Thottal Thodarum

May 5, 2014

கொத்து பரோட்டா - 05/05/14

கேட்டால் கிடைக்கும்
டொமினோ பிட்சாவில் பில் போடப்பட்டவுடன் வழக்கம் போல செக் செய்ய ஆரம்பித்தேன். மொத்த தொகைக்கு 4.49 சதவிகிதம் சர்வீஸ் டேக்சும், 14.5 சதவிகிதம் வாட்டும் போட்டிருந்தான். அது ஒரு செல்ப் சர்வீஸ் ரெஸ்ட்ராரெண்ட். அதில் என்ன சர்வீஸ் சார்ஜ்? என்று கேட்டதற்கு முழி முழி என முழித்தான். மேனேஜர் என்றொருவர் வந்து அவரும் தன்  பங்கிற்கு முழித்துவிட்டு, டோர் டெலிவரி எல்லால் செய்யுறோமில்லை அதுக்குத்தான் என்றார் ஸ்மார்ட்டாய். அது டெலிவரி செய்யுறதுக்கு நான் இங்கே வாங்கிட்டு போறேன் எனக்கெதுக்கு? என்றதும் அவர் பங்கிற்கு “ஙே”. எனக்கு இந்த சர்வீஸ் டேக்ஸ் மற்றும் வாட் குழப்பம் ஒவ்வொரு பில்லுக்கும் வந்து கொண்டேத்தானிருக்கிறது. இந்த நேரத்தில் என் பெரிய மகன் பில்லை நோட்டம் விட்டுக் கொண்டேயிருந்தான். அதில் ப்ளாஸ்டிக் கவருக்கு 6.11 பைசா போட்டு, அதற்கு சேர்த்துத்தான் வாட், சேவை வரி எல்லாம் போட்டிருந்தார்கள். “அப்பா நாமத்தான் இங்கயே சாப்பிடப் போறோமே எதுக்கு ப்ளாஸ்டிக் பேக்குக்கு காசு தரணும் என்று கேட்க, நீயே போய் கேளு என்றேன். அவனும் போய் கேட்க, அங்கிருந்து வந்த ஒருவர்.. அது பில்லிங் போட்டவங்க சரியா கேட்கலை உங்க கிட்ட டாக்ஸ் எல்லாம் சேர்த்து பத்து ரூபாய் இந்தாங்க என்று மிச்சம் கொடுத்தார். ஆனால் அங்கே உட்கார்ந்து சாப்பிட்ட அனைவரின் பில்லிலும், அவர்கள் டீபால்டாய் ப்ளாஸ்டிக் கவர் பில் செய்திருந்தார்கள். எனக்கு பணம் கொண்டு வந்து கொடுத்தவரின் பார்வையில் ஒர் ஏளனம் இருந்தது. ஆனால் எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. என்னைப் போலவே கேள்வி கேட்க என் மகன் ஆரம்பித்திருக்கிறான். நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது.கேட்டால் கிடைக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@



அமைதிப் பூங்காவெனப்படும் தமிழகத்தில் குண்டு வெடிப்பு லேசாய் ஆட்டித்தான் போட்டது. இம்மாதிரியான கபளீகரத்துக்கு பழக்கப்படாத மக்கள் அன்றைய நாள் முழுவதும் வெளியே போகாமல் வீட்டிற்குள் அடைந்தனர். அமைதிபூங்காவான தமிழகத்தின் மீதான அச்சுறுத்தலுக்கான ஆரம்பமாய்த்தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவமாகத் தெரிகிறது. உன் ஆட்சியில் மட்டும் ஒழுங்கா? வந்த தகவல்களைப் பற்றி ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆளாளுக்கு குற்றம் சொல்லாமல் அட்லீஸ்ட் இதில் ஒன்றிலாவது ஒற்றுமையாய் இருந்து மக்களுக்காக நடவடிக்கை எடுத்தார்களேயானால் நன்று.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Amazing SpiderMan2
வர வர சூப்பர் மேன் கேரக்டர்களையெல்லாம் சாதாரண மனிதனின் உணர்வுகளுடனே படைக்கும் டெம்ப்ளேட்டில் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ வர ஆரம்பித்துவிட்டது. அதே ப்ரச்சனைத்தான் இதிலும், முந்தைய படங்களை விட சிஜியிலும், 3டியிலும் ஒரிரு காட்சிகள் அட போட வைத்தாலும், மும்முனை தாக்குதலாய் ரெண்டு வில்லன்களை வைத்து ஏதேதோ பண்ண முயற்சி செய்கிறார்கள். உட்சபட்சமாய் சூப்பர் ஹீரோ தன் காதலியை காப்பாற்ற முடியாமல் சாகவிடுவது வரை.. எம்.ஜி.ஆர். படங்களை பார்த்து பழகிய நமக்கு இதெல்லாம் நாங்க பாத்தாச்சுடா..என்று உரக்க கத்துவதைத் தவிர வேறேதும் செய்ய முடியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@
அனாமிகா
கஹானியோடு அனாமிகாவை கம்பேர் செய்து படம் பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் ரசிக்க முடியாமல் கூட போகலாம். சேகர் கம்மூலா எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். அவரின் முதல் த்ரில்லர் ஜெனர் படம், நயந்தாரா வேறு எனவே ஆர்வம் அதிகமாய் இருந்தது. நிச்சயம் தமிழ், தெலுங்கு என பைலிங்குவலாய்  எடுப்பதாய் சொல்லி, பாதி வைட் ஆங்கிள் காட்சிகளை டப் செய்துவிட்டு க்ளோசப்பில் மட்டுமே தமிழ் படமாய் எடுப்பார்கள் என்பதால், தெலுங்கிலேயே பார்த்தேன். நிறைமாத கர்பிணியாய் வித்யாபாலன் மீது வரும் பரிதாபமும், கரிசனமும், போலி ஐ லாஷுடன் வரும் நயந்தாரா மீது வருவது கொஞ்சம் கஷ்டமாய்த்தான் இருக்கிறது. பட்.. அவரது பர்பாமென்ஸ் கொஞ்சம் கொஞ்சமா தான் ஒர் சிறந்த நடிகை என்று நிருபிப்பது போல ஒவ்வொரு காட்சியிலும் சுற்றி நடிப்பவர்களை ஓவர் டேக் செய்து கொண்டே வருகிறார். நவாசுதீன் சித்திக்கின் இடத்தில் நம்மூரு பசுபதி..மாற்று குறைவே. சப் இன்ஸ்பெக்டராய் வைபவ். இன்னும் கொஞ்சம் உடல் மொழியிலும், டயலாக் மாடுலேஷனிலும் கவனம் செலுத்தியிருந்தால் நலமாய் இருந்திருக்கும். படத்தின் மைனஸ் செட்டுக்குள் படமெடுத்தது. கஹானியில் அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அதனை சுற்றியிருக்கும் இடமெல்லாம் அந்த கசகசப்புக்கும், கூட்டத்திற்கும் நடுவே கர்ப்பிணிப் பெண்ணில் அலைச்சல் இன்னும் நமக்கு பரிதாபத்தையும், அனுதாபத்தையு கொடுத்தது அது இதில் மிஸ்ஸிங். இரண்டாம் பாதியில் மரகதமணியின் பின்னணியிசை அட்டகாசம். ஒரிஜினலை கம்பேர் செய்யாமல் பார்த்தால் தெலுங்கில் ஒர் நல்ல த்ரில்லர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
ராஜா மொட்டை ஐ லவ் யூ டார்லிங் மெளனராகம்

  • எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்கவே இல்லை-மெளன ராகம்.
    • கொலைகாரங்க எல்லாம் வெய்யில் தாங்க முடியாம டிவில வந்து பேட்டி கொடுத்து சரண்டராவாங்க போல..
      • பாடி ஸ்ப்ரேக்களினால் பெண்கள் காமவயப்படுகிறார்கள் என்று காட்டப்படும் விளம்பரங்கள் ஆணாதிக்க உச்சம்#ஏத்திவிடு
        • அம்மா உணவகத்தில் குவாலிட்டி செக் செய்ய நேற்று சாப்பிட்டேன். டிவைன் #சாப்பாட்டுக்கடை
          • கஹானியை கம்பேர் செய்யாமல் பார்த்தா ஸ்டன்னிங் பர்பாமென்ஸ் நயன் அனாமிகாவுல#Anamika
            • வர வர ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் கதைகள் எல்லாம் எம்.ஜி.ஆர். பட ரேஞ்சுக்கு இருக்கு#
              • அட்சயதிரிதியைக்கு நகை வாங்கினா சேரும்னு சொன்னாங்க.. பத்து வருஷம் முன்னாடி வாங்கினேன் இன்னும் அது மட்டும் இருக்கு 

              • எல்லா மல்ட்டி ப்ளெக்ஸிலும், செக் செய்யப்படுவது பாதுகாப்புக்காக அல்ல உள்ளே ஸ்நாக்ஸ், சாப்பாடு ஏதாச்சும் இருக்கான்னு பார்க்கத்தான் #பாதுகாப்பு
                • நேத்து தான் ஒரு தீவிரவாதிய பிடிச்சிருக்காங்க.. இன்னைக்கு செண்ட்ரலில் குண்டு வெடிப்பு? #சிங்குல இருக்கே..??
                  • எல்லா சேனல்களிலும் நடிகர் நடிகைகள் பேசிக் கொண்டிருக்க, ஜெயா டிவி மட்டும் ஹெர்குலிஸ் சைக்கிள் தயாராவதை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் #மேதினம்
                  • @@@@@@@@@@@@@@@@@@@@
                    சமீபத்தில் மீண்டும் அம்மா உணவகம் ஒன்றுக்கு போய் சாப்பிட்டு பார்க்கலாமே என்று சென்றோம். நல்ல க்யூ இருந்தது. அன்றைய கலந்த சாத ஸ்பெஷல் எலுமிசசை சாதம்.இரண்டு சாம்பார் சாத்ம் இரண்டு எலுமிச்சை மொத்தம் இருபது ரூபாய் கொடுத்தோம். பார்சல் கேடப்வர்களிடம் கட்டாயமாய் கொடுக்க மறுக்கிறார்கள். உள்ளே நல்ல காற்றோட்டமாய் இருந்தது. குடிக்க சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் வைத்திருக்கிறார்கள். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்ய ஒர் பெண்மணி வைத்திருக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் அனைவரும் சாப்பிட்டவுடன் தங்கள் தட்டுகக்ளை அவர்களாகவே சென்று அறிவிப்பு செய்திருந்தபடி அங்கிருந்த வாளியில் போட்டுவிட்டு போகிறார்கள். சாப்பாட்டின் சுவையும் நன்றாகவே இருந்தது. நாற்பது அம்பது ரூபாய் கொடுத்து சாப்பிடும் ஓட்டல்களில் எல்லாம் கூட சாப்பிட்ட மாத்திரத்தில் வயிற்றை கலக்கும். ஆனால் இவர்களின் சாம்பார் சாதத்தில் இதுவரை அம்மாதிரியான எந்த விஷயமும் நடந்ததில்லை அட்லீஸ்ட் என் வரையில். காய்கறிகள் நிறைய போட்ட சாம்பார் சாதம் நிஜமாகவே டிவைன். எலுமிச்சையில் கொஞ்சம் எலுமிச்சை போடலாம். இரவு சப்பாத்தி சாப்பிட வேண்டும். இந்த ஒரு விஷயத்துக்காகவாவது முதல்வரை பாராட்டியே ஆகவேண்டும். ஒர் அரசு நினைத்தால் எதையும் ஒழுங்காக செய்ய முடியும் என்பதற்கு இந்த திட்டமே ஒர் உதாரணம். 
                  • @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
                    அடல்ட் கார்னர்

                  • @@@@@@@@@@@@@@@@@@@@


Post a Comment

13 comments:

சீனு said...

இனி நானும் கேட்கப் போகிறேன் கேபிள் சார் :-)

k.rahman said...

/கேட்டால் கிடைக்கும்/

உங்களை நெனைச்சு எனக்கு பெருமையா இருக்கு சார். அப்டியே இலவசமா குடுக்க வேண்டிய சுத்தமான தண்ணிய விலைக்கு விக்கிறாங்களே அரசாங்கம். அவங்கள எப்ப கேட்க போறீங்க?

”தளிர் சுரேஷ்” said...

எனக்கு பணம் கொண்டு வந்து கொடுத்தவரின் பார்வையில் ஒர் ஏளனம் இருந்தது. ஆனால் எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. என்னைப் போலவே கேள்வி கேட்க என் மகன் ஆரம்பித்திருக்கிறான். நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது.கேட்டால் கிடைக்கும்// தங்களுக்கும் தங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள்! நம் பணம் நமக்குத் திருப்பித்தருவதில் ஏளனம் எதற்கு? இதே ஒரு ரூபாய் குறைந்தாலும் அவர்கள் விடுவார்களா?

சிவகுமார் said...

அடல்ட் கார்னர் VIDEO mmmm.....

சு.கி.ஞானம் said...

//எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. என்னைப் போலவே கேள்வி கேட்க என் மகன் ஆரம்பித்திருக்கிறான். நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது.கேட்டால் கிடைக்கும்// வாழ்த்துக்கள் கேபிள்

scenecreator said...

அது எப்படி போலீஸ் ஆக இருந்தாலும் கடைக்காரர்கள் ஆக இருந்தாலும் மால் ஆட்கள் இருந்தாலும் உங்களிடம் மட்டும் "ங்கே " என்று விழிக்கிறார்கள் .நாமெல்லாம் கேள்வி கேட்டால் அது அப்படிதான் என்று நடையை கட்டுகிறார்கள்.

SANKAR said...

முசுலீம்கள் மட்டுமே வரும் ஒரு பள்ளிவாசலில் தெரியாத ஒரு நபர இருப்பதையோ அல்லது அவர்கள் அதிகம் வசிக்கும் மன்னடியிலோ ஒருவர் இருக்கிறார்.அவர் இங்குள்ளவர்களுக்கு மூளை சலவை செய்கிறார் என்பதை ஏன் ஒரு முசுலீமோ அல்லது இயக்கமோ போலீசுக்கு தெரிவிக்க வில்லை.அல்லது போலீசு செய்தது தவறு என்றால் ஏன் இன்னமும் அது பற்றி எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.ஒரு சாதாரண சினிமாவுக்கே/யு ட்யுபுக்கே சென்னையை ஸ்தம்பிக்க வைத்தவர்களே பதில் சொல்லுங்கள்.

விமல் ராஜ் said...

//ஆனால் எனக்கு மிகவும் பெருமையாய் இருந்தது. என்னைப் போலவே கேள்வி கேட்க என் மகன் ஆரம்பித்திருக்கிறான்..

சந்தோஷம். அடுத்த தலைமுறை வாரிசு உருவாகிவிட்டது ! வாழ்த்துக்கள்..

Rafeek said...

SANKAR's Question : பல ஆண்டுகளாக நானும் கேட்டு விடை தெரியாத கேள்வி இது. இதற்கெல்லாம் அந்த 27 கூட்டமைப்புகள் வாயை திறக்க மாட்டார்கள்.

kailash said...

same fight i had with dominos @ pammal and they gave me change . When i asked for water they said its there nearby . They kept water can near rest room which is not visible to all customers and it dint had cup . I asked them to give cup and she gave me a small attai cofee cup , but water was of good quality .

Unknown said...

ஆனால் அங்கே உட்கார்ந்து சாப்பிட்ட அனைவரின் பில்லிலும், அவர்கள் டீபால்டாய் ப்ளாஸ்டிக் கவர் பில் செய்திருந்தார்கள்....How you know all the others are charged. Have u checked their bill.Please dont exaggerate.

Balajhi said...

Since April 2013, service tax of 4.94 is has to be collected and remitted by all Air Conditioned Restaurants whether self service or served.

Daw said...

Precisely!!! I got the same explanation when checked @ OMR dominos!