கன்னி குறும்பட முயற்சி..??
குறும்படம் எடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்துவிட்டால், சுகர் வந்த ஆளின் இனிப்பு ஆசை போல், எதையாவது பார்த்துவிட்டால், படித்துவிட்டால் கை அரிக்க ஆரம்பித்துவிடும், அதுவும் கையில் கேமரா ஓசியில் கிடைத்துவிட்டால் என் மாதிரியான ஆட்களை கையில் பிடிக்கவே முடியாது. ப்ரொபஷனலாய் படம் எடுக்க குறைந்த பட்சம் சில, பல ஆயிரங்கள் ஆகும் அந்த காலத்தில்,2007 என்று நினைக்கிறேன். மிக குறைந்த செலவில் நிறைந்த இன்பம் போல சுமார் 250 ரூபாயில் எடுக்கப்பட்டு, பல நூறு கோடிகள் வசூலை அள்ளிய படம்..:) இந்த படத்திற்கு பிறகு மேலும் இரண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறேன் என்றாலும், இந்த முதல் முயற்சி ஆல் இன் ஆல் அழகு ராஜாவாய் இருந்து கொண்டு படமாய் வருவதற்குள் நுரை தள்ளிவிட்டது. அந்த அனுபவத்தை பகிரவே இந்த பதிவு. நமக்கும் கவிதைக்கும் சில நூறு மைல்கள் தூரம் என்றாலும், ஒரு சில பேரினுடய கவிதை வரிகள் மட்டும் மறக்கவே மறக்காது. அப்படி என்னுள் மறக்கவே முடியாத வரிகள் தான் பாலகுமாரனின் இந்த கவிதை வரிகள். என் நண்பர் ஒருவர் உள்ளங்கையளவு ஒரு சின்ன பொட்டியை எடுத்து வந்து, இதில் வீடியோ எடுக்கலாம் என்றவுடன், உள்ளிருக்கும் குதிரை பிளிறி கிள...