Posts

கொத்து பரோட்டா -20/05/13

70 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் பல...கேபிள் சங்கர் இனி தொடர்ந்து கொத்து பரோட்டா எழுத முடியுமா? என்று தெரியவில்லை. தயாரிப்பாளர் துவார். ஜி. சந்திரசேகரனின் FCS Creationசின் ஐந்தாவது தயாரிப்பான “தொட்டால் தொடரும்” படத்தை நான் எழுதி இயக்கவிருக்கிறேன். படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகிவிட்டது. ஃபேஸ்புக்கில் செய்தியை வெளியிட்டதிலிருந்து திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள், நண்பர்கள் என வாழ்த்துக்களும், உங்க படத்தை விமர்சிக்க நாங்க ரெடியாக இருக்கிறோம் என்ற அன்பு மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கிறது. மிக மகிழ்ச்சியாகவும், லேசான உதறலுடனும் வெளியே காட்டிக் கொள்ளாமல், வீரம்னா பயம் இல்லாம நடிக்கிறது என்பதை வெளிக்காட்டும் நேரம் வந்திருக்கிறது. உங்கள் அன்பு மற்றும் ஆசிகளுடன் களம் இறங்குகிறேன். வாழ்த்துங்கள். @@@@@@@@@@@@@@@@@@@@@

அடுக்குகளிலிருந்து - ராஜ் (எ) பட்டாப்பட்டி

2010ல் சிங்கப்பூர் சென்றிருந்த போது நண்பர் ரோஸ்விக் போன் செய்திருந்தார். உங்களின் வாசகர் ஒருவர் உங்களை சந்திக்க வேண்டுமென மிக ஆவலாய் காத்திருப்பதாகவும் உங்களுடன் ஒரு நாள் கழிக்க வேண்டுமென விரும்புவதாகவும் சொன்னார். ஏற்கனவெ சிங்கை பதிவர்களின் அன்பிலும், விருந்தோம்பலிலும் நெகிழ்ந்து போயிருந்த எனக்கு மேலும் நெகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்த நாள் காலையில் பிரபாகரின் யூஷுன் வீட்டின் கீழ் அவருடய காரை எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அவர் தான் ராஜ். ஒல்லியாய், நல்ல உசரமாய் அருமையான கொங்கு தமிழில் அன்பொழுக என்னை கட்டி அணைத்து வரவேற்றார். 

Go Goa Gone

Image
சாயிப் அலிகானின் தலை முடி, படத்தின் டிசைன் எல்லாம் பார்த்தால் பி கிரேட் ஹாலிவுட் படம் போல இருக்கிறதே என்ற எண்ணத்தில் தான் படம் பார்க்க போனோம். படம் ஆரம்பித்து அரை மணி நேரத்தில் வித்யாசமான கலாட்டா ஜோம்பி த்ரில்லர் என்று தெரிய வரும் போது சுறுசுறுப்பாகிவிடுகிறது.

Ustaad Hotel

Image
 சில திரைப்படங்களை பார்க்கும் போது அடடா எப்படி இந்தப் படத்தை மிஸ் செய்தோம் என்று வருத்தப்பட வைக்கும். அப்படி வருத்தப்பட வைத்த படம் தான் இந்த உஸ்தாத் ஓட்டல். ஒரு முறை பதிவர் சிவகுமார் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, சாப்பாட்டுக்கடை ஓனராகிய நான் பார்க்க வேண்டிய படம் என்று சொல்லி நான் தேடி போவதற்குள் தியேட்டரை விட்டு போய்விட்டது. 

நாகராஜசோழன் MA MLA

Image
சத்யராஜ் நடித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அதுவும் அவரது நடிப்பில் 200 வது படம். இயக்குனர் மணிவண்ணனின் இயக்கத்தில் வெளிவரும் 50வது படம். இவர்கள் இருவரது மாஸ்டர் பீஸான அமைதிப்படையின் இரண்டாவது பாகம் என்றால் கேட்க வேண்டுமா? மக்களின் எதிர்பார்ப்பைப் போல விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பும் எகிறித்தான் இருந்தது. இல்லாவிட்டால் தயாரிப்பாளராய் இருக்கும், டாக்டர் ராமதாஸ் விநியோகஸ்தராய் அவதாரம் எடுத்திருப்பாரா? சரி.. இப்படி பல பாயிண்டுகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் திருப்தியை கொடுத்ததா? என்றால் பெரிய இல்லை என்றே சொல்ல வேண்டும்.

Shootout at Wadala

Image
காண்டே, ஷூட் ஆவுட் இன் லோக்கன்ட்வாலா, போன்ற படங்களின் இயக்குனர் சஞ்செய் குப்தாவின் இயக்கத்தில் 1982 மும்பையில் நடந்த அஃபீஷியல் என்கவுண்டரைப் பற்றிய படம். 

விக்ரமனின் - நினைத்தது யாரோ

Image
    பல வெற்றிப் படங்களை இயக்கிய விக்ரமன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘நினைத்தது யாரோ’. இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக P. ரமேஷ், இமானுவேல் இருவரும் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் ரஜித் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிமிஷா நடிக்கிறார். மற்றும் கார்த்திக் யோகி, அஸார், அஷ்வத், ரித்விகா, சுபிக்ஷா, அதுல்யா, சாய் பிரசாத், கிரி, லியோ, பினிஷ், ஷ்யாம் சுந்தர், ஸ்வேதா குப்தா, ஷாமிலி, சமீரா, ஷபானா, பிரதீப், எல்விஎல் , மணிபாரதி, விஷ்ணு, ரஞ்சித், பானு, பாலசுந்தரி, இந்து ஆகியோர் நடிக்கிறார்கள்.  ஒளிப்பதிவு – R.K. பிரதாப்,  இசை – X. பால்ராஜ்,  எடிட்டிங் – S. ரிச்சர்ட் ,  கலை – ஜனா, பாடல்கள் – கலைக்குமார், பா. விஜய், வைரபாரதி, நடனம் – சுசித்ரா, ராபர்ட், பாஸ்கர் ஸ்டன்ட் – தளபதி தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை – அருணாசலம், தயாரிப்பு – P. ரமேஷ், இமானுவேல்,  கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் – விக்ரமன் “முழுக்க முழுக்க புதிய நடிகர்களை வைத்து இளைய தலைமுறை ரசிகர்களை வைத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்....

மின் மிகை

Image
இன்னைய பேப்பர்ல +2 தேர்வு ரிசல்ட் வருவதால் கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க காலை எட்டு மணி முதல் மதியம் 12 மணி வரை தமிழகம் எங்கும் மின் தடை செய்யக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டாங்களாம். மக்கள் நலனின் அக்கரை கொண்ட தமிழக அரசின் முதல்வர் உடனடியாய் அவங்க 12 மணிவரைக்கும் கேட்டதை 1 மணி வரைக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணி மக்கள் நல அரசுன்னு ப்ரூவ் பண்ணியிருக்காங்கன்னு மின் துறை அமைச்சர். நத்தம்..(அவருதானே இப்பவும்) புளங்காகிதம் அடைஞ்சிருக்காரு. சென்னைக்கு வெளியே இருக்கிறவங்க எல்லாம் சென்னையில் மட்டும் என்ன ஸ்பெஷல் அவங்களுக்கு மட்டும் ரெண்டு மணி நேரம்னு காண்டாகிட்டு இருந்ததுக்கு இந்த கோடை ஆரம்பத்திலிருந்து பெரும்பாலான நேரங்களில் அறிவிக்கப்படாத மின் தடையும், குறிப்பாய் இரவு நேரங்களில் வோல்டேஜ் பிரச்சனைகள், அல்லது ஒரு பேஸ் இருந்தால் இன்னொரு பேஸ் போவது என்று பேஸ் மாற்றுவதற்கு ஷிப்ட் போட்டு ஆப்பரேட்டர் வைத்து தூங்க வேண்டிய நிர்பந்தத்தில் சென்னை இருக்கிறது. கடந்த ஒரு வாரமாய் ஆப்பரேட்டருக்கு வேலையில்லாத அளவில் ஒரு மணி வரை சுத்தமாய் கட் செய்துவிடுகிறார்கள். கேட்டா கேபிள் எரிஞ்சிருது. லைன் ப்ராப்ளம், ஹெவி லோட், எ...

மூன்று பேர் மூன்று காதல்

Image
டைட்டிலிலேயே தெளிவாய் சொல்லியிருக்கிறார்கள். மூன்று பேர்களின் காதல் கதைகள் என்று. தனித் தனியே இம்மூன்று கதைகளும் வெவ்வேறு இடம், கண்டெண்ட்டில் இருக்கிறது. விமலுடய காதல் மலையும் மலை சார்ந்த இடமும், சேரனின் காதல் கடலும் கடல் சார்ந்த இடமும், அர்ஜுனின் காதல் நிலமும் நிலம் சார்ந்த இடமும் என்று மூன்று ஜியோகிரபிகல் வேறு பாடு வேறு. விமலின் காதல் வழக்கமான வசந்த பட காதல் போல பேசியே மாய்ந்து அது காதலா இல்லை கத்திரிக்காயா என்று புரிபடுவதற்குள் முற்றிப் போய் புட்டுக் கொள்கிறது. விமல் வழக்கம் போல வாய்க்குள்ளேயே பேசுகிறார். டைட் க்ளோசப் காட்சிகள் வேறு. ஹீரோயினை அறிமுகப்படுத்தும் முன் பாலசந்தர் பாணியில் ஒளித்து வைத்து அவள் ஒர் பேரழகி என்று பில்டப் செய்து படத்தில் காட்டியவுடன்  தியேட்டர் மொத்தமும் “ப்பா.. “ என்று கத்தி அடுத்த வார்த்தை சொல்லியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. உணர்வில்லாத வள வள காதல் என்று சொல்லப்பட்ட கதை. இரண்டாவது காதல் முட்டம் பகுதியில் சேரனுக்கும், பானுவுக்குமிடையே நடக்கும் உணர்வு போராட்டம் என்றே சொல்ல வேண்டும். சேரனின் கேரக்டரைஷேஷனும், பானுவின் கேரக்டரைஷேஷனும் அரும...

கொத்து பரோட்டா -06/05/13

Image
சென்ற வாரம் லயோலா கல்லூரியின் எம்.ஏ மாணவர்களின் ப்ராஜெக்டுக்கான எக்ஸ்டர்னல் எக்ஸாமினராய் சென்றிருந்தேன். ஒவ்வொரு மாணவரும் ஏதாவ்து ஒரு மீடியா சம்பந்தப்பட்ட ப்ராஜெக்டுகளை செய்திருக்க வேண்டும். ஆறேழு மாணவர்கள் மெர்குரி நெட்வொர்க் எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் ப்ராஜெக்ட் ஒர்க் செய்திருந்தார்கள். பெரும்பாலும் உதவி இயக்குனர்களாகவே வலம் வந்திருக்கிறார்கள். முக்கியமாய் நீயா நானாவில் தலைப்புகளை தேடுவது, பின்னணி உழைப்புகளூக்காக இண்டர்ன்ஷிப் எடுத்திருந்தார்கள். இலங்கையிலிருந்து வந்திருந்த இரண்டு பாதிரிமார்கள் அவர்களுடய சபை சார்ந்த ரேடியோ சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை செய்திருந்தார்கள். இன்னும் சில பேர் புதிய தலைமுறையில் புதிய தொலைக்காட்சியாய் வர இருக்கும் “புதுயுகம்” சேனலில் வேலை பார்த்திருந்தார்கள். பெரும்பாலானவர்களுக்கு  இண்டர்ன்ஷிப் செய்திருந்தாலும் அவர்களுக்கு பெரிய எக்ஸ்போஷர் ஏதும் கிடைத்த மாதிரி தெரியவில்லை. தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாய் அறிந்து கொண்டவர்கள் தான் அதிகம். இரண்டு மாணவர்கள் ஒர் சினிமா தயாரிப்பு கம்பெனியில் உதவி இயக்குனர்களாய் பணிபுரிந்துவிட்டு வந்திருந்தார்கள். அவர்களில் ஒ...