Thottal Thodarum

Feb 16, 2013

அழுக்கு

செகண்ட் லைனில் பத்து மிஸ்ட் கால்கள். அப்படியாகப்பட்ட அவசரம் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் அந்த நம்பருக்கு திரும்பக் கூப்பிட்டேன். போன் ஆன் ஆனதே தவிர என்னிடம் பேசாமல் போனின் சொந்தக்காரர் வேறு ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.


”த்தா... போன எடுக்க மாட்டேன்குறான் மச்சான்”

“என்ன பிரச்சனை?”

“நேத்து ஒரு நானோ வந்திச்சு இல்லை அதுக்கு டிஸ்கவுண்ட் கூப்பன் கொடுக்காம போய்ட்டான். இதுக்குத்தான் சர்வீச் ஷீட் போடும் போதே வாங்கியிருக்கணும். ரொம்பத்தான் ரூல்ஸ் பேசுனான்”
“ஏண்டா நீயில்ல கேட்டு வாங்கியிருக்கணும்?”

“எங்க மச்சான் அந்த மொள்ளமாறி போன் பேசிட்டே இருந்தான். பேசிட்டே பணம் கொடுத்தான், கையெழுத்துப் போட்டான். நானும் வீட்டுக்கு கிளம்புற அவசரத்துல விட்டுட்டேன். இன்னைக்கு அந்த கூப்பன் இல்லாமல் என்னால எப்படி டிஸ்கவுண்ட் கொடுத்தேன்னு கேட்டா நான் காலி. த்தா.. இவனையெல்லாம்” 

“ம்மால.. அவன் மட்டும் போன் எடுக்காம இருக்கட்டும். வீட்டு அட்ரஸ் தேடி பிடிச்சாவது தலைல தட்டி வாங்கிர மாட்டேன். டேய்.. அவன் பேர் சொல்றேன் அட்ரஸை பிடி”  என்று சொல்லிக் கொண்டிருந்தவனின் குரலில் செம கோபம் தெரிந்தது. நான் சிரித்துக் கொண்டேன்.  திரும்பத் திரும்ப ஹலோ ஹலோ என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்கள் என்னைத் திட்டிக் கொண்டேயிருந்தார்கள். கொஞ்சம் எரிச்சலாகிப் போய் கட் செய்தேன். இப்போது மீண்டும் அதே நம்பரிலிருந்து போன்.

“ஹலோ.. சார்.. நான் சிவா டாடா மோட்டர்ஸ்லேர்ந்து பேசுறேன்.

“சொல்லுங்க என்ன விஷயம்?”

“நேத்து வண்டி சர்வீஸ் எடுத்தீங்க இல்லை அப்ப கூப்பனை குடுக்காம வண்டி எடுத்துட்டு போய்ட்டீங்க?” 

அவன் குரலில் குற்றச்சாட்டு இருந்தது.

‘நான் கொண்டு வந்திருந்தேனே . நீங்க தான் கேக்கலை”

“நீஙக் கொடுத்திருக்கலாம் இல்ல சார்.”

“நான் தான் போன் பேசிட்டே இருந்தேனே”

”நீங்க கொடுத்திருக்கணும் சார்..”
“நீங்க தான் கேட்டிருக்கணும். என் வண்டியில சர்வீஸ் சரியில்லைன்னா நான் தானே உங்க கிட்ட சொல்லணும். அது போல உங்களுக்கு என்ன தேவையோ அதை நீங்கதான் கேட்கணும்’

சிறிது நேரம் மெளனம்.

’சரி..சார்.. நீங்க ஆபீசுக்கு வந்து அந்த சிலிப்பை கொடுத்துருங்க” 

“அதெல்லாம் கொடுக்கலாம். ஒரு சின்ன விஷயம்”

“என்ன சார்..?”

“இனிமே கஸ்டமர் போனை அட்டெண்ட் பண்ணிட்டு நீங்க அவனை திட்டுறத கேட்க வைக்காதீங்க” என்றதும் அவன் போனை கட் செய்துவிட்டான். என் மனதினுள் அவனின் நிலை எப்படி இருக்கும் என்ற கற்பனை சிரிப்பை வரவழைத்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் போன்.

“ஹலோ சார்..?”

 குரலில் முன்பிருந்த குற்றச்சாட்டில்லை. 

” சாரி சார்.. ஆபீஸ்ல திட்டுனாங்க.. அதனால்தான்.. “ என்று இழுத்தான்.

“பரவாயில்ல தம்பி.. நானும் சில சமயம் கஸ்டமரை இப்படி திட்டியிருக்கேன். ஆனா.. போன ஆன் பண்ணிட்டு திட்ட மாட்டேன். நீங்க வேணும்னு பண்ணிங்களோ இல்லை கை பட்டு ஆன் ஆயிருச்சோ இன்னொரு வாட்டி பண்ணாதீங்க எல்லாரும் என்னைப் போல எடுத்துக்க மாட்டாங்க”

“இல்லை சார்.. இனிமே மாட்டேன்.. சாரி..”

“இருந்தாலும் இந்த சிலிப்புக்கு கொஞ்சம் ஓவராத்தான் திட்டினே” என்றேன். லேசாய் சிரித்துவிட்டு, சட்டென நிறுத்திக் கொண்டான். 

“சார்.. அந்த சிலிப் கொண்டு வந்து கொடுக்கிறீங்களா?”

“இல்லைப்பா.. நான் வெளியே இருக்கேன். நீ என்ன பண்றே.. அதான் வீடு கண்டு பிடிச்சு தலைல தட்டி வாங்கிக்கிறேன்னு சொன்னேயில்லை.. வீட்டுல வந்து வாங்கிக்க..” என்றேன். சரி என்ற அவன் குரல் எனக்கு  கேட்கவேயில்லை.  

Post a Comment

9 comments:

Geetha Sambasivam said...

ஹாஹாஹாஹா!

Anonymous said...

Pidinga sir avana,pidichu thookula podunga sir,customer thalaila thati vaanguvaanan...

R. Jagannathan said...

சிரிச்சுக்கிட்டே வச்சீங்க ஆப்பு! -ஜெ.

Hari said...

Idhu unga life la nadandhadha? Illa kadhai ya?

r.v.saravanan said...

ha....ha


anubavam pudumai

CrazyBugger said...

Cable, Take care of your head.. :)

”தளிர் சுரேஷ்” said...

இப்படித்தான் இருக்கிறார்கள் பல பேர்! உண்மை அனுபவமா? பகிர்வுக்குநன்றி!

பூ விழி said...

ஹா ஹா ஹா ............என்ன ஒரு சிலுமிஷம் இருகங்க இப்படியெல்லாம்

Unknown said...

உங்க வழியில் பதிலடி தரலாமே?இன்னும் காட்டமாக?