Posts

தாண்டவம்

Image
 படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பை வேறு விதமாய் ஏற்படுத்தியிருந்த படம். இது என் கதை, என்று ஒரு உதவி இயக்குனரும், இல்லை என்று இயக்குனரும் தயாரிப்பாளர் ஆளாளுக்கு ஆட்டம் ஆட ரகசியமாய் நடந்தத விஷயங்கள் வெளியே வர, இயக்குனர் சங்க தலைவர் ராஜினாமா செய்யும் அளவிற்கு விறுவிறுப்பு கொடுத்த இந்தப்படம் திரையில் அதே பரபரப்பை, விறுவிறுப்பை கொடுத்ததா? என்று கேள்வியை எழுப்பினால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

சாப்பாட்டுக்கடை - அருளானந்தா ஓட்டல்

சென்னையில் கிருஷ்ணவேணி தியேட்டருக்கு பின்னால் ஒரு மாடி வீட்டில் மெஸ்ஸாக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த அருளானந்தா மெஸ். நண்பர் ஒருவர் இங்கு பரோட்டா நன்றாக இருக்கும் என்று சொல்லிக் கூட்டிப் போனார். பஞ்சு போன்ற பரோட்டாவும், கூடவே காரமில்லாத அருமையான கிரேவியும் நம்மை மீண்டும் மீண்டும் அழைத்தது. இதெல்லாம் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்று நினைக்கிறேன். பின்பு இவர்கள் தங்கள் உணவகத்தை ஹோட்டலாய் உருமாற்ற, உஸ்மான் ரோட்டில் இருக்கும் சரவணபவனுக்கு நேர் எதிரே உள்ள விவேகானந்தா காபி ஹவுஸுக்கு ஒரு இடத்தைப் பிடித்து ஹோட்டலாய் அமைத்தார்கள். 

Heroine

Image
மதுர் பண்டார்கரின் படம் என்றால் கொஞ்சம் ராவாக இருக்கும் என்பது இவரது முந்தைய படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும். பேஜ் 3 பிரபலங்களின் பின்னணியை உரித்துக் காட்டியது என்றால், ட்ராபிக் ஜாம் ப்ளாட்பாரத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையை சொன்னது, ஃபாஷன் மாடல் உலகின் அவலங்களை, போட்டிகளை, வெற்றி தோல்விகளை அப்பட்டமாக காட்டியது. அதே அளவிற்கு இவரது கார்பரேட், ஜெயில் ஆகிய படங்கள் இல்லை என்றாலும் பரபரப்பாக பேசப்பட்ட படமாகவே அமைந்தது. இந்த வரிசையில் சினிமா கதாநாயகியைப் பற்றி ஒரு படம் என்றதும் இயல்பாகவே கொஞ்சம் ஆர்வம் எகிறத்தான் செய்தது.

கொத்து பரோட்டா - 24/09/12

Image
பேஸ்புக்கில் கார்டூனிஸ்ட் பாலாவின் தலையை ஆளாளுக்கு உருட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் பெரியாரின் நேரடி புத்திரர்கள் போல வரிந்து கட்டிக் கொண்டு திட்டி எழுதி வருகிறார்கள். அதற்கு காரணம் அவர் போட்ட கார்டூன். பார்பனர்களை மட்டும் பெரியார் எதிர்க்க சொல்லவில்லை. எல்லா ஜாதிகளுக்கான வெறியையும் தான் எதிர்க்கச் சொல்லியிருக்கிறார் என்றும், முற்போக்கு, மற்றும் இடைநிலை என்கிற பெயரில் உலாவரும் ஜாதி வெறியர்களை பற்றித்தான் அந்தக் கார்டூனில் கிண்டலடித்திருந்தார். அவர் ஏதும் தவறாய் சொல்லியிருப்பதாய்  எனக்கு  தெரியவில்லை. எல்லாவற்றையும் தப்பாகவே புரிந்து கொள்பவர்களுக்காக மீண்டும் அக்கார்ட்டூனை விளக்கமாக போட வேண்டிய நிர்பந்தம்  அவருக்கு வந்துவிட்டது. கார்டூனுக்கெல்லாம் விளக்கவுரை போட்டு சொல்லணும் போலருக்கே.. @@@@@@@@@@@@@@@@@@@@@@

சாருலதா

Image
தமிழ் சினிமாவில் சமீபத்திய சென்ஷேஷன் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றிய படமெடுப்பது. ஒரு சின்ன பட்ஜெட் படம், அடுத்து மீடியம் பட்ஜெட் படமான இந்த சாருலதா. மற்றொன்று பெரிய பட்ஜெட்டில் வரப் போகும் மாற்றான். சின்ன பட்ஜெட் படத்தை ரிலீஸானது போல ரிலீஸாக்கி காலியாக்கிவிட்டார்கள் என்று கேள்வி. ஆனால் அதே போல இப்படத்தை பண்ண முடியவில்லை. ஏனென்றால் சன்னிலிருந்து வெளியேறிய பிறகு சக்ஸேனா தனியா கம்பெனி ஆரம்பித்து வெளியிட்டிருக்கும் முதல் படம் அதனால் மீடியாவின் கவனம் பெற்றது ஒரு தனி விஷயம் என்றாலும், ஒட்டிப் பிறந்த ரெட்டையர்கள், அதுவும் பெண்கள் எனும் போது ஒரு சுவாரஸ்யத்தை அளிக்கத்தான் செய்தது.

சாட்டை

Image
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது என்றும், அரசு தரப்பில் அதை மேன்மை படுத்த வேண்டும் என்று ப்ரெஷ்ர் கொடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில்,தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் நிலையை, அதன் ஆசிரியர்களின்   நிலையை, அதனால் ஏற்படும் பாதிப்புகளை இப்படத்தின் மூலமாய்  சாட்டைக் கொண்டு அடித்திருக்கிறார்கள் 

சாப்பாட்டுக்கடை - Siddique Kabab Centre

Image
Kebab  என்று சொல்லப்படும் உணவு வகைகள் பெரும்பாலும் வட இந்தியாவில் புகழ் பெற்ற ஒன்றாகும். ஆனால் இதன் ஆர்ஜின் என்று பார்த்தால் அது அரேபிய, துருக்கிய மண்ணிலிருந்து என்று வரலாறு சொல்கிறது. மாமிச வகைகளை எண்ணையில் போட்டு பொரிக்காமல் மாமிசங்களின் மேல் மசாலாவை போட்டுப் பிரட்டி, அதை தணலில் வாட்டி காரம், மணம் குணத்தோடு, ரொட்டி போன்ற அயிட்டங்களை வைத்துக் கொண்டு மாமிசத்தை மெயின் டிஷ்ஷாக வைத்துக் கொண்டு சாப்பிடுவது ஒரு கலாச்சாரம். 

Barfi

Image
ஃபர்பி. இதன் ட்ரெயிலரை பார்த்த எவரும் படம் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அவ்வளவு க்யூட்டான விஷுவல்களோடு நம்மை ஆகர்ஷித்தது அந்த சின்ன டீசர். அந்த டீசர் கொடுத்த உணர்வை படம் கொடுத்ததா? என்று கேட்டீர்கள் என்றால்  கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.

நெல்லை சந்திப்பு

Image
ரத்தத்தை பார்த்தாலே மயங்கி விழும் ஒருவன் மூன்று பேரை கொல்லும் அளவிற்கு மாறுகிறான். அதற்கு காரணம் என்ன? யார் அவனை இந்த நிலைமைக்கு துரத்தியது. நட்ட நடு ரோட்டில் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஒருவனை என்கவுண்டர் செய்வதில் ஆரம்பிக்கிறது படம். இன்னொரு பக்கம் அம்மா, அப்பா, அக்கா, அக்காவுக்கு நிச்சயம் செய்யப் பட்டிருக்கும் மாமா, என்று அற்புதமான குடும்பம் கொண்ட ஹீரோ. அஸிஸ்டெண்ட் கமிஷனரின் கீப்புக்கு பிறந்த பெண் தான் ஹீரோவின் காதலி. இப்படியாக போகும் கதையில் என்கவுண்டரினால் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது. அதை இரண்டு மணி நேரப் படமாய் பரபரப்பாய் சொல்ல முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் நவீன். கே.பி.பி.

கொத்து பரோட்டா - 17/09/12

Image
டீசல், பெட்ரோல், கேஸ் விலையேற்றம், கேஸ் கட்டுப்பாடு போன்றவைகளுக்கான காரணங்களை இன்றைய தினசரிகளில் இந்திய பெட்ரோலியத்துறை வரிசைப் படுத்தியிருக்கிறது.  அவர்கள் பக்க நியாயத்தை சொல்லிவிட்டு, இதற்கு மாற்றாக விலையேற்றத்தைப் பற்றி விமர்சிக்காமல், மாற்று ஐடியாக்களை கொடுத்தால் வரவேற்கிறார்களாம். நிச்சயம் இது ஒரு சவால்தான். அவர்களுடய சவாலை ஏற்று ஏன் நாம் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கக்கூடாது?. காந்திய மக்கள் இயக்கம் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல போராட்டங்களை செய்துவருகிறது. அவர்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அரசுக்கு மதுக்கடைகளால் கிடைக்கும் வருமானத்தை மதுக்கடையில்லாமல் வருமானத்தை எப்படி கொண்டு வர முடியும் என்று மாற்று ஐடியாக்களை கொடுத்திருந்தார்கள். அதைப் போல மக்களிடமே அரசு கேட்டிருக்கிறது. நாம் கொடுக்க முயற்சிக்கலாமே? @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@