Thottal Thodarum

May 25, 2015

கொத்து பரோட்டா - 25/05/15

90 லட்சம் ஹிட்ஸுகளை  அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர்
நண்பர் ஜெயராம் கடலூரில் பிரியாணி மற்றும் கடல் வாழ் உணவகம் ஒன்றை திறந்திருக்கிறார் என்று சொல்லியிருந்தார். பாண்டி சென்ற போது அவரை சந்தித்துவிட்டு வந்தேன். முதல் முதலாய் அவரை சந்தித்தாலும், வருடங்கள் பழகியது போல் அன்பை பொழிந்தார். அவரது கடை பிரியாணி இரவு நேரத்தில் இல்லையாதலால், சிக்கன் 65யும், ஆனியன், சிக்கன் சூப்பும், சங்கராவும் பொரித்தெடுத்து கொடுத்தார். வாவ்.. அது பற்றி தனியே சாப்பாட்டுக்கடையில் விரைவில். அவரது கடை மாஸ்டர் தெலுங்கு பட ஹீரோ போல இருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பாண்டியில் பெட்ரோல் போட்டால் ஒரு நாலு ரூபாய் மிச்சப்படுத்தி நம் பொருளாதாரத்தை சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்து பாண்டியினுள் நுழைந்ததுமே இருந்த பெட்ரோல் பங்கில் நுழைந்தோம். வண்டியில் பாதி பெட்ரோல் இருந்ததால் மேலும் டாப் அப்பாக 600 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு, கார்டை கொடுத்தால், 750 ரூபாய்க்கு அதை சார்ஜ் செய்திருந்தார்கள். திரும்ப கேட்டதற்கு “750 இல்லையா? “ என்று பெட்ரோல் போட்டவனே சந்தேகமாய் கேட்டு மிச்சம் நூறு ரூபாயை திரும்பக் கொடுத்தான். எனவே பாண்டி டே அவுட் போகும் மக்கள் உசாராக இருக்கவும். எங்கள் நண்பர் ஓ.ஆர்.பி அமெரிக்கா, இலங்கை, பர்மா, சீனா ஆகிய நாடுகளுக்கெல்லாம் சென்று திரும்பிய மகா உசார் பேர்விழி என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். ;)
@@@@@@@@@@@@@@@@@@
அதிமுக தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க என்ன நிர்பந்தம்?. எவ்வளவு பெரிய மக்கள் சக்தி, அலை எனக்கிருக்கிறது என்பதை காட்டவா? அப்படியான எண்ணமென்றால் நிச்சயம் சென்னை கடந்த வாரம் அடைந்த மகா மோசமான அக்னி நட்சத்திர ட்ராபிக் ஜாமினால் ஒரு பத்து சதவிகிதம் நற்பெயரை இழந்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. மேலும் பத்து சதவிகிதம் நாஞ்சில் சம்பத்தின் “என்ன கைய பிடிச்சி இழுத்தியா?” ரக தந்தி டிவி பேட்டி. மாபெரும் மெஜாரிட்டியை கொடுத்தால் எப்படியெல்லாம் மக்கள் மதிக்க, மிதிக்க, நசுக்கப்படுவார்கள் என்பதற்கு இவரது பேட்டி ஒரு சாட்சி. கொஞ்சம் ஓவரா சொம்பு அடிக்கிரார்மா.. பார்த்து ஏதாச்சும் செய்யுங்க.. மிடியலை. இல்லாட்டி என்ன குடியா முழுகி போயிரும்? என்று கேட்டீர்களானால் ஓகே. ரைட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் தென் மாவட்டத்தில் அதிமுக கட்சிப் பொறுப்பில் உள்ள நண்பர் ஒருவரிடம்  நாஞ்சில் சம்பத் பேட்டி பற்றி கேட்ட போது. என்ன கோவம் வந்து என்னங்க? எதிர்த்து நிக்க ஒரு கட்சியில்லை. சும்மாவே ஆடுவோம் இப்ப சலங்க கட்டி ஆட மாட்டோமா? என்றார். அது என்னவோ உண்மை என்றே தோன்றுகிறது. இன்னும் வருஷமிருக்கு ஏதாச்சும் செய்யுங்கப்பா. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
டிமாண்டி காலனி படம் பார்பதற்காக ஃபேம் ஐநாக்ஸில் டிக்கெட் வாங்கப் போயிருந்தேன். இருந்தது. ஆனால் பத்து ரூபாய் டிக்கெட் மட்டுமே இருப்பதாகவும் 120 ரூபாய் ஆகுமென்றார். அது எப்படிங்க? என்று கேட்டதற்கு பத்து ரூபாய்க்கு கொடுக்கிற டிக்கெட்டெல்லாம் காலையிலேயே கொடுத்திட்டோம் இது பேக்கேஜ் டிக்கெட் 120 கொடுத்தா பாப்கார்ன், கோக் கொடுப்போம் என்றார். “சாரிம்மா நான் டயட்டுல இருக்கேன் அதனால கோக், பாப்கார்ன் சாப்பிட மாட்டேன். “ என்றேன். அவர் என்ன செய்வது என்று பதில் சொல்ல தெரியாமல் முழுக்க, “வேணும்னா.. கோக், பாப்கார்னுக்கு பதிலா, நாலு வாட்டர் பாட்டில் கொடுங்க வாங்கிக்கிறேன்” என்றேன். நிச்சயம் தர மாட்டார்கள். ஏனென்றால் அது எம்.ஆர்.பியில் வருவது. பவுண்டேன் கோக்கோ, பாப்கார்னோ, இவர்களால் தயாரிக்கப்படுவது. லாபம் அதிகம். குறைந்தபட்ச விலை என்று பெரிய அளவில் ஒன்றும் கிடையாது. அவள் முழித்தாள். வேணும்னா உங்க தியேட்டர் மேனேஜருக்கு போன் போட்டு கேளுங்க என்றேன். போன் போட்டாள். எதிர்முனையில் பேச ஆரம்பித்த போதே.. “ஏம்மா இப்படி ஏமாத்துறீங்க. நான் தான் 10 ரூபா டிக்கெட்டுக்கு 120 கொடுத்து வாட்டர் பாட்டில் வாங்கிக்கிறேன்னு சொல்றேன்.. ஆனா தர மாட்டேனு சொன்னா என்ன அர்த்தம். பத்து ரூபா டிக்கெட்டை கட்டாயப்படுத்தி பெப்சி, கோக் விக்குறதே தவறு. அதெப்படி நீங்க கட்டாயப்படுத்தலாம்?.” என சத்தமாய் பேசினேன். அந்தப் பெண் போனை வைத்துவிட்டு, டிக்கெட் பிரிண்ட் எடுத்து, கையில் கொடுத்து “பத்து ரூபா மட்டும் கொடுங்க “ போதும் என்றார். வெற்றி.. கேட்டால் கிடைக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Tanu Weds Manu Returns
நான்கைந்து வருடங்களுக்கு முன்னால் ஹிட்டடித்த படம். வழக்கமாய் ஆக்‌ஷன் படங்களுக்கு ரெண்டாவது பகுதி வந்து பார்த்ததுண்டு. எனக்கு தெரிந்து இந்திய திரையுலகில் முதல் முறையாய் ட்ராமா படத்துக்கு ரெண்டாவது பார்ட் வந்திருக்கிறது.  முதல் பகுதியில் எல்லா ப்ரச்சனைகளையும் தாண்டி கல்யாணம் செய்து கொள்ளும் தனுவும் மனுவும் தற்போது லண்டனில். எலியும் பூனையுமாய். முதல் காட்சியிலேயே டாக்டர் கவுன்சிலிங்கில் இருவரும் ஒருவரை ஒருவர் கடித்துக் குதறிக் கொள்கிறார்கள். முடிவு மனுவான மாதவனுக்கு மெண்டல் அசைலமில் ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டுமென்று சொல்ல, அங்கிருந்து கிளம்பி இந்தியாவுக்கு வருகிறார் தனு கங்கணா.  ட்ரீட்மெண்ட் முடிந்து வரும் மனு டெல்லியில் மனுவைப் போலவே ஒர் பெண்ணை பார்க்க அவள் மீது காதல் கொள்கிறார். தனுவும் மனுவும் டைவர்ஸ் நோட்டீஸ் கொடுத்துக் கொள்ள, காதல் கணவன் கல்யாணத்தில் முன்னாள் மனைவியின் முன்னிலையில் திருமணம் நடைபெறவிருக்கிறது. பின்பு என்ன ஆனது என்பதுதான் க்ளைமேக்ஸ். சிம்பிளான கதை.  ஆனால் கங்கணா கலக்கி எடுத்திருக்கிறார். மீண்டும் க்யூனின் ராஜ்ஜியம். தடாலடி ஹெப் மனுவாக, கான்பூரில் வந்திரங்கியவுடன், தன் முன்னால் ஃப்ளேமிடன் ரிக்‌ஷாவில் ஏறி என்னை எப்பவாது நினைச்சிருக்கியா? என்று கேட்டு “எப்ப?” என்று கேட்பதில் ஆரம்பித்து, பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை முன் குளித்துவிட்டு டவலோடு பேசுமிடத்தில், தன் கணவனின் புதிய காதலியை பார்த்துவிட்டு, கிண்டலாய் பேசுமிடத்தில், க்ளைமேக்ஸில் தண்ணியடித்துவிட்டு, ஊரில் அலையுமிடத்தில் மனு கங்கணா ராக்ஸ் என்றால், கொஞ்சம் தேங்காய் பத்தை பல்லாய், பாப் தலையுடன், அத்லெட் உடலுடன், மேன்லியாய் ஹரியானா ஆக்ஸண்டுடன் ஒரு மாதிரி சிலுப்பிக் கொண்டே பேசும், தனு தன் பின் தொடரும் போது அவரை மடக்கும் காட்சியிலும், தனு கொடுத்த காதணி, ஓடும் போது தொலைந்து போய்விட, மீண்டும் அதை தேடி அலைந்து மன உளைச்சல் பட்டு, தான் ஏன் இப்படி செண்டிமெண்டலாகிவிட்டோம் என்ற குற்றவுணர்வுடன் அவர் காட்டும் ரியாக்‌ஷன். பின் அதே தோடு கிடைத்த பின் அதை தனுவிடம் திருப்பி கொடுத்துவிடும் காட்சியிலேயே க்ளைமேக்ஸின் லீட் இருக்கிறது. க்ளைமேக்ஸில் தடாலடியாய் ட்ரெடிஷனல் முடிவு தான் என்றாலும், அதை ஏற்றுக் கொண்டு நடந்து வந்து மறைவில் அழும் காட்சி.. வாவ். வாவ்..  கங்கணா ராக்கோ ராக்ஸ்..  தனுவாக மாதவன். செகண்ட் பிடில் போலத்தான் என்றாலும் மீண்டும் ஒரு வெற்றிப் படத்தில் . ஆனந்த் எல்.ராய் ஒரு சக்ஸஸ்புல் இயக்குனர். சாதாரண காதல், ட்ராமாக்களை, சரியான மசாலா விகிதத்தில் கொஞ்சம் ரூரல் இந்தியாவின் பின்னணியை குழைத்து, இழைத்துவிடுகிறார். க்ளைமேக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் காமெடிப்பட ஃபீல் இருந்தாலும், மொத்த தியேட்டரும் கொண்டாடுகிறது. குடும்பம் குடும்பமாய். சமீப காலமாய் இந்தி சினிமா ட்ராமாக்களின் பின் போய்க் கொண்டிருக்கிறது. அதுவும் நல்லதுக்கே.:)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
கடைசில என் பையனிடம் ஐ.பி.எல் முதல் மேட்சின் போது சொன்ன ரிசல்ட். ‪#‎IRocks‬

ராஜாவை உடனடியாய் இண்டர்நெட்டில் பைரஸி விடுகிறவர்கள் மீது கம்ப்ளெயிண்ட் செய்ய சொல்லவும். ஏதாச்சும் நடக்குதான்னு பாப்போம்.

இன்னைக்கு ஏன் யாரும் ஆனந்த கண்ணீர் வடிக்கலை? ‪#‎டவுட்டு‬

நேற்றிரவு சென்னையில் வழக்கமாய் டி.டி. செக் செய்யும் இடங்கள் எதிலேயும் செக்கிங்கே கிடையாது ‪#‎அம்மாரிட்டர்ன்ஸ்‬எஃபெக்ட் போல..

Like to visit Hydrabad. News about heat waves makes me to think twice.. thrice.. .....

அம்மா வர்றாங்கன்னு தெரிஞ்சதும் எஸ்.எஸ்.எல்.சி மார்க்கை கூட கிள்ளிக் கொடுக்காம அள்ளிக் கொடுத்திருக்காங்க அம்மாடா

இல்லாத போதுதான் பலம் தெரியும் ;( ‪#‎பணம்‬
@@@@@@@@@@@@@@@@@@@@@@
கான்ஸ் பெல்டிவலில் இயக்குனர் நீரஜ் க்யான் தன் முதல் திரைப்படமான மசான் எனும் படத்திற்கு விருது வென்றிருக்கிறார். மொத்த விமர்சகர்களும், பார்வையாளர்களும், எழுந்து நின்று தொடர்ந்து ஐந்து நிமிடம் கரகோஷித்து பாராட்டு தெரிவித்திருக்கின்றனர். இவர் அனுராக் காஷ்யப்பின் உதவியாளராய் இருந்தவர். இந்திய ப்ரெஞ்ச் தயாரிப்பான இப்படம் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாக இருக்கிறதாம். வாழ்த்துக்கள் இயக்குனரே.
@@@@@@@@@@@@@@@@@@
சிட்டி செண்டர் ஐநாக்ஸில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து போனால் கவுண்டர் க்யூவில் நின்று டிக்கெட் வாங்கிக் கொண்டால்தான் உள்ளே அனுமதிப்பேன் என்றார்கள். அப்புறம் எதுக்கு  முப்பதித்தி ரெண்டு ரூபா சர்வீஸ் சார்ஜ் கொடுத்து நான் டிக்கெட் புக் பண்ணனும்? என்று நான் கேட்ட கேள்வியின் நியாயத்தை புரிந்து கொண்ட செக்யூரிட்டி, உயர் அதிகாரியிடம் கூட்டிச் செல்ல, நானும் வெயிட் செய்தேன். அவர் வந்த பாடில்லை. இடைவேளையின் போது சந்திப்ப்தாய் சொன்னார்கள். அப்போது வரவில்லை. நல்ல கஸ்டமர் சர்வீஸ். கேட்டால் கிடைக்கும் ஆனால் கேட்கவே வரமாட்டேன் என்கிறார்கள். கேட்க வைக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
 A Dentist Was Caught Having Sex With His Patient. Next Day The Newspaper Headlines Were. "Dentist Caught Filling The Wrong Hole"
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

Unknown said...

Good luck.Naan neraya ketu parthuten.