Thottal Thodarum

Feb 25, 2013

கொத்து பரோட்டா - 25/02/13

தமிழ் இணைய உலகில் முதலாய் 65 லட்சம் ஹிட்ஸுகளுக்கு மேல் வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், வலையுலக நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள். - கேபிள் சங்கர்
இதோ இன்னொரு மரணம். ஆசிட் வீச்சினால் மரணமடைந்த பெண்களின் லிஸ்டில் விநோதினிக்கு பிறகு வித்யா. இருவரின் பிரச்சனையும் ஒரு தலை காதல் தான். விநோதினியின் பிரச்சனையில் ஒரு தலை காதல் என்றால் வித்யாவின் பிரச்சனை திருமணம் செய்ய மறுப்பு. இதுவும் ஒரு வகை காதல்தான். தான் விரும்பிய பெண்ணை அடைய முடியவில்லை என்றால் அவள் வாழக்கூடாது என்ற வெறி. பெண்ணைப் பெற்றவர்கள் அனைவரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது. பெண் ஒழுங்காக இருந்தாலும், அவளின் மீது ஒரு தலை காதல் வயப்பட்டவன் அவள் கிடைக்கவில்லையே என்ற வெறியில் ஆசிட் ஊற்றாமல் இருக்க வேண்டுமே என்று பயந்து நடுக்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும் போல. ஆசிட் வீசியதால் சம்பந்தப்பட்ட ஆணின் வாழ்க்கையும் பாழாகிப் போகப் போகிறது. அதைப் பற்றி எதையும் யோசிக்காத அளவிற்கு காதல், வெறி வரக் காரணம் என்ன? நம் சமூதாயம் என்று தான் சொல்ல வேண்டும். சமூதாயத்தை நம்ம ஒருத்தரால மாத்திர முடியுமா? என்று கேட்பவர்களுக்கு நாம் தான் சமுதாயம். நாம் மாறினால் நிச்சயம் சமுதாயம் மாறும். எனவே உடன் பழகும் பெண்களுக்கும் விருப்பு வெறுப்பு இருக்கிறது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பழக நம் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம். பெரும்பாலான ஆணாதிக்க சிந்தனை விட்டுப் பெண்களிடமிருந்துதான் ஆரம்பமாகிறது. இதைச் சொல்லும் போது என்னை திட்டத் தோன்றினாலும், நிஜம் அதுதான். ஆணாதிக்க சிந்தனையுள்ள ஒருவனின் வீட்டில் இருக்கும் பெண்ணினால் எப்படி மாற்றத்தைக் கொண்டு வர முடியும்?. முடியும் தன் மீது செலுத்தும் ஆதிக்க எண்ணத்தை தன் பிள்ளைகளுக்கு கடத்தாமல் இருந்தால் நிச்சயம் முடியும். ஒரு பெண் நினைத்தால் நிச்சயம் முடியும். என்ன தான் ஆணாதிக்கம் அது இது என்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை ஆண்கள் ஒர் அட்டகத்தி. 
@@@@@@@@@@@@@@@@@@@@


சமீபத்தில் ஒர் திரைப்பட பரிசளிப்பு விழாவிற்கு சென்றிருந்தேன். சென்ற வருடம் அறிமுகமான புதியவர்களில் மூன்று பேரை பாராட்டி பரிசளிக்கும் விழா. ஆரம்பம் முதலே ரொம்பவும் க்ளம்ஸியாய் இருந்தது விழா நிகழ்ச்சி அமைப்பு. டிவியில் ஒரு மூன்று மணி நேர நிகழ்ச்சிக்கான கண்டெண்ட் மட்டும் இருந்தால் போதும் என்ற மன நிலையில் தான் நிகழ்ச்சி அமைத்திருந்தார்கள். யார் யாருக்கு பரிசளிக்கிறார்கள். என்பதில் ஆரம்பித்து கதாநாயகிகளில் மூன்று பேருக்கு பதிலாய் ஒருத்தருக்கு மட்டுமே பரிசளித்திவிட்டு விட்டுவிட்டார்கள். படு மோசமாய் தொகுப்பட்ட நிகழ்ச்சியாக அமைந்தது. நடுவில் விழாவிற்கு வந்த வி.ஐ.பிகளிடம் நேரிடையாய் பேட்டி எடுக்க ஆரம்பித்த காம்பியரர் பெண் அவரை அழகு என்று பாராட்ட, பதிலுக்கு விஜபியும் பாராட்ட, அதை நிஜமென நம்பி கேமராமேன் ஒரு கணம் திரையில் அந்த காம்பியரரை காட்ட. ப்ப்ப்பபாஆ.. பேய் மாதிரியிருக்கா என்ற கமெண்ட் தான் அங்கே ஓடியது.
@@@@@@@@@@@@@@@@@@@@
சமயங்களில் விளம்பரத்துக்காக எடுக்கப்பட்டதாக இருந்தாலும் நச்சென மனதில் ஒட்டிக் கொண்டுவிடும் விளம்பரங்களாய் அமைந்துவிடும். லைப்பாய் தன்னுடய சோப்பிற்காக செய்த விளம்பரம்தான் என்றாலும் இந்த விளம்பரம் சொல்லும் சேதி நெகிழ்வு. தேவையானதும் கூட. https://www.facebook.com/photo.php?v=524963070881552
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் ஒர் நல்ல போக்கு ஏற்பட்டிருக்கிறது. பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் படங்கள் மட்டும் தான் ஓடும், வியாபாரம் ஆகும்  என்ற நிலை மாறி, நல்ல கதை, மேக்கிங், என்றால் முகம் தெரியாத நடிகர்கள் நடித்தால் கூட ஓடும், வியாபாரம் ஆகும் என்று சின்ன பட்ஜெட் படங்களை வெற்றியடைய வைத்து நம்பிக்கை ஊட்டியிருக்கிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அந்த வகையில் கடந்த வருட லிஸ்டில் சூப்பர் ஹிட் தயாரிப்பு நிறுவன லிஸ்டில் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் உருவாகியிருக்கிறது. சின்ன கல்லு பெத்த லாபம் என்கிற தாரக மந்திரத்தை கொண்டு கதைக்கு என்ன தேவையோ அதை சரியாய் செலவு செய்து வித்யாசமான கதைக் களன்களான அட்டகத்தி, பிட்ஸா ஆகிய படங்களை எடுத்து வெற்றி கண்டவர், தனது மூன்றாவது படமான சூது கவ்வும் படத்தையும் படப்பிடிப்பு முடிவதற்குள்ளேயே வியாபாரம் செய்துவிட்டார். இந்த வியாபாரம்  படத்தின் மீதான நம்பிக்கையை விட தயாரிப்பாளரின் மீதான நம்பிக்கையில் நடந்திருப்பதுதான் சந்தோஷமான விஷயம். இச்சந்தோஷம் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
அம்மா ஓட்டல் ஆரம்பித்த சூட்டில் படு விமரிசையாய் நடந்து கொண்டிருக்கிறது என்று பேப்பரில் போடுகிறார்கள். க்யூவில் நின்றெல்லாம் வாங்கிக் கொண்டு போவாதாய் செய்தி. கொடுக்கிறா காசுக்கு நல்ல தரத்துடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.சாப்பிட்டுப் பார்த்து சாப்பாட்டுக்கடையில் எழுத வேண்டும். நிறைய மார்கெட்டிங் ஆட்கள் மதிய சாப்பாட்டு பட்ஜெட்டில் லாபமீட்டுவதற்காக அங்கே குழுமியிருப்பதாகவும் தகவல். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. எத்தனை நாளைக்கு என்று தான் பார்க்க வேண்டும். கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆகாம இருந்தா சரி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
இந்தியன் முஜாஜுதீனை தடை செய்ய போராட மாட்டீங்களா இஸ்லாமிய ஆதரவாளர்களே?

Kai Poo Che.. woww...!!!!

ஒரு பெண்ணினால் தோழியாக, மனைவியாக, எதிரியாக, இருக்க முடியும். நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்பதை பொறுத்தது.

சமயங்களில் நண்பர்களைப் பற்றி நல்லதாய் பேசினேனா இல்லையா என்ற குழப்பம் சரக்கடித்தவுடன் வருகிறது #எனக்கு மட்டும்தானே?
@@@@@@@@@@@@@@@@@@@@
இத்தாலிய முன்னாள் பிரதமர் சில்லியோ பெர்லூஸ்கோனி சர்சைகளுக்க் பெயர் பெற்றவர். பெண்களை கேவலமாக பேசியதாகவும், ஆபாச ஜோக் சொல்லி கிண்டலடிப்பதாக்வும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  எதிர்கட்சியினருடன் சேர்ந்து ஒர் பெண்கள் அமைப்பு போராட்டம் நடத்தியிருக்கிறது. எப்படி தெரியுமா? மேலாடையில்லாத அரை நிர்வாண போராட்டம். ஹி..ஹி..
@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு பக்கம் சின்ன பட்ஜெட் படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் வருகிற 1ஆம் தேதி மட்டும் சுமார் ஏழு படங்கள் வெளியாக இருக்கிறது. எல்லாமே சின்ன படங்கள். இதில் கடைசி நேரத்தில் எத்தனை படங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கும் என்ற நிலை யாருக்கும் தெரியாது. இப்படி சரியான விளம்பரமில்லாமல், இப்படிப்பட்ட படம் ஒன்று வெளிவருகிறது என்றே தெரியப்படுத்தாமல் படங்களை வெளியிட்டு என்ன பிரயோஜனம். அட்லீஸ்ட் இந்த விஷயத்தில்  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு, வரை முறை படுத்தினால் பாவம் அந்த பட தயாரிப்பாளர்கள் பிழைத்துப் போவார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் நண்பர் சி.வி.குமாரின் அடுத்த படமான சூது கவ்வும் திரைப்படத்தின் டீசர். தயாரிப்பாளர், ஹீரோ, இயக்குனர் என்று ஆரம்பித்து, படத்திலிருக்கும் குழு மொத்தமுமே எனக்கு நண்பர்கள் என்கிற் பட்சத்தில் இப்படம் வெற்றி பெற என் ஸ்பெஷல் வாழ்த்துகள். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Well Wally gets home late one night and Linda, his wife, says “Where the hell have you been?” Wally replies “I was out getting a tattoo!”
“A tattoo”? She frowned. “What kind of tattoo did you get?”
“I got a hundred dollar bill on my privates” he said proudly.
“What the hell were you thinking”? She said, shaking her head in disgust. “Why on earth would a Chartered Accountant get a hundred dollar bill tattooed on his privates?”
“Well, one, I like to watch my money grow. Two, once in a while I like to play with my money. Three, I like how money feels in my hand. And, lastly, instead of you going out shopping, you can stay right here at home and blow a hundred bucks anytime you want.”
கேபிள் சங்கர்

Post a Comment

16 comments:

erimalai said...

என்ன தான் ஆணாதிக்கம் அது இது என்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை ஆண்கள் ஒர் அட்டகத்தி.


nice...

Sketch Sahul said...

###இந்தியன் முஜாஜுதீனை தடை செய்ய போராட மாட்டீங்களா இஸ்லாமிய ஆதரவாளர்களே?###


உண்மையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற ஒன்று இருக்கிறதா?

இருப்பின் அதன் தலைவர்கள் யாவர்?

அவர்களின் தலைமையகம் எங்குள்ளது?

அது என்று முதல் செயல்பட்டு வருகிறது?

அது வெறும் ஈமெயிலில் மட்டும் வெளிப்படும் மர்மம் என்ன?

இந்தப் பெயரை முதலில் சொன்னவர் யார்?

இன்னும் இவை போன்ற விடை தெரியா வினாக்கள் ஏராளம் உள்ளன.

ஏனெனில் இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதச்செயல்களை ஊக்குவிக்கும் லஷ்கர் அமைப்போ ஜெய்ஷே முஹமது அமைப்போ தங்களது தலைவர்கள், செய்தித் தொடர்பாளர்கள் ஆகியோரை வெளிப்படையாக அடையாளம் காட்டுவதோடு அவை பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் நடத்துவதையும் வெளிப்படையாகக் காட்டுகின்றன. சங் பரிவாரங்களும் பயங்கரவாதப் பயிற்சி முகாம்கள் நடத்துவதாக உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறினார். அந்த வகையில் இந்தியன் முஜாஹிதீன் நடத்தும் முகாம்களைக் கண்டுபிடித்துள்ளார்களா; ஒரு மெயில் அனுப்பியதும் SMS அனுப்பியதும் தான் இந்தியன் முஜாஹித்தீன் இருப்பதற்கான ஆதாரம் என்ற நகைப்புக்குரிய நிலையிலா இந்திய புலனாய்வுத்துறை செயல்படுகிறது? இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரைத் தவிர வேறு எந்த விபரத்தையும் இந்தியப் புலனாய்வு ஏஜென்ஸிகள் கண்டுபிடிக்கவில்லை என்றால் இவர்கள் வேலை செய்வது வீணுக்குத்தானா?

அல்லது இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்சு கூறுவதுபோல், இந்தியன் முஜாஹிதீன் என்பது பணத்துக்காக செய்திகளை உருவாக்கி வெளியிடும் ஊடகங்களின் தயாரிப்பா? அதுதான் உண்மையெனில், பயங்கரவாதச் சம்பவங்களின் பின்னணியில் அதிகார வர்க்கத்தின் திட்டமிட்ட சதியிருப்பதாக அல்லாவா புலனாகிறது! அதனால்தான், பயங்கரவாதிகள் என அரசே வெளிப்படையாக அறிவிக்கும் சங் பரிவாரங்களின் மீது நடவடிக்கை ஏதும் பாயாமல் இருக்கிறதா?

இந்தியன் முஜாஹிதீன் மெயிலனுப்பியது எஸ்.எம்,.எஸ் அனுப்பியது எனக் கூறும் விசாரணை அமைப்பினர் எந்த அலைபேசியில் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது எந்த ஐ.பி அட்ரஸில் இருந்து மெயில் வந்தது என்பதைக் கண்டுபிடித்து தீவிரவாதிகளைக் கைது செய்யாதது ஏன்?

இந்தியன் முஜாஹிதீனே செய்து இருந்தாலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வசதியாக விசாரணையின் போக்கைத் திசை திருப்பும் வகையில் கருத்துக்களை கூறி வரும் பாஜக தலைவர்களின் வாயை அடைக்க விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்?

குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடன் முந்திக்கொண்டு, இது கசாப் மற்றும் அப்ஸல் குரு ஆகியோரின் தூக்குக்குப் பழிவாங்கும் செயல் என்று பீ ஜே பி தலைவர்களுள் ஒருவரான வெங்கைய்யா நாயுடு அறிக்கை விட்டு, புலனாய்வு இந்த வழியில்தான் செல்ல வேண்டும் என ரூட்டுப் போட்டுக் கொடுத்தது ஏன்?

முன்னர் சூரத்தில் ப்ளேக் நோய் வந்தபோது பாகிஸ்தானிலிருந்து வந்த எலிதான் சூரத்தின் ப்ளேக் நோய்க்குக் காரணம் என அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்திய அத்வானி இந்தக் குண்டு வெடிப்பு பாகிஸ்தான் சதி எனக் கூறுகிறார்.

மக்கா மஸூதி குண்டு வெடிப்பு மற்றும் ஸம்ஜெளதா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்புகளில் முஸ்லிம்களைக் கைது செய்த பின் இந்துத்துவ இயக்கங்கள்தாம் அக்குண்டு வெடிப்புகளை நடத்தின என்பது அம்பலப்பட்டது.

சுதந்திரமான எவ்வித முன்முடிவுகளும் இல்லாத விசாரணை மேற்கொள்ளப்பட்டாலே இந்தக் கொடும் செயலில் ஈடுபட்டவர்களைக் கண்டு பிடிக்க முடியும். புலனாய்வைத் திசை திருப்பி உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கவே அவசரமாக வெளியிடப்படும் இத்தகைய அறிக்கைகள் உதவும் என்பதை ஆட்சியில் இருந்த இவர்கள் உணர்வார்களா?

இருட்டு அறையில் கறுப்புப் பூனையைத் தேடும் கடினமான வேலையில் விழிப்போடும் கவனத்தோடும் ஈடுபடும் - சுதந்திரமான செயல்பாடுகளிலும் சட்டத்தின் மாட்சியிலும் நம்பிக்கை கொண்ட கார்கரே போன்ற-- நேர்மையான போலீஸ் அதிகாரிகள் இவ்வழக்கில் புலனாய்வு மேற்கொண்டு உண்மைக்குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி விரைந்து வழக்கை விசாரணை செய்து உச்சபட்சத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதே சுயமாகச் சிந்திக்கும் மக்களின் அவா!

இது நிறைவேறுமா? அல்லது அப்பாவிகள் சிலர் கைது செய்யப் பட்டு வழக்கு முடிக்கப் பெறுமா? என்பது தான் நம் முன் தொங்கி நிற்கும் முக்கிய கேள்வி.

ராமகுமரன் said...

சனிகிழமை மாலை 5 மணி திரைபட்டம் பார்த்தேன் , சிறிய முதலீடு திரைப்படம் தான் , அனால் நன்றாக பார்க்கும் படியாக இருந்தது , இது போன்ற படங்கள் அதிகம் விளம்பரம் இல்லாததால் வியாபாரம் ஆக மாட்டேன் என்கிறது

pootham said...

###இந்தியன் முஜாஜுதீனை தடை செய்ய போராட மாட்டீங்களா இஸ்லாமிய ஆதரவாளர்களே?###

cable why this kollaveri...

Sktch Shahul well said...

whoever did this, should be punished like saudi style...

செங்கோவி said...

//புதுடெல்லி, அக். 24-

பீகார் மாநிலம் மதுபனி மாவட்டத்தை சேர்ந்தவர் பாசிமுகமது. இவர் கர்நாடக மாநிலத்தில் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புடன் பாசிமுகமது நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தார். இதன் காரணமாக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். பெங்களூர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பு, டெல்லி ஜும்மா மசூதி அருகே நடந்த துப்பாக்கி சூடு ஆகியவைகளில் தொடர்புடையவர் ஆவார்.

தீவிரவாதி பாசிமுகமது 2010-ம் ஆண்டு இறுதியில் சவுதி அரேபியாவில் குடியேறினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பாசிமுகமது சவுதி அரேபியாவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவர் அங்கு நடந்த சில குற்ற செயல்களுக்காக கடந்த மே மாதம் முதல் அங்குள்ள சிறையில் இருந்தார். இதை தொடர்ந்து இந்திய அதிகாரிகள் சவுதி அரேபியாவுடன் தொடர்பு கொண்டு பாசிமுகமது மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை கொடுத்தனர்.

இதை தொடர்ந்து சவுதி அரேபியா அவரை நாடு கடத்தியது. டெல்லி கொண்டு வரப்பட்ட அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். பாசிமுகமதுவிடம் மத்திய உளவுத்துறை அதிகாரிகள், டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது குண்டு வெடிப்பில் தொடர்புடைய இந்திய முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த மேலும் 5 தீவிரவாதிகள் சவுதி அரேபியாவில் இருப்பதாக பாசிமுகமது தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது பாசிமுகமது பிடிபட்டது மிகவும் முக்கியமானதாகும் அவரை சவுதியில் இருந்து நாடு கடத்த அந்த நாட்டு அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது என்றார். தீவிரவாதி பாசிமுகமதுவை டெல்லி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது. அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் பல தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாசிமுகமது இந்திய முஜாகிதீன் அமைப்பின் தலைவர்களான ரியாஸ் மற்றும் இத்பால்பட்சல் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.//

சவுதி அரசே ஒத்துக்கொண்ட விஷயத்தை நாம் மறுக்கலாமா? அது மாபெரும் தவறு அல்லவா?

andygarcia said...

@Sketch Sahul

எல்லாத்துகுமே விடை இருக்கு, உங்களுக்கு தான் விஷயம் தெரியவில்லை

எல்லாத்துகுமே விடை இருக்கு, உங்களுக்கு தான் விஷயம் தெரியவில்லை !

http://indiatoday.intoday.in/story/isi-dawood-ibrahim-indian-mujahideen-bhatkals-dilsukhnagar-blasts-hyderabad/1/251579.html

Siraju said...

விஸ்வரூபம் படத்தை எதிர்த்தால் விளம்பரம் கிடைக்கும்.இந்தியன் முஜாஜுதீனை தடை செய்ய போராட்டம் செய்தால் குண்டு தான் கிடைக்கும். பாபர் மசூதி இடிப்பு, அஜ்மீர் தர்கா, மாலோகன் குண்டு வெடிப்பிற்கு காரணமாக இருந்தது, இந்துத்துவ அமைப்புகள். குண்டு வைத்த எந்த இந்தத்துவ அமைப்பு ஒத்துக்கிச்சு ?. அந்த ஆர், எஸ். எஸ்.அமைப்புகளை எதிர்த்து எவன் வாய திறப்பான் ? அதுமாதிரிதான் இதுவும். வெடி குண்டுக்கு தெரியாது, வைப்பவன் இந்துவா ? முஸ்லிமா ? என்று. சாவது எந்த குற்றமும் செய்யாத அப்பாவி இந்து - முஸ்லிம் மக்களே.....

Unknown said...

sir your facebook link is not working pls review it

rajamelaiyur said...

சூது கவ்வும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

SNR.தேவதாஸ் said...

அன்புடையீர் வணக்கம்.தங்களது பதிவை ஆரம்பத்தில் நான் முதன் முதலாக படிக்க ஆரம்பித்த பொழுது எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்றுதான் எழுதியிருந்தேன்.
ஆனால் இப்போது தாங்கள் எழுதும் பல விசயங்கள் எனது நினைப்பிற்கு ஒத்து போகிறது.
இந்தியன் முஜாஜுதீனை பற்றி யார் எழுதினாலும் அதற்கு பதிலாக இந்துத்வா பற்றித்தான் பதில் தருகிறார்கள்.இந்திய அரசியல்வாதிகள் ஊழலைப் பற்றி பேசுவது போலத்தான் பதில் தருகிறார்கள்.
நாங்கள் யோக்கியமானவர்கள்,உத்தமர்கள்,ஒரு தவறும் செய்யாதவர்கள் என்று தங்களது வாதத்தை எடுத்து வைக்க யாராலும் முடியவில்லை.
இந்துத்வாதான் ஒரு மோசமானது என்று வைத்துக்கொண்டாலும் நாங்கள் அது போல இல்லை என்று தங்களால் சொல்ல இயலவில்லை.
சரி அதை எல்லாம் விடுங்கள்.அதற்காக தாங்கள் மட்டும் தான் அதை செய்ய வேண்டும் என்றும் வாதிடவில்லை.இந்திய இராணுவத்தின் இரண்டு வீரர்களின் தலையை வெட்டி எடுத்துச் சென்றார்களே அதற்காக விஷ்வரூபத்துக்கெதிராக எடுத்த முயற்சியில் 10 சதவீதமாவது யாராவது காண்பித்தது உண்டா?சரி அது ஏன் தங்களது முகத்தைக் காண்பிக்க இவ்வளவு பயப்படுகிறீர்கள்.?
மொத்தத்தில் முதலில் நாம் இந்தியர்கள் அப்புறம்தான் மதங்களெல்லாம்.மனிதனுக்கும் அதுதான்,யாணைக்கும் அதுதான்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Anonymous said...

ஏதோ IM இந்தியாவில் அரசு அனுமதி பெற்று இயங்கும் சட்டபூர்வ அமைப்பு போலவும், இஸ்லாமியர்கள் அதை தடை செய்ய போராட வேண்டும் என்று கூறுபவரே, ஏற்கனவே தடை செய்யப்பட்ட அமைப்பை மீண்டும் தடை செய்ய போராட வேண்டும் கூறுவதின் காரணம் காவி வெறியா அல்லது காழ்ப்புணர்ச்சி அறிவு கண்ணை மறைக்கின்றதா ? vilakkungal

unmaiyalan said...

கேபிள் சங்கர் எப்பொழுது ....பி.ஜே.பியில் சேர்ந்தார் ....வர வர உங்கள் கருத்துக்களில் நடுநிலைமை தவறுகிறது .....காலம் எல்லாவற்றையும் மாற்றும் ,,,,உங்களுக்கும் உண்மை தெரியும் ....இந்த குண்டுவெடிப்பு நடுத்துகிரவன் மனிதனே இல்லை. அவன் மனித சாதியில் பிறக்கவில்லை ......மனிதனே இல்லாதவனுக்கு மதம் ஒன்றும் கிடையாது ,,,,,,,அடுத்தவன் உயிரை பறிக்க எந்த மதமும் சொல்லவில்லை ......மனித மிருகங்கள் செய்யும் தவரொடு அவன் பெயர் தாங்கும் மதத்தை இணைக்காதீர்கள் ....அவன் ஹிந்து ஆனாலும் சரி ,,,இஸ்லாமியன் ஆனாலும் சரி ....

Siraju said...

அண்ணன் முறையில் உள்ள தேவதாஸ் அவர்களே, குண்டு வைப்பவன் இந்துவாகவோ, முஸ்லிமாகவோ இருந்தாலும், உயிர் இழப்பது என்னவோ, அப்பாவி இந்து முஸ்லிம்கள்தான்.

பெரும்பான்மை சமூகத்தின் பிடியில் உள்ள இந்த ஊடகங்கள், இந்து தீவிரவாதத்தை முழு சோற்றில் மறைக்கும் வேலையை செய்து விட்டு, மற்றவற்றை பெரிது படுத்தும் போது, பிரச்சனை கிளம்புகிறது. இந்துவிலும் தீவிரவாதி இருக்கிறான், முஸ்லிமிலும் தீவிரவாதி இருக்கிறான், இதை மறுப்பதற்கில்லை.

ஆனால், திரு. கேபிள் சங்கர நாராயன், விஸ்வரூபத்தின் பிரச்சனயில் இருந்து, மனிதன் தும்முவதில் இருந்து, இருமல் வரை, இஸ்லாமிய அமைப்புகளை போராட அழைக்கிறார்.

இன ஒழிப்புக்கு எதிரான இஸ்லாமிய அமைப்பு என்ற ஓர் அமைப்பே, கோவை சிறையில் வாடும் எந்த ஒரு குற்றமும் இதுவரை நிருபிக்கபடாமல் சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு, தமிழ்நாடு தவ்ஹித் அமைப்புகள் முன் முயற்சி கொண்டு போராடவில்லை என்று குற்றம் சாட்டுகிறது.

ஆகா, முஸ்லிம் அமைப்புகள் குற்றம் செய்தாலும், அதனுள் கேள்வி எழுப்பும் இளைஞர் அமைப்புகளும் உள்ளன என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

திரு. கேபிள் சங்கர் நாராயன், இந்திய ஜிகாதி அமைப்பை, இஸ்லாமிய அமைப்புகள் ஏன் தடை செய்ய போராடவில்லை என்ற கேள்வி யதார்த்தமாக கேட்கப்படவில்லை, அது விஷமமாகவே உள்ளது.

தீவிரவாதிகளின் வெடி குண்டு தாக்குதலில், அப்பாவி முஸ்லிம்கள் அருகில் உள்ள பிற சமூக மக்களின் பார்வைக்கு அச்சப்பட்டே வாழ வேண்டிய இந்த சூழலில், கேபிள் போன்ற பொது ஊடகத்தை பயன்படுத்துவோர், இது போன்ற கருத்துகள் பிற சமூகத்தை எவ்வளவு கேலிக்கு உள்ளாக்கும் என சிந்திக்க வேண்டும்.

குறிப்பு : தற்போது ஆஸ்கார் விருது பெற்ற லைப் ஆப் பை படத்தையே உலக மேதை கேபிள் சங்கர் நாராயண் தொழில் நுட்ப ரீதியில் குறை சொல்லும் போது, விஸ்வரூபத்தை எந்த குறையும் இன்றி வானளாவ புகழ்ந்து கூறியது, அவர் நடுநிலைமையை கணக்கில் கொள்ளவேண்டும். ( பிற தளங்களில் விஸ்வரூபத்தின் காப்பி, பேஸ்ட் விசயங்களை அக்கு வேறாக கிழித்து தொங்க விட்டுள்ளனர் என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்)



Sketch Sahul said...


அடுத்து, பீஹாரில் குண்டுவெடிப்பு - 8 பேர் பலி

இப்படி ஹைதராபாத்தில் ஒரு தொடர் குண்டு வெடிப்பு வெடித்த மறுநாளே... பீகாரில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில்.... எட்டு பேர் கொல்லப்பட்டனர்..!

அதில், ஆறு பேர் போலீஸ்..! இது பெரும்பாலான ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக வரவில்லை. அவ்வளவு ஏங்க..! சாதாரண ஒரு செய்தியாக கூட வரவில்லை சகோ..! இனி வரவும் வராது..!

காரணம்...? 'குண்டு வைத்தது யார்' என்று உடனேயே தெரிந்து விட்டது..! ஜீப்பில் சென்று கொண்டிருந்த எட்டு பேரை கன்னி வெடி வைத்து கொன்றது மாவோயிஸ பயங்கரவாதிகள்..!

Times of India எனும் ஒரே ஒரு செய்தி தளத்தில் மட்டும் நான் இந்த அதிர்ச்சியான செய்தியை கண்டதால்... சந்தேகத்துடன், 'இந்த செய்தி உண்மையா' என்று புத்த கயாவில் வாழும் எனது பிஹாரி நண்பர் குடும்பத்தினர் மூலம் தொலைபேசியில் அப்போதே உறுதி செய்து கொண்டேன். ஆமாம், செய்தி உண்மைதான்..!

ஆனால், ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு இருந்த "உலகளாவிய ஊடக பரபரப்பு" , "வானளாவிய கண்டனங்கள்", "லோக்கல் எம் எல் ஏ முதற்கொண்டு பிரதமர் வரை நிகழ்விடத்தை சென்று பார்த்தல்", "இறந்தவர்களுக்கு இழப்பீடு", "இந்தியன் முஜாஹிதீன்", "லஷ்கர் இ தொய்பா", "பாகிஸ்தான் சதி" இத்யாதி இத்யாதி எல்லாம் இதில் ஏன் இல்லை

http://pinnoottavaathi.blogspot.com/2013/02/8.html

Anonymous said...

கேபிள் சங்கர் நடுநிலைமையிலிருந்து விலகி பல காலம் ஆகி விட்டது

இப்பொழுதெல்லாம் அவர் எழுதும் சினிமா விமர்சனங்கள் ஒரு தலைபட்சமாகவே அமைகின்றன.

அவருடைய பதிவுகளில் எல்லாம் நக்கலும் நையாண்டியும் அதிகமாக இருக்கிறது

இந்த பதிவின் ஆரம்பத்தில் வித்யா, வினோதினி என்று பரிதாப படுகிறார்

மற்றுமொரு செய்தியில் ஒரு பெண் காம்பியரை பற்றி பேய் என்று சொல்லுகிறார்.

உங்களுக்கு பேயாய் தெரிந்தால், மற்றவருக்கும் பேயாய் தெரிவார்களா

பெண்களை மரியாதையுடன் அழைக்க கற்று கொள்ளுங்கள்

உங்களுக்கும், மருத்துவ மாணவியை கற்பழித்து கொன்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்

பெண்ணினத்தை கிண்டல் செய்யாதீர்கள்

மறைமுகமாக உங்களை பார்த்து எத்தனை பேர் பேய் மாதிரி இருக்கிறீர்கள் என்று சொல்லி இருப்பார்கள்

முதலில் கண்ணியத்தை பற்றி கற்றுக்கொள்ளுங்கள்

பிறகு மற்றவரை பற்றி விமர்சனம் பண்ணலாம்

கண்ணியம் கிலோ என்ன என்று கேட்டு விடாதீர்கள்

மேலும் உங்களது பதிவுகளில் மதச்சாயம் அதிகம் பூசப்படுகிறது

சினிமாவில் போடும் வேடத்தை இங்கேயும் போடாதீர்கள்

கீழக்கரையிலிருந்து said...

எல்லாம் தான்தான் பெரிய பதிவர்ன்னு நினைத்த தலைகனம் தான் இந்தியன் முஜாகிதீன் என்கிற ஒரு அமைப்பே கற்பனைதான் என்கிற அறிவுகூட இல்லாமல் இவருடைய பதிவில் காவிசாயம் கலந்துதான் வருகிறது