Thottal Thodarum

Apr 5, 2018

சாப்பாட்டுக்கடை - பாட்டி வீடு

போன மாதம் இந்த உணவகம் ஆரம்பிக்கப் போவதாய் ஏகப்பட்ட ஆன்லைன் ப்ரோமோஷன்கள். ஞாயிறு அன்று மதியம் லஞ்சுக்கு புக் செய்யலாம் என்று போன் போட்டால் காலை பதினோரு மணிக்கே லஞ்ச் புல் சார் என்றார்கள். நண்பர் சிவசங்கர் லஞ்சுக்கு போகலாமா? புதுசா எதாச்சும் இடம் இருந்தா சொல்லுங்க? என்றார். பாட்டி வீடு என்றேன். 

தி.நகர் பாகிரதி அம்மாள் தெருவில் முன்பு ஒரு நான் வெஜ் ரெஸ்ட்ராரண்ட் இருந்த இடத்தைத்தான் இவர்கள் புதியதான் பழைய வீடு போல் செட் போட்டு முற்றிலும் மாற்றியிருந்தார்கள். அட்டகாசமான இண்டீரியர். வெல்கம் சென்னவரின் ஃபீரிக் குடுமியும், போட்டிருந்த பேகியும் நிச்சயம் அமெரிக்காவில் சம்பாதித்து ஹோட்டல் நடத்த வந்திருப்பவர் என்பதை பறைச்சாற்றியது. 

நண்பர்கள் வந்த பின் உள்ளே அழைத்து செல்லப்பட்டோம். அட்டகாசமான இண்டீரியர். பாட்டி வீட்டு மித்தம் போல ஒர் இடத்தில் நான்கு டேபிள் போடப்பட்டிருந்தது. கண்களை உறுத்தாத ஆனால் அதே நேரத்தில் காண்ட்ராஸ்ட் பெயிண்டிங் அண்ட் கட்லெரிகள்.

மெனு கார்டை டேப்ளெட்டில் காட்டினார்கள். கூடவே ஒர் பிரிண்டட் பேப்பரிலும். 7 கோர்ஸ் மீல்ஸ் என்றதுமே திக்கென இருந்தது. அத்தனையும் எப்படி சாப்பிடுவது என்று. 

1. வெல்கம் ட்ரிங்காக லெமன் மிண்ட், தர்பூசணி - வெள்ளரி, நம்மூர் ஸ்ரீராம நவமி பானகத்துடன் ஸ்டார்ட் செய்தார்கள். சக்கரை போடாத தர்பூசணி ஆசம் என்றால் பானகம் தெய்வீகம். ஒன்ஸ் மோர் ப்ளீஸ் 

2. ஸ்டாட்டர்ஸ். வாழைப்பூ வடை, தேங்காய் போட்ட சுண்டல், கிரிஸ்பி உருளைக்கிழங்கு மினி கட்லெட். எல்லாமே சூடாய் இருந்தது. சுண்டல் அதிக காரமில்லாமல், வாழைப்பூவடைக்கு இன்னும் கொஞ்சம் உப்பு போட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் இருந்தாலும், உருளைக்கிழங்கு கட்லெட் செம்ம டேஸ்டி அண்ட் கிரிஸ்பி. ஒன்ஸ்மேர் ப்ளீஸ்.

3. டிபன் அயிட்டங்கள்

சின்னதாய் நல்ல நெய்யில் போட்டு வாட்டிய கோதுமை பரோட்டாவோடு, வெள்ளைக் குருமா. உடன் தேங்காய் பாலில் தாளிக்கப்பட்ட இடியாப்பமும், உடன் தொட்டுக் கொள்ள குடமிளகாய் போட்ட பச்சடி. செம்ம நைஸ் பரோட்டா ஒருபக்கம் இழுக்கிறது என்றால் இன்னொரு பக்கம் அந்த இடியாப்பம். அத்தனை மெல்லீசாய், வித்யாசமான ருசியுடன், அந்த குடமிளகாய் பச்சடி ஆசம் என்றால் ஆசம். ஒன்ஸ் மோர் ப்ளீஸ்

4. ரசங்கள்

ஒரு டம்ளர் ரசமும், உடன் மோர் வெந்த சாதம் என்று ஒரு அயிட்டத்தை கொடுத்தார்கள். ரசம் ஓகே.  நன்றாக தாளிக்கப்பட்ட சூடான மோர் வித்யாசமான ருசியை கொடுத்தது. ஒன்ஸ் மோர் ப்ளீஸ்

5. கலந்த சாதம்

புளியோதரையோடு, பம்கின் பச்சடி கொடுத்தார்கள். டிபிக்கல் புளியோதரையாகவும் இல்லாமல், மிடில் ரேஞ்சில் இருந்தது. 

6. மெயின் கோர்ஸ்

சாதம், அரைச்சு விட்ட சாம்பார், போண்டா போட்ட மோர்குழம்பு, வத்தக்குழம்பு, பருப்பு உசிலி, பருப்பு தொகையல், பெப்பர் போட்ட கீரை, முக்கியமாய் சேனைக் கிழங்கு ப்ரை

மோர்குழம்பு காரம் குறைவாய், தயிராய் இருந்தது. அரைச்சுவிட்ட சாம்பார் ரொம்பவும் ப்ளெண்டாய், காரமில்லாமல், அரைத்துவிட்ட எபெக்ட் இல்லாமல் இருந்தது, வத்தக்குழம்பு ஆசம், பருப்பு உசிலி வேர்த்துவிட்டிருந்தபடியால் பெரிதாய் ருசிக்கவில்லை. பருப்பு தொகையலும், சேப்பங்கிழங்கு ப்ரையும்  டிவைனுக்கு மேல.  நல்ல காரத்துடன் சின்னச் சின்ன ஸ்லைஸாய் நன்று வதக்கப்பட்டு, கிரிஸ்பியாய், உப்பும், காரமும், அளவாய், வாவ்வ்.. வாவ்வ்.. வாவ்.. வாவ்.. அட்டகாசம். ஒன்ஸ் மோர் ப்ளீஸ்

தயிர் சாதத்தின் மேல் இஞ்சி புளி கிரேவியோடு தருகிறார்கள். ஆசமோ ஆசம். அதற்கு மேலும் சுவை கூட்ட வேண்டுமென்றால் இருக்கவே இருக்கு மாவடுவும், எலுமிச்சை ஊறுகாயும். செம்ம காம்பினேஷன்.

7 டெசர்ட்ஸ்

கருப்பட்டி மில்க் ஷேக், சேமியா பாயசம், இளநீர் ஹல்வா. சேமியா பாயசம் ஓகே. ஹல்வா ஜெல்லி போல் இருந்தாலும் சுவையில் இனிப்புகுறைவாய் இருந்ததால் பெரியதாய் வித்யாசம் தெரியவில்லை.  கருப்பட்டி மில்க் ஷேக் செம்ம. போன்வீட்டாவை கரைத்து சாப்பிட்டார் போல வித்யாசமான சுவை. ஒன்ஸ்மோர் ப்ளீஸ்.

இதனுடன் வேண்டுமானால் பில்டர் காபியும் கிடைக்கிறது. உள் நாக்கில் கசக்கும் அளவிற்கான அற்புதமான காப்பி. 

பில் மதிய உணவு ஒருவருக்கு 891 ரூபாய்.  பணமாய் பார்த்தால் ஒரு வெஜிட்டேரியன் உணவுக்கு இது கொஞ்சம் அதிகமாய் தெரியும். ஆனால் அவர்கள் அங்கே கொடுத்திருக்கும் ஆம்பியன்ஸ், சர்வீஸ், உணவின் சுவை மற்றும் தரத்திற்கு இது தகும் என்றே தோன்றினாலும், ரிப்பீட் ஆடியன்ஸுக்கு வாய்ப்பு குறைவே. எனவே பாட்டி வீடுக்கார அமெரிக்க ஓனர்கள் கன்சிடர் செய்ய வேண்டும். 

அட்டகாசமான ஒர் சாப்பட்டு அனுபவத்தை பெற வேண்டுமானால் நிச்சயம் ஐ ரெகமெண்ட். பாட்டி வீடு.














Post a Comment

1 comment:

குரங்குபெடல் said...

ரூ . 891 ' கொஞ்சம் ' அதிகமா . . . . .!?


அவ்வ்வ் . . . .