Thottal Thodarum

Jun 25, 2012

கொத்து பரோட்டா -25/06/12

விஷம் 
தொடர்ந்து தொலைபேசி கால்கள், எல்லோர் குரலிலும் பதட்டம், “நீங்க பேசிப் பாருங்களேன்” என்றதில் தெரிந்த அன்பு, எல்லாவற்றையும் மீறி எனக்கும் அவனைத் தெரியும் என்கிற போது உள்ளுக்குள் ஒரு பதட்டம். போன் செய்து பேசியபோது சாப்பிட்டுவிட்டேன் விஷத்தை என்றான். இருக்காது பொய்யாக இருக்கும் என்று உள் மனது சொன்னாலும், தொடர்ந்து மற்றவர்களின் தொலைபேசிகளும், நிஜமாகவே ஒரு வேளை நடந்துவிட்டால் காலம் பூராவும் உறுத்திக் கொண்டிருக்குமே என்று எண்ணம் வேறு. என்றோ ஒரு முறை அவன் இருக்குமிடத்தைப் பற்றி சொன்னதை வைத்து, அப்துலாவிடமும், இன்னொரு பத்திரிக்கையாளரிடமும் இடம் விசாரித்து, நான் அங்கே போய் சேர்ந்தேன். இன்னொரு நண்பர் செல்வின் பத்தே நிமிடத்தில் திருவற்றியூரிலிருந்து, திருவல்லிக்கேணிக்கு வந்திருந்தார். அவர் வரும் சிறிது நேரத்துக்கு முன் தான் முருகேச கவுண்டர் மேன்ஷனின் வாசல் வழியாய் ஒரு 108 ஆம்புலன்ஸ் போக, உள்ளூக்குள் திக்கென்றது. மேன்ஷனில் விசாரித்து ரூமில் எட்டிப் பார்த்தால் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் தற்கொலை செய்ய மருந்து சாப்பிட்டு விட்டதாய் சொன்னவன். தூ.. இவனெல்லாம் மனுஷனா? மனிதர்கள் மீது காட்டும் அன்பை டெஸ்ட் செய்யும் இவனைப் போன்றவர்களினால் தான் மனிதநேயம் என்ற ஒரு விஷயம் செத்துக் கொண்டிருக்கிறது. இவனையெல்லாம் மனுஷன் லிஸ்டுல சேர்த்து பார்த்த்துதான் நம்ம தப்பு செல்வின்.
@@@@@@@@@@@@@@@@@@



புத்தக வெளியீடு

சினிமா என் சினிமா புத்தக வெளியீடு இனிதே சிறப்பாக நடந்தேறியது. வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை சிறப்பாக பேசினார்கள். டிஸ்கவரி புக் பேலஸின் ஹால் நிரம்பி வழிந்தது என்றே சொல்ல வேண்டும். வந்திருந்து வாழ்த்தி, தலைமை தாங்கிய தயாரிப்பாளர் துவார் ஜி. சந்திரசேகரன், நாசர், அஜயன் பாலா, செல்வபுவியரசு, அன்பு, இயக்குனர்கள் டியோ ஹரீஷ், ஹரி, ஆகியோருக்கு என் நன்றிகள். மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அண்ணன் பத்திரிக்கையாளர் பெருதுளசி பழனிவேல் அவர்களுக்கும் நன்றிகள் பல. நாசரின் பேச்சில் பல கருத்துக்கள் சூடாக விழுந்தது. தயாரிப்பாளர் துவார் ஒரு இன்ப அதிர்ச்சி செய்தியை சொல்லி அமர்ந்துவிட்டார். வந்திருந்து வாழ்த்திய அத்துனை நெஞ்சங்களுக்கும் நன்றி..நன்றி.. நன்றி.
@@@@@@@@@@@@@@@@@@@@
ஆட்டத்த கலைச்சிருவேன்
கவுன்சிலர்களைக் கூப்பிட்டு, ஒழுங்கு மரியாதையா இல்லைன்னா கார்பரேஷனையே கலைச்சிருவேன் என்று அம்மா சொன்னதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்ததிலிருந்து அஹா ஓஹே என பாராட்டி கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆட்சியில் கவுன்சிலர்கள் செய்ததைத் தான் இந்த ஆட்சியில் உள்ள கவுன்சிலர்களும் செய்கிறார்கள் என்பதை ஒத்துக் கொண்டது வேண்டுமானால் மம்மியை பாராட்டலாம்.ஆனால் தன் கட்சி கவுன்சிலர்களை, மேயரை தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதையும், யார் ஆட்சி செய்தாலும் நடக்கிற ஊழல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு முதலமைச்சர் ஒத்துக் கொள்வது நாட்டிற்கு நல்லதா? என்று தெரியவில்லை. இந்த ஆட்சி ஆரம்பத்திலிருந்து சென்னை மாநகராட்சியினால் குப்பை அள்ள ஒரு கம்பெனியை சரியாய் கண்டுபிடித்து குப்பை அள்ள கூட செயலாய் இல்லை என்று நினைக்கும் போது இன்னும் வருத்தமாய் இருக்கிற்து.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
சினிமாவில் சாதிக்க நினைக்கும் பல இளைஞர்கள் தங்களது விசிட்டிங் கார்டாய் ஒரு குறும்படத்தை எடுத்து கொண்டிருக்கிறார்கள். நான் இதை 2007ல் செய்தேன். குறும்படங்களின் மீது தீராத காதல் கொண்டவன் நான் குறும்படங்களுக்காகவே shortfilminidia.com என்ற ஒரு தளத்தை வடிவமைத்து 2000த்திலிருந்து ஒரு ஐந்து வருடம் நடத்தி வந்தேன். இன்று நிறைய பேர் அவர்களுடய குறும்படங்களை எனக்கு அனுப்பி பார்க்க சொல்கிறார்கள். நேரமின்மை காரணமாய் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. அப்படி பார்க்க ஆரம்பிக்கும் போதே சில படங்கள் நம்மை சட்டென இன்ஸ்பயர் செய்ய ஆரம்பிக்கும். அப்படி ஒரு படம் தான் இந்த டைம் அவுட் என்கிற குறும்படம். வாய்ஸ் ஓவரிலேயே கதை ஆரம்பிக்கிறது. ஒரு ஐந்து நிமிஷம் முன்னாடி பிறந்திருந்தா ராஜா ஆயிருப்பே என்று தன்னையும் தன் அதிர்ஷ்டத்தையும் நொந்து போய் இருக்கும் இளைஞனின் மனநிலையை நகைச்சுவையுடன் சொல்ல அரம்பித்து, சட்டென ஒரு பேண்டஸிக்குள் நுழைகிறது. நீங்களே பாருங்களேன் படத்தின் ஹீரோவுடன் நீங்களும் ஓட ஆரம்பித்துவிடுவீர்கள். ஒளிப்பதிவும், மேக்கிங்கும் மிக நன்றாக இருக்கிறது. கொஞ்சம் ட்ரிம் செய்தால் இன்னும் கிரிஸ்பாக இருக்கும் என்பது என் எண்ணம். இதன் இயக்குனர் ஸ்ரீகணேஷ் பார்க்க மிக இளைஞராய் இருக்கிறார். நாளைய இயக்குனரில் வெளியிடப்பட்டு மூன்று பரிசுகளை வென்ற படம். நேற்றைய நிகழ்ச்சியில் தர்மம் படத்தைப் பார்த்துவிட்டு பிரபு சாலமன் தன் கம்பெனியில் அப்பட இயக்குனருக்கு இயக்க வாய்ப்பு கொடுப்பதாய் சொல்லியிருக்கிறாராம். சந்தோஷ சமாச்சாரம்.அந்த படத்தையும் பார்த்துருவோம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

செவிக்கினிமை

சமயங்களில் சில பாடல்கள் கேட்ட மாத்திரத்தில் ஒரு அருமையான உணர்வை கொடுக்கும். கொலைவெறிக்கு பிறகு ஏகப்பட்ட பாடல்களில் மேக்கிங்கை யூ டியூபில் வெளியிட்டிருக்கிறார்கள். அப்படியான ஒரு பாடல்தான் என கேட்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் அதனுள் வீழ்ந்து கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவ கோஸ்பல் பாடல் போலும், ஏற்கனவே கேட்ட ஒரு ஃபீலில் இருக்கும் பாடல் போல் இருப்பதை ஆங்காங்கே உணர்ந்தாலும் பாடலும், ஆர்கெஸ்ட்ரேஷனும், பாடிய ஷ்ரேயா கோஷலின் குரலும், யுகபாரதியின் வரிகளும், ஒரு Soothing மெலடிக்கான அத்துனை விஷயங்களும் சிறப்பாய் அமைந்ததால் நம்மை ஆழமாய் ரசிக்க வைக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வெளம்பரம்
ஒரு பொருளை விற்பதற்கு என்னன்ன எல்லாம் பொய் சொல்ல வேண்டியிருக்கு என்று விளம்பரப் படம் எடுப்பவர்கள் எல்லோரும் யோசிச்சா  சுவாரஸ்யமே போயிரும். அதிலும் ஆக்ஸ் போன்ற விளம்பரங்களில் இருக்கும் சுவாரஸ்யமான செக்ஸ் கலந்த ஒரு பேண்டஸி உலகையே கவர்ந்த காரணத்தால் அது போன்ற விளம்பரங்களுக்கு இன்னும் நிறைய டிமாண்ட் இருக்கத்தான் செய்கிறது. இதோ ஒரு எனர்ஜி டிரிங் விளம்பரம். பெண்ணியவாதிகள் மன்னிக்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
என் ட்வீட்டிலிருந்து
செக்ஸ் என்பது ரெண்டு பக்கமும் பற்ற வேண்டிய தீ என்பதை பத்து வருஷத்திற்கு பிறகு புரிந்து கொள்ள விழைபவளை என்ன என்று சொல்வது

காதலிக்கும் போது செய்த பல விஷயங்களின் தீவிரத்தை பற்றி யோசித்தால் மறை கழன்றிருந்த ஃபீல் என்ன என்பது புரிகிறது.


ஒரு தவறை இரண்டாவது முறையாய் செய்ய முடியாது. அப்படி செய்தால் அது தவறில்லை செயல்.


புரட்சி என்பது பாதுகாப்பானதா? டவுட்டு



ரவுடி ராத்தோரும் 120 க்ளப்பில் சேர்ந்துவிட்டது. இனி அத்தனை பாலகிருஷ்ணா படங்களுக்கும் ஹிந்தியில் டிமாண்டுதான்.

சமயங்களில் என் உணர்வுகளை எனக்குள்ளேயே அடக்கிவிடுகிறேன் வெளியிடுகிறேன் பேர்விழி என என்னையே அது தப்பாக வெளிக்காட்டுக்கிறது.

உனக்கு ஒரு நல்ல கேர்ள் ப்ரெண்டும், நல்ல காதலியும் இருந்தால் தயவு செய்து ரெண்டு பேரையும் சேர்த்து வைத்துக் கொண்டு குழப்பி கொள்ளாதே..
ஏனோ தெரியவில்லை இன்று மட்டும் என் அப்பாவை நினைத்து எழுதுவதெல்லாம் கொஞ்சம் ஓவராய் தெரிகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Gal: i'm pregnant.

Mom: (angrily) Howw..??

Gal: it wos an accident mom, Sorry... :((

Mom: u mean, u wer walking on de Road nd u fell on Someone's Dick..?? o_O
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்

Post a Comment

20 comments:

scenecreator said...

என்ன சார் தயாரிப்பாளர் துவார்.சந்திரசேகர் படம் இயக்க வாய்ப்பு கொடுக்கிறாரா?
வாழ்த்துக்கள்.கவுன்சிலர்களை அம்மா எச்சரித்ததற்கே சில ஊடகங்கள் அம்மா களை எடுக்கிறார்.கலைஞர் செய்யாததை அம்மா செய்கிறார் என்று காமெடி.--

ramtirupur said...

சார்.. தர்மம் குறும்படத்தின் இயக்குனர் ஸ்ரீகணேஷ் அல்ல.. அஸ்வின் என்ற மற்றொரு போட்டியாளர்.

Unknown said...

கண்ணதாசன் கூட இப்படி செய்திருக்கிறார் கேபிள். எம் எஸ் வி சொல்ல டிவி பெட்டியில் கேட்டதுண்டு.

அஞ்சா சிங்கம் said...

தயாரிப்பாளரின் இன்ப அதிர்ச்சி விரைவில் நிறைவேறவேண்டும் என்று வாழ்த்த வயதில்லை அதனால் குப்புற விழுந்து கும்மபிடுகிறோம்.................

Cable சங்கர் said...

@அஞ்சா சிங்கம். yoov.. ஏன் ஏன்?:)))

Cable சங்கர் said...

maathtiten ram. nandri

naren said...

சார், வந்திருந்து வாழ்த்திய அனைத்து வி.ஐ.பிக்களுக்கு மூன்று நன்றிகள் சொல்லீட்டீங்க.
ஆனால், அன்புடன் மெனக்கெட்டு வந்து சிறப்பித்த உங்க வாசகர்களுக்கு ஒரு நன்றியும் சொல்லவில்லையே சார், too bad!.

Ravichandran Somu said...

வாழ்த்துகள் தலைவரே !!!

Sivaraman said...

Sankar ji,

Pattu "OK" thaan ... aaanaa Super Hittukku Etho Koraiyuthu ...

வவ்வால் said...

கேபிள்ஜி,

வெற்றிகரமாக புத்தகம் வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்.

அப்படியே நாசர் முதலானோர் பேசியதையும் பதிவாக்கியிருக்கலாம்.

ஒட்டக்கூத்தன் said...

வாழ்த்துக்கள் அண்ணா

otakoothan.blogspot.in

vijay said...

sir padam direct panna poratha sollava illa

”தளிர் சுரேஷ்” said...

விஷம் பற்றிய பதிவு சூப்பர்! அம்மா மந்திரிமார்களையும் டோஸ் விடப்போறாங்களாம் அரசல் புரசலா பேசிக்கிறாங்க!

arul said...

nice post

அமர பாரதி said...

புத்தகத்திற்கு வாழ்த்துக்கள் கேபிள். விஷம் போன்ற ஒரு சம்பவம் கோயமுத்தூர் பதிவரிடமும் நடந்த ஞாபகம். இந்த விளையாட்டினால் உண்மையிலேயே உதவி தேவைப் படும் நபரை நம்பாமல் போகக் கூடிய அபாயம் இருக்கிறது.

பிரசன்னா கண்ணன் said...

//ரவுடி ராத்தோரும் 120 க்ளப்பில் சேர்ந்துவிட்டது. இனி அத்தனை பாலகிருஷ்ணா படங்களுக்கும் ஹிந்தியில் டிமாண்டுதான்..

விக்ரமார்க்குடு ரவி தேஜா படம் தானே சங்கர்.. இதுல எங்க பாலையா வந்தாரு..

'பரிவை' சே.குமார் said...

புத்தகத்திற்கு வாழ்த்துக்கள்.
விரைவில் இயக்குநராகப் போகிறீர்கள் போல... வாழ்த்துக்கள்.

தருமி said...

வாழ்த்துகள் ...

bandhu said...

1959 -to 1964 -அமெரிக்காவில் வெளிவந்த டெலிவிஷன் தொடர் The Twilight Zone. இதன் கதையாக்கம், பெரும்பாலும் ஒவ்வொன்றும் தனி தனி சிறு கதைகளே. அதில் ஒன்றின் கதை. எப்போதும் பாரில் வெட்டியாக பொழுதை போக்கிக்கொண்டும், எல்லோரையும் எரிச்சலூட்டும் தன்மை கொண்ட ஒருவர் பற்றியது. அவர் தன் போரடிக்கும் பேச்சை பொறுத்துக்கொள்ளும் அறிமுகமில்லாத ஒருவருக்கு ஒரு பீர் வாங்கி கொடுக்கிறார். நன்றியாக அவர் ஒரு வாட்ச்சை கொடுக்கிறார். அந்த வாட்ச்சை நிறுத்தினால் உலகம் உறைந்து விடுகறது, அந்த வாட்ச்சை இயக்குபவரை தவிர. நேரே பாங்கிற்கு சென்று 'உலகத்தை நிறுத்திவிட்டு' எல்லா பணத்தையும் ஒரு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு போகும்போது 'உலகம் உறைந்த நிலையில் இருக்கும்போதே அவர் வாட்ச் உடைந்து விடுகிறது. இப்போது எல்லாம் இருந்தும் யாருமில்லாத நிலையில் கதை முடிந்துவிடுகிறது.. குறும்படம் இதையே நினைவூட்டுகிறது.

நேரம் கிடைக்கும்போது ஒரிஜினல் தொடரை பாருங்கள். you will like it!

அருண் said...

விரைவில் டைரக்ட் செய்ய போறீங்க போல,வாழ்த்துக்கள்.
அப்டியே என்னோட ரிக்வஸ்ட ஞாபகம் வைச்சுக்கொங்க!!!ப்ளீஸ்.
பாடல் ஏற்கனவே கேட்டேன்.நல்ல மெலடி.
"தர்மம்" பிஜிஎம் இல்லாத ஒரு குறும்படம்,நல்லாருந்துச்சி.
-அருண்-