Thottal Thodarum

Sep 15, 2014

கொத்து பரோட்டா -15/09/14

  • 85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்
வாரத்துக்கு நாலு படம், வாரம் தப்புனா பெரிசு, இரண்டாவது வாரம்னா பெரிய ஹிட், மூணாவது வாரம் சூப்பர் டூப்பர் ஹிட் என்கிற நிலையில் தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் சென்னையில் மட்டும் ரெண்டாவது வாரம், மூன்றாவது வாரம் போகும் படங்கள் எல்லாம் செங்கல்பட்டு ஏரியா தாண்டி முதல் வாரமே தாண்டுவதில்லை என்பது சினிமாவில் உள்ளவர்களுக்கு தெரியும். அதுவும் தீபாவளி நேரம் வேறு நெருங்குவதால் எல்லா பெரிய படங்களும் வரிசைக் கட்டி நிற்கிறது. அதற்கு கிடைக்கிற கேப்புல படத்த ரிலீஸ் பண்ணிடலாம்னு முப்பது பேர் லைன் கட்டி நிக்கிறாங்கோ. ஒண்ணியும் புரியலை.
@@@@@@@@@@@@@@@@@@@@



பர்மா
ட்ரைலரைப் பார்த்ததும் Gone In 60 Seconds" படத்தின் உட்டாலக்கடியாய் இருக்குமென்ற எண்ணத்தை படம் பார்த்த 60 செகண்டில் மாற்றிவிடும் என்று இயக்குனர் ட்விட்டரில் சொல்லியிருந்தார். அது நிஜமே. படத்தின் களமாய் அமைத்திருந்த கார் சீஸிங் பின்னணி அட்டகாசமான களம். சீஸிங்கில் கில்லாடியான சம்பத் தங்களை ஏமாற்றுகிறார் என்று தெரிந்து உதவியாளாய் இருக்கும் மைக்கேல் அவரை ஜெயிலில் மாட்டிவிட்டு, சீஸிங் தாதாவாகிறார். அவருக்கும் ஒர் அப்பர் மிடில் க்ளாஸ் பெண்ணான ரேஷ்மிக்கும் காதல். இன்னொரு பக்கம் எலிசெபத் மகாராணியின் வைர முட்டை, அதை விலை பேசும் பெண். அதை ஆட்டையைப் போட முயற்சி செய்யும் இன்னொரு  பெண் தலைமை கும்பல், கொலை, திரும்பி வரும் சம்பத், மைக்கேலை பழிவாங்க அவர் சீஸ் செய்யும் பென்சை திருடி விற்பது, அதனால் ஹீரோயினை ஹாஸ்டேஜாக வைத்துக் கொண்டு காரை கொடுத்துட்டு பொண்ணை தூக்கிட்டு போ எனும் வில்லன் என விறுவிறுப்பு பஞ்சம் இல்லாத கதை களன் எல்லாம் இருந்தும், ஹைஸ்பீட் ஷாட்கள், க்ரைம் பேக்ட்ராப், பூப்போட்ட சட்டை, பின்னணியில் லைட்டாய் லட்டினோ, டைப் டடங்..டடங் இசை என்று அமைத்தால் அது கல்ட் பிலிம் ஆகிவிடுமேன்ற கட்டாயம் இல்லை.  நல்ல ஸ்டைலிஷ் மேக்கிங் இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிகரம் தொடு
விக்ரம் பிரபுவின் அடுத்த த்ரில்லர். தூங்காநகரம் கொடுத்த கவுரவ் நாராயணின் படம். அப்பா, மகன் செண்டிமெண்ட். அப்பாவின் ஆசைக்காக போலீஸ் ஆக ட்ரைனிங் போவதும், இன்னொரு பக்கம் பேங்க் ஆபீஸராக ஆசைப்பட்டுக் கொண்டு இரண்டு பக்கமும் வலிக்காமல் எஸ் ஸாக நினைக்கும் விக்ரம் பிரபு. எப்படி இண்ட்ரஸ்டே இல்லாத போலீஸ் வேலையில் கலங்கடிக்கும் ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்கிறார்? அதற்கு காரணம் என்ன? என்பதுதான் கதை. முதல் பாதியில் ஆங்காங்கே ஸ்பீட் ப்ரேகர்களாய் காதல் காட்சிகள் வந்தாலும், சாகப் போற நேரத்தில் விமானத்தில் பக்கத்திலிருக்கும் பெண்ணை முத்தமிடுவது சுவாரஸ்யம்.  இரண்டாம் பாதி முழுவதும், ஏடிஎம் வில்லன், அப்பாவின் உயிர் ஆபத்து, விக்ரம்பிரபுவின் கோபம், எல்லாம் சேர்ந்து விறு விறு க்ளைமாக்ஸை கொடுத்திருக்கிறார்கள். இமான் இசையில் கானா பாட்டும், பிடிக்குதேவும் மட்டும்  பிடிக்குது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
வானவராயன் வல்லவராயன்
ஆண்பாவம் படத்தின் உட்டாலக்கடி.  நீ மட்டும் என் அம்மாவ கட்டிக்கலாம், நான் உன் அம்மாவ கட்டிக்க கூடாதா? என்ற டயலாக்குக்கு ஈடாய் ”பேசாம நாம அம்மாவுக்கு மட்டுமே பொறந்திருக்கலாம்டா” என்ற டயலாக் தான் லேட்டஸ்டாய் இருக்கிறது. மற்றது எல்லாம் ஆண்பாவம் காலத்து அதே கதை திரைக்கதை வசனம் இயக்கம் தான். க்ளைமாக்ஸில் சந்தானம் வந்து காப்பாற்றுகிறார். யுவனின் இசையில் ரெண்டொரு பாடல்கள் சுவாரஸ்யம். கோயமுத்தூர், பொள்ளாச்சியில் நடக்கும் கிராமத்து கதை. கோவை சரளாவைத் தவிர யாருமே கோவை பாஷை பேசுவதில்லை.ஸோ.. இக்கதைக்கு முக்கியமான நேட்டிவிட்டி மிஸ்ஸிங்..
@@@@@@@@@@@@@@@@@@@@@
விமர்சன இம்சைகள்
//முதல் கொலைக்காட்சிக்கு ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ என்ற சிவாஜிகணேசன் செண்டிமெண்டெல் பாட்டை இணைத்ததிலிருந்தே சந்தோஷ் நாராயணனின் ரகளை ஆரம்பித்துவிடுகிறது.//
பாராட்டணும்னு முடிவு பண்ணியாச்சு பாராட்டட்டும். நிஜமாவே பாராட்ட ஆயிரம் விஷயம் இருக்கு. ஆனால் சினிமாவில் யார் யார் எந்தெந்த வேலையை செய்வார்கள் என்று கூட தெரியாம, இருண்ட நகைச்சுவை, கெக்கிலின்னு எல்லாம் நாலைஞ்சு உட்டாலக்கடி வார்த்தைய வச்சிட்டு

இவங்க எல்லாம் விமர்சனம் எழுதி.. அதை படிச்சி.. அந்த பாட்டை சீனில் வர வழைத்தது இசையமைப்பாளரா? அல்லது அப்படத்தின் திரைக்கதை, எழுதி இயக்கியவரா? முடியலை.. தயவு செய்து லிங்க் கேக்காதீங்க. தேவையில்லாம ஹிட் ஏறி.. நாம கரெக்டாத்தான் எழுதியிருக்கோம்னு நினைச்சி இன்னும் நாலு கெக்கிலி புக்கிலி கட்டுரை எழுதிரப் போறாரு..

@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
  • ஆளுமை என்பது அடிமைகளை விரும்பும் மனப்பிழற்வு
    • பைனாஸியர்கள் எல்லாரும் தயாரிப்பாளர்கள் இல்லை
    • மனசுக்குள்ள ஆயிரம் குறையும், சந்தேகத்தையும் வச்சிட்டு பழகுறவங்களை பார்த்தா பாவமா இருக்கு
      • மனைவியின் பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்காக போலீஸ்கார் வந்திருந்தார். பேர் கேட்ட தொனியில் கம்பீரம் என்று நினைத்து மிரட்டல் இருந்தது.#அவதானிப்பூஊஊ
      • பாத்ரூமுக்கு ஒண்ணு, கக்கூஸுக்கு ஒண்ணுன்னு ரெண்டு கலர்ல வந்திருக்கு ஹார்பிக். போகிற போக்குற ஹால், கிச்சனுக்கு, வாசலுக்குனு தனியா விப்பாங்கபோல
          • என்ன ஐ போனு, என்ன செலவு, என்னா மார்கெட்டிங்.. அந்த போனுல இருக்கிற எல்லாத்தையும் யூஸ் பண்ணவன் ஒருத்தனாவது இருக்கானா ஒலகத்துல.#காண்டு
          போனே இல்லாதவன் போனைப் பார்த்தா ஐ போனுன்னுதான் சொல்லுவான். ரொம்பத்தான் பீத்திக்கிறாய்ங்கப்பா..
            • ஐ போன் 6க்கு ப்ரீ ஆர்டர் எடுக்குறாங்களாம். அன்புள்ளம் கொண்ட பெரியோர்களே தாய்மார்களே.. அண்ணன் பேருக்கு ஒண்ணு புக் பண்ணுங்க பாப்போம்.
              • போன் ரிலீஸாவுறத பார்குறத ஒரு பெரிய விஷயமா பேசுற அளவிற்கு அவங்க மார்கெட்டிங் இருக்கு. ம்ஹும்.
                • நேர்மைங்கிறது அவங்கவங்க பாக்கிற பார்வையில தான் இருக்கு.
                  • எங்களுக்கு நல்ல குடும்பத்துலேர்ந்து பொண்ணு வேணும்.நல்ல குடும்பங்கிறதுக்கு ஏதாவது கிரிஸில் ரேட்டிங் இருக்கா?#கல்யாணமாலை
                    • பேப்பரில் வரும் கள்ளகாதலிகள் போட்டோவை பார்க்கும் போது காதலர்களை நினைத்து பாவமாயிருக்கு. இவங்களுக்காகவான்னு தோணுது.
                      @@@@@@@@@@@@@@@@@@@@@
                • கேட்டால் கிடைக்கும்
                • இதை தாரக மந்திரமாய் வைத்துக் கொண்டு நானும் சுரேகாவும் எங்கேயும் எப்போது எங்கள் உரிமைக்காக போராடுவோம். சமயங்களில் நேரிடையாய் சந்திக்கும் போது நடந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வோம். அந்த பகிர்தல் மேலும் எங்களின் உரிமை கோரல் விஷயத்தை தூண்டும் கிரியா ஊக்கியாய் அமைந்தது. அதை உணர்ந்ததன் மூலமாய் ஏன் நாம் இதை தொடர்ந்து ஒர் இயக்கமாய் ஆரம்பிக்க கூடாது என்று தோன்றியது. அது முதல் கேட்டால் கிடைக்கும் என்கிற தலைப்பில் முகப்புத்தகத்தில் ஒர் குழு ஆரம்பித்தோம். சுமார் பத்தாயிரம் உறுப்பினர்கள் அதில் சேர்ந்தார்கள். தொடர்ந்து நாங்கள் டாஸ்மாக்கில் ஆரம்பித்து கடைத்தெருவரை போராடிய போராட்டத்தை எழுத ஆரம்பித்தோம். அது மெல்ல மெல்ல மக்களிடையே பரவி கேட்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளித்து, அவர்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு சமுதாயத்தை தனியொரு ஆளாய் திருத்த முடியாது எல்லாரும் திருந்தட்டும் நாம திருந்துவோம் என்றில்லாமல் சமுதாயத்தில் நானும் ஒருவன் நான் மாறினால் ஒவ்வொருவராக மாறுவார்கள் என்ற நம்பிக்கையை விதைத்ததன் மூலமாய் ஒவ்வொரு நாளும், கேட்டால் கிடைக்கும் குழுவில் நான் இந்த உரிமையை கேட்டேன், எம்.ஆர்.பிக்கு மேல் காசு கேட்டவர்களை தட்டிக் கேட்டு காசை திரும்பி வாங்கினேன் என்கிற போஸ்ட்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. உதாரணமாய் செந்தில்குமாரின் லீகல் உரிமை கோரல்கள் ஒர் சான்று. சரவணகுமார் எனும் திருப்பூர் நண்பர் திருப்பூர் அதனை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் தனக்கு வர வேண்டிய உரிமைகளை பத்து பைசா லஞ்சம் கொடுக்காமல் வாங்கிக் கொண்டுதானிருக்கிறார். அதை பகிர்ந்து கொண்டும் இருக்கிறார். இன்று அத்தனை புட் கோர்ட்டுகளிலும், குடிக்கும் தண்ணீர் கண்களில் படாமல் வைத்திருந்தவர்கள் கண்ணில் படும் இடங்களில் வைத்திருக்கிறார்கள். பேமில் இலவச குடிநீர் என்று குடிக்கிறவர்களை அவமானப் படுத்தும் படியான வார்த்தை போட்டு தண்ணீர் பாட்டிலை விற்க நினைத்தாலும், குடிநீர்  அங்கே கிடைக்கிறது. எல்லா கே.எப்.சியிலும், குடிநீர் கேட்டால் பாட்டில் தான் வாங்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லாமல் குடிநீர் கொடுக்கிறார்கள். இப்படி நாம் கேட்க.. கேட்க, நிச்சயம் எல்லாம் மாறி கொண்டுதானிருக்கிறது என்பதை நம்புகள் கேட்டால் கிடைக்கும் என்று உங்கள் அடிப்படை உரிமையை கேளுங்கள். அதனால் தான் இன்று போரம் மாலில் புட் கோர்ட்டில் தனி குடிநீர் ப்ளாண்டே போட்டிருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் புட் கோர்ட் உணவுக்கான கார்டு இலவசம். அது மட்டுமில்லாமல் மீதக் காசை கார்டை திருப்பிக் கொடுத்தால் கொடுத்துவிடுகிறார்கள். கேளூங்க.. கேளுங்க.. சற்று உரத்தே கேளுங்க கிடைக்கும்.. நிச்சயம் கிடைக்கும்
                • @@@@@@@@@@@@@@@@@@@@@@

            • பழசுதான் ஆனாலும் இண்டர்ஸ்டிங்
            • @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
            • அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்தை அடுத்து பாராட்டப் பட வேண்டிய இன்னொரு விஷயம் மினி பஸ். ரெகுலர் ப்ரீக்குவென்ஸியில் ஊருக்குள் சென்று வரும் பஸ்கள். அதுவும் கை காட்டினால் வண்டியை நிறுத்தி ஏற்றிக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட பெரிய ஷேர் ஆட்டோ. ஐந்து ரூபாய் கொடுத்தால் போதும். எங்கள் ஏரியாவில் கிண்டியிலிருந்து அசோக்நகருக்கு மேற்கு சைதாப்பேட்டை லோக்கலுக்கு எல்லாம் வந்து போகிறது. எப்போது வண்டி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். சைதாப்பேட்டையிலிருந்து டிநகருக்கு பஸ் ஸ்டாண்ட் வரை மினி பஸ் விட்டால் இந்த ஆட்டோ கொள்ளையை ஒழிச்சிரலாம் என்று சொல்கிறார்கள் பெண்கள். மைண்டுல வச்சிக்கோங்க.. ஆட்டோ கொள்ளை இன்னும் ஒழியலை..
            • @@@@@@@@@@@@@@@@@@@@@
            • அடல்ட் கார்னர்
            • Three guys had to spend the night at a hotel and share a double bed. 
            • In the morning, the guy on the right said "I had this great dream last night, that a girl gave me a handjob" The guy on the left replied "That's weird so did I"
              Finally, the guy in the middle said "Lucky for you guys...I only dream't I was skiing"
              • கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//இவங்க எல்லாம் விமர்சனம் எழுதி.. அதை படிச்சி.//
இந்த அணுகுமுறை சரி அல்ல என்பது என் கருத்து