Thottal Thodarum

Jun 4, 2012

கொத்து பரோட்டா - 04/06/12

பெட்ரோல் நல்ல பெட்ரோல்
ஏழு ரூபாய் ஐம்பது பைசா ஏற்றியதை யோசித்த மறுகணமே ஏற்றுவதற்கு யோசிக்காத மத்திய அரசு, இரண்டு ரூபாய் குறைப்பதற்கு மட்டும் உட்கார்ந்து பேசி யோசிச்சித்தான் சொல்வாங்களாம். என்னா கொடுமைடா இது. இது கூட எதிர்கட்சிகளின் தொடர் இம்சைகள் காரணமாய்த்தான். வேறு வழியில்லாமல் செய்திருக்கிறது. இந்த விலை குறைப்பினால் எதிர்கட்சிகள் சட்டென அடங்கிவிடாமல் தொடர்ந்து மக்களுக்காக குரலெழுப்பினால்தான் அடுத்து வரும் தேர்தல்களில் மக்கள் நம்பிக்கையை பெற முடியும். பார்ப்போம் எப்படி தீயா வேலை செய்யுறாய்ங்கன்னு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@



இந்தியாவின் பெருமை
ஒண்ணுமில்லாத ஐ.பி.எல் கப் ஜெயிச்சதை ஒரு மாநிலத்தின் சி.எம். வந்து வரவேற்று கோலாகலமாய் விழா நடத்துறாங்க. அதுவும் சாதாரண லோக்கல் லீக் மேட்சா ஆரம்பிச்ச விஷயம். ஆனால் உலக அளவில் சிறந்த செஸ் வீரர் பட்டத்தை நான்காவது முறையா வென்றெடுத்து வந்த விஸ்வநாதன் ஆனந்துக்கு ஏதோ ஒரு பக்க மேட்டரோட முடிஞ்சிட்டாங்க. ரஷ்யாவில நடந்த உலக செஸ் போட்டியில் போரிஸ் கெல்ஃபேண்டை சுற்றுக்கள் விளையாடி வீழ்த்தியிருக்கிறார். டை பிரேக்கர் சுற்றில் இருவரும் தலா 6 புள்ளிகள் பெற்றிருக்க, டை ப்ரேக்கர் சுற்று என நான்கு சுற்று நடந்து முதல் போட்டியில் ட்ராவில் முடிய, இரண்டாவதில் ஆனந்த் ஜெயிக்க, மற்ற இரு போட்டிகள் ட்ராவில் முடிந்து இந்த் உலகக் கோப்பையை பெற்று வந்திருக்கிறார். 2000ஆம் முதல் முறையும், 2004 முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாய் இந்த பட்டத்தை வென்றிருக்கிறார். வாழ்த்துவோம், கொண்டாடுவோம் அவரது வெற்றியை. விளையாட்டு என்பது கிரிக்கெட் மட்டுமல்ல என்பதையும் உணர்வோம். மேட்ச் பிக்ஸிங் இல்லாத, நிஜமான அர்பணிப்பும் திறமையும் இருந்தால் மட்டுமே இப்பட்டத்தை வெல்ல முடியும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சஹாரா ஒன்னும் பேய் படமும்
நேற்றிரவு சஹாரா ஒன்னில் எம்.எம்.எஸ் என்ற பேய்ப் படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். ஹாலிவுட் படமான Paranormal activityயின் ரிப்ளிக்காவாக இருந்த போதும் அதில் கொஞ்சம் கூட பயப்படுத்தும் காட்சிகளே இல்லாமல் இருந்தது படு கொடுமை. ஆனால் ஒரு காட்சியில் திடீரென படத்தின் மீது ஒரு குட்டி கிருஷ்ணர் படம் திரை முழுக்க சில செகண்டுகள் ஆக்கிரமித்து சட்டென விலக, தூக்கி வாரிப் போட்டது.  சேனலில் வரப் போகும் கிருஷ்ணர் சீரியலுக்கு போட்ட விளம்பரம் தான் அது. நல்லா கிளப்பினாங்கடா பீதியை..
@@@@@@@@@@@@@@@@@@@@@
கும்பகோணம் டிகிரி காபி
அப்துல்லாவின் அக்கா பெண் திருமணத்திற்காக நான், ஓ.ஆர்.பி.ராஜா, கே.ஆர்.பியுடன் கும்பகோணம் சென்றிருந்தேன். அது திருமணமல்ல ஒரு மாநாடு. அதைப் பற்றி தனிப் பதிவே போட வேண்டும். வரும் வழியில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் திருச்சி தாண்டி சில கிலோமீட்டர்கள் வந்தவுடன் ப்ளூ கலரில் பெரிய போர்ட் ஒன்று அதில் “கும்பகோணம் டிகிரி காபி” என்று எழுதியிருந்தது. அஹா.. கும்பகோணத்திற்கு போய் டிகிரி காப்பி குடிக்காமல் வந்து விட்டோமே என்ற ஏக்கத்தை இங்கே போக்கலாம் என்று ஆளுக்கொரு காப்பி குடித்தோம். பால் தண்ணியாய் இருக்க, டிகிரி முடிக்காத காப்பியாய் இருந்தது. சரி நமக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்று நினைத்து கிளம்பினோம். அதன் பிறகு தான் தெரிந்தது வழியெல்லாம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கும்பகோணம் டிகிரி காப்பி என்ற போர்டுகள் வழியெங்கும் வரவேற்றது. சிலதில் ஒன்லி என்று ஸ்பெஷலாய் போட்டிருந்தார்கள். இவர்களில் யார் ஒரிஜினல் என்று தெரியவில்லை. பட்.. தலப்பாக்கட்டி ப்ராண்ட் போல கும்பகோணம் டிகிரி காப்பி ஹைவேயில் ஒர் ப்ராண்டாக மாறிக் கொண்டிருக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அமெரிக்கர்களின் காதல்
அமெரிக்கர்களுக்கு எல்லாமே பெரிசாய் ஆடம்பரமாய் இருக்க வேண்டும் என்றிருப்பார் தலைவர் சுஜாதா பிரிவோம் சந்திப்போம் நாவலில். அது போல தான் அவர்களுடய படங்களும், கதைகளூம், காதல்களும், வாழ்க்கையும், வலிகளும். காதலை ப்ரபோஸ் செய்யவும், காதலியை திருமணம் செய்ய ப்ரபோஸ் செய்யவும் ஆளாளுக்கு ஒர் ஐடியாவை யோசித்துக் கொண்டிருக்க, இந்த வீடியோவில் தன் காதலியிடம் தன் காதலையும், திருமணத்தையும் ப்ரபோஸ் செய்ய காதலன் செய்த ஒர் ஐடியா. லைவ் மாப் மியூசிக் விடியோ. அதுவும் அந்த காதலிக்கு தெரியாமல். தனக்காக காதலன் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து காதலி உணர்ச்சிவசப்பட்டு, உருகுமிடத்தில் எந்த ஒரு பெண்ணும் தனக்கு இம்மாதிரி ஒரு நிகழ்வு நிகழாதா? என்ற ஒரு ஏக்கம் வரத்தான் செய்யும். பட் வீடியோவில் வரும் பெண்ணுக்கு இந்த அளவுக்கான ஒர்த் இருக்கிறதா என்று யோசிக்காமல் அதை வெளிப்படுத்திய உணர்வை பாராட்ட வேண்டும். காதல் எதை வேண்டுமானாலும் செய்யத் தூண்டும். யூடியூபில் சுமார் எட்டு கோடிக்கு மேல் ஹிட்டடித்த வீடியோ. வாழ்க காதல். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
போலீஸாரின் கடமை உணர்வு
இது ஒன்றும் தீவிரவாதியையோ, ரவுடியையோ பிடித்த நிகழ்வு அல்ல. ஹெல்மெட் இல்லாமல் வண்டியோட்டிய ஒருவர் மீது போலீஸ் கான்ஸ்டபிள் எடுத்த ஆக்‌ஷன். வாலாஜா ரோட்டில் இவர் மீது ஹெல்மெட்டில் இல்லாமல் வண்டியோட்டியதற்காக ஃபைன் போட, அந்த பயணியோ ஏன் என்னை மட்டும் டார்கெட் செய்கிறீர்கள். என்னைப் போலவே பல பேர் ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கும் போது அவர்களையும் பிடித்து ஃபைன் போடுங்க என்று கேட்டதற்கு அவரின் கையை பிடித்து தரதரவென இழுத்திருக்கிறார். அவரிடமிருந்து தன்னை விடுவிக்க அவர் போராட அந்நேரத்தில் போலீஸ்காரர் அவரை தன் கால்களால் கிடுக்கிப் பிடிப் போட்டு, பிடித்திருக்கிறார். பின்பு போலீஸ் ஸ்டேஷனில் அவரை நிறுத்தியிருக்கிறார். பெரிய அதிகாரி அவரை கண்டித்து விடுவித்திருக்கிறார். என்னா ஒரு கடமை உணர்ச்சிடா சாமி
@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
நம்ம ஸ்டேடஸை நாமே லைக் பண்ணலைன்னா வேற யாரு லைக் பண்ணுவார்கள் # டவுட்டு

மணிரத்னம் & இளையராஜா என் இரண்டு ஆதர்சங்களின் பிறந்தநாள். # I dont know what to say

உறவுகளிடையே பொறாமை ஒரு ஆரோக்கியமான விஷயமே. ஏனென்றால் அவ்வுணர்வுதான் இருவருக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை உணர வைப்பது.

பெட்ரோல் தட்டுபாடு மயிலாடுதுரையில்

எல்லாப் பெண்களும் தவறான ஆணிடம் தான் காதல் கொள்கிறார்கள். ஏனென்றால் தவறான ஆண் தான் அவளுக்கு சரி என்று படுவதை மட்டும் சொல்வான்.

பெண் அமைதியாய் இருக்கிறாள் என்றால், அவள் ஆழ்ந்த சிந்தனையிலோ,காத்திருந்து நொந்து போயோ, உள்ளுக்குள் அழுது கொண்டோயிருக்கிறாள் என்பதாகும்

உன் உணர்வையே நீ சரியாய் புரிந்து கொள்ளாத போது மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடாதே..

படிக்கிற காலத்தில் நாம் எவ்வளவுதான் பள்ளியை வெறுத்தாலும் ஸ்கூலை விட்டுப் பிரிவதில் வருத்தமில்லாமல் இல்லை.

என்னைப் பார்த்தாய், என்னை அடைய நினைத்தாய், அடைந்தாய், மறந்துவிட்டாய்

மப்புல நம்ம வண்டியே நமக்கு தெரியாத போது ப்ரெண்டு வண்டி எங்க தெரியும்?

பச்சாதப்பட்டே பெண்கள் தங்கள் நிலையை தாழ்த்திக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது.

இசை மட்டுமே நம்மை அலையாய் சூழ்ந்தாலும் மிதக்க வைக்கும்

உயர்ந்த நிலையில் நீ இருக்கும் போது உன் நண்பர்கள் உன்னை அறிவர். நீ தாழும் போது நண்பர்களைப் பற்றி நீ அறிவாய்.

உண்மைக்காக எழுந்து நில். தனியொருவனாய் இருந்தால் கூட

உன் நண்பனே காதலனாய் அமைந்தால் அதை விட இன்பம் வேறேதும் இல்லை.

உன் சிரிப்பால் உலகை மாற்று. உலகம் உன் சிரிப்பை மாற்ற விடாதே

எனக்கு என்ன பிடிக்கும் என்பதை என்றொ ஒரு நாள் பார்த்தவர் சொல்லும் போது சந்தோஷமாய்த்தான் இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இளையராஜாவின் பிறந்தநாள் வார ஸ்பெஷல். பத்ரகாளி. சிலோன் ரேடியோவில் சுமார் 30 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து சூப்பர் ஹிட் பாடல் லிஸ்டில் இருந்த பாடல். இன்றைக்கும் ஒரு கல்ட் க்ளாசிக் குத்து பாடலுக்கான உதாரணமாய் விளங்கும் பாடல். இப்படத்தின் கதாநாயகி ராணி சந்திராவோ அல்லது ராணி பத்மினியோ என்று நினைக்கிறேன் அவர் படப்பிடிப்பின் போது விமான விபத்தில் இறந்துவிட,கிட்டத்தட்ட அவர் சாயலில் இருந்த புஷ்பா என்கிற நாடக நடிகையை அவருக்கு டூப்பாக நடிக்க வைத்து எடுத்து முடித்தார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட். அந்த புஷ்பா என் அப்பாவின் நாடகக்குழுவில் நடிக்கும் நடிகை. என் அப்பா சொல்லிக் கேட்டது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Lady in labour, shouting the usual shit, "Get this out of me! Give me the drugs!" She turns to her boyfriend and says, "You did this to me, you fucker!"He casually replies, "If you remember, I wanted to stick it up your arse, but you said, 'Fuck off it'll be too painful.'"

பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த ஒரு பெண் கத்திக் கொண்டிருந்தாள்.” சீக்கிரம் வெளியே எடுங்கள் என்னால் வலி தாங்க முடியவில்லை. இல்லை வலி தெரியாமலிருக்க மருந்து கொடுங்கள் என்றவள் சட்டென அங்கே இருந்த தன் பாய்ப்ரெண்டிடம் “இதற்கு காரணமானவன் நீ “ என்று அவனை திட்ட அவன் பொறுமையாய் “அன்னைக்கே சொன்னே பின்னாடி பண்ணுவோம்னு நீதான் வலிக்கும் வேணாம்ணே” என்றான்.
சில சமயங்களில் ஆங்கிலத்தில் கிடைக்கும் இம்பாக்ட் தமிழில் கிடைப்பதில்லை
@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்


தடையறத் தாக்க விமர்சனம் படிக்க

Post a Comment

13 comments:

வவ்வால் said...

கேபிள்ஜி,

ஆனந்துக்கு வாழ்த்த முதல்வர் வர அவர் என்ன கிரிக்கெட்டர இல்லை சினிமா நட்சத்திரமா :-))


ஆனந்து 5 முறை உலக சேம்பியன் ஆகியுள்ளார்.

//திருச்சி தாண்டி சில கிலோமீட்டர்கள் வந்தவுடன் ப்ளூ கலரில் பெரிய போர்ட் ஒன்று அதில் “கும்பகோணம் டிகிரி காபி” என்று எழுதியிருந்தது. //

சென்னை டு கும்பகோணம் வழி திருச்சி என்ன மார்க்கமிது :-))

(கல்யாணத்தில கவனிப்பு பலமா,ஓவர் மப்பாயிடுச்சா)

அந்த கும்பகோணம் காபி கடைகள் ஹைவேசில் பெட்ரோல் பங்கில் எல்லாம் இருக்கு, ஆனால் பெரும்பாலும் மூடிக்கிடக்கும்.

----

டிராபி போலீஸ்னாலே வசூல் ராஜாக்கள் ஆச்சே விடுவாங்களா சும்மா, படத்தை எல்லாம் பார்த்தா அடிதடி நடந்திருக்கும் போல தெரியுது.

இந்த கடமை உணர்ச்சிய திருட புடிக்க காட்டா மாட்டாங்க்.

காதர் said...

இதோட வருடம் மூன்று ஆகி விட்டது..கொத்து பரோட்டா சாப்பிட ஆரம்பித்து..நல்ல பரோட்டா மாஸ்டர் .சரி நம்ம விளம்பரத்தையும் சொல்லிட்டு கிளம்பறேன். எல்லாரும் ஒரு அட்டெண்டன்ச போட்டுட்டு போங்க.லிங்க் இதோ http://theepandham.blogspot.co.uk/

உலக சினிமா ரசிகன் said...

// இப்படத்தின் கதாநாயகி ராணி சந்திராவோ அல்லது ராணி பத்மினியோ என்று நினைக்கிறேன் //

ராணிச்சந்திராதான்.

Suresh said...

ஆனந்து 5 முறை உலக சேம்பியன் ஆகியுள்ளார்.

2000 , 2007, 2008, 2010 & 2012

சாதாரண கிராமத்தான் said...

அன்பு கேபிள்,
இன்னும் முழுதாக படிக்கவில்லை. ஆனந்த பற்றி படித்ததும் இதை எழுதிகிறேன். அனைத்து பொடிகளையும் தொடர்ந்து முடிந்தவரை நேரடியாக இணையம் மூலமாக பார்த்துவந்தேன். எந்த செய்தி பத்திரிகளும், செய்திகளுக்கு ஆலாய் பறக்கும் நேரடி செய்தி சேனல்களும் இதை கண்டுகொள்ளவே இல்லை. என்னை பொறுத்தவரை தமிழ் செய்தி தாள்களும், தமிழ் ப்லோக்கேர்களும் நீங்கள் உட்பட பொடிகள் நடந்து வந்த பொழுது கண்டு கொள்ளவே இல்லை. ஆனந்த் ஜெயித்தவுடன் அதும் சரியாக ஐ பி எல் முடிந்தவுடன் இதை பற்றி எழுத ஆரம்பித்து விட்டீர்கள். அவர் ஜெயித்து முடிந்த வுடன் புடினின் பார்ட்டி கொடுத்தார். ஆனால் ஜெயலலிதா பரிசு தொகை கொடுத்துடேன் சரி நேரில் பார்க்க முடியுமா தெரியவில்லை. போன தடவை டோபோலவுடன் அதுவும் அவரது நாட்டிலயே விளையாடி ஜெயித்தார். அதற்கு முந்தய தடவை கிராம்னிக்குடன் மேட்ச் போர்மட்டில் முதல் தடவையும் ஜெயித்தார். இந்த தடவை காஸ்பரோவ் ஆனத பற்றி முடிந்தவரை குறைத்து சொல்லியும் ஆனந்த் வெற்றி பெற்றார். அவவருக்கு ரொம்ப வருடங்கள் கழித்து 2010 குழந்தை பிறந்து இருக்கிறது. எல்லாருக்கும் இஸ்வர்யாவின் குழந்தை பற்றிதான் கவலை. அடுத்த போட்டி இரண்டு வருடம் கழித்து இந்தியாவில் நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனந்த் போட்டிக்கான ச்போன்செர்களை பிடிக்கமுடிந்தால் இந்தியாவில் நடக்கும். அதற்காகத்தான் அவர் முதல்வரை பார்க்க போகிறாரா என்று தெரியவில்லை.

வே.நடனசபாபதி said...

“கும்பகோணம் டிகிரி காபி”பற்றி எழுதும்போது இவர்களில் யார் ஒரிஜினல் என்று தெரியவில்லை என எழுதியுள்ளீர்கள்.
மதுராந்தகத்திற்கும் கருங்குழிக்கும் இடையே ‘ஹோட்டல் ஹைவே இன்’ எதிரில் உள்ள கும்பகோணம் டிகிரி காபி கடையில் அடுத்த முறை காஃப்பி சாப்பிட்டுப்பாருங்கள். இதுதான் ஒரிஜினல் என நினைக்கிறேன்!

வே.நடனசபாபதி said...

எழுத நினைத்தேன் விட்டுப்போய்விட்டது.கொத்து பரோட்டா - 05/06/12 என்பதில் தேதியை மாற்றுங்கள்.

Ba La said...

காதலை சொல்வதற்கு ஆயிரம் வழியிருக்கும் இது நான் நேரில், பார்த்தது.
ப்ரபோஸ்சல் ரொம்பவே உயரமன இடத்திருந்து சொல்லப்பட்டதை இங்கேபார்க்கவும்.

சமுத்ரா said...

உங்களுக்கு ட்விட் எழுத வரவில்லை..

D. Chandramouli said...

I had Kumbakonam Degree Coffee in newly opened 'Shakthi Bhavan' situated in Vannanthurai. It is a very small restaurant but most of its dishes are good, with reasonable rates. Coffee taste lingered on for quite some time. They serve 25 types of Parathas. Just for your info.

A Sivakumar said...

"மதுராந்தகத்திற்கும் கருங்குழிக்கும் இடையே ‘ஹோட்டல் ஹைவே இன்’ எதிரில் உள்ள கும்பகோணம் டிகிரி காபி கடையில் அடுத்த முறை காஃப்பி சாப்பிட்டுப்பாருங்கள். இதுதான் ஒரிஜினல்."

Yes he is right cable....Try next time, you will feel the difference...I am regular to that shop for the past 3 years...they maintain the same taste & quality. A bit costly...

A Sivakumar said...

They have opened only 1 branch in the same highway...rest all are copied from this guy's success.

The shops name is 'Only Coffee'.

pichaikaaran said...

பெரிய அதிகாரி அவரை கண்டித்து விடுவித்திருக்கிறார்."

யாரை கண்டித்தார்.. வாகன ஓட்டியையா அல்லது காவலரையா ?