click here

TT

Thottal Thodarum

Oct 25, 2015

கொத்து பரோட்டா - 26/10/15

சாப்பாட்டுப் சிறப்பிதழ் வெளிவர இருக்கிறது. சாப்பாடுன்னு முடிவானதுக்கு அப்புறம் நீங்க எழுதலைன்னை எப்படி? ஒரு கட்டுரை அனுப்புங்க என்றார் பிரியா கல்யாணராமன். இணையத்தில் ஆரம்பித்து, விகடன், கல்கி, இணைய இதழ்கள், தமிழ் இந்துவென பத்திரிக்கைகளிலும் எழுத ஆரம்பித்து வருடங்கள் ஆனாலும், குமுதத்திற்காக உத்தம வில்லனுக்காக எழுதிய சிறு பத்தி தவிர எழுதியதில்லை. முதல் முறையாய் ஒரு கட்டுரை. அதுவும் சாப்பாடு குறித்த என் அனுபவத்தை குறித்து. குமுதத்தில் எழுதுவது என்பது பிக் பட்ஜெட் கமர்ஷியல் படத்திற்கு ஈடான விஷயம். அவர்களுடய வாசகர் வட்டம் அவ்வளவு விரிவானது. படிச்சிட்டு சொல்லுங்க.

@@@@@@@@@@@@@@@@@@
நானும் ரவுடிதான் படத்தில் ஒரு காட்சியில் நயன் தாரா அழுது கொண்டே தெருவில் நடந்து வரும் காட்சி அருமையாய் படமாக்கப்பட்டிருக்கும். படம் பார்க்கும் போதே நண்பரிடம் சொன்னேன் அந்த காட்சியை பாண்டிச்சேரியல்லாமல் அவ்வளவு இயல்பாய் கூட்டத்தோடு படமெடுத்திருக்க முடியவே முடியாது என. சென்ற வாரம் ஒரு படப்பிடிப்பு. பர்மீஷன் இல்லாமல் சென்னையில் ஒரு காரில் படம்பிடித்தேன். முடிந்தவரை வெளியே வராமல் காரில் வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மொத்தமே யூனிட் ஐந்து பேர் தான். எந்தவிதமான ஆர்பாட்டமும் இல்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அவ்வப்போது ரோட்டில் கேமரா கொண்டு செல்லப்பட்டு, கிடைக்கும் வெளிச்சத்தில் படமாக்கினோம். சென்னையின் முக்கிய ரோட்டில் சுமார் ரெண்டு மணி நேரம் ஒர் ஆக்‌ஷன் ப்ளாக்கை எடுத்தோம். ஸ்டாண்டில் கேமரா போடாத வரை என்ன நடக்கிறது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டு போனவர்கள், ஸ்டாண்டை வைத்த அடுத்த நிமிடங்களில் க்ரைம், லா அண்ட் ஆர்டர், ட்ராபிக் எல்லா டிபார்ட்மெண்டிலும் வந்துவிட்டார்கள். விடியற்காலை மூன்று மணிக்கு. வந்து நிற்கும் போது நாங்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.
@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் நண்பர் பிரபாகருடன் குமார் மெஸ்ஸில் சாப்பிடப் போனேன். சென்ற முறை போல கூட்டம் இல்லை. சாப்பாடும், நெஞ்சுக்கறியும், வஞ்சிரம் மீனும், ரெண்டு கோலா உருண்டையும் ஆர்டர் செய்தோம். இலை போட்டு பத்து நிமிடம் கழித்துத்தான் சாப்பாடு வைத்தார்கள் கேட்டவுடன் தண்ணீர் வைத்தார்கள். சரி போகட்டும் என்று விட்டு சாப்பாட்டை போட்டு சிக்கன் குழம்பை ஊற்றினால் உப்பும் இல்லாமல், உரைப்பும் இல்லாமல், தண்ணியாய் ஒரு குழம்பு, மீன் குழம்பு புளிக்குழம்பாய் இருந்தது. மட்டன் கிரேவி மட்டும் ஓகே.. கூப்பிட்டு புகார் செய்தேன்.கஸ்டமர்கள் காரம் அதிகம் என்று புகார் சொல்கிறார்கள் அதனால் குறைத்துவிட்டோமென்றார்கள். அதுக்கு ஏன் தண்ணியா தர்றீங்க? என்றேன் பதிலில்லை. கொஞ்ச நேரத்தில் செட்டிநாட்டு சிக்கன் கிரேவி தனியாய் தரப்பட்டது. அது தான் ஒரிஜினல் குழம்புபோல இருந்தது. எல்லாவற்றையும் விட வயிற்றை கலக்கிவிட்டது தான் மோசம். ஸோ..குமார் மெஸ் மதுரையில் மட்டுமே இருந்திருக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@
BruceLee
தெலுங்கு ஹீரோக்களுக்கு படமெடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு காட்சியும் க்ளைமேக்சாய் இருக்க வேண்டும். அப்படி வைத்திருக்கிறோம் என்று நினைத்து மொக்கை வாங்கிய படங்கள் எதேஷ்டம் என்றாலும், சில இயக்குனர்கள் அதில் கில்லாடிகள். முக்கியமாய் சீனு வைத்தாலா போன்றவர்கள் அதில் டபுள் எம்.ஏ எடுத்தவர்கள். அவர் இயக்கத்தில் புரூஸ்லி. தற்போதைய தெலுங்கு ஹீரோக்களின் ட்ரெண்டான, புல் பேமிலி ஓரியண்டட் ஆக்‌ஷன் கதை. இதிலும் தன் அக்காவிற்காக, தன் படிப்பு, எதிர்கால வாழ்க்கை எல்லாவற்றையும், புறம் தள்ளி அவளுக்காக போராடும் தம்பியின் கதை. அவன் அக்காவுக்காக தியாகம் செய்கிறான் என்பது, படத்தில் உள்ள அத்துனை கேரக்டர்களுக்கும் தெரியும், ஆனால் அவருடய அப்பாவுக்கு மட்டும் தெரியாது. அப்புறம். டிவிஸ்ட் மேல் டிவிஸ்டாய் நல்லவராய் காட்டப்படுகிறவர் வில்லன். வில்லனுக்கு வில்லனாய் அவருடய மகனாய் நம்மூர் அருண் விஜய். அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் டப்பிங் கர்ண கொடூரம். நான்கைந்து காட்சிகளில் வந்து அடிவாங்கி கோமாவில் போய், மீண்டும் எழுந்து வந்து ரெண்டே ரெண்டு அடி அடித்துவிட்டு, துப்பாக்கியாய் சாகிறதை தவிர வேறேதும் பிரமாதமில்லை. லாஜிக் போன்ற கேள்விகள் எல்லாம் கடும் குற்றம் தெலுங்கு சினிமாவில். எனவே புருஸ்லி குடும்ப மசாலா.
@@@@@@@@@@@@@@@@@@
காரில் போகும் போது ரேடியோ கேட்பது படு கொடுமையான விஷயம். அதுவும் காலையிலும், மாலையிலும் பேசியே கொல்வார்கள்.அதனால் எனக்கு துணை பென் ட்ரைவ்தான். அதையும் மீறி ஒரு சேனலில் தொடர்ந்து இந்தி பாடல்களாய் போடுகிறார்கள். மதிய நேரங்களில் கொஞ்சம் க்ளாஸிக் ஹிந்தி பாடல்களும் அடக்கம். ரேடியோசிட்டி என நினைக்கிறேன். முழுக்க முழுக்க, சென்னையின் ஹிந்தி பண்பலை ரேடியோ. தற்போதைக்கு அதிக விளம்பரமில்லாமல் பாடல்கள் கேட்பதால் சுவாரஸ்யமாய் இருக்கிறது. எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்.
@@@@@@@@@@@@@@@@@@@
10 என்றதுக்குள்ளே
படிக்கும் போதும், சொல்லும் போதும், பரபரவென இருக்கிறார்ப் போலத் தோன்றக்கூடிய ஸ்கிரிப்ட்தான். ஆனால் அதை படமாய் பார்க்கும் போது சவசவவென இருக்கிறதை மறுக்க முடியவில்லை. முக்கியமாய் செகண்ட் ஹாப்பில் வரும் ட்விஸ்ட். படத்திற்கு தும்மல் வரக்கூடிய அளவிற்கான ஆந்திர மிளகாய் காரம். ட்ரான்ஸ்போட்டரை அடிப்படையாய் வைத்து பின்னப்பட்ட கதையில் சமந்தா பார்க்க க்யூட்டாய் இருந்தாலும், கேரக்டரைஷேஷன் வீக்காய் இருக்கிறது. ஆங்காங்கே வரும் சிறு புன்னகைக்க வைக்கும் வசனங்கள், நல்ல விஷுவல்ஸ், ஆங்காங்கே பசுபதி இவைகளை மீறி ஏதுமில்லை எண்ணுவதற்கு
@@@@@@@@@@@@@@@@@
நானும் ரவுடிதான்
ரிலீஸுக்கு முன்னமே ஓரளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். விஜய் சேதுபதியில் லுக், நயன் தாரா, அனிருத், விக்னேஷ் சிவன், நயந்தாரா காதல் கிசு கிசு இப்படி எல்லாமே ப்ளஸ்ஸாய் அமைந்துவிட, செவிட்டு பெண்ணாய் கதாநாயகி என்பதைத் தவிர புதுசாய் ஏதுமில்லை. லூசுப் பெண்ணின் அடுத்த வர்ஷனாய் தான் உருவாக்கியிருக்கிறார்கள்.  தன்னை காதலிக்க வேண்டுமென்றால் தன் அப்பாவை அழித்த கிள்ளிவளவனை கொல்ல உதவ வேண்டுமென்ற கண்டீஷன் போட, எப்படி முடிக்கிறான் தன்னை ரவுடியாய் நினைத்து மட்டுமே கொண்டிருக்கும் ஹீரோ என்பதுதான் கதை. சீரியஸாய் சொல்ல வேண்டிய அத்துனை மேட்டரையும் காமெடியாய் சொல்லி தப்பித்திருக்கிறார்கள். அதுவே டெம்ப்ளேட்டை உடைத்த விஷயமாய் கொண்டாடப் படுகிறது.  ஹீரோயின் கேரக்டர் வாழ்த்துக்கள்
@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
Too predictable writing and performance spoils the efforts put in production. good try ‪#‎Kanche‬
தைரியம் இருக்கிறவன் செய்யுற வேலை புரிஞ்ச வன் பி ஸ்தா... 
its not a easy task to make a mass film particularly for telugu hero's.‪#‎BruceLee‬
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
சாண்டா தன் அப்பாவிடம் : அப்பா என் க்ளாஸிலேயே என்னுடயதுதான் பெரிய லுல்லா. நான் பஞ்சாபி என்பதால் தானே?
அப்பா சர்தார்ஜி : 18 வயசாகியும் இன்னும் 5 ஆம் க்ளாஸுல படிக்கிற அதுனாலதாண்டா..முட்டாளே என்றார்.
கேபிள் சங்கர்  

Post a Comment

2 comments:

கலையன்பன் said...

எல்லாமே கலந்து பல்சுவையாய் இருந்தன.

nimmathiillathavan said...

Love yr blogs especially sapadu kadai in pond y u visit Kamatchi and Salem briyani hotel