Thottal Thodarum

Feb 4, 2013

கொத்து பரோட்டா 04/02/13

எந்த நேரத்தில் சென்னை சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதைப் பற்றி எழுதினேனோ. ரெண்டு நாள் முன் சட்டத்துக்கு புறம்பாய் போஸ்டர் ஒட்டுகிறவர்களின் நதிமூலம் ரிஷிமூலத்தை தேடியலைந்து ஃபைன் போடப்போவதாய் அறிவித்திருக்கிறது மாநகராட்சி. ஏதோ நம்மால  ஊருக்கு நல்லது நடந்தா சரி.. நன்றி மேயர் அவர்களே.
@@@@@@@@@@@@@@@@@@@
விஸ்வருபம் இங்கே வெளி ஆகாததினால் அண்டை மாநிலங்களுக்கு கொலைக் குத்துதான். கர்நாடகா, கேரளாவில் தமிழிலேயே வெளியிடப்பட்டிருக்க,  ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு ஷோ வரை திரையிடுகிறார்கள். அத்தனையும் ஹவுஸ்புல் காட்சிகள்.ஆந்திராவில் மட்டும் தெலுங்கில் ஓடிக் கொண்டிருந்த வேளையில்,  ஆந்திர பார்டர் ஊரான சத்யவேடுவில் தமிழ் விஸ்வரூபத்தை ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். தக்குணூண்டு தியேட்டரில் கூட்டம் நிரம்பி வழிகிறதாம். 50 ரூபாய் டிக்கெட்டெல்லாம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நம் நண்பர்கள் சிலர் அங்கே இன்ப்ளூயன்ஸ் யூஸ் செய்து பார்த்தும் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வந்திருக்கிறார்கள். கட் இல்லாத முழு வர்ஷன் வேறா.. ரசிகர்களின் படையெடுப்பை யார் தடுக்க முடியும் .இதுவரையில்லாத அளவில் யு.எஸ். யு.கேவில் இரண்டாவது வாரமும் ஹவுஸ்புல் காட்சிகளாய் நடைபெற்றுக் கொண்டிருக்க, முதல் வாரத்திலேயே சுமார் நான்கைந்து கோடிகளை அள்ளியிருக்கிறது விஸ்வரூபம்.ஆந்திர, கர்நாடக, கேரள கலெக்‌ஷன் அதிரிபுதிரியாய் வந்திருக்கிறது என்கிறார்கள். இவ்வளவு கெட்டதிலேயும் ஒர் நல்லது நடந்துதானிருக்கு. 
@@@@@@@@@@@@@@@@@@@@@
பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைக்கான சட்டத்திருத்தம் வர்மா கமிஷனின் பரிந்துரையில் பேரில் உடனடியாய் அமலுக்கு வந்திருக்கிறது.இச்சட்டத்தின் மூலம் பாலியல் பலாத்காரத்தினால் பெண் மரணமடைந்தாலோ, அல்லது கோமா நிலைக்கு சென்று விட்டாலோ அக்குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கலாமென்று சொல்லியிருக்கிறார்கள். இது வர்மா கமிஷனில் பரிந்துரைக்கப்படாத விஷயம். ஆனால் அதே நேரத்தில் ஒரு பெண்ணை பின் தொடர்தல், தொட முயற்சி செய்தல், போன்றவற்றையும் பாலியல் பலாத்காரம் என்கிற வரைமுறைக்குள் வருகிறது என்கிறார்கள். இச்சட்டத்தின் மூலம் ஏற்கனவே உள்ளவரதட்சணை சட்டம் போல, பெண்கள் தாங்கள் பழி வாங்க நினைக்கும் ஆண்களை, குடும்பத்தை இம்மாதிரியான சட்டத்தை வைத்து ப்ரச்சனைக்குள்ளாக்க முடியும். அதே போல பிரிந்திருக்கும் மனைவியின் அனுமதியில்லாமல் கணவன் உடலுறவு கொண்டால் அதுவும் பாலியல் பலாத்காரத்தினுள் வரும் என்கிறார்கள். இதுவும்  கொஞ்சம் டகால்டியான விஷயம்தான். இதை நான் இங்கே சொல்வதால் ஆணாதிக்க வாதி என்று எண்ணினால் சாரி.. இன்றைய காலகட்டத்தில் இம்மாதிரியான பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை பழிவாங்கும் நடவடிக்கையாய் பயன்படுத்தப்பட்டு  மன உளைச்சலுக்கு ஆளாகி, பொருளாதார நிலையில் நிலை குலைந்து போயிருக்கும் எத்தனையோ ஆண்களை எனக்கு தெரியும். எனவே ஆண்களின் பாதுகாப்பிற்காகவும் சேர்த்தே சட்டம் இயற்ற இனி போராட வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோ என்று அச்சப்படத்தான் வேண்டியிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
மிஸ்டர் சரத்குமார் இதுதான் வாய்ஸ் கொடுக்கிற அழகா.. விளங்கிரும்.

எதிர்கட்சி தலைவர்னா ஆட்சிய பிடிக்க சதி பண்றவர்னு காட்டினா ஏன் தடை செய்யக்கூடாது?

ஏன் அரசியல்வாதிங்க எல்லாம் தங்களை தப்பானவனா காட்டுற படங்களுக்கு தடை கோரக்கூடாது.

விஸ்வரூபம் தமிழ் சத்யவேடு ஆந்திர பார்டர் தியேட்டரில். 300 ரூபாய் ப்ளாக். கொடுத்தாலும் அடுத்த ஷோவுக்குத்தான் டிக்கெட்

டேவிட் படத்தை தமிழில் பார்க்காதீர்கள்.தமிழில் சுத்தமாய் செட்டாகாத களம்.

சமயங்களில் பேருண்மை கூட காதலை மாற்றுவதில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
நேற்று வி-சித்திரம் என்கிற சற்றே பெரிய குறும்படத்தை காண அழைப்பு வந்திருந்தது. நண்பர் சிம்ஹா கதாநாயகனாய் நடித்திருந்தார். ஒரு மாடர்ன் ஆர்ட் பெயிண்டிங்கை அவர் வரைகிறார். அந்த பெயிண்டிங்கில் இருக்கும் விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கிறது. பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை. நாற்பது நிமிஷம் ஓடக்கூடிய படத்தை டெக்னிக்கலாய் சொல்லப் போனால் கிடைத்த வசதிகளை வைத்து அருமையாய் எடுத்திருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஒரு சுவாரஸ்யமான குறும்படத்திற்கு மேக்கிங் மட்டுமே போதாது கொஞ்சம் திரைக்கதையும் தேவை. கதையாய் சுவாரஸ்யமாய் இருக்கும் இப்படம் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கதாநாயககனாய் நடித்த சிம்ஹா.. படத்திற்கு தேவையான அள்வு நடித்திருந்தார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையைப் பற்றி குறிப்பிட்டு சொல்லலாம். சமீப காலங்களில் நிறைய குறும்படங்களின் இசையமைப்பாளர் இவர் தான். இவரது திரையுலக அறிமுகமும் விரைவில் “பண்ணையாரும் பத்மினியும்’ படம் மூலமாய் நடக்கவிருக்கிறது. எழுதி இயக்கிய இயக்கிய இளனுக்கு வாழ்த்துக்கள். அதை விட முக்கியமாய் இக்குறும்படத்தை விரைவில் மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல விநியோகஸ்தராய் அடியெடுத்திருக்கும்  ஸ்ரீ ஸ்டூடியோஸுக்கு வாழ்த்துகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சேனல் நியூஸ்
விரைவில் ஹெ.பி.ஓவும், ஈராசும், சேர்ந்து ஒர் விளம்பர இடைவெளியில்லாத சினிமா சேனல்களை ஆரம்பிக்க இருக்கிறது. HBO அவர்களுடய மற்ற சேனல்களில் வெளியாவத்ற்கு முன்பாகவும், அதே போல மற்ற சேட்டிலைட் சேனல்களில் வெளியாகும் முன் வெளியிடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.  ப்ரீமியம் சேனல்களாய் வலம் வரப் போகும் இச்சேனல்கள் முறையே மாதம் நூறு ரூபாய்க்கு, டிஜிட்டல் ப்ளாட்பாரத்தில் மட்டுமே வெளிவர இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

COVAIGURU said...

superu

Ponchandar said...

ரொம்ப சிம்பிளாய் கொத்துபுரோட்டா வந்திருக்கிறது ! ! அடல்ட் கார்னர் ! இன்ன பிற பகுதிகள் இல்லாதது வெறும் சால்னாவுடன் சாப்பிட்ட உணர்வை தருகிறது !

bala said...

சங்கர், நேற்று யில் சுயேச்சை எம் எல் ஏ படம் பார்த்தேன்.. அந்த போலீஸ் டிரஸ் லே எவ்வளவு கம்பீரம இருந்தீங்க ! அவ்.. கொள்ளை அழகு...

சிங்கத்தையும் சிறுத்தையும் கொலஞ்சு செஞ்ச கேரக்டர் .. சான்சே இல்லை !..

ஏன் சார் திரும்பவும் படம் பண்ணலே ! நாங்கலாம் ஒரு தங்க பதக்கம் சவுத்ரியை மிஸ் பண்ணுறோம் .. ப்ளீஸ் திரும்ப படம் பண்ணுங்க..

rajamelaiyur said...

//எந்த நேரத்தில் சென்னை சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதைப் பற்றி எழுதினேனோ. ரெண்டு நாள் முன் சட்டத்துக்கு புறம்பாய் போஸ்டர் ஒட்டுகிறவர்களின் நதிமூலம் ரிஷிமூலத்தை தேடியலைந்து ஃபைன் போடப்போவதாய் அறிவித்திருக்கிறது மாநகராட்சி. ஏதோ நம்மால ஊருக்கு நல்லது நடந்தா சரி.. நன்றி மேயர் அவர்களே.
//

நீங்க ஒரு தீர்க்கதரிசி ,,,

rajamelaiyur said...

பொரோட்டா ரொம்ப சின்னதா இருக்கு !!!

arul said...

இச்சட்டத்தின் மூலம் ஏற்கனவே உள்ளவரதட்சணை சட்டம் போல, பெண்கள் தாங்கள் பழி வாங்க நினைக்கும் ஆண்களை, குடும்பத்தை இம்மாதிரியான சட்டத்தை வைத்து ப்ரச்சனைக்குள்ளாக்க முடியும்

true words anna. i had experienced this already.my family had been severly affected.family life is gone one year ago.innocent men will be affected for sure.

hayyram said...

பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் என்ற பெயரில் முழுக்க முழுக்க ஆண்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்ட் வருகின்றன. இவன் என்னை தொட முயற்சித்தான் என்று சொன்னாலே பலாத்கார வழக்கில் கைது செய்ய முடியுமென்றால் யார் வேண்டுமானாலும் ஒருவர் மீது தொட முயற்சித்தார் என்று வழக்கு தொடுத்து விடலாம். இன்னும் கொஞ்ச நாள் போனால் இவன் என்னை தொடுவது போல மனதில் நினைத்தான் அதனால் இவனை கைது செய்யுங்கள் என்றும் சொல்லலாம். ஆனால் ஆண்களின் மனதில் ஆபாசத்தைத் திணித்துத் தூண்டிவிடும் பெண்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

http://hayyram.blogspot.in/2013/01/blog-post_1.html

பிரபல பதிவர் said...

தலைவரே

முடிந்தால் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்

http://pirabala-pathivar.blogspot.in/2013/02/blog-post_4.html

SANKAR said...

cable-ji,in arasu cable,so many channels like 1.DHEERAN TV,2.AARRA TV
3.G7 SPV,4.YES TV,5.PEPPERS TV,6.7S MUSIC etc were telecast.PLease write about these channaels