Posts

என்னத்தை சொல்ல...?

போன் ஒலித்தது. வெளிநாட்டு நம்பர். வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். “ஒரு பத்து நிமிஷம் கழிச்சு பண்றீங்களா?” என்று யார் என்று கூட கேட்காமல் சொன்னேன். லைன் உடன் கட்டானது. பல சமயங்களில் இம்மாதிரி சொல்லும் போது அதை கவனிக்காமலோ, அல்லது நாம் போன் பண்ணியாச்சு பேசித்தான் ஆகணும் என்ற எண்ணத்தில் அவர்களைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. சரியாய் பத்து நிமிடம் கழித்து கூப்பிட்டார்.

விஸ்வரூப தரிசனம்

Image
விஸ்வரூபம் திரைபடத்திற்கு தடை என்று அறிந்ததுமே அஹா.. ஏற்கனவே புக் பண்ண டிக்கெட் போச்சே.. என்ற வருத்தத்தை விட, படம் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம்தான் அதிகமாய் இருந்தது. சரி என்னடா செய்யலாமென்று யோசித்துக் கொண்டிருந்த போது,  வழக்கப்படி மாநிலம் விட்டு மாநிலம் படம் பார்க்க வேண்டியதுதான் என்ற முடிவோடு, மணிஜியை தொடர்பு கொள்ள நினைத்து போனை எடுக்க, அவர் அழைத்தார். “என்ன தலைவரே.. இப்படி பண்ணிட்டானுங்க?.” என்றதும் நான் ஆந்திரா போகும் ஐடியாவை சொன்னதும் சற்றும் யோசிக்காமல் “எனக்கு தெலுங்கு தெரியாது இருந்தாலும் போய் பார்த்துடுவோம்” என்றவர், “இரு பெங்களூர்ல பிரபு கிருஷ்ணா டிக்கெட் புக் பண்ணித்தரேன்னு சொல்லியிருந்தாரு. அங்க கிடைச்சுதுன்னா தமிழ்லேயே பாக்கலாமே” என்றதும் எனக்கும் ஒர் நப்பாசை சரி என்றேன். அடுத்த அரை மணி நேரத்தில் ஃபேஸ்புக்கில் பிரபு கிருஷ்ணாவிடம் தொடர்பு கொண்டு , போன் நம்பர் வாங்கி, 25ஆம் தேதி ஆறு மணிஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணியதை கன்பார்ம் செய்ய, நான், மணிஜி, கே.ஆர்.பி, பபாஷா சங்கர் ஆகியோர் காலை எட்டு மணிக்கு மணிஜி வீட்டில் ஆசெம்பிள் ஆவதாய் முடிவெடுத்தோம். ராத்திரி ...

கொத்து பரோட்டா -28/01/13

சென்னையின் மிக மோசமான கலாச்சாரம் சுவர் கண்ட இடமெல்லாம் போஸ்டர் ஒட்டுவது. அது எந்த இடமாக இருந்தாலும் சரி. போஸ்டர் ஒட்டக்கூடாது என்பதற்காக சுவர் முழுவதும் இயற்கை காட்சிகள், நிறைந்த படங்களை வரைந்தால் அதன் மேலும் ஒட்டுகிறார்கள். அனுமதியில்லாத இடங்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று சட்டமிருந்தாலும், அது எப்போது மீறப்படுகிறது என்றால் ஆளூம் கட்சிக்காரர்களே அங்கே போஸ்டர் ஒட்டும் போதுதான். மாநகராட்சியும் அவ்வப்போது அறிக்கை விடுவதோடு சரி. சமீபத்தில் என் வெளிநாட்டு நண்பர் ஒருவர் சென்னை வந்த போது மெட்ரோ ரயில் வேலைக்காக மறைப்பாக வைத்திருக்கும் இரும்பு ஷீட்களில், மெட்ரோ தூண்களில் எல்லாம் போஸ்டர் ஒட்டியிருப்பதைப் பார்த்து உங்க அரசாங்கம் இதை கண்டிக்காதா? என்று கேட்டார். கண்டிக்கும் ஆனா கேட்க மாட்டாங்க.. என்றதும் எங்க ஊரில் எல்லாம் அப்படி மீறி போஸ்டர் ஒட்டினால் அந்த போஸ்டர் சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உடனடியாய் மிகப் பெரிய ஃபைன் வசூலிக்கப்படும். இங்கேயும் அதை இம்ப்ளிமெண்ட் செய்தால் அரசுக்கு வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு, ஊரும் சுத்தமாயிருக்கும் இல்லையா? என்றால் இருக்கும் தான் செய...

விஸ்வரூபம்

Image
சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் போகிற தியேட்டர்களில் எல்லாம் சாரி சாரியாய் கார்கள். All Roads Leads to Viswaroopam  என்று தான் சொல்ல வேண்டும். சினிமா பார்ப்பதற்காக இத்தனை மெனக்கெடலா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவை மூச்சாய் நேசிக்கும் ஒருவரின் படத்தை பார்க்க ஒத்த சிந்தனையுள்ள ரசிகனுக்கு இந்த மெனக்கெடல் ஒன்றும் பெரிதல்ல. இதற்கு முன் மகதீரா பார்ப்பதற்காக ஆந்திராவுக்கும், முங்காரு மலே பார்ப்பதற்காக கர்நாடகாவுக்கும் பயணப்பட்டவன் நான். அப்படி பயணப்பட்டு பார்க்கும் படம் சிறப்பான ஒர் அனுபவமாய் இருந்தால் எத்தனை சந்தோஷமாய் இருக்கும். அப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை விஸ்வரூபம் கொடுத்தது. இப்பட்த்திற்கான செய்த பயணம் ஒர் அனுபவம். அதை தனியே எழுத வேண்டும்.

பத்தாயிரம் கோடி

Image
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஒரு கெமிக்கலை கண்டு பிடிக்கிறார்கள். அந்த கெமிக்கலை உடலில் பூசிக் கொண்டால் அந்த இடம் கண்களுக்கு புலப்படாமல் போய்விட, அதை வைத்து கல்லூரி மாணவர் கோகுலும், அவரது நண்பர்களும் பத்தாயிரம் கோடி ரூபாயை சுட்டுவிடுகிறார்கள். அதை கண்டு பிடிக்க, தமிழக போலீஸ் துறை சங்கர்லால் எனும் விவேக் அண்ட் டீமை அனுப்புகிறது. பத்தாயிரம் கோடியை ஒரு காரில் வைத்துக் கொண்டு ஊர் ஊராய் மாணவர்கள் சுற்ற, அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் காமெடி, ஜேம்ஸ்பாண்ட் விவேக் வெல்கிறாரா? இல்லையா? என்பதுதான் கதை.

சாப்பாட்டுக்கடை - Sam's Fish Curry

Image
சமீபத்தில் முகப்புத்தக குழுவான “சாப்பாட்டுக்கடை’ யில் ஒர் விளம்பரம். மீன் வருவலும், மீன் குழம்பு மட்டும் செய்து வீட்டிற்கு டோர் டெலிவரி செய்வதாய். மீன் குழம்பின் ரசிகரான என் நண்பரிடம் இதைப் பற்றி சொன்னேன். அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க. இப்படித்தான் சொல்லுவாங்க.. பின்னாடி வந்து சாப்ட்டா கவிச்சி வாடையடிக்கும், பழைய மீனை வச்சி வறுத்து கொடுப்பாங்க. என்னைப் பொறுத்தவரை சென்னையிலேயே மிக சிறிய ஓட்டல்களில் மட்டுமே நல்ல மீன் குழம்பும், வறுவலும் கிடைச்சிருக்கு என்றார். அவர் சொல்வதில் ஓரளவு உண்மையும் உண்டு. நாங்கள் இருவரும் நிறைய உணவகங்களில் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறோம். மீன் குழம்பு என்றால் குழம்பு மீன், மீன் வறுவல் என்று மீன் அயிட்டங்கள் அதையும் விட மாட்டார். நல்ல மீன் குழம்பு வைக்கத் தெரிந்த ஓட்டலில் மற்ற அயிட்டங்கள் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கை. எனக்கு அப்படிப்பட்ட நம்பிக்கை ரசத்தில். இவ்வளவு தூரம் சொல்லியவர் விளம்பரத்தில் பார்த்த மீன் குழம்பு படத்தை பார்த்ததும்,  “சரி..நாளைக்கு மதியம் லஞ்சுக்கு வீட்டுல சாப்பாடு மட்டும் செஞ்சிட்டு இங்க ஆர்டர் செய்திருவோம்’ என்ற...

கொத்து பரோட்டா -21/01/13

Image
ஆயிரம் பஞ்சாயத்துக்களைத் தாண்டி ஒரு வழியாய் விஸ்வரூபம் வெளிவருகிறது. என்னதான் ஒரு மாதிரி கன்வின்ஸ் ஆக்கி டி.டி.எச். ஒளிபரப்பை ஒரு வாரத்திற்கு பிறகு என்று கமலை முடிவு செய்ய வைத்தாலும், ஒரு தயாரிப்பாளராய் தனக்கிருக்கும் வியாபார உரிமையை தடுக்க முடியாது என்ற நிலையை உறுதி செய்ய அவர் காம்படீஷன் கமிஷனில் கொடுத்த புகார் இன்னும் லைவ்வாகத்தான் இருக்கிறது. அந்தப் புகாரை வருகிற வாரம் காம்படீஷன் கமிஷன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்றிருக்கிறது. இதே போல மூன்று மாதங்களுக்கு முன் அஜய் தேவ்கன், யாஷ்ராஜ் கம்பெனியினால் தன் படமான சன் ஆப் சர்தாரை வெளியிட தடை செய்கிறார்கள் என்று புகார் கொடுத்திருந்தார். @@@@@@@@@@@@@@@@@@@@@@@

சாப்பாட்டுக்கடை -கணேஷ் செட்டிநாடு

சென்னையில் எங்கு பார்த்தாலும் அசைவ உணவகம் என்றால் அது டிபால்டாய் செட்டி நாட்டு உணவகமாய்த்தான் இருக்கும். நிஜமாகவே அங்கே கொடுக்கப்படும் உணவு செட்டிநாட்டு வகை தானா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்பேர்பட்ட ஓட்டல்கள் இருக்குமிடத்தில் ஓரளவுக்கு செட்டிநாட்டு ஸ்டைலில் நல்ல உணவகம் ஒன்று இருக்கிறது அது தான் கணேஷ் செட்டிநாடு.

Seethamma Vaakitlo Sirimalle Chettu

Image
பிரகாஷ்ராஜ் மிகவும் நல்ல மனிதர். எதையும் பாசிட்டிவாக பார்ப்பவர். அவருக்கு ரெண்டு மகன்கள், ஒரு பெண். தன் மனைவி ஜெயசுதாவோடு ரேலங்கியில் சந்தோஷமான வாழ்க்கை வாழ்பவர். இரண்டு மகன்களில் மூத்தவரான வெங்கடேஷ் ஒர் வேலையில்லா பட்டதாரி, சுள்ளென கோபப்டுகிறவர். இளையவர் மகேஷ்பாபு. நன்கு படித்தவர். ஹைதையில் இருப்பவர். இளமைத் துள்ளலோடு வளைய வருபவர்.இவர்களின் உறவினரான பணக்கார ரமேஷ் ராவுக்கு ரேலங்கி மாமா ப்ரகாஷ்ராஜ் குடும்பத்தின் மீது காழ்ப்புணர்ச்சி.  இவரது மகள் சமந்தாவுக்கும் மகேஷ்பாபுவுக்கும் காதல். இன்னொரு பக்கம் வீட்டோடு இருக்கும் முறைப் பெண் அஞ்சலி . வெங்கடேஷ் தான் தன் கணவர் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இருப்பவர். ரேலங்கி மாமா ப்ரகாஷ்ராஜின்  குடும்பத்தில் உறவினர் ரமேஷ் ராவினால் ஒர் பிரச்சனை உருவாகிறது. அது அண்ணன் தம்பிக்கிடையேயும் பிரச்சனையை உருவாக்கிவிடுகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது தான் கதை.

புத்தக கண்காட்சி -4

கடந்த ரெண்டொரு நாளாய் புத்தக கண்காட்சியில் நல்ல கூட்டம் விடுமுறை நாளாகிவிட்டதால் பார்க்கிங் எல்லாம் இடமாற்றம் செய்திருந்தார்கள். மாலையில் பைக் வைத்துவிட்டு  போனால் இருட்டில் எங்கே வைத்தோம் என்று நிலவொளியில் தேடித்தான் எடுக்க வேண்டும். அங்கே லைட் வசதிகள் ஏதும் செய்யாமல் வைத்திருப்பது படு கொடுமை.  வேடியப்பனின் ஸ்டாலில் அமர்ந்திருந்த போது ஒர் இளம் பெண் உடன் வந்தவரின் கையில் தன்னுடய துப்பட்டாவை கட்டி, இன்னொரு முனையை தன் கழுத்தைச் சுற்றி இறுக்கிக் கொண்டு, மேலும் அவரின் கையை வேறு பிடித்தபடி கண்காட்சி முழுவதும் சுற்றினார். அப்பெண்ணின் தந்தையாய் இருக்கவேண்டும்.