Posts

சாப்பாட்டுக்கடை - சீனா பாய் இட்லிக்கடை

Image
இட்லி சாப்பிடறதுக்காக சவுக்கார்பேட்டை போகலாமா? என்று கேட்ட போது தமன் ஆச்சர்யமாய் பார்த்தார். எனக்கு அவரின் பார்வை போலவே நிறைய நண்பர்களின் ஆச்சர்ய பார்வையை சந்தித்திருப்பதால் சாதாரணமாய் எடுத்துக் கொண்டு ‘வாங்க.. ஒரு வாட்டி வந்து சாப்பிட்டு பார்த்துட்டீங்கண்ணா ஏன் இவ்வளவு தூரம் வந்தோம்னு கேட்க மாட்டீங்க” என்றேன். என்னைப் போலவே கொஞ்சம் அட்வென்சரஸ் ஆனவர் என்பதால் விட்டோம் போர்ட் பிகோவை சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி போஸ் ரோட்டுக்கு.

கொத்து பரோட்டா -26/05/14 - திரை விமர்சனம், தொட்டால் தொடரும், நடுநிசிக்கதைகள்,

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் தொட்டால் தொடரும் ஆரம்பித்த சமயம். இயக்குனர் பார்த்திபன் அவர்களை சந்திக்க நண்பர் குலசேகரன் கூப்பிட்டிருந்தார். பார்த்த மாத்திரத்தில் மிகவும் பழகியவர் போல பேசினார். நிறைய சினிமா பற்றி பேசினோம். சமீபத்திய படங்கள், அவரின் மலையாள ப்ராஜெக்ட், அவர் எடுக்க போகும் படம் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். போகும் போது அவரின் எண்ணைக் கொடுத்து எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க என்று நம்பர் சொன்னார். நான் என்னுடயதை கொடுத்த போது “அட ஏற்கனவே உங்க நம்பர் என்கிட்ட இருக்கே.. சங்கர் நாராயணன்னு வச்சிருக்கேன். எதுக்கோ உங்களை முன்னாடியே மீட் பண்ணனும்னு நினைச்சிருக்கேன் என்றார். அந்த சந்திப்பிற்கு பிறகு அவரை என் பட பாடல் டீசருக்காகத்தான் அழைத்தேன். படப்பிடிப்பில் இருந்தார். அதனால் ஒரு தேதி சொல்லி, அவரது உதவியாளர் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, அவரது வேலைகளுக்கு நடுவே எங்கள் டீசர் படப்பிடிப்புக்கும் ஒத்துழைத்தார். ஆனால் அதற்காக அவர் எடுத்த மெனக்கெடல்கள் அபாரம். பெரிதும் நெருக்கமில்லாத எனக்கே இவ்வளவு மெனக்கெடல்கள் என்றால் அவரின் படத்திற்கு எவ்வளவு இருக்கும்?. காலை 9 மணிக்கு ஆரம்பித...

கொத்து பரோட்டா -19/05/14 - மினி

கேட்டால் கிடைக்கும் பீனிக்ஸ் மாலில் பைக் பார்க்கிங் செய்பவர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு 50 ரூபாய் வாங்கி கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்லி, அதை குறித்து எழுதி வந்தேன். இப்போது அதற்கு அந்த மாலில் தியேட்டர் நடத்தும் சத்யம் சினிமாஸ்காரர்கள்  டிஸ்கவுண்ட் கொடுக்க வழி செய்துள்ளனர். இது குறித்து லூக்ஸ் புக்கிங் கவுண்டரில் விசாரிக்கும் படி ட்விட்டரில் சொல்லியிருக்கிறார்கள். நன்றி சத்யம் சினிமாஸ். கேட்டால் கிடைக்கும் என்பது நிருபணமாகிக் கொண்டிருக்கிறது. கேளுங்க.. கேளுங்க. கேட்டுக்கிட்டே இருங்க உங்க உரிமைகளை.. SPI Cinemas  ‏ @SPIcinemas     May 16 Visitors of Luxe can avail discount on two wheeler parking! Approach the counter at the Luxe lobby for more details!! @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா -12/05/14 - Montage/Hasse To Passe, Thieves, Always, யாமிருக்க பயமே, நீயா நானா?

வழக்கமாய் நானும் எங்கள் ஹீரோ தமனும் வாரத்தில் ஏழு நாட்கள் இரவில் சந்திப்பதுண்டு. எப்போது சந்தித்தாலும் ஏதேனும் சினிமாவைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்போம். மனுஷன் அநியாய சினிமா அப்டேட் உள்ளவர். தமிழ் தவிர, கொரிய, அமெரிக்க, ஐரோப்பிய சினிமாக்கள், சீரியல்களைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டேயிருப்பார். சமீபகாலமாய் கொரிய படங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அன்றிலிருந்து மீண்டும் கொரிய படங்களைப் பார்க்கும் அரிப்பு அதிகமாகிவிட்டது. பெரும்பாலான கொரியப் படங்கள் தமிழ் இந்தி படங்களைப் போலவே இருக்கிறது. ஒருபக்கம் பக்கா மசாலா என்றால் இன்னொரு பக்கம் நெஞ்சை நக்கிவிடுகிறார்கள். அப்படி இந்த வாரம் பார்த்த படங்களைப் பற்றிய ஒர் தொகுப்பாய் இந்த கொத்து பரோட்டா @@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா - 05/05/14

Image
கேட்டால் கிடைக்கும் டொமினோ பிட்சாவில் பில் போடப்பட்டவுடன் வழக்கம் போல செக் செய்ய ஆரம்பித்தேன். மொத்த தொகைக்கு 4.49 சதவிகிதம் சர்வீஸ் டேக்சும், 14.5 சதவிகிதம் வாட்டும் போட்டிருந்தான். அது ஒரு செல்ப் சர்வீஸ் ரெஸ்ட்ராரெண்ட். அதில் என்ன சர்வீஸ் சார்ஜ்? என்று கேட்டதற்கு முழி முழி என முழித்தான். மேனேஜர் என்றொருவர் வந்து அவரும் தன்  பங்கிற்கு முழித்துவிட்டு, டோர் டெலிவரி எல்லால் செய்யுறோமில்லை அதுக்குத்தான் என்றார் ஸ்மார்ட்டாய். அது டெலிவரி செய்யுறதுக்கு நான் இங்கே வாங்கிட்டு போறேன் எனக்கெதுக்கு? என்றதும் அவர் பங்கிற்கு “ஙே”. எனக்கு இந்த சர்வீஸ் டேக்ஸ் மற்றும் வாட் குழப்பம் ஒவ்வொரு பில்லுக்கும் வந்து கொண்டேத்தானிருக்கிறது. இந்த நேரத்தில் என் பெரிய மகன் பில்லை நோட்டம் விட்டுக் கொண்டேயிருந்தான். அதில் ப்ளாஸ்டிக் கவருக்கு 6.11 பைசா போட்டு, அதற்கு சேர்த்துத்தான் வாட், சேவை வரி எல்லாம் போட்டிருந்தார்கள். “அப்பா நாமத்தான் இங்கயே சாப்பிடப் போறோமே எதுக்கு ப்ளாஸ்டிக் பேக்குக்கு காசு தரணும் என்று கேட்க, நீயே போய் கேளு என்றேன். அவனும் போய் கேட்க, அங்கிருந்து வந்த ஒருவர்.. அது பில்லிங் போட்டவங்க ச...

கொத்து பரோட்டா -28/04/14

தேர்தல் முடிந்துவிட்டது என்றதும் என் நண்பர் ஒருவர் மிக வருத்தமாய் இருந்தார். ஏன்ணே? என்றதுக்கு.. இனிமே விஜய்காந்த் காமெடி பார்க்க முடியாதே? அதுக்கு அடுத்த எலக்‌ஷன் வரைக்குமில்ல காத்திருக்கணும்னு சோகமா இருக்கு என்றார்.  தேர்தல் அன்று எல்லோரும் தாங்கள் ஓட்டுப் போட்டுவிட்டு வந்த “கை”யோடு செல்ஃபி போட்டோ எடுத்து நான் போட்டுட்டேன் நீங்க? என்று பேஸ்புக், ட்விட்டரில் பயமுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். இன்னொரு பக்கம் நான் இவங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேனென்று அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களாவது பப்ளிக் சரி.. டிவி சேனல்களில் முக்கியமாய் அரசு தரப்பு சேனலில் ஊரில் இருக்குற முதல் ஓட்டு மாணவ மாணவிகளையெல்லாம் ஓட்டுச்சாவடியில் வழிமறித்து எங்களுக்கு இத்தனை நல்லது பண்ணியிருக்காங்க.. அத்தன நல்லது பண்ணியிருக்காங்க.. அதனால அவங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டோம்னு பேட்டிக் கொடுத்துட்டு இருந்தாங்க. கொஞ்சம் ஆக்வார்டாத்தான் இருந்தது. இன்னொரு பக்கம் நண்பர்கள் இரண்டு பேர் ஓட்டு எண்ணிக்கையன்று பெட்டு வச்சிருக்காங்க.. அதிமுக 30 சீட்டு வரும் ஒருத்தரும் வராது 25தான்னு. இதுல சிறப்பு என்னன்னா.. காலையிலேர்...

2 States

நல்லாருக்கு, இல்லை மொக்கை  என பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தாலும், முதல் மூன்று நாட்களில் முப்பது கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது இப்படம். ஏற்கனவே சேத்தன் பகத் எழுதிய நாவலை படித்து ரசித்தவன் என்கிற வகையிலும், படிக்கும் போதே இது சினிமா மெட்டீரியல் சரியா எடுத்தா செம்ம ரொம்மாண்டிக் கதையா இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். எடுத்தே விட்டார்கள். ஆனால் ரொமாண்டிக்காக இருந்தா என்று கேட்டால் பதில் சொல்லத்தான் முடியவில்லை.

கொத்து பரோட்டா - 21/04/14 -கேட்டால் கிடைக்கும், அடல்ட் கார்னர், தேர்தல்

மின்சார தட்டுப்பாட்டுக்கு காரணம் யாரோ சதி செய்து அனல் மின் நிலையங்களை எல்லாம் பழுதடைய செய்துவிடுகிறார்கள் என்கிறார் முதலமைச்சர். இத்தனை நாள் இல்லாமல் இப்போது பவர் கட் தொடர்வது பற்றி எத்தனை நாள் தான் முந்தைய அரசை குறை சொல்வது என்று புரியாமல் இப்படி பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் கூறுவது. சரியா என்ற கேள்வி படித்த வாக்காளர்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சியினால் தான் நாட்டுக்கும் உங்களுக்கும் நன்மை செய்ய முடியும் என்று வேறு ஆளாளுக்கு கோஷிக்கிறார்கள். மோடி வேறு தன் திருமண விஷயத்தை இத்தனை வருடங்கள் மறைத்து வந்திருக்கிறார். கடவுள் இல்லைன்னு நான் எங்க சொன்னேன் இருந்தா நல்லாருக்கும்னுதானே சொன்னேன் என்பது போல இத்தனை வருடங்களாய் தன் திருமணத்தை பற்றி சொல்லவில்லையெ தவிர திருமணமே ஆகவில்லை என்று எப்போது சொன்னேன் என்றும், அவரது சகோதரரோ..குடும்பத்துக்காக நடந்த சடங்கு அது என்று ஒரு பக்கம் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார். என்ன இருந்தாலும் ஆர்.எஸ்.எஸில் பிரம்மச்சாரிகளுக்கு மட்டுமே இடம் என்ற எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டிருக்கிறார். சரி..  என்னவோ போ...

Race Gurram

Image
அல்லு அர்ஜுன் படம் என்றாலே கொஞ்சம் ஹைப்பர் ஆக்டிவாய்த்தான் இருக்கும். படத்தின் பேர் வேறு ரேஸ் குர்ரம்.. பந்தயக் குதிரை. கேட்கணுமா? ஓப்பனிங் சீன்லேயே குதிரையையெல்லாம் தாண்டி ஹைஸ்பீடுல ஓடி வர்றாரு.  

கொத்து பரோட்டா - 07/04/14

தேர்தல் நெருங்க.. நெருங்க.. எல்லா இடங்களிலும், அவரவர் ஆதரவு கட்சிகள்தான் பெரும்பான்மையான இடங்களை வெல்லும் என்ற பேச்சுக்கள் சண்டைகளாய் மாறிக் கொண்டிருக்கிறது. யார் எவ்வளவு ஜெயிச்சா என்ன நாம இப்படியேத்தான் இருக்கப் போறோம்னு புலம்பிட்டிருக்கிறவங்க ஒரு பக்கம் இருந்தாலும், இவர்களுடய பேச்சும் சண்டையும் தான் மக்களின் மனநிலையை வெளிக் காட்டிக் கொண்டிருக்கிறது. எனக்கென்னவோ இவர்களின் பேச்சின் வழியாய் புரிவது தமிழ் நாட்டை பொறுத்த வரை முதலிடம் அதிமுகவும், இரண்டாவதாக ப.ஜ.க கூட்டணியும், மூன்றாவதாய் தான் திமுக வருமென்று தெரிகிறது. நாற்பதும் நமதே என்பதெல்லாம் எந்த கட்சிக்கும் உய்யலாலாதான். இங்கே யாரும் ஒழுங்கில்லை என்பதையும், பப்ளிக் மெமரி இஸ் ஷார்ட் என்ற ப்ளஸ் பாயிண்டை எல்லா அரசியல் வாதிகளும் தெளிவாய் உபயோகிக்கிறார்கள்.  இல்லாவிட்டால் எந்த தேசிய கட்சியுடனோ, அல்லது திராவிட கட்சிகளுடனோ கூட்டணி வைக்க மாட்டேன்னும், என் வீட்டுலேர்ந்து யாராச்சும் அரசியலுக்கு வந்தா என்னை சாட்டையால அடிங்கன்னு சொன்ன ராமதாஸ். மின் வெட்டேயில்லை என்று மாறி மாறி கூறினாலும், தொடர்ந்து தமிழகத்தில்  பல இடங்களில் மின் வெட்ட...