Posts

கொத்து பரோட்டா 31/01/11

Image
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடரும் தாக்குதல்களை எதிர்த்து ட்வீட்டரில் ஒரு பெரிய அலையே எழுந்துள்ளது. இது சம்பந்தமான ஒரு டீவிட்டர்களின் கூட்டம் கூட நேற்று மெரினாவில் நடந்தது. அதே போல ஸ்ரீலங்காவில், கல்லேயில் நடக்கும்  லிட்டரரி பெஸ்டிவல் எனும் புத்தகக் கண்காட்சியை சவுத் ஆப்பிரிக்க எழுத்தாளர் டாமன் கால்குட் என்பவர், மீனவர்கள் மீதான தாக்குதல், மனித உரிமை மீறல் குற்றஞ்சாட்டி கலந்து கொள்ளாமல் பாய்காட் செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக இன்னும் சில பிரபல எழுத்தாளர்களும் சேர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவிலிருந்து சென்றிருக்கும் எழுத்தாளர் திஷானி தோஷி, சைனா எழுத்தாளர்களும் விழாவில் கலந்து கொள்கிறார்ளாம். விழாவுக்கு மனித உரிமை சார்பாக எதிர்ப்பு இருப்பது உண்மைதான் என்றும் சொல்கிறார் இவ்விழாவின் அமைப்பாளரும், ஸ்ரீலங்காவின் பிரபல நாவலாசிரியருமான ஷியாம் செல்வதுரை.  #################################################

நண்பனின்….

அன்புள்ள நண்பர் சங்கருக்கு.. உங்களின் கதைகளைப் படித்தேன். “மீண்டும் ஒரு காதல் கதை”யைப் படித்து முடித்தவுடன், மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டியது. மறுபடியும் படித்தேன். ‘ஷ்ரத்தா” கேரக்டர் அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது. சுஜாதாவின்”பிரிவோம்..சந்திப்போம்’ நாயகி மதுமிதா எவ்வளவு தூரம் மனதை பாதித்தாளோ.. அதே அளவு ஷ்ரத்தாவும் என் மனதை பாதித்துவிட்டாள். இப்படிஒருத்தியை வாழ்வில் சந்திக்க மாட்டோமா? என்ற ஏக்கம் வயதையும் மறந்து வருகிறது. (அப்படியொன்றும் வயதாகிவிடவில்லையே.. “நாமெல்லாம் இளைஞர்கள் தானே..”).

பதினாறு

Image
மிர்ச்சி சிவா, இளமையான டிசைன்கள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, அம்சமான டைட்டில் என்றதும் ஏதோ இளமை துள்ளிக் குதிக்கும் கதையாக இருக்கும் என்றெண்ணி துள்ளிக் குதித்து படம் பார்க்கப் போகிறவர்களா நீங்கள்? அப்போது இந்த விமர்சனம் உங்களுக்குத்தான். பாவி மக்கா சாச்சுபுட்டாய்ங்கடா.. சாச்சுபுட்டாய்ங்க

127 Hours

Image
வாழ்க்கையை உற்சாகமாகவே கழிக்கும்  இளைஞன் ஒருவன். ப்ளூ கேன்யானில் ஒரு மலையிடுக்கின்  பாறையில் கை மாட்டிக் கொண்டு, ஐந்து நாட்கள் வாழ்வா சாவா போராட்டம் நடத்தி,  வாழும் வெறி மட்டுமே அவனை உயிரோடு கூட்டி வந்த அதிசயத்தை சொல்லும் படம். இதுதான் கதை என்றதும் இதை ஒரு அரை மணி நேர டாக்குமெண்டரியாக எடுத்தால் பரவாயில்லை ஒரு முழு படத்திற்கு தாங்குமா? என்ற கேள்வி எழுத்தான் செய்யும். ஆனால் படம் ஓடும் ஒன்னரை மணி நேரமும் நம்மை அவனோடு ஆழ பயணிக்க வைத்துவிடுகிறார்கள்  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், இயக்குனர் டேனிபாயலும் அவரது குழுவினரும்.

கவிஞரின் பார்வையில்....

Image
rajasundararajan@gmail.com அன்பின் சங்கர், போக்குவரத்தில் வண்டி ஓட்டிச் செல்கிற போது, நமக்கு முந்தி, பிந்தி, அடுத்து ஊர்கிற வண்டியோட்டிகளின் மன-ஓட்டம் இன்னதென்று அறியக் கிட்டுவதை உணர்ந்திருக்கிறீர்களா? ‘பதேர் பாஞ்சாலி’ பார்த்த போது, அந்தக் கிழவிக் குணவார்ப்பின் மன-ஓட்டங்கள் அப்படி அப்பட்டமாகப் புரியவர - வியந்தேன் என்று சொல்லமாட்டேன் – திகைத்தேன்! ஏனென்றால், அதுவரை நான் பார்த்திருந்த (தமிழ், ஆங்கில, ஹிந்தி) மசாலாக்களில் ஆக்ஷன், பேச்சு, பின்னிசை அளவிலேயே கதை நகர்த்துதலைக் கண்டிருந்தேன். மெய்ப்பாடுகள் வழியாகத்தான் குணவார்ப்புகள் விளக்கம் பெறுகின்றன. உண்மைதான், ஆனால் கதைக்கள விவரணைதான் அதற்கு அர்த்தம் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘ஆடுகளம்’ படத்தில், நடிகர்கள் ஓரொருவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். ஆனால், படத்தின் கதைக்களம் எடுத்துத் தொடுக்கப்பட்ட வகையினாலேயே அக் குணவார்ப்புகள் தனித்தன்மை பெறுகின்றன. அப்படி, இயக்குநரே கர்த்தாவாகிறார். புத்தக வடிவுக்குட்பட்ட உங்கள் கதைகள் அத்தனையையும் வாசித்துவிட்டேன். உண்மையில், வாங்கி இரண்டு நாட்களில் இரண்டு புத்தகங்களையும் முடித்துவிட்டேன...

சாப்பாட்டுக்கடை

Image
இந்தக் கடையை அடிக்கடி திருவெல்லிக்கேணியில் சுற்றுபவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதைவிட ரொம்ப காலமாய் தேவியில் படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்.  ஏனென்றால் தேவியில் படம் பார்க்க முன் பக்கமாய் அனுமதிப்பவர்கள்,படம் விட்டவுடன் பின்பக்கம் உள்ள அவுட் கேட் வழியாகத்தான் அனுப்புவார்கள்.. அப்போது வெளியே வரும் பெரும்பாலானவர்கள் இங்கே சாப்பிடாமல் போயிருக்க மாட்டார்கள். இப்போது சில சமயம் முன் பக்கம் வழியாகவும் விடுவதால் இன்றைய புது ரசிகர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. இவர்களது ஸ்பெஷாலிட்டி சமோசா, கச்சோடி, ரசமலாய், ரசகுல்லா அல்லது ஜாமூன், ஜிலேபி, மற்றும் பால்கோவா,  மற்றும் லஸ்ஸி. எப்பவும் அடுப்பிலிருந்து சூடான சமோசாவும், கச்சோரியும் எடுத்து போட்டுக் கொண்டேயிருப்பார்கள் அது காலியாகிக் கொண்டேயிருக்கும். சமோசாவென்றால் ஏதோ வெங்காயத்தையும் உருளையையும் சேர்த்து ஃபில் செய்தது கிடையாது. முழுக்க, முழுக்க உருளை மசாலாவை மட்டுமே வைத்து செய்யப்படும் சமோசா.. மவுண்ட் ரோடில் ஒரு ரூபாய்க்கு சமோசா விற்ற காலத்திலேயே இரண்டரை ரூபாய்க்கு விற்றவர்கள். இப்போது இவர்களது விலை ஒரு சமோசா 5 ரூபாய...

கொத்து பரோட்டா 24/01/11

Image
சென்ற வாரம் யுத்தம் செய் படத்தின் ப்ரோமஷனுக்காகவும், உலக சினிமா பற்றி பேசவும், வழக்கம் போல் விஜய் டிவியில் கூப்பிட்டிருந்தார்கள். வழக்கம் போல் போயிருந்தோம். அவர்களும் வழக்கம் போல் இரண்டு மணிக்கு வரச் சொல்லிவிட்டு ஆறரை மணிக்கு ஆரம்பித்தார்கள். மீண்டும் வழக்கம் போல் போய்விட்டு வந்து புலம்புகிறேன். ஆனால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாய் இருந்தது. வருகிற குடியரசு தினத்தன்று ஒளிபரப்பாகிறது. வாட்ச் இட். ########################################### மிஷ்கினிடம் சாருவை பற்றிக் கேட்ட போது சாரு என் நண்பர், நண்பர், இன்னமும் என் நண்பர் என்றார். ஒரு வேளை சேர்ந்திட்டு இவரு நண்பனின் துரோகம்னு புக் போடுறதுக்கும், அவர் நந்தலாலாவுக்குமா ஆட்டம் ஆடுறாய்ங்களோ. அதே போல உலகப் படம் பத்தி கேட்ட போது அவர் சொன்னது தமிழ் நாடும் உலகத்தில தானே இருக்கு என்பதுதான். இதைத்தான் அவருடய நந்தலாலா நிகழ்ச்சியில் சொன்னேன். சேம் பிஞ்ச் ########################################### பதிவுகளில், பத்திரிக்கைகளில், மாத இதழ்களில்  எழுதுவதை தவிர சில புதிய இணைய இதழ்களிலும் எழுதக் கேட்கிறார்கள். அப்படி புதிதாய் ஆரம்பித்திருக்க...

சொல்லித்தரவா

Image
பொங்கல் ரேஸில் வெளிவந்த படங்களில் இதுவும் ஒன்று. இந்திய அரசின் சலுகைகளில் படித்துவிட்டு வெளிநாட்டில் போய் செட்டிலாகும் இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம். எஸ்.சிவராமன் என்கிற இயக்குனரின் இரண்டாவது படம். இவர் ஏற்கனவே மறந்தேன் மெய் மறந்தேன் என்கிற படத்தை 2006 எடுத்து வெளியிட்டிருக்கிறார். முதல் படத்தில் ஏதும் கற்றுக் கொள்ளவில்லை போலிருக்கிறது. என்ன தான் சொல்ல வந்த விஷயம் ப்ரெயின் ட்ரையின் என்பது போன்ற சீரியஸான விஷயமாய் இருந்தாலும் படம் பூராவும் ஆளாளுக்கு இங்கிலீஷிலேயே பேசிக் கொண்டிருப்பது.. ஒரே காமெடியாய் இருக்கிறது. பின்ன பாருங்க.. கவுண்டர் சீரியஸா அமெரிக்க ஆக்ஸண்டுடன் இங்கிலீஷ் பேசினால் எப்படி இருக்கும்? இதில் இயக்குனர் வேறு காமெடி செய்கிறேன் என்று பட்லர் இங்கிலீஷ் காமெடி செய்கிறார். மிக அமெச்சூர் தனமான கதை சொல்ல, மேக்கிங், என்று எந்த விதத்திலும் எங்கேயும் பாராட்டி விடக்கூடாது என்பதை கொள்கையாய் எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தில் சீட்டில் உட்கார முடியாமல் தவிக்க வைக்கிறார். சார்.. படமெடுக்கணும்னு ஆசைப்பட்டா.. சொல்லுங்க.. நாங்கல்லாம் இருக்கோம்.. காசை கரியாக்காதீங்க..ப...

வாசகர் விமர்சனம்- லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்.

ஓரு இலக்கிய விழா கூட்டத்தில் தான் அந்த புத்தகக் கடை அறிமுகம் கிடைத்தது. டிஸ்கவரி புக் பேலஸ். ஒரு புராதனமான மாடிப்படிகளுடன் இருந்தாலும் உள்ளே புத்தகக் கடை பெரிதாக, நான் தேடிய சில அரிய புத்தகங்களைக் கொண்டதாக இருந்த்து. அன்று விழா முடிந்து தேடின சில புத்தகங்களுக்கு நடுவே இந்த புத்தகத்தின் அட்டைப்படம் என்னை வசிகரித்ததால் (சில்க் ஸ்மிதாவின் படம் போல) எடுத்து பார்த்த புத்தகம் தான் ‘லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்” என்ற புத்தகம். எனக்கு குடிப்பழக்கம் கிடையாது என்பது எப்போதும் கிடையாது. என் நண்பர்களுக்கு உண்டென்பதால், பெயர் பார்த்ததும் புரிந்த்து ஏதோ இருக்கின்றது என. ஒரு முறை என் இலக்கிய நண்பர்களூடய வீட்டிலிருந்த புத்தகங்களூல் இருந்த, எனக்கு பிடித்த எழுத்தாளர் ‘சுதேசமித்ரனின் ‘காக்டெயில்’ புத்தகத்தை  எனக்கு படிக்க  தரமாட்டேன் என்று ஒளித்து வைத்து தராத வன்மம் வேறு.(ஆண்கள்?) இருந்தது. ஆனா இன்னிக்கு, அடடா நமக்குன்னு இங்க ஒரு ஆள் எழுதியிருக்கானே!. டாடி, மம்மி வீட்டில் இல்ல’ன்னு மனசுல பாட்டுச் சத்தம் கேட்டது. எடுத்திட்டேன். முதல்ல எழுதினவன் பெயரைப் பாத்தேன். ஆகா சங்கர் நாராயண்....

வாசகர் விமர்சனம்- சினிமா வியாபாரம்

subiah ravi sarvagar@gmail.com Dear sir, I am M.Subbiah, working as an Associate Director. I read your recent  book "Cinema viyabaram". so nice and remarkable one. very useful for me. i want to talk to u sir. can i get your mobile number, please. My hearty wishes to all your further future products, sir. Thank you, regards, subbiah.m. என்னடா இவனும் ஆரம்பிச்சிட்டானா என்று அங்கலாய்ப்பவர்களுக்கும், உள்ளுக்குள் நமுட்டு சிரிப்பு சிரிப்பவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு மனிதன் தன் வாழ்கையில், உணவு, உடை, இருப்பிடத்திற்கு பிறகு அங்கீகாரத்துக்காகத்தான் அலைகிறான். காதல், குடும்பம், உள்பட என்பது என் கருத்து. ஏதோ விளையாட்டுப் போல ஒரு வருடத்தில் மூன்று புத்தகங்கள் எழுதியாகிவிட்டது. பதிவர்கள் நண்பர்கள் எல்லாம் பழகின தோஷத்திற்காகவோ..  அல்லது நிஜமாகவே பிடித்தோ… வாங்கி படித்திருக்கலாம் அல்லது பாராட்டியிருக்கலாம். ஆனால் பொது வெளி எனும் போது அங்கு என் புத்தகத்தை வாங்குபவர். புதியவர் அவர்களிடமிருந்து புத்தகத்துக்கான விமர்சனங்...