாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிற வெளையில் 120 ரூபாய் டிக்கெட் விலைக்கு, 150 ரூபாய்க்கு மேல் பார்க்கிங் சார்ஜ் அதுவும் பைக்குக்கு எனும் நிலையை கொஞ்சம் யோசியுங்கள். . இவர்கள் இங்கே விலையேற்ற, சாதரண சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களும் சத்தமில்லாமல் இப்போது 20 ரூபாய் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். மிடில்க்ளாஸ் மக்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவிடும். அது மாலுக்கும் நல்லதில்லை, சினிமாவுக்கும் நல்லதில்லை. சினிமா பார்த்துவிட்டு வருகிறவர்களிடம் டிக்கெட் காட்டினால் பார்க்கிங் சார்ஜில் டிஸ்கவுண்ட் கொடுக்கலாமில்லையா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
மால்களுக்கு சென்றே ஆக வேண்டுமென்று நிகழும் போது எதுக்கு இவ்வளவு பார்க்கிங் சார்ஜ் என்று கேட்டு சண்டை போட்டுவிட்டு போங்கள். பதில் கிடைக்கும்

பார்க்கிங் சார்ஜெல்லாம் விரைவில் 100 ரூபாய்க்கு வருமென்பதால் தயாரிப்பாளர்கள் தயவு செய்து முக்கால் மணி நேரத்திற்கு படமெடுக்கவும்:) Request

சிறந்த பாடலாசிரியர் விருது பெற்ற என் இனிய நண்பர், எங்கள் திரைப்படத்தின் பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு எங்கள் குழுவின் சார்பாய்வாழ்த்துகள்

ஈரமாய்.. ஈரமாய்... வாவ்.. ராஜா ராக்ஸ்..#உன் சமையலறையில்

Rajini pettiya vida sun tv patti mandram nallla irukku. Pathila vida kelvi rompa neelam

கரண்டு தட்டுப்பாடே இல்லையாம். யாரோ சதி செய்யறாங்களாம். ம்ஹும். #நல்லாத்தான் சொல்றாங்கய்யா.. கதை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
The teacher asked Jimmy, "Why is your cat at school today Jimmy?" Jimmy replied crying, "Because I heard my daddy tell my mommy, 'I am going to eat that p*ssy once Jimmy leaves for school today!'
கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

kalil said...

me the first

Eswaran Kandaswamy said...

Forget Maals, even theaters like Sangam, Anna charging Rs.40 per Car. I stopped going to Inox due to high parking charges. We all should boycott Maals with high parking charges.

Further Chennai Corporation should think of starting "Amma Parking" at subsidised rates. They can use the OSR land to build multi level parking.

Thanks, Eswaran K

aavee said...

அப்பாவி ஜிம்மி ஹஹஹா

aavee said...

அண்ணே, US ல சில மால்களில் இது போல் வசூலிப்பது உண்டு. ஆனால் தியேட்டர் டிக்கட் அல்லது மால்களில் உள்ள கடைகளில் நாம் ஏதேனும் பொருட்கள் வாங்கிய பில்லை காண்பித்தால் பார்க்கிங் இலவசம்.. இங்கே அதுபோல் ப்ரீயாக விட வேண்டாம்.. குறைந்த கட்டணத்தில் விடலாமே.. அடிக்கடி படம் பார்க்கும் என்னைப் போன்றோருக்கு அப்படி வந்தால் ஒரு வரப்பிரசாதமே..

Unknown said...

park outside... :-)
still parking at your own risk

Gujaal said...

// ஃபீரி லெப்ட் குறித்து பிடிக்க ஏன் மறைந்து நின்று பிடிக்க வேண்டும்?. திரும்பத்திற்கு முன்பே நின்றிருந்தால் அட்லீஸ்ட் வண்டியோட்டுகிறவர்கள் போலீஸ் இருக்கிறது என்று சட்டத்தை மதிப்பார்கள். குற்றம் நடக்காமல் இருக்கத்தானே போலீஸ்?. நடக்க விட்டு பின்பு பிடிப்பது முறையல்லவே? யோசிங்க..//

அப்போ, எல்லா நேரமும் காவல்துறை அங்கு நின்று கொண்டேயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லோரும் விதி மீறுவார்கள். அது காவல் துறையை efficient ஆக பயன்படுத்துவதாக அமையாது. மறைவாக நிற்பதன் காரணம், பயம் காரணமாக சராசரிகள் பெரும்பாலும் விதி மீறமாட்டார்கள் என்பதே.

S P Ditto said...

பீனீக்ஸ் மாலில் சத்யம் தியேட்டரின் Luxe Cinemas திறந்து இருக்கிறார்கள், எப்படி இருக்கிறது என்று பார்க்க ஒரு படத்தை தேர்வு செய்து பார்க்க போயிருந்தேன். படத்தின் டிக்கெட் விலை ரூ. 120, ஆனால் பைக் பார்கிங் சார்ஜ் ரூ.150 (50 X 3).

இது நடந்து ஒரு வாரத்துக்கு மேல ஆகியும் இன்னும் என் மனசு ஆறவே இல்லை. இதுக்கு மேல் பீனீக்ஸ் மால்'க்கு போகவே கூடாது என்று முடிவு எடுத்து விட்டேன். Sathyam Theater is best for movie viewing, as they are charging only Rs.20 for Bike Parking in their own complex.