Posts

கொத்து பரோட்டா –03/04/09

நண்பர்கள் சிலரை ரொம்ப நாள் கழித்து சந்தித்த வேளையில், வழக்கம் போல் ஒரு ஃபுல்லை காலி செய்த பிறகு,  நமிதா, தமிழ் சினிமா, உலகசினிமா,  எல்லாம் தாண்டியவுடன், நம் நண்பர்குழாமில் இருந்த ஒரு இலக்கியவாதி,  ”உங்கள்ல யாராவது  ப்ரமிள் இல்ல நகுலனை படிச்சிருக்கீங்களா..?” அடுத்த டாபிக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லோரும் இருக்க, ஒருவர் மட்டும்  தொண்டையை கனைத்து “நீங்க ப்ரமிள்னு செல்லமா சொல்றது அரகேற்றம் பிரமிளாவைதானே. நகுலன்ங்கிறது ‘நாக்க மூக்க’ நகுல தானே?” என்றதும் விழுந்தது அடி. ஏன் சார்.. ப்ரமிள்னா, அது அரகேற்றம் பிரமிளா இல்லையா..? நகுலன்னா நம்ம நாக்க மூக்க நகுல் இல்லியா..? என்ன கெரகம்டா சாமி.. உடம்பெல்லாம் வலிக்குது. @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ சமீபத்தில் கேட்ட திரை பட பாடல்களில் ‘குங்குமபூவும், கொஞ்சுபுறாவும் படத்தின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தது. சின்னசிறுசுங்க ஆரம்பிக்கிற பாட்டின் ஆரம்பத்தில் வரும் கிடார் நம்மை மொத்த பாட்டிற்கும், கட்டியம் கூறி அழைத்து செல்கிறது. அடுத்து  கடலோரம் என்கிற s.p.b.saran பாடும் பாடல் ஸ்லோவாக இருந்தால...

உலக சினிமா –Leon (1994)

Image
ஒரு புரபஷனல் கொலைகாரனுக்கும், பன்னிரெண்டு வய்து சிறுமிக்கும் நடக்க்கும் இமோஷனல், திரில்லர். லியோன் ஒரு ஹிட்மேன் அவன் நியுயார்கில் ஒரு ப்ளாட்டில் வசிக்கிறான். எந்த விதமான பந்த பாசத்துக்கும் அடிபணியாதவன். அவனுகென்று அவன் வளர்க்கும் செடியை தவிர எந்தவிதமான உறவுகளும்  இல்லாதவன். ஒரு நாள் பக்கத்து வீட்டில் வசிக்கும் மடில்டா என்கிற பெண்ணை சந்திக்கிறான். அவளது அப்பா ஒரு தில்லாலங்கடி டிரக் என்போர்ஸ்மெண்ட் ஆபீஸர் ஸ்டான்பீல்டின்  கையாள் அவர் கொடுக்கும் போதை பொருட்களை ம்றைத்து  சப்ளை செய்யபவன். ஒரு நாள் சரக்குகளை தனக்கு எடுத்து வைத்து விற்க முயற்சிக்க, அது தெரிந்து அவனின் குடும்பத்தையே கொன்றுவிடுகிறான். அந்த நேரத்தில் மளிகை கடைக்கு போயிருந்த மடில்டா மட்டும் தம்பிக்க, லியோனின் ப்ளாட்டி அடைக்கலமாகிறாள். தன்னுடய சின்ன தம்பியை கொன்ற் ஸ்டான்பீல்டை கொல்ல வேண்டும் என்று நினைக்கிறாள். இவர்களுக்குள் உறவு மலர்ந்ததா..? மடில்டா பழிவாங்கினாளா? லியோனுக்கு என்ன ஆயிற்று..? என்ற கேள்விகளுக்கு உயிரோட்டமான திரைக்கதை அமைத்து தந்திருக்கிறார்கள் மடில்டாகவரும் 12வயது கருமை கண்களுடய நடில்லாவின...

உலக சினிமா - Onibus174

Image
ரியோ டி ஜெனிரோவில் ஜூன் மாதம் 12ஆம் தேதி 2000த்தில், முழுவதும் பயணிகளால் நிரம்பியிருந்த பஸ்நெ174ஐ, பட்ட பகலில் ஆயுதம் ஏந்திய சாண்ட்ரோ டோ நாஸிமெண்டோ என்கிற ஓருவனால் கடத்தப்பட்டுகிறது.. பஸ்ஸை ஓரு இடத்தில் நிறுத்தி அதிலிருந்து எவராவது வெளியேற முற்பட்டால், அவர்களையும், போலீஸ் ஏதாவது செய்ய முயன்றால் பஸ்ஸில் உள்ள எல்லா பயணிகளையும் கொன்று விடுவதாய் மிரட்டுகிறான்.. இவை அனைத்தும் இதை அங்குள்ள பிரேசிலியன் தொலைக்காட்சி நேரலை நிகழ்சியாக தன்னுடய சேனலில் ஓளிபரப்புகிறது.. அந்த கடத்தல்காரனிடம் மாட்டிய பயணிகளின் நிலைமை, பயணிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியில் போலீஸ் நடத்தும் போராட்டம் என்று எல்லா விஷயங்க்ளும் நேரலையாய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி கொண்டிருப்பதால் ஏற்படும் பதட்டம்.. என்று போகிற இந்த படம் அதை மட்டும் காட்டவில்லை.. பஸ்ஸை கடத்திய சில நிமிடங்களில் அவன் யாரென்று கண்டுபிடிக்க முயற்சித்து அதை கண்டுபிடித்து, அவன் ஏன் இப்படி ஆனான்? அவனுடய குடும்ப பிண்ணனி, என்று அவனின் வேறு முகத்தையும் தேடி, தேடி காட்டுகிறது.. ஏழ்மையும், படிப்பில்லாததால் சம்பாதிக்கும் திறன் இல்லாத அவன் மிக சாதாரணமான ஓருவனாய் தான் வ...

தமிலிஷில் பதிவுகளை இணைக்கலாமா..?

Image
போன வாரம் நானும் டாக்டர் புருனோவும் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொன்னார். அது என்னவென்றால் நாம் நம்முடய பதிவுகளை தமிழ்லிஷில் வெளியிடுகிறோம் இல்லையா..? அதை யார் வேண்டுமானாலும் கமர்ஷியலாகவோ, நான் – கமர்ஷியலாகவோ, பயன் படுத்தி கொள்ள அனுமதிக்கிறோம் என்பது தான். இதை அறிந்ததும் உடனடியாக நான் அவரிடம் சார் இது ஒரு புக் மார்க் சைட்தானே அது எப்படி நாம் எவர் வேண்டுமானாலும் எடுத்தாள உரிமை கொடுப்பதாய் அமையும் என்று கேட்ட போது அவர்களது வலைதளத்துக்கே போய் கீழே உள்ள creative common public domains என்கிற லிங்கை கிளிக் செய்து காட்டிய போது, அதில் நாம் இணைக்கும் நமது பதிவுகளை எல்லாம் யார் வேண்டுமானாலும் வியாபாரத்துக்காகவோ, தன் சுய பயன்பாட்டுக்காகவோ பயன்படுத்தி கொள்ளலாம் என்று உரிமை உள்ளதாய் அதில் போட்டிருந்தது. இதை பற்றி பதிவு எழுதலாம் என்று ஆரம்பித்த ரெண்டு நாட்களுக்குள், தமிழ்லிஷில் அந்த லிங்க் எடுக்கப்பட்டுவீட்டது. மருத்துவர் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலில் அவர்கள் விளக்கம் அளித்து, அதை எடுத்துவிட்டதாய் சொல்கிறார்கள். இதே போல் தான் மற்ற புக்மார்க தளங்களும். அந்த லிங்கி...

என்னடி மீனாட்சி..

Image
Technorati Tags: shortstory , Meenakshi , சிறுகதை , என்னடி மீனாட்சி.. ரொம்ப நாளுக்கு அப்புறம் சாந்தி மீனாட்சிய பார்த்தேன்.. அவளை பார்த்ததும் ரொம்ப வருஷமா நான் அவளை திரும்ப பார்த்தா கேட்கணும்னு நினைச்சிட்டிருந்த கேள்விய இன்னைக்கு கேட்டே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன். பின்ன ஒருத்தன் எதுக்காக அடி வாங்குனான்னு தெரியாமயே அடி வாங்குறது எவ்வளவு கஷ்டம்னு அடிவாங்குனவனுக்குதான் தெரியும். நானும் ஆனந்த ராஜூம ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆமா ஓவ்வொரு திங்கட்கிழமைமட்டும்தான் மத்த நாளெல்லாம் சாதா ஃப்ரெண்ட்ஸ்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்.. அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் போதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்ந்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு ...

பட்டாளம் - திரைவிமர்சனம்

Image
இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பு, நதியா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது பட்டாளம். சென்ற மாதமே வரவேண்டிய படம். ஒரு பள்ளியில் +2 படிக்கும் மாணவர்கள். அந்த பள்ளியின் ஹெட்மிஸ்டர்ஸ் நதியா.. வழக்கம் போல் பள்ளியில் இரண்டு குரூப்கள் ஜென்ம விரோதிகளை போல மோதிக் கொண்டிருக்கிறார்கள். நதியா அவர்களை அன்பு கலந்த கண்டிப்புடன் வழிக்கு கொண்டு வருகிறார்.  நதியா ஹெட்மிஸ்டர்சாக மட்டுமில்லாமல்.. டாக்டராகவும், மனநிலை பாதிக்கபட்டவர்களுக்கு தனியாய் ஒரு ஹோம் வைத்து நடத்தி அங்கே தங்கியும் இருக்கிறார். அங்கே அவருடன் தங்கி படிக்க வரும் ஒரு பெண்ணுக்கும் அங்கேயே தங்கி படிக்கும் ஒரு பையனுக்கு காதல், எதிர் குரூப்பில் உள்ள பையனுடன் பழகுவதை வைத்து அவள் மேல் சந்தேகம், பொறாமை, அண்ணன் தங்கை பாசம், கொலை முயற்சி, நண்பன் சாவு, என்று எபிசோட் எபிசோடாக இருக்கிறது. தொடர்ச்சியாய் இடைவேளை வரைக்கும் துண்டு துண்டான காட்சிகள் ஓட, தீடீரென ஒரு தற்கொலை முயற்சி என்று இடைவேளை விடுகிறார்கள். அப்பாடா கதை சொல்ல போறாங்க என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்,  மீண்டும் சொத்தென்று விழுந்து, ரன்னிங் ரேஸ், நண்பர்க்ள்...

பெ’ண்’களூர்

Image
கடந்த ரெண்டு நாட்களாய் பெங்களூரில் அவசர வேலை.. ஒரு பைனாசியரை பார்பதற்க்காக உடனடியாக வர சொல்லி அழைப்பு வர, நானும் என்னுடய புரொடியூசரும் ரயில் டிக்கெட் கிடைக்காமல்  காரிலேயே கிளம்பினோம். திங்கட்கிழமை ஆதலால் பெங்களூர் ஹைவேயே எங்களுக்காக அலம்பி விட்டது போலிருக்க, சுமார் 51/2 மணிநேரத்தில் பெங்களூருக்குள் போய் சேர்ந்துவிட்டோம்.. ஒரே வெயில் ************************************************************************************************] ரிசெஷன்காரணமாய் ஸ்டார் ஓட்டல் எல்லாம் புக்கிங் இல்லாமல் காய்கிறது. நாங்கள் பிரிகேட் ரோடில் உள்ள Iris என்கிற ஓட்டலில் தங்கினோம் ஆறாயிரம் ரூபாய் ரூம் மூவாயிரம் ரூபாய்க்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் ஃபபே இலவசம். அருமையான கவனிப்பு, அற்புதமாய் உள்ளமைக்கபட்ட ரூம்கள்.. குளு, குளு ஏசி, என்று அருமையாய் இருந்தது. வெளியே கொளுத்தியது. ஏசியை நினைக்கும் போது சுஜாதாவின் ஒரு நடுப்பகல் மரணம் கதையில் ஒரு வசனம் வரும் ”ஏசி ரூம் இருக்குமா?” “பெங்களூர் முழுக்கவே ஏசி தனியா ஏசி வேறயா“ என்பது போல் வசனம்  வரும். குளோபல் வார்மிங். எங் கள் ரூமிலிருந்து பிரிகேட் ரோட் முழுவதையும...

அருந்ததீ -திரைவிமர்சனம்

Image
      லாஜிக் இல்லாத பல உட்டாலக்கடி மாயாஜால ஆங்கில படங்களை அதனுடய பரபரப்பான திரைக்கதைகாக பார்பவரா..? கிராபிக்ஸ் அட்டகாசத்துக்காக பார்பவரா..? அப்படியென்றால் இதோ உங்களுக்காக.. ஒரு அட்டகாசமான படம் “அருந்ததீ” ராஜ குடும்பத்தின் ஓரே பெண் வாரிசான அருந்ததிக்கு அவளுடய காதலனுக்கும் திருமணம் நிச்சயிக்க படுகிறது. திருமணத்துக்கு முன்னால் தங்களுடய பாரம்பரிய அரண்மனைக்கு வருகிறாள். அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு போக இருக்கும் போது, அங்கே அவளைபோலவே உருவம் கொண்ட அவளது பாட்டியின் உருவ படத்தை பார்த்து அவளை பற்றி கேட்கிறாள். அதே சமயத்தில் அந்த கோட்டையின் அருகில் உள்ள ஒரு பாழடைந்த கோட்டையில் உள்ள ஒரு கெட்ட சக்தி அவளை அடைய நினைக்கிறது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் ஜெக்கம்மா என்கிற அருந்ததியினால் கொல்லப்பட்ட அவளது மாமன் பசுபதியின் ஆவீ, தற்போது இருக்கும் அருந்த்தி பழைய அருந்ததியின் மறுபிறவி என்பதால் பூர்வ ஜென்மத்தில் அடைய முடியாதவளை, பசுபதி அரூப ரூபத்தில் அடைய துடிக்கிறான். இதையெல்லாம் படிக்கும் போது, ஏதோ அம்புலிமாமா கதை போல் இருந்தாலும், படம் ஆரம்பித்ததும் நம்ம...

சொல்வதை செய்வோம்.. செய்வதை சொல்வோம்…

சொல்வதை செய்வோம்.. செய்வதை சொல்வோம். என்கிற தாரக மந்திரத்தை சொல்லி மீண்டும் ஓட்டு கேட்கிறது திமுக. இவர்கள் என்னத்தை சொன்னார்கள், என்னத்தை செய்தார்கள் என்று கேட்பவர்கள் நிறைய பேர். சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதி, இலவச டிவி, கேஸ்ஸ்டவ், இலவச மனை, என்று ஆரம்பம் எல்லாமே நல்லாத்தான் நடந்திச்சு. ஆனா கொஞ்சம் கொஞ்சமா எல்லாவிதமான விநியோகங்களிலும் குளறுபடி, இந்த கலர் டிவி விஷயத்துல பல பிரச்சனை வந்து கடைசியா ரேஷன் கார்டு வச்சிருக்கிற எல்லாருக்கும் டிவினு சொல்லியிருக்காங்க.. ஆனா எத்தனை பேருக்கு இது வரைக்கும் கொடுத்திருக்காங்கன்னு சரியா சொல்ல முடியல.. ஏன்னா எனக்கு தெரிந்து பல பேருக்கு கலர்டிவி கொடுக்கவேயில்லை ரேஷன் கார்டு இருந்தும். கேட்டா அதுக்கு சரியான பதிலில்லை. அடுத்து கேஸ் ஸ்டவ் பல பேருக்கு கொடுக்கபடவேயில்லை. சரி இதெல்லாம் நம்ம சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள். இவர்களுடய ஆட்சி இன்னும் சில ஆண்டுகாலம் இருப்பதால் அதற்குள் கொடுக்கப்பட்டுவிடும் என்று நம்புவோமாக. ஆனால் கலைஞர் அரசு தனது சுயநலத்துக்காக போடப்பட்ட சட்டங்கள் எத்தனை.. அவர் ஒரு சட்டம் கொண்டு வந்தார் அதாவது தனி தியேட்டர்களில் அதிகபட்ச...

Sasirekhaa Parinayam- Telugu Film Review

Image
Technorati Tags: Sasirekhaa Parinayam , telugu film review வழக்கமாய் கிருஷ்ணவம்சி படமென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். சாதாரண கதையை மேக்கிங்கில் அசத்துவார்.  அதிலும் ஜெனிலியா என்றவுடன் ஏகப்பட்ட ஆர்வத்துடன் பார்த்தேன். கண்டிப்புக்கும், முட்டாள்தனமான கோபத்துக்கும் சொந்தக்காரரான சசிரேகாவின் தந்தை அவருக்கு திடீர் என்று திருமணம் ஏற்பாடு செய்ய, அமெரிக்க மாப்பிள்ளையின் தந்தை வரதட்சணை, அது இது என்று பிரச்சனை செய்ய திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார், வழியில் ஆனந்தை சந்திக்கிறார்.  அவர்கள் இருவருக்கும் நடக்கும் சம்பவஙக்ள தான் கதை.. இறுதியில் அவர்க்ளூக்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்பதை ஒரு சின்ன சஸ்பென்ஸையும் வைத்து முடித்து இருக்கிறார்கள். படம் முழுக்க ஜெனிலியா, அழுகிறார், சிரிக்கிறார், குதிக்கிறார், குதூகலிக்கிறார். அவருடன் நாம் அதே உணர்வுகலை உணர்கிறோம்.  சசிரேகாவாக வாழ்ந்திருக்கிறார் ஜெனிலியா. ஆனந்தாக தருண், படம் முழுவதும் வியாபித்திருக்கும் ஜெனிலியாவுடன் ஈக்குவலாய் போட்டி போடுகிறார். விஜயவாடா பற்றி கேவலமாய் ஜெனிலியா பேசுமிடத்தில், அதன் பெருமைகளை...