Thottal Thodarum

Apr 8, 2017

கொத்து பரோட்டா-2.0- 19

கொத்து பரோட்டா -2.0 -19
Hot Girls Wanted
நெட்ப்ளிக்ஸ் லிஸ்டில் கண்ணில் பட்ட டாக்குமெண்டரி படத்தின் பெயர். போர்ன் இண்டஸ்ட்ரி என அழைக்கப்படும் நீலப்படத்தைப் பற்றிய படம் தான் இதும். முன்னரெல்லாம் அம்மாதிரியான படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள் இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் 18 வயதான அமெச்சூர்கள் நிறைய பேர்கேர்ள் நெக்ஸ்ட் டோர்போலத் தெரியும் பெண்கள் நிறைய பேர், கொஞ்சம் கூட யோசிக்காமல் பணத்திற்காகவும், புகழுக்காகவும் நடிப்பதைப் பற்றியும், இம்மாதிரியான அமெச்சூர் போர்னோகிராபி வீடியோக்கள், அதன் பின் இயங்கும் குழுக்கள், என இந்த டாக்குமெண்டரியில் விஸ்தாரமாய் கவர் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் கண்கள் முழுக்க, கனவுடன், நிறைய பணம், விமானப்பயணம், பெரிய ஹோட்டல்கள், அதீத செக்ஸ் பற்றிய எக்ஸைட்மெண்ட் என கண்கள் விரிய ஆயிரம் கதை பேசும் பெண்கள், கொஞ்சம் கொஞ்சமாய் அதனுள் இருக்கும் பிரச்சனைகள், வலி, வேதனை, எல்லாவற்றையும் மீறி இதிலிருந்து வெளியே வர முடியாமல் தடுக்கும் பணம், அது கொடுக்கும் சுதந்திரம், என பேச ஆரம்பிக்கிறார்கள்.

தான் செய்யும் தொழில் வீட்டுக்கு தெரியாது என்று நினைத்துக் கொள்ளும் முட்டாள் தனம், பின்னாளில் அம்மாவுக்கு தெரிந்து அம்மாவுக்கும் பெண்ணுக்குமிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகள் சான்ஸ்லெஸ் காட்சிகள். அப்பெண்ணுடய காதலன், அவளை அப்படியே ஏற்றுக் கொள்ள விழைவதும், அவளை இத்தொழிலிருந்து வெளிவர சொல்லி முடிவெடுக்கச் சொல்ல, அவள் மிகவும் தயங்கி மெசேஜ் அனுப்பும் காட்சி நிதர்சனம். இத்தொழிலில் இருக்கும் பெண்களுக்கு எத்தனை நாள் சர்வைவல் என்று இதன் ஏஜெண்ட்டிடம் பேசும் போது, மேக்ஸிமம் மூன்று மாதங்கள், இன்னும் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போகிறவளாயிருந்தாள் ஆறு மாதம். அதற்கு மேல் மிகவும் கஷ்டம் என்பான். ஆனால் இது அறியாமல் அவர்கள் படும் அவஸ்தைகள் அதை சொல்லுமிடம், அதை ஏற்றுக் கொண்டு அவர்கள் பேசும் காட்சிகள் எல்லாம் நெத்தியடி.  எங்கேயும் நெஞ்சை நக்கும் விஷயமாய் இல்லாமல் இன்றைய அமெரிக்க இளம் தலைமுறையினரிடம் செக்ஸை பணமாக்கும் ஆசையும், ஈஸி புகழும், டிவிட்டர் போன்ற ஷோஷியல் நெட்வொர்க்கின் பலம் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள். க்ரீமி பீ, ப்ளோஜாப், த்ரீசம், பேசியல், அனல், டீப் த்ரோட் என ஆயிரம் வக்கிர முறைகள். அதனால் ஏற்படும் வலி எல்லாவற்றையும் மீறி, வீடியோ கொடுக்கும் ரீச்சும், புகழும் சிறிது காலமே என்றாலும் இளவயதில் அவர்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாய் கருதுவதும். பெருமை பேசுவதும் கூட தங்களது வீக்னெஸென்று புரிந்தே உழல்வது.  மார்க்கெட்டில் ஒருவனைப் பார்த்தேன். மிகவும் குள்ளமாய் இருந்தான் அவன் என்னிடம் வந்துநான் உங்களுடய போர்ன் படத்தின் ரசிகன்” என்று சொல்லும் போது சந்தோஷமாய் இருந்தது.  என்னை படுக்கைக்கு அழைத்தான். அவன் உயரத்திற்கும், அவனுடயலுல்லாவுக்கும் சம்பந்தமில்லை. முழங்கை வரை இருந்தது என்று எக்ஸைட் ஆகி பேசும் வசனங்கள், ஷூட் முடிந்த பின் ஒரே நாளில் அதிகப்படியான செக்ஸ் வைத்துக் கொண்டதன் காரணமாய் வஜைனாவில் ஒரு விதமான மாய்ஸ்சர் ஏற்பட்டு அதற்கான மெடிக்கல் ட்ரீட்மெண்ட், கடைசியில் வேறொரு பெண் 300 டாலருக்கு ஒரு ப்ளோஜாய் ஷூட்டில் போய் கலந்து கொண்டு விட்டு, அது வயலண்ட் ப்ளோஜாய் ஷூட்டாய் போய்விட, 15 நிமிடங்கள் ஷூட் செய்தாகிவிட்டது பின்பு நிறுத்துவது தொழில் தர்மம் கிடையாது. என்று சொல்லி அழவும் முடியாமல், பேசும் விதம் என  கிட்டத்தட்ட பயோகிராபிக்கல் டாகுமெண்டரிதான். டோரண்டிலோ, அல்லது நெட்பிளிக்ஸிலோ பார்த்துவிடுங்கள். சண்டேன் பிலிம் பெஸ்டிவலில் கலந்து கொண்டு பாராட்டுப் பெற்ற படம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பர்ஷப்ஷன் கதைகள்
பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருந்த ஜோடி மிக இளமையாய் இருந்தார்கள். இருவர் முகத்திலும் கொஞ்சம் கலவரம் தெரிந்தது. பையன் சுமாராகவும், பெண் அழகியாகவும் என் கண்களுக்கு தெரிந்தது நான் ஆணாக இருந்ததால் இருக்கலாம். டேபிளின் மேல் இருந்த மெனு கார்ட்டை எடுத்து திரும்பத் திரும்ப படித்துக் கொண்டேயிருந்தார்கள்.

“நிச்சயம் வீட்டை விட்டு ஓடி வந்தவங்களா இருப்பாங்க”
என்றேன் நண்பரிடம்.

“இருக்கலாம். அந்தப் பொண்ணு அவனை பாக்குற பார்வையிலேயே ஒரு விதமான எரிச்சல் தெரியுது”
“சாய்ரட் படத்துல இப்படித்தான் அந்த ஹீரோயின் ஏன் இவனோட ஓடி வந்தோம்னு சண்டை போடுவா?”

கடைக்காரன் எங்களிடம் ஆர்டர் கேட்டுவிட்டு போக, அவனை அழைத்து அரைகுறை ஆங்கிலத்தில் மெனுவில் உள்ள இன்னொரு அயிட்டத்தைக் காட்டி ஏதோ கேட்டான். அவன் பெரிதாய் மதிக்காம்ல பதில் சொல்லிவிட்டு போனான். பெண் அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள். அவளின் பார்வையை தாங்க முடியாமல் சட்டென அவளைப் பார்த்துவிட்டு, மீண்டும் சீரியஸாய் மெனு கார்டையே பார்க்க ஆரம்பித்தான்.
“பையன் கூட்டிட்டு வந்துட்டான் இப்ப கையில காசில்ல. எத வாங்குறதுன்னு யோசனையாவும் இருக்கு. பொண்ணு ப்ரெஷர்லதான் கூட்டிட்டு வந்துட்டான் தெரியுது.”
“எப்படி சொல்றீங்க ?

“அவ கைய பாருங்க. நிறைய வெட்டுத் தழும்பு”

அவள் போட்டிருந்த புல் ஹேண்ட் டாப்ஸ் கொஞ்சம் உள்ளே இழுத்திருக்க, கையில் இருந்த வெட்டுத் தழும்புகள் தெரிந்தது.
”எதை நம்பி இவளுங்க ஓடி வர்றாங்கன்னும் தெரியலை. வந்துட்டு  இவ கஷ்டப்படுறது மட்டுமில்லாம அவனையும் கஷ்டப்படுத்தி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பையன் பார்த்துக் கொண்டிருந்த மெனு கார்டை கோபமாய் பிடுங்கி தன் பால் வைத்துக் கொண்டு, கொங்கனி போன்ற பாஷையில் பேச ஆரம்பித்தாள். அவள் பேச்சில் கோபம் இருந்தது.
“அவன் கிட்ட காசு இல்லை. இருந்தாலும் அதை காட்டாமல் அவளுக்கு பிடிச்சதா வாங்கி கொடுக்க ட்ரை பண்ணுறான். ரெண்டு நாள் தாங்காது. காதலோ, காமமோ, காசு இல்லாட்டி ஸஸ்டெயின் ஆகாது” என்றேன்.
அவர்களை பார்க்க எங்களுக்கு பாவமாய்த்தான் இருந்தது. அதற்குள் எங்களுக்கான பில் வந்துவிட, காசு கொடுத்துவிட்டு, அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற ஆர்வத்தில் கேஷுவலாய் உட்கார்ந்திருப்பதை போல காத்திருந்தோம். சற்று நேரம் போனது. அவர்கள் ஏதும் முடிவெடுத்ததாய் தெரியவில்லை. பெண் இன்னமும் அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள். அவன் மெனுகார்டையே பார்த்துக் கொண்டிருந்தான். கிளம்பி, கடை வாசலில் கார் ஏறாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தோம். கடைக்காரன் கையில் ஒரு பார்சலோடு வந்து அவர்களிடமிருந்து காசு வாங்கிக் கொண்டு  போக, இருவரும் கை கோர்த்துக் கொண்டு சிரித்தபடி கடையிலிருந்து வெளியேறினார்கள். ஙே…
@@@@@@@@@@@@@@@@@@@@
Post a Comment

No comments: