Thottal Thodarum

Sep 29, 2014

கொத்து பரோட்டா - 29/09/14

  • 85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்
டெல்லி ஜூவில் புலிக்கு இறையான சிறுவனைப் பற்றிய செய்தியையும், வீடியோவையும் பார்த்த மாத்திரத்தில் அரை மணி நேரம் சே.. ஏண்டா பார்த்தோம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். அடுத்த சில மணி நேரங்களில், ஜு அதிகாரிகளைப் பற்றியும், இதை வீடியோ எடுத்தவர்கள் மனநிலை பற்றியும், கீழ இருக்கிற மண்ணை எடுத்து புலி கண்ணுல தூவியிருக்கலாம், புலியின் இரண்டுகண்கள் மிக அருகில் தான் இருந்திருக்க, கைகளால் அதை குறி பார்த்து குத்தியிருக்கலாம் என்றெல்லாம் ஆளாளுக்கு புலியிடமிருந்து தப்பிப்பதில் டாக்டரேட் வாங்கியவர்கள் போல படமெல்லாம் போட்டு விளக்க ஆரம்பித்துவிட்டார்கள். தொடர்ந்து ரெண்டு அடி ரோட்டுல நாய் துரத்துனா என்ன பண்றதுன்னு தெரியாம பின்னங்கால் பிடறி பட ஓடி வர்றவங்க. புலிகிட்டேயிருந்து தப்பிக்க என்ன பண்ணனுங்கிறது எனக்கு தெரியாது. ஆனால் நாய் கிட்டேயிருந்து தப்பிப்பது எப்படின்னு தெரியும். துரத்துற நாய் பார்த்து ஒரு செகண்ட் அப்படியே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தாலும் சரி, நடந்து போனாலும் சரி திரும்பி நின்னா அது பாட்டுக்கு குலைச்சிட்டே ஓடிரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@



தீர்ப்ப்பு அன்று மதியம் மூன்று மணி வரை சென்னையில் வளசரவாக்கம், சாலிகிராமம் ஏரியாவில் எந்த பிரச்சனையும் இல்லை. மூணு மணிக்கு மேல்தான் சரவணபவனில் சாப்பிடவே போனேன். ஐந்தரை மணி வாக்கில் கொஞ்சம் கொஞ்சமாய் கடைகள், தியேட்டர், பெட்ரோல் பங்குகள் என கடைகளை மூடத் தொடங்கினார்கள். ஆங்காங்கே சின்னச் சின்ன இடங்களில் பத்திருபது பேர் அதிமுக கொடி ஏந்தி போலீஸ் பந்தோபஸ்துடன் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். டிவியில் தீர்ப்பு வெளியான நேரத்தி உணர்ச்சிவசப்பட்டவர்கள் காஞ்சிபுரத்தில் பஸ் எரிப்பு, கடை உடைப்பு போன்ற விஷயங்களில் ஈடுபட்டதை திரும்பத் திரும்பக் காட்டியே ஊரெல்லாம் கலவரம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று எனக்கு தோன்றியது. அந்த மதிய வேளைக்கு பிறகு இரவில் ஏதும் அசம்பாவிதம் நடந்ததாய் செய்திகள் இல்லை. கடைகளை மூடச் சொல்லி ப்ரச்சனை செய்ததை இல்லையென்று சொல்ல முடியாது. அதெல்லாம் நடக்கலை என்றால் அப்புறம் என்ன தீர்ப்பு? கட்சி எல்லாம். நான் இதை ஸ்டேடஸாய் போட்ட போது, ஊரைச் சுற்றிக் கொண்டுதானிருந்தேன். இரவும் ஒர் நெடிய வாக்கிங் போய்விட்டுத்தான் வந்தேன். மற்ற ஊர்களில் எப்படியோ, சென்னையில் ஊர் வெறிச்சோடிப் போகும் அளவிற்கு காலியானதை தவிர, எல்லாம் சுகமே என்றுதான் எனக்கு தோன்றியது.டீவியில் ஒர் கலவரக் காட்சியில் பெரியவர் ஒருவர் வேலை மெனக்கெட்டு தடுப்பு மீடியன் ஒன்றை கையால் தள்ளிவிட்டு, மீண்டும் குனிந்து தள்ளிக் கொண்டே ரோட்டின் கடைசி வரை ஓட்டுக் கொண்டு போனார். வயசு ஆக ஆக குழந்தைத்தனம் வரும் என்று சொல்வது நிஜம் தான் போல.
*****************************
மெட்ராஸ்
அட்டக்கத்தி பார்த்த போது அப்படி சந்தோஷப்பட்டேன். இவ்வளவு இயல்பாய் வட சென்னை மக்களை கண் முன் கொண்டு வர முடியுமா?என்று. அதை விட ஒர் படி மேலே போய் என்னை கட்டிப் போட்டுவிட்டார் இயக்குனர் பா.ரஞ்சித். என்னா ஒர் நேர்த்தி. என்னா ஒரு கன்விக்‌ஷன். படம் ஆரம்பித்த முதல் ஷாட்டிலேயே கதையை சொல்ல ஆரம்பித்து, இடைவேளை வரை அங்க இங்க திரும்ப விடாம அப்படியே நம்மை கட்டிப் போடும் ரியலிஸ்டிக் மேக்கிங். முக்கியமாய் அன்பு - மேரியாகவே வாழும், கலையரசன், ரித்விகாவின் நடிப்பு. என்னா ரொமான்ஸு, காதல், காமம், ஊடல், அன்பு. அந்த பொண்ணு கண்ணுல எல்லாமே பொங்கி வழியுது. அஃதே கலையரசன் கண்களிலும், அதே போல ஜானி கேரக்டர். படபடவென பேசும் மனநிலை சரியில்லாத அந்த ஏரியாவின் மனசாட்சி போன்ற கேரக்டர். சுவரில் பொம்மையாய் இருந்தாலும், படத்தில் ஒர் கேரக்டராகவே வாழும் ஜெயபாலன். கார்த்தியின் அம்மா, பாட்டி, காத்ரீனின் அப்பா, மாரி, பெருமாள்,  அந்த டான்ஸ் க்ரூப் பசங்க என தேடித் தேடிப் பிடித்திருக்கிறார்கள். அவ்வளவு இயல்பு.  படத்தில் வரும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட அப்படி நடித்திருக்கிறார்கள். முரளியின் ஒளிப்பதிவு அருமை. குட்டிக் குட்டி வீட்டின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் ஷாட்கள், டாப் ஆங்கிள்  இரவுக் காட்சிகள் என படம் நெடுக கேரக்டர்களோடே பயணிக்கிறது. சந்தோஷின் பாடல்களை விட பி.ஜி.எம் அருமை. படம் முடித்து வெளியே வ்ந்து மனதினுள் இசையும் படமும், அசைப் போட வைக்கிறது. படம் நெடுக தலித் அரசியலை முன்னிறுத்தி, அவர்களின் தலைவர்களே எப்படி தன் மக்களை பணம், பதவிக்காக பலி கொடுக்கிறாரக்ள் என்பதையும், ஏமாறும் மக்களையும் கண் முன் நிறுத்தியிருக்கிறார். படத்தில் ஒர் இடத்தில் கார்த்தி குடித்துவிட்டு வருவார். அவ்வளவே.. வடசென்னை படமென்றாலும் எல்லோரும் டாஸ்மாக்கில் குடிப்பதை கொண்டாட்டமாய் காட்டவில்லை. கதையென்று பார்த்தால் நட்பு, அரசியல், துரோகம், பழிவாங்கல், கொஞ்சமே கொஞ்சம் காதல் என்ற வரையரைக்குள் தான் இருக்கிறது, ஏற்கனவே பார்த்து பழகிய  விஷயங்கள்தான் திரும்பத் திரும்ப வருகிறது, அன்புவுக்கும், காளிக்குமான நட்பின் இறுக்கத்தை வெறும் டயலாக் மூலமே சொன்னது, ரியலிஸமாய் இருந்த மேக்கிங் இரண்டாம் பாதியில் சினிமாவாய்  போனது இதையெல்லாம் மீறி படத்தை சொன்ன விதத்திற்காகவும், தன் அரசியல் நிலையை மிக அழகாய் திணிக்காமல் அதே சமயம் தைரியமாய்  சொல்லிய விதத்திற்காகவும், சினிமா பார்ப்பதை ஒர் இனிய அனுபவமாய் கொடுத்ததற்காகவும் இயக்குனர் ரஞ்சித்தை உச்சி முகர வேண்டும்.
********************************
கோணங்கள்
வலைப்பூ எழுத்துக்களின் ரீச் ஒருவிதம் என்றால், வார மாத இதழ்களின் ரீச் வேறு விதம். அதே தின இதழ்களின் எழுதுவதும், அதன் ரீச்சும் பெரியதாகவே இருக்கிறது. கோணங்கள் என்கிற தலைப்பில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஹிந்து டாக்கீஸ் இணைப்பில் கட்டுரை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இரண்டு வாரம் முடிந்திருக்கிறது. நேற்று சாலிகிராமத்தில் வண்டியில் போய்க் கொண்டிருந்தேன் சிக்னலில் ஒருவர் “சார்.. நான் மூர்த்தி ப்ரெண்டு.. ஹிந்துவுல படிச்சேன் சூப்பரா இருக்கு” என சிக்னல் இடுக்கில் பாராட்டிவிட்டு என் நன்றியை கூட எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டார்.
@@@@@@@@@@@@@@@@@@@@
ஜீவா
ரஞ்சி ட்ராபியிலிருந்து, இந்திய கிரிக்கெட் செலக்‌ஷன் வரை பார்பன அரசியல்தான் வெல்கிறது. மற்றவர்களுக்கு வாய்ப்பே கொடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ஒர் எண்டர்டெயினர் படம் தான் ஜீவா. ஆனால் இக்கருத்தை சொல்ல ரொம்பவும் டீடெயிலாக ஆராய்ச்சி செய்யாமல், ஜஸ்ட் லைக் தட் அதை க்ளைமாக்சில் வைத்துக் கொள்ளலாம் என்று, ஸ்கூல், காதல், ரொமான்ஸ், பாடல்கள், டாஸ்மாக், குத்து பாட்டு, என அங்கே இங்கே சுற்றிவிட்டு, ஷங்கர் பட செகண்ட் ஆப் கதை போல ஒர் சீரியசான விஷயத்தை சொல்லி, எளியவன் எப்படி வலியவர்களின் சதியை மீறி வென்றான் என்பதை ஒர் இஸ்லாமிய கிரிக்கெட்டர் உதவி எனும் டெம்ப்ளேட்  எமோஷனை வைத்து உட்டாலக்கடி செய்திருக்கிறார்கள். மதியின் அற்புதமான ஒளிப்பதிவு, இமானின் இளையராஜா ட்யூன்கள். அழகோ அழகான ஸ்ரீதிவ்யா, லோக்கல் க்ளப்பில் ஒப்புக்கு சப்பாணியாய் கொஞ்சம்கூட லாஜிக் இல்லாமல் காமெடிக்காகவே வரும் சூரி, நண்பனாய் வந்து தற்கொலை செய்து கொள்ளும் கேரக்டரின் சிறப்பான நடிப்பு, அம்மா இல்லாத பையன் பக்கத்து வீட்டு குடும்பத்தில் ஒருவனாய் வளரும் களம், அவர்களின் அன்பு, இவ்வளவு சீரியசான் விஷயத்தை தைரியமாய் கையாண்ட விதம், இவையெல்லாம் இருந்தும் சரியாய் எடுக்காத மேரி கோம் போலத்தான் இருக்கிறது ஜீவா.
*************************************
என் ட்வீட்டிலிருந்து
Anthaku mundhi aa tharavartha woww how i missed this movie?

நீதி வென்றதுனு அறிக்கை விடற கட்சி தலைவர்கள் எல்லாம் இருபது வருஷத்துக்கு முன்னாடி எம்பூட்டு சொத்து வச்சிருந்தாங்கன்னு யோசிக்கோணும்.

ஒரு பெரியவர் ரோட் ப்ளாக் பண்ண வச்சிருந்த மீடியனை தள்ளி தள்ளி ரோட்டு கடைசி வரைக்கும் ஓட்டிட்டு போனாரு சின்ன வயசு நாஸ்டால்ஜியா போல.

டிவியில் போடப்படும் காட்சிகள் தேவையில்லாத பயத்தை ஏற்படுத்துகிறது. வெளியே அவ்வளவாக கூட்டமில்லை. மற்றபடி எல்லாம் கைக்குள் அடக்கமாய்தானிருக்கு

புதுசா ஆரம்பிக்கவிருந்த புதிய நியூஸ் சேனல் இன்னைNக்கு லாஞ்ச் பண்ணியிருந்தா பெருசா கவனிக்கப்பட்டிருக்கும் மிஸ் பண்ணிட்டாய்ங்க..‪#‎News7‬

அம்மா சிமெண்ட் வாங்க ஏகப்பட்ட இடத்துல கையெழுத்து வாங்கணும் போல. அப்ப ஒண்ணியும் பிரச்சனை இல்லை மார்கெட் விலை கிட்ட வந்திரும்

கலையரசனும் - ரித்விக்காவும் எனக்கு அன்பு - மேரியாக மட்டுமே தெரிகிறார்கள்.அந்த ரொமான்ஸும், காதலும், ஊடலும் வாவ்..மெட்ராஸ்

புலியிடமிருந்து தப்பிக்க வழி சொல்லும் அத்தனை பேரும் ரோட்டில் துரத்தும் நாயிடமிருந்து தப்பித்து டெமோ காட்டினால் நல்லது

ஒரு கோடி ரூபா இழப்பீடு கொடுத்திட்டா ஜாமீன்ல வெளிய வந்திரலாம். இன்னும் சில கோடி கொடுத்திட்டா மொத்தமாவே வந்திரலாம்.சட்டம்#முகலிவாக்கம்

நம்மூரை பொறுத்தவரைக்கும் சைக்கிள்காரனே தானா கார் முன்னாடி குறுக்க விழுந்தாலும் கார்காரன் மேலதான் தப்பு.- ஜூ -புலி-பையன்

எதை செய்தாலும் நேர்த்தியாய் செய்ய முடிந்தால்தான் செய்யவே ஆரம்பிப்பேன் என்பவன் எதையும் செய்ய முற்படுவதேயில்லை‪#‎அவதானிப்பூஊஊ‬
###################################
அதுக்கு முந்தி அதுக்கு அப்புறம் என்கிற தலைப்பில் ஒர் தெலுங்கு படத்தை பாதி படத்திலிருந்து ஜீ தெலுங்கில் காலையில் பார்த்தேன். செம்ம க்யூட்டாக இருந்தது. அப்பா அம்மாவுக்கு இடையே ப்ரச்சனையுள்ள ஹீரோயின். அப்பாவின் பழைய காதல், அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையே ப்ர்ச்சனை என இண்டிபெண்டண்டாக வாழும் ஹீரோ. இருவருக்கும் காதல். அவரவர் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் காரணமாய் ஏன் நாம் இருவரும் லிவ் இன்னில் வாழ்ந்து பார்க்கக்கூடாது என்று வாழ ஆரம்பிக்கிறார்கள். பின் என்ன ஆனது என்பதுதான் கதை. ஆண் பெண் உறவுகளின் நெகிழ்ச்சியான தருணங்கள் முதல் அபத்தமான தருணங்கள் வரை முடிந்தவரை சுவாரஸ்யமாய் சொல்லியிருந்தார்கள். முதல் முக்கா மணி நேர படத்தை தேடி பார்ப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன். 
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Sex jokes - Anniversary
A man asks his wife during a 25 marriage anniversary:

- Darling, have you been unfaithful to me?

- Yes, honey, three times.

- When was the first time?

- Do you remember the situation when you went to a bank, but nobody would give you any credit? And finally the CEO of the bank himself signed the credit allowance to you.
- Thanks, darling. And when was the second time?
- Do you remember when you were very ill and nobody would agree to make the surgery for you? And finally the head of the department took care of you?
- Thank you darling, you saved my life. And with whom have you been unfaithful to me for the third time?
- Do you remember when you were a candidate to the position of city mayor and you were missing 36 votes?
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

Ramesh said...

சாலிகிராமமும் சென்னையும் மட்டுமே தமிழ்நாடு இல்லை. இராமநாதபுரம், மதுரை போன்ற இடங்களில் வன்முறை அளவுக்கு அதிகமாகவே இருந்தன.

Paraashakthi said...

ஒங்க படத்த்துக்கு எங்க பிரட்ச்னை வந்திருமோனு பயத்துல ஜால்ரா நல்லா போடுறீங்க தலைவா - அந்த பயம் இருக்கட்டும்

Unknown said...

The sequence involving Anbu and Mary was fantastic. The group of friends, their way of approach to simple things, comments, talk etc have been put up in an excellent fashion...... I am not a native of chennai, but a big group of guys from Royapuram are so close to me.....I saw them through Karthi's friends in this movie......

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் புரோட்டா எப்பவும் போல செம...

அந்தத் தெலுங்குப் படத்தை தேடிப் பார்க்கணும் அண்ணா...