Posts

கன்னி குறும்பட முயற்சி..??

குறும்படம் எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்துவிட்டால், சுகர் வந்த ஆளின் இனிப்பு ஆசை போல், எதையாவது பார்த்துவிட்டால், படித்துவிட்டால் கை அரிக்க ஆரம்பித்துவிடும், அதுவும் கையில் கேமரா ஓசியில் கிடைத்துவிட்டால் என் மாதிரியான ஆட்களை கையில் பிடிக்கவே முடியாது. ப்ரொபஷனலாய் படம் எடுக்க குறைந்த பட்சம் சில, பல ஆயிரங்கள் ஆகும் அந்த காலத்தில்,2007 என்று நினைக்கிறேன். மிக குறைந்த செலவில் நிறைந்த இன்பம் போல சுமார் 250 ரூபாயில் எடுக்கப்பட்டு, பல நூறு கோடிகள் வசூலை அள்ளிய படம்..:) இந்த படத்திற்கு பிறகு மேலும் இரண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறேன் என்றாலும், இந்த முதல் முயற்சி ஆல் இன் ஆல் அழகு ராஜாவாய் இருந்து கொண்டு படமாய் வருவதற்குள் நுரை தள்ளிவிட்டது. அந்த அனுபவத்தை பகிரவே இந்த பதிவு. நமக்கும் கவிதைக்கும் சில நூறு மைல்கள் தூரம் என்றாலும், ஒரு சில பேரினுடய கவிதை வரிகள் மட்டும் மறக்கவே மறக்காது. அப்படி என்னுள் மறக்கவே முடியாத வரிகள் தான் பாலகுமாரனின் இந்த கவிதை வரிகள். என் நண்பர் ஒருவர் உள்ளங்கையளவு ஒரு சின்ன பொட்டியை எடுத்து வந்து, இதில் வீடியோ எடுக்கலாம் என்றவுடன், உள்ளிருக்கும் குதிரை பிளிறி கிள...

சிறுகதை பட்டறையும், பல பட்டறைகளும்..

Image
சிறுகதை போட்டி நடத்தி, கடைசியில் எல்லாவற்றையும் படித்து நொந்து போய், இவங்களுக்கு ஒரு பட்டறை நடத்துவோம் அப்பனாச்சும் கதை எழுத வருதான்னு பாப்போம்னு நடத்திய சிறுகதை பட்டறை இனிதே ஆரம்பித்தது. வழக்கம் போல காலை பத்து மணிக்கு. வெறும் பின்னூட்டத்திலும், போனிலும் மட்டுமே பேசிக் கொண்டிருந்த பல பதிவர்கள், ஒரு நாள் பிரயாண சிரமம் பார்க்காமல் வந்திருந்தது மனதுக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.   பேச்சாளர்கள், பாஸ்கர் சக்தி, யுவன் சந்திரசேகர், தேவதாஸ் அவர்கள் பா.ராகவன், நர்சிம், ஜ்யோவரம் சுந்தர்,  தண்டோரா, கவிஞர் சா. முத்துவேல், கல்லாபெட்டி “சிங்காரங்கள்” தாமிரா (எ) ஆதி, முரளிகண்ணன். திருப்பூர் பதிவர் சஙக் தலைவர் வெயிலான், குகன் கட்டுரைகள், “கண்ணன்” பரிசல் கேள்வி கணைகளை தொடுத்த போது, பக்கத்தில் கார்கியுடன் கூட்டத்தினரின் ஒரு பகுதி, பிரபல பதிவர் கிருஷ்ணகிரி கும்கி பச்சை கலர் ஜிங்குச்சா.. அகநாழிகை பொன். வாசுதேவன், அண்ணாச்சி வடகரைவேலன். அக்னிபார்வை, முரளிகுமார் பத்மநாபன், வெயிலான், முரளிகண்ணன், (இரண்டு பேர் பெயர் சட்டுனு...

ஈரம் – திரை விமர்சனம்

Image
ரொம்ப நாள் ஆயிற்று இந்த ஜெனரில் படம் பார்த்து, அதுவும் இந்தளவுக்கு டெக்னிகல் எக்ஸலன்ஸோடு. மிரட்டியிருக்கிறார்கள் மேக்கிங்கில். சிந்துவின் சாவிலிருந்து கதை ஆரம்பிக்கிறது.  சிந்துவின் சாவு பற்றிய விசாரணையை, துவங்கும் அஸிஸ்டெண்ட் கமிஷனராக ஆதி வருகிறார். தற்கொலையாக கருதப்படும் சாவை, ஏ.ஸி மட்டும் கொலையாக பார்க்க, தொடர்ந்து அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் கொலை செய்யப்பட, மேலும் இறுகுகிறது சிக்கல், யார் கொலையாளி என்று தெரியாத நிலையில், கொலைக்கான ஆயுதம் தண்ணீர் என்பதை கண்டுபிடிக்கிறான். ஏஸி, சிந்துவின் முன்னாள் காதலனும் கூட,  கடைசியில் சிந்து கொலை செய்யப்பட்டாளா..? அல்லது தற்கொலையா? மற்றவர்கள் இறந்ததுக்கான காரண்ம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு மிரட்டலாய் பதில் சொல்லியிருக்கிறார்கள். படத்தின் முதல் காட்சியே நம்மை சீட் நுனிக்கு கொண்டு வருகிறார்கள், மாடி படிகளில் தண்ணிர் வழிவது, பாத்டப்பில் சிந்து மூழ்கி இறந்து கிடப்பது,  என்று ஆரம்பித்து, அதற்கு பிறகு வரும் இன்வெஸ்டிகேஷன் காட்சிகளாகட்டும், மழை காட்சிகளாட்டும், உதயம் தியேட்டர் பாத்ரூமில் நடக்கும் அமானுஷ்ய கா...

இசையெனும் “ராஜ” வெள்ளம் –4

Image
இளையராஜா – மணிரத்னம் தளபதி கமல், ராஜா, மணிக்கு எப்படி ஒரு நாயகனோ, அது போல ரஜினி, ராஜா, மணிக்கு இந்த படம. படம் முழுவதும் மணியும், ராஜாவும் ஒரு சாம்ராஜயத்தையே விரவியிருப்பார்கள். படத்தின் முதல் காட்சியிலேயே ராஜா வேலையை ஆரம்பித்திருப்பார். சில்ஹவுட்டிலிருந்து வெளியே வரும் ரயிலின் சத்தத்துடன், கூடவே அதற்கீடான புல்லாங்குழல் இசையை ரயில் கூவல் போல, ஆரம்பித்து ஒரு அழுத்தமான ஆரம்பத்தை, ஆரம்பித்து வைப்பார். சின்ன தாய் இவள் பாட்டு மூலமாய், அதே போல் ரஜினியின் அறிமுக காட்சியான சண்டை காட்சி, அந்த காட்சியில் ரஜினி போடும் சண்டையின் உக்கிரத்தைவிட, ராஜாவின் ஆக்ரோஷமான பிண்ணனி இசை ரஜினியின் கேரக்டரை உச்சத்துக்கு கொண்டு போய் விடும். ஆங்கில படத்துக்கு ஈடான இசை இந்த காட்சியில் இருக்கும். இன்னொரு காட்சி மம்மூட்டியும், ரஜினியும் ஒரு பாலத்தில் நேருக்கு நேர் பார்த்து கொள்வார்கள்,  அப்போது சண்டைக் காட்சியில் பயன்படுத்திய அதே பிண்ணனி இசையை பயன்படுத்தியிருப்பார். ரஜினியின் வீர்யத்தை காட்ட எப்படி சண்டைகாட்சியில் அந்த இசை பயன்பட்டதோ, மம்முட்டி ஒரு அமைதியான, ஆனால் ஆழுத்தமான ஆள், என்பதை அவர் ...

Maghadeera – Telugu Film Review

Image
  ராம்சரண் தேஜா, ராஜமெள்லி, பிரம்மாண்டமான படம்  என்று எதிர்பார்பு அட்ரிலினை போல பம்ப் ஆகியிருக்க, சதிகாரர்கள், தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸ் செய்யாமல் நிறுத்திவிட்டார்கள். விடுவோமா நாங்க. ஹர்ஷா இளமை துள்ளும் இளைஞன், பைக் ரேஸர், ஒரு சந்தர்பத்தில்  இந்துவின் கையை அவன் தொட்டு போகும் நேரத்தில்  தீப்போல பல விஷயங்கள் அவனுக்குள் தோன்ற, இன்ஸ்டெண்டாய் அவள் மேல் ஹர்ஷாவுக்கு காதல் வர,  காதல் கைகூடி வரும் நேரத்தில் அவளின் மாமா இடையில் வர, இந்துவின் அப்பாவை கொலை செய்த பழி ஹர்ஷாவின் மேல் விழ, இந்துவை ஹர்ஷாவிடமிருந்து பிரித்து கொண்டு ஹெலிகாப்டரில் கிளம்ப, துரத்தி தொங்கும், ஹர்ஷாவை, மேலேயிருந்து தள்ளி விடுகிறார்கள்.  இங்கிருந்து ஆரம்பிக்கிறது 400 வருட முன் ஜென்ம,  பொறி பறக்கும், செகண்ட் ஃஆப். சும்மா அதிரி போயிந்தி என்றால் அது எல்லாம் சும்மா. தளபதி காலபைரவனுக்கும், இளவரசி மித்ரவிந்தாவுக்கும்,  வெளியே வெளிப்படாத காதல் இருக்க, அவனது முறை மாமன் அவளை அடைய துடிக்க,  அதற்காக சூழ்ச்சி செய்து ஒரு போட்டியை வைக்க, அதில் சூழ்ச்சிகளை வென்று கால பைரவன் வெற...

மதுரை சம்பவம் – திரை விமர்சனம்

Image
சிறந்த நடிகர் விருது வாங்கும் பிரகாஷ்ராஜுக்கு வாழ்த்துக்கள். விருது படமான காஞ்சிவரம் திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும். மதுரை ஆட்டு தொட்டி அதை சுற்றி உள்ள பெரிய ஏரியாவையே கட்டி ஆளும் ரவுடி ஆளமரத்தானுக்கும், அவன் ஆதரவிலேயே வளர்ந்து, அவனாலேயே எம்.பி ஆன கட் அவுட் ஆளவந்தானுக்கும் தொழில் போட்டியில் ஆரம்பிக்கிறது கதை. ஆளவந்தானின் தொழிலை முடக்கும் ஆளமரத்தானின் மகன் குட்டி, இருவருக்கும் இடையே புகைந்த பகை ஒரு கட்டத்தில் அடிதடியாகி, ஆளமரத்தானின் மருமகனையே காவு வாங்கிவிட, அவனை கொன்றது ஆளவந்தான் என்று நினைத்து ஆலமரத்தான் நேரிலேயே போய் சுட்டு  கொன்று விட, பிரச்சனை உச்சத்துக்கு வருகிறது. இதற்கு நடுவில் அந்த ஊர் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராய் வரும் கரோலினுக்கும், குட்டிக்கும் காதல்.  அந்த காதலுக்கு பின் ஒரு அருமையான காதலும் துரோகமும் சேர்ந்த கதை  அமைத்திருக்கிறார் திரைக்கதையாசிரியர். ஆலமரத்தானுக்கு அல்லக்கை போல செயல் படும் கரோலின் அவரை என்கவுண்டர் செய்ய, ப்ரச்சனை இன்னும் உச்சத்துக்கு வர. க்ளைமாக்ஸ் வெடிக்கிறது. மிக, மிக இயல்பான காட்சிகளுடன், பின்னால் மிசைல்  துரத்தும் வேகத்தில...

கொத்து பரோட்டா-07/09/09

Image
மக்கள் தொலைக்காட்சியில் ஜேம்ஸ்வசந்தன் நடத்தும் ‘தமிழ் பேசு தங்க காசு” என்கிற நிகழ்ச்சியில் ஒரு பெண் போட்டியாளராய் வந்தார். முதலில் அவரை பற்றி சொல்ல வேண்டும் அதில் ஆங்கிலம் கலந்து பேசினால் பரவாயில்லை. இருந்தாலும் பெரும்பாலானவர்கள் ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்வது ஏதோ வெளிநாட்டவர் தமிழ்  பேசுவது இருக்கும். ஆனால் இந்த பெண்மணி அப்படியில்லை. தங்கு தடையில்லாம் பேசினார். தன் பெயரை அறிமுகம் செய்து கொண்டுவிட்டு, நான் வீட்டு மனைவியாய் இருக்கிறேன்” என்றார். எனக்கு சிரிப்பு தாங்க  முடியவில்லை. தமிழில் பேச் வேண்டும் என்று அவர் முயற்சியை பாராட்டினாலும், House Wife ஐ அப்படியே மொழி மாற்றம் செய்தது. காமெடியாவிட்டது. என்னுடய் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார். If you want to speak a language, You have to think in that Language “ என்று.. @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@  கின்னஸ்   கின்னஸ் ரெக்கார்டில் சென்னை மீண்டும் அடிபட்டிருக்கிறது. சென்னை சிட்டி செண்டர் மாலில் சுரேஷ் ஜோசிம் என்கிற இளைஞர் நடத்திய 100 மணி நேர தொடர் கரோக்கே பாட்டு பாடும் சாதனை நடத்தி கின்னஸ் சாதன...