Thottal Thodarum

May 4, 2017

கொத்து பரோட்டா 2.0-22

Split
ஸ்பிலிட் பர்சனாலிட்டி என்றால் ஒருவனுக்குள் இரு மனங்கள் கொண்டவர் என்று தான் இத்தனை நாளாய் நினைத்துக் கொண்டிருப்போம். இல்லை.. ஒருத்தன் மனசுக்குள்ள 23 விதமான மனுஷன் இருக்கான். அவனுள் அந்த 23 பேரில் எவனின் எண்ணம் அதீத ஆதிக்கம் பெறுகிறதோ, அவனைப் போலவே மாறி அட்டகாசம் பண்ணுகிற “கெவின் வெண்ட்வெல் க்ரம்ப் “ என்பவனின் கதை தான் இந்தப் படம். 23ல் ஒருவனான டெனிஸ்  மூன்று இளம் பெண்களை கடத்துகிறான். அந்த மூன்று பெண்களில் ஒருத்தியான கேஸி மட்டும் கொஞ்சம் தெளிவு. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கேரக்டராய் வரும் டெனிஸை பார்த்து குழம்பினாலும், ”ஹெட்விக்” எனும் ஒன்பது வயது சிறுவனுடனான மனநிலையின் போது அவனை புரிந்து கொள்கிறாள். அவன் மூலம் தப்பிக்க நினைக்கிறாள். டாக்டர் ப்ளெட்சர்  கெவினின் மனநல மருத்துவர். தன்னுள் இருக்கும் இன்னொரு கேரக்டர் தன்னை ஆக்கிரமிப்பதாகவும், தன்னை காப்பாற்றும் படி தொடர்ந்து மெயில் அனுப்பும் டெனிஸ், மற்றும் பேரி கேரக்டர்களின் குழப்பத்தை தெளிவுப்படுத்த முனைகிறார். கேஸியின் வாழ்க்கையில் தன் மாமனால் சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதன் தாக்கம், அப்சசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டரினால் பாதிக்கப்பட்ட ஹெட்விக்கின் தாய். அவளால் மனநிலை பாதிக்கப்பட்ட ஹெட்விக். தன்னை புரிந்து கொண்ட ஒரு பெண்ணாய் கேஸியை நினைத்து பழக, கேஸி தப்பிக்க ஹெட்விக் கேரக்டரை பயன்படுத்துகிறாள். ஆனால் இருக்கும் 23 கேரக்டர்களை விட, அதீதமான கேரக்டரான  பீஸ்ட் தான் எல்லாவற்றுக்கும் மேல். கொஞ்சம் கொஞ்சமாய் ஒவ்வொரு கேரக்டரின் ஆக்கிரமிப்பை மீறி, அவன் பீஸ்டாக மாறுவதற்குள் அவனை காப்பாற்ற துடிக்கும் மருத்துவர், அந்த மூன்று பெண்கள், முழுவதும் பீஸ்டாய் மாறி நிற்கும் கெவின். க்ளைமேக்ஸ் கொஞ்சம் கூட அதிரடியில்லாமல் ஹிட்காக்கியத்தனமானது. சுமார் 9 மில்லியன் ரூபாயில் தயாரான படத்தின் வசூல் 100 மில்லியனுக்கு மேல். மீண்டும் ஒரு முறை மனோஜ் நைட் ஷியாமளன் ஹிட்டடித்திருக்கிறார். அவருடய பேவரேட் கதைக்களனில். சிறுவயது ஹெட்விக் கேரக்டர் கதையெல்லாம் பார்க்கும் போது கமலின் ஆளவந்தான் சின்னம்மா சீன்கள் நியாபகத்திற்கு வந்தது. படத்திற்கு பெரிய பலம் மனோஜை அடுத்து கெவினாய் நடித்திருக்கும் ஜேம்ஸ் மெக்வாயின் நடிப்பு. 24 கேரக்டரில் ஒவ்வொரு கேரக்டருக்குமான பாடி லேங்குவேஜ், கண் அசைவுகள், வாய்ஸ் மாடுலேஷன் என மனுஷன் அதகளப்படுத்துகிறார். அதிலும் உச்சபட்ச பீஸ்ட் கேரக்டராகவே மாறும் காட்சிகள் க்ளாஸ். மனோஜின்  ரைட்டிங்கில் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு விஷயம் அவருடய அன்ப்ரேக்கபிள் கேரக்டரோடு  கெவின் கேரக்டரை இணைத்ததும், அப்படத்தின் ஹீரோ ப்ரூஸ் வில்லீஸை கொண்டு வந்ததும் மாஸ்டர் ஸ்ட்ரோக். சற்றே குழப்பமான கதை தான். அதை மிகத் திறமையாய் திரைக்கதையமைத்து நம்மை கட்டிப் போட்டிருக்கிறார். மனோஜ் நைட் ஷியாமளன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் ஒர் பெண்ணியவாதியின் பேஸ்புக் பக்கத்தை படிக்க நேர்ந்தது. ஆண்கள் சானிட்டரி நேப்கின் உபயோகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்கிற தலைப்பை பார்த்ததும் சரி.. பெண்களின் மாதாந்திர அவஸ்தையை ஆண்கள் புரிந்து கொள்வது பற்றிய கருத்தாய் இருக்குமென ஆர்வமாய் படித்தேன். அங்கே படித்த விஷயமாவது. “நான் வழக்கமாய் ஆண்களுக்கான ஜீன்ஸ்களையே வாங்கி அணிந்து கொள்கிறேன். காரணம் அதன் விலை சாதாரணம எழுநூறுக்கும் ஆயிரத்து ஐநூறுக்கும் கிடைக்கும் சிறப்பான ஆண்களின் ஜீன்ஸ் பெண்களுக்கு என்று பிரத்யோகமாய் வரும் போது இரண்டாயிரம், மூவாயிரம் என்று கொள்ளை அடிக்கிறது இந்த சமுதாயம். ஆண் / பெண் பேதத்தை ஆணாதிக்கத்தை உடைகளின் விற்பனைகளில் கூட விட்டு வைக்கவில்லை என்றும், ஆண்கள் சானிட்டரி நேப்கின்கள் பயன்படுத்த ஆரம்பித்தால் அதன் விலை குறையும். அதை நாம் வாங்கி பயன்படுத்தலாம் என்று போனது அந்தக் குட்டிக் கட்டுரை. ஆணின் ஜீன்ஸை ஏன் உபயோகிக்கிறாய் ? என்று கேட்டால் ஆணாதிக்க சமுதாயம் என்று திட்டக்குட திட்டலாம். ஆனால் இவர்களின் பெண்ணியம், பெண்ணுரிமை, போன்ற விஷயங்கள் எதை நோக்கி போகிறது என்பதே புரியாத போது பெண்களை, பெண்ணியவாதிகளை புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான் போல…
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம் – breking up bad
காதலர் தினம் வந்தாலும் வந்ததும் இணையமெங்கும் காதல் கதையும், கவிதையும் குறும்படங்களாய் பொங்கி வழிய ஆரம்பித்திருந்தது. அதில் பார்த்த சுவாரஸ்ய குறும்படம் breking up bad. காதலர் தினத்தன்று ப்ரேகப்பான இரண்டு பேரின் சோகம். ப்ரேகப்பிற்கான காரணத்தை சொல்லும் அவரவர் பர்ஷப்ஷன் என சுவாரஸ்யமான, ரைட்டிங், இயல்பான பர்பாமென்ஸ், ஸூத்திங்கான விஷுவல் என ஒரு ஃபீல் குட் குறும்படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால். கொஞ்சம் விஸ்தரித்து எழுதினால் ஒரு நல்ல திரைப்படத்துக்கான களம் உள்ள கதை. https://www.youtube.com/watch?v=pltLD3_FKu8&feature=youtu.be
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொடர்ந்து நடக்கும் ஹாசினி போன்ற பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும், கொடூற கொலையும் மனதை பாதிக்கத்தான் செய்கிறது. இக்குற்றத்தை செய்கிறவன் நம்மில் ஒருவனாய், நல்ல படிப்பு, குடும்பப் பின்னணியும் கொண்டவனாய்த்தான் இருக்கிறான். எங்கிருந்து வருகிறது இந்த வக்கிரம்?. சுலபமாய் கிடைக்கும் போர்ன் படங்கள் மூலமாகவா?. சமீபகாலமாய் நிறைய வீடியோக்கள் சைல்ட் போர்ன் வகையாய் இல்லாமல் அமெச்சூர் வீடியொக்களாய் வலம் வர ஆரம்பித்திருக்கிறது. வெளிநாட்டு குழந்தைகள் கிடையாது. பெரும்பாலும் நம் நாட்டு, வட நாட்டுக் குழாந்தைகளுடனான வீடியோக்கள். இதை பார்வார்ட் செய்யும் மக்களின் மனநிலையை பார்த்தால் பயமாய் இருக்கிறது. நாமும் ஒரு முறை ட்ரை செய்துதான் பார்த்தால் என்ன என்று நினைத்தவனில் பல பேர் ஹாசினி போன்ற குழந்தைகளின் செயல்படுத்த முற்படுகிறான் என்றே தோன்றுகிறது. குடிப்பவர்கள் எல்லோரும் குடிகாரர்கள் ஆக முடியாது என்பார்கள். அவர்களது மூளையில் ஒருவிதமான திரவம் அதிகம் சுரப்பவர்கள் தான் குடிகாரர்களாய் ஆக முடியுமாம். அது போல இம்மாதிரியான வீடியோக்களும். இவற்றால் பாதிக்கப்பட்ட, மன அளவில் மிகவும் குழம்பிப்போனவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். இனி ஒவ்வொரு குடும்பத்திலும்,, குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுக்கும் போதே.. வீட்டில் உள்ள பெரியவர்களை குழந்தைகளை குழந்தைகளாய் பார்க்க பழக்க வேண்டும் போலிருக்கிறது. போர்ன், இல்லாத நாட்களில் கூட இம்மாதிரியான பாலியல் கொடுமைக்கு பலியான பல பெண் குழந்தைகள் வெளியே சொல்ல முடியாமல் இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் நண்பர் வீட்டிற்கு போயிருந்தேன். அங்கே இரண்டு குழந்தைகள், இருவருக்கும் எட்டிலிருந்து பத்து வயதிருக்கும். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் என்றார் நண்பர். தனியே அவர்களத் பெட்ரூமில் விலையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இரு குழந்தைகளின் நடவடிக்கையும் குழந்தைகளாய் இல்லை. கொஞ்சம் நெருங்கிப் பார்த்த போது, பையன் அவன் பார்தத ஆணின் செக்ஸுவல் செயல்பாட்டை செயல்படுத்த முற்பட்டான். அப்பெண் குழந்தையும், ஆர்வமாய் அவனுக்கு ஒத்துழைத்தது. நான் உள்ளே சென்றதும் சட்டென இருவரும் பதறியடித்து எழுந்து திருதிருவென முழித்தார்கள். நான் ஏதும் சொல்லாமல் ஹாலில் போய் விளையாடுங்கள் என்று சொல்லிவிட்டு, நண்பரை அழைத்து, அக்குழந்தைகளை கொஞ்சம் வாட்ச் செய்யுங்கள். வீட்டில் அவனது பெற்றோரின் சேர்க்கை விஷயத்தை பார்த்துவிட்டு, செயல்படுத்த விழைகிறான் என்றேன். முடிந்தால் பெற்றோரிடம் சாடை மாடையாய் சொல்லி புரிய வையுங்கள். பையனுக்கு தெரியும் என்றேன். குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பது என்பது கம்பி மேல் நடப்பது போன்ற செயலாகிவிட்டது இன்றைய காலத்தில், பத்து பெத்த காலத்துல அப்பிடியா இருந்தது என்று கேட்டீர்களானால் அக்காலம் வேறு இக்காலம் வேறும் குழந்தைகளுக்கு எது தேவையில்லையோ, அது குழந்தைகளுக்கான விஷயமாய் எக்ஸ்போஸ் ஆகும் காலம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜெ வின் உடல்நிலையில் ஆரம்பித்து இன்று வரை மீடியா நொடிக்கு நொடி ப்ரேக்கிங் நியூஸாகவே போய்க் கொண்டிருக்கிறது. ஜெ வின் மரணம், புயல், ஜல்லிக்கட்டு, இதோ இப்போதைய அரசியல் நிலை என சோசியல் மீடியா அல்லோலகல்லோப் பட்டுக் கொண்டிருக்கிறது. ராத்திரி தூங்கி எழுந்திருக்கிறதுக்குள்ள எதாச்சும் அங்கிருக்கிறவன் இங்கயோ.. இங்கிருக்கிறவன் அங்கயோ..ன்னு பரபரங்குது. எண்டர்டெயின்மெண்டுக்கு சினிமா, பாட்டு, ஆட்டம் பாட்டம்  எல்லாத்தையும் விட இப்போ நடக்குற அரசியல் ஆட்டம் செம்மையாய் போய்ட்டிருக்கு. இதுல என் ஜாய் பண்ற விஷயம் என்னன்னா.. டிவிட்டர், பேஸ்புக் மீம்ஸ், கமெண்ட் போடுறவங்கதான்.. இவர்களின் அபார நகைச்சுவை உணர்வு, அரசியல் அறிவு போன்றவகளைப் பார்த்து ஆச்சர்யமாக்வேயிருக்கிறது. ஒரு அறிக்கையோ, ஒரு சம்பவமோ நடந்த அடுத்த நொடி அதற்கான மீம் வீடியோக்களையோ, காட்சிகளையோ தெரிந்தெடுத்து, கமெண்டுகளை போட்டு பரக்க விடுகிறார்கள். இணையத்தில், வாட்ஸப்பில் பரவும் வீடியோக்களைப் பார்த்தால் நடப்பு அரசியலில் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது மிகச் சுலபமாய் புரிந்துவிடும். பல பேருக்கு புரிந்தாலும் பிரச்சனை இன்னும் நாலு வருஷம் ஆட்சியிருக்க, எல்லாத்தையும் அழிச்சுட்டு மொதல்லேர்ந்து ஆரம்பிக்கிற நிலை வந்தால் இப்ப செலவு பண்ண காசை எடுக்க முடியாதுங்கிற பயம். மீண்டும் எலக்‌ஷன் அது இதுன்னா.. வருவோமாங்கிற பயம் என பல பயங்கள். அரசியல்ங்கிறது சேவைங்கிறது போய் எப்ப வியாபாரம் ஆயிருச்சோ.. வியாபாரம் பண்ண வர அரசியல்வாதிக்கும் எதிக்ஸ் இல்லை. பணம் வாங்கிட்டு ஓட்டுப் போடுற நமக்கும் எதிக்ஸ் இல்லாம போயிருச்சு. ம்ம்ஹும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
x

Post a Comment

1 comment:

Julian Christo said...

Adult corner Sir ???