Posts

கேட்டால் கிடைக்கும் - சப்வே

இரவு பதினோரு மணியிருக்கும். கிட்டத்தட்ட கடை அடைக்கும் நேரம் நிச்சயம் விருகம்பாக்கம் சப்வேக்காரன் என்னைப் போன்ற ஒர் கஸ்டமரை எதிர்பார்த்திருக்க மாட்டான். ஒரே ஒரு ஆள் மட்டும் பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்ப, மெல்ல மெனுவை பார்வையிட்டேன். ரோஸ்டட் சிக்கன் சப்பை ஆர்டர் செய்தேன். சுற்றிலும் பார்த்தேன். எங்கு பார்த்தாலும், கோக், டயட் கோக், சாப்ட் டிரிங்க் வகையறாக்கள், இப்போது புதியதாய் இட்டாலியன் ஐஸ்கிரீம் வேறு. சிரித்துக் கொண்டேன்

கொத்து பரோட்டா - 17/02/14- கதிர்வேலனின் காதல், The Wolf Of The Wall Street, பாலு மகேந்திரா, நாவல்கள், திரை விமர்சனம்

Image
80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றி கேபிள் சங்கர் தொட்டால் தொடரும் படத்தின் பாடல் காட்சிக்கான லொக்கேஷன் பார்க்க காரைக்குடி சென்றிருந்த நேரத்தில்தான் மொபைலில் செய்தி வந்தது. பாலுமகேந்திரா உடல் நலக்குறைவென. அச்செய்தி படித்த அரை மணி நேரத்தில் அவரின் மரணச் செய்தி வந்தது. தன் படைப்புகளின் மூலம் நம்மைக் கவர்ந்த ஒர் மாபெரும் கலைஞனின் இழப்பு அவரது ரசிகனாகிய எனக்கு கொஞ்சம் வருத்தத்தையே தந்தது. . பல விழாக்களில் அவர் கலந்து கொண்டு பேசும் போது நானும் விழாவின் ஆடியன்ஸாய் உட்கார்ந்து கேட்டிருக்கிறேன். சென்ற ஆண்டு ஒர் விழாவில் அவருடன் நான் மேடையில். பெருமையாய் இருந்தது. விழாவின் முடிவில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். கிளம்பும் போது புத்தகங்கள் எல்லாம் எழுதியிருக்கேன்னு சொன்னீங்களே அதை கொடுங்க என்று கேட்டு பெற்றுக் கொண்டார். அதன் பின் நான் அவரை சந்திக்கவேயில்லை. அவரது கனவுப் பட்டறையில் பயிலும் மாணவர்களுக்கு சிறுகதைகளை படித்து அதன் சாரம்சத்தை எழுதும் பயிற்சிக்கு பல புத்தகங்களை படிக்க சொல்லி கொடுப்பாராம். அப்படி ஒரு கதையாய்...

கொத்து பரோட்டா -10/02/14 - பால்யகால சகி, புலிவால், நடுநிசிக் கதைகள், கேட்டால் கிடைக்கும், பீனிக்ஸ் மால்

Image
80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றிகேபிள் சங்கர் நடுநிசிக் கதைகள்-7 நைட் ஷோ முடித்துவிட்டு, சிஜடி நகர் வழியாய் வந்து கொண்டிருந்த போது வழக்கம் போல போலீஸ் மறித்தார். “எங்கிருந்து வர்றீங்க?” என்று கேட்டுவிட்டு அசுவரஸ்யமாய் எதிர் திசை தெருவில் தெரிந்த நடமாட்டத்தை நோட்டம் விட்டார். ”படம் பார்த்துட்டு வர்றேன் சார்.” “டிக்கெட் இருக்கா?” “இல்லை” “அதெப்படி டிக்கெட் இல்லாம?” “நெட் புக்கிங் சார்” ”அப்படின்னா..” என்று கேட்டுவிட்டு எங்கே தனக்கு தெரியவில்லை என்று காட்டிவிட்டால் மரியாதை குறைவாய் போய்விடுமோ என்ற அச்சத்தில் “நெட்  ஓகே..ஓகே”.. சரி.. என்ன படம்?” எனக்கு எரிச்சலாய் இருந்தது. நான் பார்த்துவிட்டு வந்த இந்திப்படத்தின் பேரை சொன்னால் இவருக்கு தெரியுமா? எந்த ஷோ எந்த தியேட்டரில் ஓடுகிறது என்று தெரியுமா?  “இந்தி படம் சார்.” ”என்ன படம்?” “சார்.. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. நடு ராத்திரி பனியில நீங்க இப்படி விசாரிக்கிறது நல்ல விஷயம்தான். அதுக்காக படம் பேரெல்லாம் கேட்டு விசார...

பண்ணையாரும் பத்மினியும்

80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றி கேபிள் சங்கர் குறும்படமாய் பார்த்த போது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்த படம். இவ்வளவு அருமையாய் மெல்லிய உணர்வுகளை குறும்படமாய் ஆக்கியிருக்கிறாரே.. இவர் நிச்சயம் நல்ல இயக்குனராய் வருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம். அதையே பெரிய படமாய் எடுக்க இருக்கிறார் எனும் போது கொஞ்சம் அச்சமாகவே இருந்தது. இதை ஒரு முறை விஜய் சேதுபதியிடம் கூட கூறினேன். இல்ல பாஸு.. ஸ்கிரிப்டை ரொம்ப மெச்சூர்டா பண்ணியிருக்காரு என்றார் நம்பிக்கையுடன்.  படம் பார்த்த போது நான் இயக்குனர் மீது வைத்த நம்பிக்கையும், விஜய் சேதுபதி வைத்த நம்பிக்கையும் வீண் போகவில்லை என்பது சந்தோஷமாய் இருந்தது. குறும்படம் பார்க்காதவர்களுக்கு இந்த டைட்டிலே ஆர்வத்தை ஏற்படுத்தும். வயதான பண்ணையாருக்கும், அவரது மனைவிக்குமிடையே ஆன காதல். பண்ணையாரின் பத்மினி கார் மீதான அப்சஷன் தான் படமே. ரத்தமும் சதையுமாய் உடனிருக்கும் மனைவியிடம் கொண்ட காதலை நம்முள் எவ்வளவு இயல்பாக கடத்த முடிகிறதோ அதே இயல்புடன் காரின் மீதான காதலையும் கடத்தியிருப்பது அப...

புதிய கொள்ளை உஷார்.

80 லட்சம் ஹிட்ஸுகளை அளித்து தொடர்ந்து ஆதரவளித்துவரும், நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு நன்றிகேபிள் சங்கர் முன்பெல்லாம் வீட்டிற்கு லெட்டர் மூலம் உங்களுகு பரிக்சு விழுந்திருக்கிறது இவ்வளவு ரூபாய் பணம் கட்டினால் பல லட்ச ரூபாய் பரிசென்றெல்லாம் அனுப்பி, பணத்தை சுருட்டுவார்கள். பின்னர் டெக்னாலஜி அதிகமாக, அதிகமாக, அதனை வைத்து பணத்தை சுருட்டும் முறை டெக்னாலஜியின் வளர்ச்சிக்கு ஏற்ப இன்னும் ஸ்மார்ட் ஆக ஆரம்பித்தது. மெயில் மூலம் உங்களுக்கு பல கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது, என்று சொல்லி, அக்கவுண்ட் நம்பரையெல்லாம் அனுப்பச் சொல்லி, நம் அக்கவுண்டில் உள்ள அமெளண்டையெல்லாம் லபக்கிக் கொண்டுப்  போய்விடும் சோகம் நடந்தது ஒருபுறம் என்றால், அதன் பிற்காலத்தில் பெண் சபலத்தால் போன் மூலம் பேசி, பேங்கில் பணம் டெபாசிட் செய்து பணம் இழந்தவர்கள் பலர். இப்போது புதிய முறையாய் இன்று வந்த போன்கால் ஒன்றை பற்றி உங்களிடம் சொல்லி எச்சரிக்கையாய் இருக்க சொல்ல வேண்டியதால் தான் இந்த பதிவு.

சாப்பாட்டுக்கடை - Grill Box

Image
 பார்பக்யூ நேஷனுக்கு போட்டியாய் அதே ஏரியாவில் ஒர் அவர்களின் சிக்னேசர் ஸ்டைலில் உணவு என விளம்பரம் பார்த்ததும் ஆர்வமானது. விலை வேறு அவர்களோடு கம்பேர் செய்து பார்த்த போது கொஞ்சம் சகாயமாய் இருந்தது வேறு பசியை கிண்டியது. ராகவய்யா ரோட்டில் எங்கே என்று யோசித்துக் கொண்டிருந்த போது சில வருடங்களாய் அங்கே நடந்து கொண்டிருந்த ஒர் கிரில் பேஸ்ட் ஓட்டலைத்தான் இவர்கள் மாற்றியமைத்து ஆரம்பித்திருக்கிறார்கள் என்று தெரிந்தது.

கொத்து பரோட்டா -27/01/14 - கோலி சோடா, தொட்டால் தொடரும், நடு நிசிக்கதைகள், மணிரத்னம் படைப்புகள், A Separation, Serbian Film, மல்ட்டிப்ளெஸ்கள்.

Image
தொட்டால் தொடரும் தினசரி விளம்பரம் நேற்று வெளியானதிலிருந்து வந்த போன்கால்களை வைத்து பார்க்கும் போது, பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருப்பதையும் உணர முடிந்தது.  ஒவ்வொரு போன் காலிலும், அவர்கள் குரலில் தெரிந்த சந்தோஷம், என்னுள் மேலும் உற்சாகத்தையும் பயத்தையும் கொடுத்தது. நிச்சயம் எல்லாம் வல்ல இறைவனின் துணையோடும், உங்கள் அன்பின் துணையோடு சிறப்பாய் வர உழைக்கிறேன்.  @@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா - 20/01/14 -நடு நிசிக் கதைகள், Lucia, Dedh Ishqiya, புத்தக கண்காட்சி.

நடு நிசிக் கதைகள் -5 கட்டங்கடைசியாய் நானும் என் ஹீரோ தமனும் படம் பற்றி பேசிவிட்டு, அவரவர் வீட்டுக்கு கிளம்பினோம். வழக்கம் போல உதயம் தியேட்டர் அருகில் போலீஸ் செக்கிங். இளைஞரான போலீஸ் ஒருவர் அமைதியாய் வண்டியை நிறுத்திவிட்டு வண்டியின் பேப்பர்களையும், லைசென்சையும் கேட்டார். கொடுத்தேன். தண்ணியடித்திருக்கிறோமா இல்லையா? என்பதை கண்டுபிடிக்க மரியாதையாய் குனிந்து பேசுவதைப் போல  வாடை பிடித்தபடி பேசினார். லைசென்சையும் வண்டி ஆர்.சியையும்  விளக்குக்கு அருகில் கொண்டு போய் ஒர் நோட்டு புத்தகத்தில் எழுதிக் கொண்டார். திரும்ப பேப்பரை கொடுக்க வந்த போது “என்ன நோட் பண்றீங்க?” என்று கேட்டேன். உங்க வண்டி நம்பர், அட்ரஸ், எல்லாம் என்றபடி உங்க செல் நம்பர் சொல்லுங்க என்றார். நான் எதுக்கு? என்றேன். :”இல்ல வாங்க சொல்லியிருக்காங்க” “அதாங்க எதுக்கு கொடுக்கணும்?. நீங்க பேப்பர் கேட்டீங்க கொடுத்திட்டேன். அட்ரஸ் நோட் பண்ணிட்டீங்க அது கூட ஓகே..  லைசென்ஸ் ஓகே.. ஆனா போன் நம்பர்ங்கிறது அதுவும் செல் நம்பர்ங்கிறது ப்ரைவசியான ஒரு விஷயம். அதை எப்படி நீங்க எல்லா பேப்பரும் சரியா இருக்கிற ஆளுகிட்ட கேட்பீங்க. நான் என...

எண்டர் கவிதைகள் - 25

கை தொடும் தூரத்தில் நீ இருந்தாலும்  எனக்கு கொடுத்து வைத்தது என் கைதான். கேபிள் சங்கர்

எண்டர் கவிதைகள் -22

Image
ம்.. என்றாய்  ம் என்றேன் ம் மிகவும் பிடிக்குமா?  ம்ம்ம்ம் என்றேன் ஏன்? உன் ஒவ்வொரு ம்க்கும்  ஒவ்வொரு அர்த்தமென்றேன் ம்ஹும்.. ம் என்றேன் கோபமாய், சிணுங்கலாய், செல்லமாய், சலிப்பாய் முத்தமிடும் போதும் இறுக்கமாய் அணைக்கும் போதும் அணைத்த பின் நடக்கும் கூடலின் போதும் கூடல் முடிந்து பேச்சாய் பதில் சொல்லும் போதும் உன் ஒவ்வொரு ‘ம்”மும் ஒவ்வொரு அர்த்தமென்றேன் “ம்... அப்படியா” என்றாய் இந்த ம் எதை ஆரம்பிக்கும் என்று  எனக்கு தெரியும் கேபிள் சங்கர்