Thottal Thodarum

Oct 19, 2015

கொத்து பரோட்டா - 19/10/15

துவரம் பருப்பு பிரச்சனையிலிருந்து ஆயிரம் பிரச்சனைகள் ஊரிலிருக்க, மீடியாவில் ஒரு மாதமாய் நடிகர் சங்க பிரச்சனையை மட்டுமே ஊதி டி.ஆர்.பி ஏற்றிக் கொண்டிருப்பதும். இது தேவையா? அது தேவையா?  என்று ஏதோ சமூக அக்கறையுடன் கேள்வி கேட்பது போது நடிகர்களையும், சினிமா துறை சார்ந்தவர்களையும் வைத்து நிகழ்ச்சி நடத்துவதும், தமிழ் நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்பது போன்ற அபத்தங்களை மீடியா ஏற்றி விட்டுக் கொண்டிருக்கிறது. பேச வேண்டிய விஷயத்தை விட்டு, தேவையில்லாததை பற்றி பேசுவதில் உள்ள இவர்களது சமூக அக்கறையை பற்றி யோசித்தால் இன்னும் அபத்தமாகவும், அபாயகரமான விஷயமாகவும் இருக்கிறது. மீடியா நினைத்தால் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வரக்கூடிய அஸ்திரம் தங்களிடம் இருக்கிறது என்று தெரிந்தும் அதை மொக்கை கிராபிக்ஸ் அம்புகளாய் பயன் படுத்திக் கொண்டிருப்பதை நினைத்தால்  பயமாய் இருக்கிறது. சரி இப்ப ஜெயிச்சாச்சு.. அப்புறம்.. வேற என்ன?
@@@@@@@@@@@@@@@@@@
நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றிய சிறப்பு உரக்க சொல்லுவோம் நிகழ்ச்சிக்காக சிறப்பு அழைப்பாளர்களை மட்டுமே வைத்து 50 வது நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்திருந்தார்கள். ஞாநி, மனுஷ், சீமான், பாமரன், சல்மா, ஆகியோருடன் அடியேனும் பங்காற்றினேன். நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? என்ற அதரவு குரலோடு. பல சமயம் எல்லா சைடிலும் ஆளாளுக்கு சேம் கோல் அடித்தார்கள். சீமான் தான் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்ற பந்தா இல்லாமல், அனைவருடன் மிக இயல்பாக பழகினார். ஞாநி வழக்கம் போல பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ரெண்டு சிறப்பு பேச்சாளர்கள் இருந்தாலே அனல் பறக்கும். இங்கு பதினாறு பேர்.ங்கொய்யால.:)
@@@@@@@@@@@@@@@@@@@@
நாம் ஏதாவது கருத்து சொன்னால் அதற்கு பதில் கருத்து சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது. நாம் அவர்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டுமென்ற அவசியமில்லை. ஆனா என்ன பதில் சொல்கிறோம் என்ற கருத்தே கூட புரியாமல் உளறும் உளறுவாயர்களை என்ன செய்வது?. பெரும்பாலான நேரங்களில் நான் யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன். ஏனென்றால் அது வேண்டாத விதண்டா வாதத்தை வளர்க்கும். இது என் கருத்து. பின்னாளில் சொன்ன கருத்தின் மேல் மாற்றம் வருமானால் அதையும் ஏற்றுக் கொள்வேன். ஆனால் தெளிவா கருத்து சொல்றதா நினைச்சு உளறுகிறவர்களிடமிருந்து இறைவா என்னை காப்பாத்துன்னு வேண்டிக்கிறத தவிர வேற வழியில்ல.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
The Walk
பிலிப்பி  கம்பி மேல் நடக்கும் ப்ரெஞ்சு கலைஞன். இந்த வாக் படம் அவனுடய ட்வின் டவருக்கிடையே கம்பி மேல் நடக்க விருப்பத்தைப் பற்றியது. கேட்கும் போதே உள்ளங்காலில் குறு குறுவென ஓடுகிறது. இதில் படம் பாக்கும் போது வர்டிக்கோ ப்ராப்ளம் உள்ளவர்களுக்கு எல்லாம் வாந்தி வந்தால் ஆச்சர்யமில்லை. ட்வின் டவருக்கு சென்றடையும் வழி, அதற்கான முயற்சி, தன் திறமையை இதனிடையே வளர்த்துக் கொள்ளும் ஆர்வம். ஏற்படும் தடைகள் எல்லாவற்றையும் முறியடித்து எப்படி பிலிப்பி இரண்டு டவர்களுக்கிடையே நான்கு முறை நடந்தான் என்பதை அட்டகாசமான விஷுவல்களோடு, கடைசி இருபது நிமிட பரபரப்போடு சொல்லியிருக்கிறார் ஜெமிஸ்கிஸ். ஆரம்ப காட்சிகளில் இருக்கும் மெதுவான போக்கு கொஞ்சம் கொட்டாவி விட வைத்தாலும், போகப் போக, சீட்டின் மேல் கால்களை தூக்கிப் போட்டு உட்கார வைத்துவிட்டார்கள். 3டியில் ஐமாக்சில் பார்த்திருந்தால் அட்டகாசமாய் இருந்திருக்கும். டோண்ட் மிஸ்.
@@@@@@@@@@@@@@@@@@
ருத்ரமாதேவி
பாகுபலியில் இல்லாத க்ரிப்பிங்கான கதை இதில் இருக்கிறது. டெக்னிக்கலி ஸ்பீக்கிங் மேக்கிங்கில் கோட்டை விட்டு விட்டார்கள். அபத்த சிஜிக்கள், மொக்கையான தமிழ் டப்பிங் வசனங்கள். கொஞ்சமும் ஒட்டாத அல்லு அர்ஜுன் ஹீரோயிசம். அவசர அவசர செகண்ட் ஹாப் என பல சமயங்களில் வாய்ஸ் ஓவரிலேயே மொத்த படத்தையும் தள்ளிக் கொண்டு போயிருப்பது போன்ற பல விஷயங்கள் நற.. நற.. எப்படியெல்லாம் சொல்லியிருக்கலாம் இப்படி சொல்லியிருக்கிறார்களே என்று வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. பெண் என்று தெரிந்தவுடன் ருத்ரன் ருத்ரமாதேவியாகி, உள்ளுக்குள் இருக்கும் கவசத்தை மேலே போட்டதும், அதற்கான அனுஷ்காவின் தனம் சைசுக்கு கவசத்தை வார்பெடுத்தது போல செய்து மாட்டி விட்டிருப்பது 3டியில் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் கஷடமாய் இருந்திருக்கும். நல்ல வேளை நான் 2டியில் பார்த்தேன். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கமென்று மாற்றக் கோறும் விஷயமெல்லாம் அபத்த களஞ்சியம்.

கடைசி வரைக்கும் சண்டையே போடலையேடா.. அவ்வ்வ்

உள்ள போட்ட கவசத்தை விட வெளிய போட்ட கவசம் ஆபாசம் அவ்வ்வ்

ஆன்லைன்ல விக்குறதுக்கு தடை பண்ணனும்னு சொல்றவங்க.. போன் பண்ணா கொண்டு போய் கொடுக்கிறது எந்த வகையில வரும்? ‪#‎டவுட்டு‬

What a Inspiring, visually extrodinary, positive, Movie of this year dont miss‪#‎TheWalk‬

நாலு வரி எழுதினா நாற்பது ஸ்பெல்லிங் மிஸ் ேL க்கு இதுல... ம்க்கும் நான்றி


எல்லாரும் அவங்க அவங்க இன் ஜினியரிங் சர்டிபிகேட்டை திரும்ப கொடுங்கப்பா.. பின்ன அதப் பத்தி பேசவே மாட்டேன்குறாரு.. 
smile emoticon

@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்


One day during the family lunch the youngest son Paul asks his father:

- Daddy, what is the difference between potential and reality?

Daddy turns to his wife and gives her a question: 
- Would you sleep with George Clooney for 1 million $?
- Certainly, I would never waste such opportunity, - tells the wife
Daddy turns to his teenage daughter: 
- Maria, would you sleep with Brad Pitt for 1 million $?
- Surely! He is my fantasy, his posters are all over the walls of my room.
Daddy turns to his eldest son Raul and asks: 
- Would you sleep with Tom Cruise for 1 million $!
Eldest son thinks a little and replies: 
- Why not? Imagine what I could do with that money. So yes, I would sleep.
Then daddy turns back to his youngest son Paul and explains him: 
- You see, Paul, potentially we are sitting with multi millionaires but in reality we are sitting with two prostitutes and one gay…
கேபிள் சங்கர்  

Post a Comment

2 comments:

'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அருமை...

ரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்) said...

அன்பு நண்பருக்கு வணரக்கங்கள் பல.... நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு உங்களின் வலைப்பக்கத்தில்....

அருமை அருமை...வாழ்த்துக்கள்..

என்றென்றும் அன்புடன்
இளங்கோவன், சென்னை