Thottal Thodarum

Nov 24, 2006

டாஸ்மாக் சட்டங்கள்

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்:
ஓரு பஸ்ஸின் பின் பக்கத்தில் மாட்டப்பட்டிருந்த ஓரு விளம்பர பலகை என்னை மிகவும் கவர்ந்தது.. அதுஓரு அரசு விளம்பரம்.. அதில் குடித்துவிட்டு கவனக்குறைவாக வண்டி ஓட்டி அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிறைதண்டனை, அல்லது ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும்.. ஏதோ ஓன்று அது என்ன என்று படிப்பதற்குள் பஸ் ஓடிவிட்டது. அதை படித்தபின் இவ்வளவு சட்டங்கள் நமது நாட்டிலிருக்கிறதா? என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால் நள்ளிரவு வரை அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு, குடிக்க வரும் குடிமகன்க்ளை இப்படி செய்தால், அப்படி செய்தால் தண்டணை எனக்கூறும் விளம்பரத்தை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடித்ததாக தம்பட்டம் வேறு அடித்துக்கொள்கிறது நமது காவல்துறை...இவர்களை பிடிப்பதற்க்கு எதற்கு கஷ்டப்பட வேண்டும். ஓவ்வொரு டாஸ்மாக் கடையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு கடையை விட்டு வெளியே வந்து வண்டியை எடுக்கும் குடிமகன்களை எல்லார் மீதும் நடவடிக்கை எடுத்தால் போதுமே.. குடித்துவிட்டு வண்டி ஓட்ட யாருமே இருக்க மாட்டார்கள். போலீஸின் கடமை குற்றம் நடக்காமல் தடுப்பதே.. அதை விட்டு அரசே கடையை நள்ளீரவுவரை திறந்து வைத்துவிட்டு, வாடிக்கையாளர்களை குடிக்கவிட்டு..பிறகு வண்டி ஓட்டுபவரை பிடிப்பதை விட.. அந்த தவறை நடக்கவிடாமல் செய்யலாமே.. (இந்த ஐடியாவை கொடுத்த என்னை யாரும் திட்ட வேண்டாம்)
www.shortfilmindia.com
www.classiindia.com
Post a Comment

1 comment:

கோவை நேரம் said...

இங்க ஒவ்வொரு சனிக்கிழமை யும் குறிப்பிட்ட கடைகளுக்கு வெளியே போலீசார் காத்திருப்பார்.உள்ளே குடித்து விட்டு வரும் குடிமகன்களை கொத்தோடு பிடிக்க.அவன் வண்டியை ஸ்டார்ட் கூட பண்ணி இருக்கமாட்டான் .ஆனாலும் பிடித்து பைன் போடுவார்...அப்போ அங்கே ஏற்படுகிற கூச்சலும் அதட்டலும் .....சொல்ல முடியாதவை ...