Thottal Thodarum

Jun 10, 2015

சாப்பாட்டுக்கடை - சார்மினார் - ARMY Chicken - Prawn Fry - Thalava Ghost Mutton

சார்மினார் பிரியாணியைப் பற்றி, அவர்களது தாம்பரம் கிளை மதிய சப்பாட்டைப் பற்றி ஏற்கனவே எழுதியாகிவிட்டது. அது மட்டுமில்லாமல் சென்னையின் தரமான ஹைதராபாதி பிரியாணி என்ற பட்டமும் வாங்கியிருக்கிறது. இங்கே மீண்டும் எழுத வந்ததற்கான காரணம் அதுவல்ல.
பிரியாணியைத் தாண்டி அவர்கள் வழங்கும், சில அயிட்டங்களைப் சாப்பிட்டதன் காரணமாய் அதை பகிரவே.


சில வாரங்களுக்கு முன் நானும் ஓ.ஆர்.பியும், கே.ஆர்.பியும், சஞ்செயும் அங்கே போயிருந்தோம். ஸ்டார்டரில் ஆரம்பிக்க, எக் 65, ப்ரான், சிக்கன் 65, கோஸ்ட் மட்டன், அப்பல்லோ பிஷ் என வகையில் ஒன்றை ஆர்டர் செய்திருந்தோம்.  மெயின் கோர்ஸுக்கு லச்சா பரோட்டா, ரெண்டு மட்டன் பிரியாணி, உடன் தொட்டுக் கொள்ள மட்டன் மசாலா. 

எக் 65 என் ப்ரிய ஸ்டார்டர். முட்டையை துண்டாக்கி அதை சோள மாவில் பிரட்டி, லைட்டாய் தாவாவில் வைத்து எண்ணையில் வாட்டி, மேலே தயிர் கலந்த கிரேவியோடு, சுடச் சுட சாப்பிட்டு பாருங்கள். முதலில் வாயில் போட்ட மாத்திரத்தில் மேலே உள்ள லைட் சோளத்தின் கிரிஸ்ப்னெஸும், மெல்ல அழுத்தி கடித்தவுடன் இளஞ்சூட்டுடனான முட்டை கடிபட, மெல்லும் போது மசாலாவும், முட்டையும், கிரிஸ்ப்பு சேர்ந்து ஒரு கலக்கு கலக்கும் பாருங்க அப்போ சொல்வீங்க.. டிவைன்னா என்ன அர்த்தம்னு. 

கிட்டத்தட்ட இதே மேக்கிங்கில் கொஞ்சம் கிரேவியாய் சிக்கன் 65 வழக்கமான சிக்கன் 65 எதிர்பார்க்கிறவர்களுக்கு வித்யாசமான ஒரு அயிட்டமாயிருக்கும். பட். டோண்ட் மிஸ்.

ப்ரான் ஃப்ரை சோளமாவில் போட்டு புரட்டி எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட பாப் கார்ன் போல  பொரித்தெடுத்து பொன் நிறத்தில் தருகிறார்கள். செம்ம கிரிஸ்ப். லச்சா பரோட்டா, கோதுமையில் செய்யப்பட்டது. செம்ம ஸாப்ட்டாய், இரண்டு விரல்களால் பிய்த்து கிரேவியில் புரட்டியெடுத்து சாப்பிடும் அளவிற்கு அம்பூட்டு சாப்ட். பிரியாணி ஆஸ்யூஷுவல் அட்டகாசம். நோ.. கம்ப்ளெயிண்ட்ஸ்.

அதே போல தளவா கோஸ்ட் மட்டன். சமீபத்தில் இவ்வளவு சாப்ட்டான மட்டன் உருண்டைகளை, வாயில் வைத்தால் கரையும் படியான டேஸ்டுடன் சாப்பிட்டதில்லை. கிட்டத்தட்ட மேற்சொன்ன அதே பார்முலாவில், அளவான காரத்துடனான அயிட்டம். 

ராஜாவுக்கும் உடன் வந்திருந்த நண்பர் சஞ்செய்க்கும் மிக திருப்தி. அதிலும் சஞ்செய் எல்லா அயிட்டமும் இவ்வளவு நல்லாருக்கும்னு நினைக்கவேயில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  போன வாரம் அங்கே போயிருந்த போது அவர்களின்  புதிய வரவான ஆர்மி சிக்கனையும் ஒரு கை பார்க்கலாமென்று ஆர்டர் செய்தேன். 

நல்ல சிக்கன் துண்டுகளை வறுத்த முந்திரியின் தூள்களில் புரட்டியெடுத்து, உடன் மசாலாவோடு மாரினேட் செய்யப்பட்டு, அதை தவாவில் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி எடுத்து தருகிறார்கள். பார்த்தாலே காரம் தெரியும் அளவிற்கு கலர் வேண்டுமானால் இருக்கும் ஆனால் அளவான காரத்துடன், மிகச் சுவையான டெண்டர் அண்ட் ஜூஸி சிக்கனின் டேஸ்ட் அபாரம். ஸோ.. பிரியாணியோடு உடன் இந்த உணவுகளையும் ஒரு கை பார்க்காமல் வராதீர்கள். 

கேபிள் சங்கர்


Post a Comment

2 comments:

Peppin said...

Good bye to Palio diet??

JesusJoseph said...

// மெயின் கோர்ஸுக்கு லச்சா பரோட்டா, ரெண்டு மட்டன் பிரியாணி, உடன் தொட்டுக் கொள்ள மட்டன் மசாலா. //


நீங்க டயட்ல இருக்கிறேன்னு எங்கயோ படிச்சேனே :))