Thottal Thodarum

Jun 11, 2012

கொத்து பரோட்டா -11/06/12

பிக்சார் ஸ்டோரி என்றொரு மின் புத்தகம் பற்றி பதிவுலகில் இருப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். எழுதியவர் என் இனிய நண்பர் ஹாலிவுட் பாலா. அதை புத்தகமாய் போட வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அமெரிக்காவிலேயே வாழ்ந்து காப்பிரைட் சட்ட நிபுணர்களின் நட்பு வட்டத்தில் இருப்பதால் வேண்டாம் என்று இலவச மின்னூலாக அதை தயாரித்து வெளியிட்டு விட்டார். எனக்கு தெரிந்து தமிழில் பிக்சார் பற்றிய ஒரு சிறந்த புத்தகம் அது என்றே சொல்ல வேண்டும். வடிவமைப்பிலிருந்து கண்டெண்ட் வரைக்கும். பிக்சார் ஸ்டோரியை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும். எனது சினிமா வியாபாரம் புத்தகத்திற்காக அமெரிக்க தியேட்டர்கள், விநியோகஸ்தர்களிடம் விபரங்கள் சேகரித்து உதவியதில் முக்கியமானவர். என்னால் எழுத ஆரம்பித்து தமிழ்மணம் போன்ற பல ப்ரச்ச்னைகளால் தன் ப்ளாக்கை மூடிவிட்டு இலக்கிய பணி ஆற்றப் போய்விட்டவர். சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர். சரி.. பில்டப் பெல்லாம் போது எதுக்கு இது என்று கேட்பவர்களுக்கு நம் பதிவர் காப்பிரைட் கருந்தேள் கண்ணாயிரமும், இவரும், மேலும் இரு நண்பர்கள் சேர்ந்து 'Lord of the Rings"  பற்றிய ஒரு மின் புத்தகத்தை ”War Of The Rings" என்றொரு மின் புத்தகத்தை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறார்கள். படு சுவாரஸ்யமாய் இருக்கிறது. டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை அளிக்கவும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



ராசாவும் நெஞ்சுக்கு நீதியும்
ஆ.ராசா ஜெயிலிருந்து வந்து திமுக தலைவரை பார்க்க வந்த நாளிலிருந்து மீண்டும் ப்ளாக், ஃபேஸ்புக், ட்விட்டர்களுக்கு கொண்டாட்டமாகிவிட்டது. ஆளாளுக்கு அவர்களுக்கே உண்டான பர்ஷப்ஷன்களோடு எழுதித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். சிறையில் இருந்த நாட்களில் தலைவரின் நெஞ்சுக்கு நீதியை படித்ததாய் அவரிடம் சொல்லியிருக்கிறார். அதில் ஏதாவது அண்டர்கரண்டாக உள்குத்து ஏதாவது இருக்கிறதா? என்றும், நெடு நாள் கழித்து அண்ணன் தம்பியை சந்தித்த உணர்வு என்றிருக்கிறார் தலைவர். இதன் பின்பு இருக்கும் பின்நவீனத்துவ, சொல்லப்படாத அர்த்தங்களை கண்டுபிடிக்க, சென்ற ஆட்சியின் போது சொம்படித்துவிட்டு, இப்போது இடித்துரைக்கும் இலக்கியவாதிகளை பார்த்தால் பாவமாயிருக்கிறது. விடுங்க பாஸு மீண்டும் ஆட்சிக்கு வரும் போது பாராட்டு விழா வச்சிட்டா எல்லாம் சரியாயிரும். இதுக்கு நடுவில குஷ்பு இடுப்புல கிள்ளூனது யாருன்னு வேற ஒரு ப்ரச்சனை ஓடிட்டிருக்கு.
@@@@@@@@@@@@@@@@@@@@@
சட்டம் ஒழுங்கு
மீண்டும் கொல்கத்தாவில் ஒரு டெரரான ரேப் கேஸ். ஓடுகிற டாக்சியில். ஒரு ராணுவ வீரரின் மனைவி எஸ்.எஸ்.கே. ஹாஸ்பிட்டல் வாசலில் டாக்சிக்காக காத்திருந்தவரை டாக்ஸி ஒன்று அப்ரோச் செய்ய, அதில் ஏறியிருக்கிறார். போகிற வழியில் இன்னொரு நண்பரையும் உடன் ஏற்றியிருக்கிறார். பின்பு ஓடுகிற ஏசி காரில் வைத்து மிரட்டப்பட்டு, அவரை கற்பழித்திருக்கிறார்கள். இக்கொடுமை நடந்த பிறகு நட்ட நடு ரோட்டில் விடப்பட்ட அப்பெண் மயக்கமடையும் நிலையில் இருப்பதைப் பார்த்த ஏரியா சப்- இன்ஸ்பெக்டர் அவரை காப்பாற்றியுள்ளார். அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவ்வண்டியையும், டிரைவரையும் கைது செய்திருக்கிறார்கள். அக்கா ஆட்சியிலேயும் சட்டம் ஒழுங்கு நலலாத்தானிருக்கு போலருக்கு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
புதிய ட்ரெண்டு
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ட்ரெண்ட் ஒன்று உருவாகியிருக்கிறது. ஓரளவுக்கு நல்ல காம்பினேஷனில் தயாராகும் சின்னப்படங்களை விலைக்கு வாங்கி வெளியிடும் அளவிற்கு கொஞ்சம் வியாபாரம் வாங்குபவர்களிடம் உயர்ந்துள்ளது. அது மட்டுமில்லாமல் ஒரே கட்டுக்குள் இருந்த சாட்டிலைட் டிவி மார்க்கெட் கொஞ்சம் விரிவடைந்து ஒன்னு ஒன்னரை கோடிகளுக்குள் தயாரிக்கப்படும், நல்ல தரமான கம்பெனிகளின் படங்கள் அசலை தியேட்டரை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் வசூல் செய்ய முடிகிற வியாபாரம் வந்திருப்பது சந்தோஷமாய் இருந்தாலும், அம்மாதிரியான படங்களுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பு அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லாமல் போய்க் கொண்டிருப்பது சின்னப் படங்களை வாங்கும் பெரிய விநியோகஸ்தர்களுக்கு சுணக்கமாய் இருக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் அப்படி வாங்கப்பட்ட மிகச் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, நல்ல விலைக்கு விற்க்கப்பட்ட, அதை விநியோகஸ்தர்களிடம் நல்ல விலைக்கு மாற்றி விடப்பட்ட இரண்டொரு படத்தின் தோல்வி பல பேரை மீண்டும் யோசிப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறதாம். சீக்கிரம் அதிலிருந்து எல்லோரும் எழுந்து சின்னப் பட்ஜெட் படங்களுக்கு ஓர் புத்துணர்வை ஊட்ட ரெடியாகட்டும். மொத்த தமிழ் சினிமாவே சமீபத்திய வெற்றிகளான ஓகே.ஓகேவையும், கலகலபபையும் வைத்துத்தான் ஒப்பேத்திக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கான ஆக்ஸிஜன் பெரிய படங்கள் மட்டுமே என்ற ஒரு நிலை வராத அளவில் சின்னப்படங்களும் வசூலில் அசத்தினால் நன்றாக இருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
துளைப்பான்
சென்னை நகரம் முழுவதும் அண்டர்க்ரவுண்டில் மெட்ரோவுக்காக துளையெடுக்கப் போவதாய் பல செய்திகள். அம்மாம் பெரிய மெஷினின் படத்தை வேறு போட்டு ஊரையே புரட்டிப் போட்டுப்புடுமோ என்கிற அற்பப் பதர் சந்தேகங்கள் எல்லாம் வரத்தான் செய்தது. அது பற்றி தேடிக் கொண்டிருந்த போது நம் பதிவர் வவ்வால் இந்தியாவில் எங்கெல்லாம் துளை போட்டார்களோ அப்போதெல்லாம் அங்கேயிருந்து அதை அனுபவித்திருகிறார் என்ற நற்செய்தியை இக்கட்டுரையின் மூலம் அறிந்தேன். அவரின் சுவாரஸ்யமான கட்டுரையை படிக்க இங்கே க்ளிக்கவும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று Gtvயில் இருந்து தமிழ் சினிமாவின் சிறு முதலீட்டு படங்களைப் பற்றிய நிலையைப் பற்றி பேட்டி எடுத்துப் போனார்கள். பண்டிகைக் காலங்கள், திருவிழாக்காலங்களில் சின்னப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டோடு வந்தார்கள். மக்கள் அதிகம் கூடும் நாட்களில் பெரும்பான்மை மக்கள் விரும்பும் ஆட்டக்காரர்களையோ, அல்லது கூத்துக்களையோத்தான் ஊர் திருவிழாக்களிலேயே போடுவார்கள். அப்படியிருக்க, அம்மாதிரி நேரங்களில் அஜித், விஜய் படங்களைப் போட்டால்தான் கூட்டம் வரும். மக்களும் கொண்டாட்ட மனநிலையில் இருப்பதால் பெரிய படங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது தான் நிலை. ஆனால் சென்ற ஆண்டுகளைப் போல சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் எல்லாம் இல்லை. இன்றைய பெப்ஸி தகராறு, தமிழ் திரையுலகப் பிரச்சனை எல்லாவற்றையும் தாண்டி நிறைய புதிய சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் வெளிவரத்தான் செய்கிறது. என்ன அவை மக்களிடையே ரீச் இல்லாமல் பத்து பேர் பதினைந்து பேருடன் ஆரம்பித்து இரண்டொரு நாட்களில் இருக்குமிடம் தெரியாமல் விளம்பரம் கூட செய்ய் முடியாத அளவிற்கு இருப்பதால் தான் ஓட மாட்டேன் என்கிறது என்பதை அவர்கள் உணர மாட்டேன் என்பதுதான் வருத்தமாய் இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
படித்ததில் பிடித்தது
ஜெயமோகனின் “யானை டாக்டர்” யூத் பதிவர் சந்திப்பின் போது வந்திருந்த பதிவர்களுக்கு எல்லாம் வேடியப்பன் இலவசமாய் கொடுத்த சிறு புத்தகம். ஆரம்பத்தில் கொஞ்சம் யமனஞமனவாக ஆரம்பித்தாலும் போகப் போக, டாக்டர் கே கேரக்டரை ரசிக்க ஆரம்பித்து ஆராதிக்க ஆரம்பித்துவிட்டேன். நிஜ மனிதன் என தெரிந்ததும். காடுகளில் பொறுப்பில்லாமல் வீசி எறியும் பீர் பாட்டில்களால் எவ்வளவு தூரம் யானைகள் பாதிக்கப்படுகிறது. அதனிடத்தை நாம் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டு, நம் தோட்டங்களை அவை அழிக்கிறது என்று எப்படி மனசாட்சியே இல்லாமல் சொல்கிறோம் என்று நினைக்கும் போது வெட்கமாய் இருக்கிறது. மனிதன், காடு, விலங்குகள், இவைகளிடையே இலக்கியத்தையும் கலந்தடித்து கொடுத்த வித்யாசமான புத்தகம். டாக்டர் கேக்கு என் வந்தனமும், அவரின் ஆசீர்வாதம் வேண்டி ஒரு நமஸ்காரமும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தி திரைப்படங்களில் இம்மாதிரியான ஒரு பாடல் ஹிட்டாகும். ஆனால் ஒரு சில பாடல்கள் சாகாவரம் பெற்றுவிடும்.அதற்கு காரணம் பாடல் மட்டுமல்ல, ஆடும் நடிகைகள். இதில் ஸ்ரீதேவி. பாடலின் பெரும்பாலான அர்த்தங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் எல்லா பாடல்களிலும் இருக்கும் ஆனால் இவர்களின் நடிப்பும், நடனமும், நளினமும், நம்மை கட்டிப் போட்டு விடும். அந்தளவிற்கு நம்மை கவர்ந்த நடிகைகளால்தான் இம்மாதிரியான பர்பாமென்சை கொடுக்க முடியும். இவருக்கு பிறகு மாதுரி தீக்‌ஷிட் என்னை கவர்ந்தவர். பட் லாங் லாஸ்டிங்காக இன்னமும் எப்போது இம்மாதிரியான பாடலை யோசிக்கும் போது ஸ்ரீதேவி ப்ரேமில் வராமல் போவதேயில்லை. இப்படத்தின் ஹீரோக்களின் சிறந்த நடிப்பே முட்டாக்குப் போட்டுக் கொண்டு பெண்கள் மத்தியில் ஒளிந்து கொண்டு ரசிப்பதும், பாடலின் முடிவில் வீட்டு பெருசுகள் கண்டு பிடித்து துரத்தப்படுவதுதான். அதை காமெடியாய் செய்வதாய் நினைத்து அவர்கள் அடிக்கும் லூட்டிக்கு தனியாய் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஓர் அறிவிப்பு
நண்பர் குகன் வழக்கமாய் அவரது நாகரத்னா பதிப்பகத்தின் மூலம் கவிதை தொகுப்பு நூல்களை வெளியிடுபவர் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். இதோ இப்போதும் ஒரு புதிய அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். பங்கு பெற ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

 "இயற்கையை காப்போம்" என்ற தலைப்பில் கவிதை நூல் தயாராகி வருகிறது. கவிதையை அனுப்ப விரும்பும் நண்பர்கள் To: nagarathna_publication@yahoo.in மற்றும் CC : tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

கவிதை 24 வரிகள் இருக்க வேண்டும். 

கவிதை ஹைக்கூ, மரபு, புது கவிதை மரபு, நவீனம் என்று எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். 

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15.6.12 

கவிதை அனுப்புபவர்கள் தங்களின் அலைப்பேசி எண்ணும், முகவரியும் குறிப்பிட்டால் நல்லது. கட்டாயமில்லை. கவிதைகளை Word doc attachment அனுப்ப வேண்டாம். தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் ஜுலை முதல் வாரத்தில் மின்னஞல் மூலம் தெரிவிக்கப்படும். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

என் ட்வீட்டிலிருந்து
ஒரு வருடத்தில் லட்சக்கணக்கில் மரம் வளர்த்துள்ளதாக சொல்வதெல்லாம் யார் காதில் மரம் வைப்பது ? என்பது போன்றது.

தே.மு.தி.காவைப் பார்த்து அ.தி.மு.க பயப்படுகிறது # இதை யார் சொல்லியிருப்பாங்கன்னு வேற சொல்லணுமா அய்யோ..அய்யோ

உனக்கு துரோகம் செய்தவனுக்காக நீ காலத்தை வீணடிக்காதே அவனின் துரோகங்களில் அவனே ஒரு நாள் மூழ்கிக் கொள்வான்.

ஒரு நல்ல ஆலோசனை ஒரு மோசமான, தவறான நம் செயலால்தான் கிடைக்கிறது.

ஈமு கோழி பார்ம், முட்டை, சாப்பாடுன்னு எதையாவது எங்கயாவது பாத்திருக்கீங்களா? இன்னொரு மகா மோசமான சுரண்டல் நடந்திட்டிருக்கு சாக்குரதை.

கணவணுக்கு ஒரு பெண் ராணியாக தெரிகிறாளோ இல்லையோ.. அவளுடய அப்பாவுக்கு அவள் என்றுமே ராஜகுமாரிதான்.

இந்த உலகில் வெற்றிகரமான ஆளாய் நாம் உலா வர வேண்டுமென்றால் நீ மற்றவர்களுக்கு கொடுக்கும் அட்வைஸ்களை பாலோ செய்தாலே போதும்.

உன்னை யாராவது மதிக்க வேண்டுமென்று நீ நினைத்தால் முதல் உன்னை நீயே மதிக்க கற்றுக் கொள்

வாய்ப்பு உன் கதவை தட்டவில்லையென்றால், கதவை நீயே வை # translation
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Teacher: "Johnny, can you tell me the name of 3 great kings who have brought happiness and peace into people's lives?"

Little Johnny: Drin-king, smo-king, and fuc-king.

Post a Comment

19 comments:

வினோத் கெளதம் said...

தல தல (Holly Baaly) தான்..தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார்...

Anonymous said...

//யமனஞமனவாக //

sss....

குரங்குபெடல் said...

கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 15.6.12


தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் ஜூன் முதல் வாரத்தில் மின்னஞல் மூலம் தெரிவிக்கப்படும்.


ஹய்யா . . திங்கள் காலையிலேயே . .

குறை கண்டுபிடிச்சாச்சி . .

வடகரை வேலன் said...

சங்கர்,

சினிமா வியாபாரம்ங்கிற உங்க புத்தகம் சுதேசமித்திரன் என்பவர் பெயரில் உடுமலை.காமில் இருக்கு பாருங்க. இது ஏதோ பிழை போல இருக்கு.

http://udumalai.com/index.php?prd=cinemavin%20moondru%20mugangal&page=products&id=5514

கிழக்குல உங்க புத்தகம் அன் அவைலபிள்னு வருது.

Cable சங்கர் said...

நன்றி அண்ணாச்சி.. உடனே பாக்க சொல்றேன்.

ராஜ் said...

ஹாலிவுட் பாலா, ஜெய்-சாரு இன்செப்ஷன் விமர்சனம் பிரச்சனை காரணமாக தான் பதிவுலகை விட்டு போய் விட்டார் என்று நினைச்சுகிட்டு இருந்தேன்.
நீங்க பாலா கிட்ட கொஞ்சம் பேசி பாருங்க, மறுபடியும் எழுத சொல்லி.

காவேரிகணேஷ் said...

மனுசன்யா நீர்..

பால கணேஷ் said...

சங்கர்ஜி... கருந்தேளின் புத்தகம் டவுன்லோட் ஆச்சு. படிச்சுட்டு அவசியம் சொல்றேன். ஆனா பாலாவேட பிக்சார் ஸ்டோரிய க்ளிக் பண்ணா ஓபன்தான் ஆகுது. டவுன்லோடு பண்ண முடியலையே... என்ன செய்யணும் நான்?

தமிழ்மகன் said...

அனைத்து பிரவுசர்களுக்குமான ஷார்ட்கட் கீகள் ----- http://mytamilpeople.blogspot.in/2012/06/shortcut-keys-for-web-browsers.html

Unknown said...

@ பா. கணேஷ் - File ---> download க்ளிக் செய்யவும்.

Unknown said...

//ஹாலிவுட் பாலா, ஜெய்-சாரு இன்செப்ஷன் விமர்சனம் பிரச்சனை காரணமாக தான் பதிவுலகை விட்டு போய் விட்டார் என்று நினைச்சுகிட்டு இருந்தேன்.// - ஆஹா... இதென்ன புது வதந்தி :) இதெல்லாம் டக்கால்டி செய்தி ராஜ்.. அவரு ஏன் போனாரு? அவரே வந்து சொல்லுவாரு

பால கணேஷ் said...

@ Rajesh Da Scorp...
எனக்கு வழிகாட்டி உதவியதற்கு மிக்க நன்றி நண்பரே. இப்போது என்னால் தரவிறக்கிக் கொள்ள முடிந்தது. படிக்கிறேன். உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

Balaganesan said...

excellent kothu parotta of recent month....

வவ்வால் said...

கேபிள்ஜி,

//அதை அனுபவித்திருகிறார் என்ற நற்செய்தியை இக்கட்டுரையின் மூலம் அறிந்தேன். அவரின் சுவாரஸ்யமான கட்டுரையை //

அட நம்ம கடைக்கும் விளம்பரம் கொடுத்து இருக்கீங்க,நன்றி!

அனுபவிக்க அது என்ன இன்பரசமா ,துன்ப ரசமுங்கோ, பெங்களூருல விவேக் காமெடி டேக் டைவர்ஷன அனுபவிச்சுட்டு மெட்ரோ ஓடுறத கண்ணால கூடப்பார்க்காம வந்துட்டேன்.

இப்போ சென்னையிலும் அதே கதை ரிப்பீட் ஆகிடுமோனு தோன்றுகிறது :-((

"சுவாரசியமான கட்டுரை" என்று சொன்னதில் எதுவும் உள்குத்து இல்லையே ? :-))

Unknown said...

வவ்வால் ஜி ! கேபிள் ஜி யை நீங்கள் புரிந்து கொள்ள இது ஒன்றே போதும்... இதில் எந்த குத்தும் இல்லை:-)

பாலா said...

ஹாலிவுட் பாலா எழுதாததன் காரணம்... அவர் ஒரு மணல் லாரியில் அடிபட்டு சித்தம் கலங்கி, கை-காலெல்லாம் விளங்காமல் போனதுதான்.

இதை அவரே என்னிடம் சொன்னார்.

வீராசாமி said...

ஏம்மா சவிதா பாபி,

ஹாலிவுட் பாலாக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்னு மொதல்ல சொல்லும்மா... நீ 'அந்த' சவிதாவா?

Julian Christo said...

We miss our favourit blogger hollywood BALA. Convey our best wishes to him.

Cheers
Christo

ராஜ் said...

///@ வீராசாமி said...//
பாஸ் நீங்க தான் சைக்கோ-2: . உங்க பிளாக்கர் ஐடி http://www.blogger.com/profile/13471892063903378299
இன்னும் நீங்க எங்க எல்லாம் கமெண்ட் போட்டீங்கன்னு தேடி சொல்லுறேன். :):):)