Posts

”உறை மாட்ட மறுத்ததால் கத்தியால் குத்திய பெண்

Image
உறை மாட்டி கொள்ள மறுத்த கஸ்டமரை கத்தியால் குத்திய பெண்.. ஆம் இது இங்கல்ல, கம்போடியாவில்.. அங்கே இருக்கும் ஓரு பிராத்தல் வீட்டில் இருந்த சா ரிடா என்கிற பெண்ணிடம், சுவான் டா என்கிற கஸ்டமர் “மேட்டருக்கு” சென்றிருக்கிறார்.. அப்போது ‘டா’விடம் “சா” “உறை” மாட்டிக் கொள்ள சொல்ல, அதற்கு “டா” மறுத்திருக்கிறார். மேலும் அவரிடம் உடலுறவு கொள்ள கட்டாயபடுத்த முயற்சிக்க.. அங்கிருந்த ஓடி போக முயற்சித்திருக்கிறார்”சா”.. ஆனால் அவரை வலுக்கட்டாயமாய் பிடித்திழைத்து உடலுறவு கொள்ள கட்டாயபடுத்த, அதனை தடுப்பதற்காக, அவரை “சா” இரண்டு தடவை கத்தியால் குத்தியிருக்கிறார். அவரை போலீஸ் கைது செய்திருக்கிறது.. எச்.ஐ.வி போன்ற் பால்வினை நோய்களை தடுக்கவே அவர் அப்படி செய்திருப்பதால் தண்டனையிலிருந்த்து தப்ப வாய்பிருக்கிறது என்கிறது போலீஸ் பி.குறிப்பு: கம்போடியாவில் சுமார் 1.9 சதவிகிதம் 15-49 வயதுகுட்பட்டோர் எச்.ஐ.வியினிலால் பாதிக்க பட்டுள்ளார்கள்.. இது சவுத் ஈஸ்ட் ஏசியாவிலேயே அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.. கம்போடியாவில் உள்ள நிலவரங்களின் பழைய பதிவை பார்க்க.. பிடித்த அசைவ ஜோக்.. ஓரு பாரில் பெண் ஓருத்தி முழு நிர்வாணமாய் உள்ளே...

பழகுதல்....

Image
படித்ததில் பிடித்தது அனுதினமும் அடிகிற அம்மாவைக் காட்டிலும் ஆண்டுக்கொரு முறை அடிக்கிற அப்பாவின் முறைப்பில் நடுங்குகின்றன குழந்தைகள். நண்பர் திரு பொன்.சுதாவின் கவிதைகளிலிருந்து../.

கத்திகப்பல் - விமர்சனம்

Image
கத்திகப்பல் பேர் வித்யாசமாய் இருக்கிறது, மணிரத்னதின் அசிஸ்டெண்ட், பாரதிராஜாவின் ஆஸ்தான கதாசிரியர் ஆர்.செல்வராஜின் புதல்வர் என்று இயக்குனர் தினேஷ் பற்றி எதிர்பார்போடு படத்துக்கு போனேன்.. இது போதாதென்று நாளிதழ்களில் வேறு படத்தின் நாயகன், நாயகி படத்துக்கு பதிலாய் மணிரத்னமும், பாரதிராஜாவும் பேசிக் கொள்வது போல் விளம்பரம் வேறு என்னை உசுப்பேற்றிவிட.. கத்திகப்பல் விமர்சனம் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வீரய்யன் என்கிற வீரப்பனை போல ஓருவன் ஒரு மாஜி அமைச்சரை கடத்தி கொண்டு போய் பல கோடி கேட்டு மிரட்டுகிறான். அவனை பிடிப்பதற்காக அமர்த்தியிருந்த ஐந்து போலீஸ் அதிகாரிகள், சந்திரபோஸ், தென்னவன்,ஜெயபிரகாஷ், சக்திவேல்,வினோத் குமார் என்கிர அதிகாரிகள் அவனை கொன்று வெற்றி வாகை சூடிக் வரும் வேளையில் நேர்மையான டாக்டர் பாரிவள்ளலையும் வீரய்யன் கொன்று விடுகிறான். அந்த கேஸ் க்ளோஸ் செய்யபடுகிறது. இருபது வருடங்களுக்கு பிறகு பாரிவள்ளலின் மனைவி சாரா தனிமையில் வீட்டில் விளக்கு கூட இல்லாமல் ஓரு திருதிரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருக்க, அவளை தேடி ஹீரோ அனுப்குமார் வருகிறார். வந்து அவர் தான் பாரிவள்ளல் எனவும் சாராவின் கணவன் மற...

என் பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் - மணிரத்னம்

Image
எனது பெயரை இனிமேல் யூஸ் செய்ய வேண்டாம் என்று மணிரத்னம் அறிவித்திருக்கிறார். அவர் இவ்வாறு அறிவித்ததன் காரணம் என்னவாக இருக்கும் என்று அவரின் ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும், தமிழ் திரையுலகமும் அறிய ஆவலாயிருக்கிறார்கள். சமீபத்தில் மணிரத்னத்தின் உதவியாளர் திரு. தினேஷ்குமார் இயக்கிய கத்திக்கப்பல் என்கிற திரைப்படத்தை பார்த்து விட்டு நொந்து போய்தான் மணிரத்னம் இந்த அறிக்கையை விட்டுள்ளார் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. அலைபாயுதே படத்தில் மட்டும் தன்னுடன் உதவியாளராக பணிசெய்த அதுவும் அந்த படத்தின் கதையாசிரியர் திரு செல்வராஜ் என்பதால். அதுமட்டுமில்லாமல் தன்னுடய உதவியாளர் என்று சொல்லி படத்தின் விளம்பரத்தில் தன்னையும், பாரதிராஜாவையும் போட்டு, ஏகப்பட்ட விளம்பரம் செய்து, படு அமெச்சூரான ஓரு படத்தை எடுத்திருக்கும் இவரை பார்த்து அடுத்து வரும் தலைமுறையினர் இவரே இப்படி என்றால் அவரின் குருவின் படம் எப்படி இருக்குமோ என்று நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சி தான் இந்த அறிக்கை வந்திருப்பாக சொல்கிறார்கள். இதில் பாரதிராஜாவை எதற்காக போட்டார்கள் என்று கேட்டீர்களானால் அது ஓண்ணுமில்லை தினேஷின் தந்தை ப...

Happy Days

Image
ஜலதோஷம் பிடிக்குமே.. என்று கவலைப்படாமல் மழையில் நினைந்திருக்கின்றீர்களா? அந்த நாள் உங்களின் ஹேப்பி டேஸாக இருக்கும். வாழ்கையில் இப்போது சின்ன விஷயங்களாய் தெரியும் விஷயத்துகெல்லாம் சந்தோஷமும், துக்கமும் கலந்து கட்டி மத்தாப்பாய் சிரித்தும், வெடித்தும் மகிழ்ந்திருக்கின்றீர்களா? அந்த நாட்கள் உங்களின் கல்லூரி நாட்களாய் தான் இருக்கும் அந்த ஹேப்பி டேஸை உங்களால் எப்பவுமே மறக்க முடியாது. வாழ்கையில், படிப்புடன் நட்பை, காதலை,லீடர்ஷிப் போன்ற பல விஷயங்களை கற்று தரும் நாட்கள் தான் கல்லூரி காலமான ஹேப்பி டேஸ். சமீபகாலத்தில் நீங்கள் இவ்வளவு இளமையான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்.. படத்தின் ஆரம்பமே ஓரு அழகான விஷயம். தூங்கி எழும் சந்து முதல் முதலாய் இன்ஜினியரிங் காலேஜ் போக போகிறான். அவன் அப்பா அவனை கூப்பிடுகிறார். ஓரு பேனாவை கொடுத்து ‘ இது என் அப்பாவின் பேனா . அவர் எனக்கு கொடுத்தது. இப்போது உனக்கு கொடுக்கிறேன்.” என்று சொல்ல.. அதற்கு அவன் மனதிற்குள் “நல்லவேளை.. அட்வைஸ் இல்ல..; ஓன்லி செண்டிமெண்ட் “ நினைப்பதில் ஆரம்பித்து.. அந்த வயது இளைஞர்களை கண் முன் ஓடவிட ஆரம்பிக்கிறார் இயக்குனர் சேகர் கம்மூலா.. ...

கனவு தொழிற்சாலை - ஓரு ரிப்ளே..

Image
நாகார்ஜூன், ஆரம்பித்த ரேஸ் இப்போது ரிலே ரேஸாக பதிவாக ஆரம்பித்திருக்கிறது.. நான் ரொம்ப நாளைக்கு முன்பே இது போல ஓரு பதிவை ஆரம்பித்துவைத்தேன் . ஏனோ பதிவர்கள் ஆதரவில்லை.. பரவாயில்லை.. இதோ என்னுடய பதில்கள்.. கமான் ஸ்டார்ட் த மீயூசிக்... 1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்? வயது சரியாக ஞாபகமில்லை.. ஆனால் நான் முதன் முதலாய் பார்த்தாக நினைவில் உள்ள படம் ஜெமினி ப்ரிவுயூ தியேட்டரில் “அந்தமான் காதலி” என்று நினைக்கிறேன்.. மிக சிறிய வயது தான்.. 2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா? தமிழில் சக்கரகட்டி, மிக சமீபத்தில் “சீதக்கைல ரவி” வெங்கடேஷ் நடித்த தெலுங்கு படம் 3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்? மீண்டும் “7ஜி ரெயின்போ காலனி” ”ஹேப்பி டேஸ்” தெலுங்கு டிவிடியில் 14வது முறையாக.. 4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா? அது அப்போதைக்கு அப்போது மாறிக் கொண்டே இருக்கும். திருவிளையாடல், அவள் அப்படித்தான், கன்னத்தில் முத்தமிட்டால், என்று என் மன்நிலைக்கேற்ப.. 5.உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச...

சட்டம் உன் கையில் - போலீஸ்.. போலீஸ்

Image
பொது இடத்தில் புகை பிடிக்க தடை சட்டத்தை புகை பிடிப்பவர்களூம் முணுமுணுத்துக் கொண்டே ஆதரித்தாலும், எல்லோரும் பயப்படுவது அதை நடைமுறை படுத்தும் போது நடக்க போகும் அராஜகத்தை நினைத்துதான். ஏன் என்றால் நம் நாட்டில் குற்றம் நடப்பதை தடுப்பதற்காக காவல் துறை இல்லாமல், அது நடக்க விட்டுவிட்டு அப்புறமாய் வந்து தண்டிப்பது அவர்க்ளது வாடிக்கை.. உதாரணமாய் ஓருவன் ஃபிரி லெப்ட் இல்லாத இடத்தில் திரும்ப முயற்சிக்கும் போதே அந்த டிராபிக் கான்ஸ்டபிள் அந்த தெருவின் முனையிலேயே நின்று அவனை தடுத்து அறிவுறுத்த வேண்டியதுதான் அவர் கடமை. ஆனால் அவர் என்ன செய்கிறார்.. ரோட்டின் உள்பக்கத்தில் ஓளிந்து நின்று கொண்டு அவனை மடக்கி “டேக் த 25” வாங்கி அவனை திரும்ப அனுப்பாமல் தவறான பாதையிலேயே அனுப்பி வைக்கிறார். அதே போல் அவர்கள் போடும் சட்டங்களூம் அவ்வளவு ஈஸியாக மக்களுக்கு புரியும் படி இருக்காது. உதாரணமாய் புகை பிடிக்கும் சட்டத்தை எடுத்து கொள்ளுங்கள், அதில் பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது.. என்று சொல்லி பல இடங்களை சுட்டி காட்டி இருக்கிறார்கள். ஆனால் தெரு, மற்றும் பார்க் எல்லாம் பொது இடம் தானே..அங்கே புகைக்கலாம் என்கிறது விதி. ஆன...

இதுதாண்டா போலீஸ்

Image
மாலை ஏழு மணி இருக்கும் சாலிக்கிராமம் பிரசாத் லேப் ரோடும், அருணாசலம் ரோடும், மற்றொரு ரோடும் சந்திக்கும் மும்முணை..ஓரே டிராபிக் ஜாம்.. எல்லா பக்கத்திலும் பெட்போர்டும், சுமோக்களும், குவாலிஸூகளும். டிவிஎஸ் 50களூம், பைக்குகளும் எல்லா பக்கத்திலும் வண்டிகள்.. ஆரன்கள்..யாருக்கும் பொறுமையில்லை. பொறுமையில்லாமல் எதிர்பக்கம் முன்னேற முயன்று எதிர் பக்கம் வரும் டிராபிக்கையும், நிறுத்தி, மேலும் இடத்தை போர்களமாய் மாற்றி கொண்டிருந்தார்கள். எனக்கு எரிச்சலாய் இருந்த்து.. தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோமோ? வேறு ஏதாவது சந்தில் எஸ்கேப் ஆகலாம் என்றால், என்னை சுற்றி வண்டிக் கடல். பக்கத்தில் ஓரு டீக்கடையில் ஓரு டிராபிக் போலீஸ் கடையினுள் உட்கார்ந்து ரகசிய தம் அடித்தபடி ”நமக்கென்ன” என்ற ரேஞ்சில் உட்கார்திருக்க.. அப்போது ஓரு அம்பாசிடர் கார் ஓன்று சிறிது, சிறிதாக முந்திக் கொண்டு, என் பக்கத்தில் வந்து நின்றது..உள்ளே ஓரு போலீஸ் ஆபிஸர், அநேகமாய் இன்ஸ்பெக்டர் ரேங்க.. உள்ளேயிருந்தபடி அங்கும், இங்கும் பார்த்தபடி இருந்தார்..என்ன நினைத்தாரோ சட்டென்று மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த காரிலிருந்து இறங்கி, “டிரைவர் நாம ப்ரசாத் ...

ஜீ.கே.வாசனின் சேனல் -V டிவி

Image
சமீபகாலமாய் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் கூட்ட்ம அதிகமாகிவிட்டது.. தமிழ் சேடிலைட் சேனல்கள் மட்டுமில்லாமல்.. லோக்கல் தொலைக்காட்சி சேனல்களும் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டு என்னத்தைதான் காட்டுறதுன்னு புரியாம, எல்லோரும் அழுது வடிய சீரியலையும், காமெடி நிகழ்ச்சிகளையும்,”ஹலோ..யார் பேசறீங்க..? நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களான்னு ? கேள்வி கேட்டே கொல்லுற லைவ் ப்ரோக்மாங்களையும் போட்டு கழுத்தறுக்கறாங்க..அதுல வேற கான்கிரீட் டிரில்லிங் மிஷின் மாதிரி குரலை வைத்து கொண்டு போனில் பாட்டு வேறு பாடி..கடவுளே.. வாழும் சேனல்கள் போட்டி போட்டு கொண்டு புது புது படங்களை போட்டும், வாழாம இருக்கிற சேனல்காரங்க.. மத்தவங்க சாப்புட்டு சக்கையாக்கி போட்ட படஙகளையும்,பாடல்களையும் காட்டி வாழ முயற்சிக்கிறாங்க.. இந்த கட்டத்தில கலைஞர் டிவி ஆரம்பிச்சதுக்கப்புறம்.. சன் டிவியின் மார்கெட் மொனோபோலி உடைக்கபட்டதால்.. பல பேர் சேனல் ஆரம்பிக்க தைரியம் வந்து ஆரம்பிக்க வந்திட்டாங்க.. சீக்கிரமே எலக்‌ஷன் வேற வருதா.. இருக்கிற சேனல்ல பாதி அரசியல் சார்பா இருக்கிறதுனால..அந்த அந்த கட்சிக்காரஙக ஆளுக்கு ஓரு சேனல் ஆரம்பிக்க ஆசைப்படுறாங்க.. அவங்க ஆரம...

”கோக்” கினால் கருத்தடை செய்...

Image
இப்பத்தான் பார்த்தேன் இது என்னுடய 100வது பதிவுன்னு...ஸோ... வெற்றிகரமான “100 வது பதிவு” கோக்..டயட் கோக், பெப்ஸி போன்றவை தாகத்தை தணிக்கும், ஆனால் அதனால் வேறு ஓரு பயனும் இருக்கிறது.. அது என்னவென்று பார்த்தால் விந்தணுக்களில் இருக்கும் உயிர் அணுக்களை சுத்தமாய் அழிக்கிறது.. என்பதை ஆராய்ச்சி செய்து செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.. ஆராய்ச்சியின் போது.. பல விதமான கோக்களை டெஸ்ட் டூயூபில் விந்துடன் போட்டு, ஓரு நிமிடத்தில் டயட் கோக்கில் உள்ள விந்துவிலிருந்த உயிரணுக்கள் அனைத்தும் இறந்து போய்விட்டது.. மற்ற சாதாரண கோக்கில் கிட்டதட்ட 41% உயிரணுக்கள் மீதம் உயிரோடு இருந்ததாகவும் தெரிவிக்கிறது. பெண்கள் கருத்தடை சாதனமாய் 50துகளில் உபயோகித்ததாகவும் தெரிகிறது.. கோக்கிலிருக்கும் கார்போனிக் ஆசிட் தான் உயிரணுக்களை அழிக்கிறது என்றும் எப்படி உபயோகித்தார்கள் என்றால் கோக் பாட்டிலை குலுக்கி பீயிச்சி அடிக்கும் முறையையே பின்பற்றினார்கள் என்று இந்த ஆராய்ச்சியை நடத்திய ஹார்வேர்ட் மெடிக்கல் பள்ளியின் பிறப்பு தடுப்பு முறைகள் பற்றி ஆராயும் டோப்ரா ஆண்டர்சன் கூறியிருக்கிறார்.. 1950-60களில் பியூட்டோ ரிகோவிலிருக்கும் பெண்கள...