யாராவது நியாயம் கேளுங்களேன்..
வர.. வர இந்த பாங்ககாரங்க பண்ற அழிச்சாட்டியம் தாஙக முடியல.. அதிலேயும் கிரெடிட் கார்ட் கேட்கவே வேணாம். சமீபத்தில் என்னுடய பார்கலேஸ் பேங்கின் கிரெடிட் கார்ட் வந்தது.. வழக்கமாய் நான் கார்டை பயன்படுத்தினால் டியூ டேடில் முழு பணத்தையும் கட்டிவிடுவேன். அப்படியே கடந்த செப்டம்பர் மாதம் எனக்கு வந்த பில் பணத்தை முழுசாய் கட்டிவிட்டேன். அதற்கு அடுத்த ஒரு முறை பத்தாவது மாதத்தில் ஆன்லைனில் பயன்படுத்த முயன்ற போது Transaction declined என்று வந்துவிட்டது. அந்த மாதம் எனக்கு பில் வரவில்லை. அடுத்த மாதமும் பில் வரவில்லை.. இப்படியாக நான்கு மாதங்களுக்கு பில் வரவில்லை.. நான் என்ன நினைத்தேன் என்றால் எனக்கு ஏதும் பாக்கி இல்லாததால் தான் பில் வரவில்லை என்று.. ஆனால் நான்கு மாதம் கழித்து ஒரு பில் வருக்கிறது. நான் ஆன்லைனில் கார்டை யூஸ் செய்ததாகவும், அதற்கான பில்லை அனுப்பியிருப்பதாகவும், பணத்தை நான் கடந்த நான்கு மாதமாய் கட்டாததால், மாதத்திற்கு லேட் பீஸாக 600 ரூபாய் வீதம் இரண்டாயிரத்தி நானூறும். பயன்படுத்த பட்ட தொகை என எட்டுநூறு ரூபாயும் அதற்கு உரிய டேக்ஸ் வட்டி எல்லாவற்றையும் சேர்த்து, கிட்டத்தட்ட, 4000 ரூபாய் கட்ட சொ...