Posts

வில்லு - திரைவிமர்சனம்

Image
பதிவர்கள்.. வாசக நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.. போக்கிரி காம்பினேஷன்.. அதனால் எதிர்பார்ப்பும் அதிகம். வழக்கமான பார்முலா பழிவாங்கல் கதை. பில்லா போல ஸ்டைலாய் படமெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பல காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். ஆனால் பாவம் அவுட்புட்தான் சரியில்லை. தேசதுரோகியின் மனைவி என்று நெற்றியில் பச்சை குத்தப்பட்ட தன் தாயின் பழியையும், தன் தந்தையை கொன்ற பழியையும், பார்க்க வந்த நம் பழியையும் வாங்கும் கதை. முதல் பாதியில் எதோ ஜேம்ஸ்பாண்ட் பட கணக்காய் பயங்கராமாய் பில்டப் செய்திருக்கிறார்கள். வடிவேலு, விஜய், நயந்தாரா.. கல்யாண வீடு காம்பினேஷன் சூப்பர். அருமையாக க்ரியோகிராப் செய்யப்பட்ட காட்சிகள். அனால் தனியே வடிவேலு செல்ப் எடுக்கவில்லை. அதிலும் மாடுடன் சண்டையிடும் காட்சிகளில் நகைச்சுவைக்கு பதிலாய்.. கடுப்பையே ஏற்றுகிறது. நயந்தாரா.. அழகாய் இருக்கிறார். கவர்ச்சியாய் இருக்கிறார். ரொம்பவும் ஒடிசலாகாமல் இப்போது கொஞ்சம் பூசினார் போல் இருக்கிறார். ம்ஹூம் நமக்கில்லை. அவருக்கு கொடுத்த வேலையை சரியாய் செய்திருக்கிறார். விஜய்.. சில காட்சிகளில் அழகாய் இருக்கிறார், சண்டை போடுகிறார்....

சாருநிவேதிதா, வில்லு, படிக்காதவன், காதல்னா சும்மா இல்லை.. புத்தக கண்காட்சி..

Image
சென்ற வருட கடைசியிலிருந்து என் உறவினர் ஒருவருக்கு உடல் நிலை பாதிப்பால் ஒரே அலைச்சல்.. அதனால் கொஞ்சம் பிஸி.. மருத்துவமனையில் இருப்பதால் இரண்டு உபயோகம், ஒன்று பேஷண்டுக்கு, இன்னொன்று எனக்கு.. புத்தகம் படிக்க,எழுத நேரம் கிடைக்கிறது.. அதனால் தான் வில்லை இன்னும் பாக்கலை. ஆனா அதுக்குள்ள, பல பேர் பாத்துட்டு, பின்னி எடுத்திட்டிருக்காங்க.. நானும் பாத்துட்டு சொல்றேன். நேத்தைக்கு புத்தக கண்காட்சிக்கு போனேன். அங்கே லக்கி, அதிஷா போன்றவர்களை பார்த்தேன் சேர்ந்து சுற்றினோம். வாங்கிய புத்தகங்கள் ஜீரோ டிகிரி, எக்ஸ்டென்ஷியலும், பேன்சி பனியனும், மதுமிதாவின் பாம்பு கதைகள். இரண்டு முத்து காமிக்ஸ் செழியனின் உலக சினிமா டாக்டர் பிரகாஷின் இரண்டு நூல்கள் chetan baghat's one night @ call centre ஆகியவை.. திரும்பவும் போகனும்.. பாக்கலாம். இந்த வருஷம் கண்காட்சி ரொம்பவே காத்தாடுது.. ஏன்னே தெரியல.. சாருவும் நானும்.. தற்போது படித்து கொண்டிருப்பது- கள்ளி. Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும் உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

வில்லு - ஊத்திகிச்சாமே..?

Image
தமிழ்நாட்டை தவிர வெளிநாடுகளில் பத்தாம் தேதி இரவே வில்லு படம் வெளீயாகிவிட்டது என்று சொல்கிறார்கள். ஏன் என்றால் நமக்குதான் பொங்கள் விடுமுறை அங்கெல்லாம் அது கிடையாது என்பதால். வீக் எண்ட் கலெக்‌ஷனை அள்ளிட 10தேதியே வெளியியாகிவிட்டது. படம் பார்த்த என் நண்பர் ஒருவர் குருவியை விட மோசம்னு சொல்லி புலம்பினார். பார்ப்போம் நம்ம ஆட்கள் என்ன சொல்கிறார்கள் என்று. ஏனென்றால் வருகிற படங்களில் வில்லுக்கு அப்புறம் தனுஷின் படிக்காதவன் மட்டுமே.. பெரிய படம். மற்றொரு படமான எங்கள் தலைவன் விஜய்காந்த நடித்த “எங்கள் ஆசான்” படத்தின் வெளியீடை செவந்த் சேனல் நாராயணன் கேஸ் போட்டதால் நிறுத்தி வைக்க பட்டிருக்கிறது. எனக்கு நம்பிக்கை இருக்கும் படம் ‘காதல்னா சும்மா இல்லை” ஏனென்றால் தெலுங்கில் மிக அருமையாய் எடுக்கப் பட்டு, வெற்றி பெற்ற “கம்யம்” என்கிற படம் அது. பார்ப்போம் சொதப்பாமல் இருக்க வேண்டும். Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும் உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

அ.. ஆ.. இ..ஈ.. - திரை விமர்சனம்

Image
தெலுங்கில் சந்தமாமா என்று சுமாரய் ஓடியபடம். நவ்தீப்பும், சிவபாலாஜியும் நடித்து இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கிய படம். அதை ரீமேக் செய்திருக்கிறார்கள்.. இந்த படத்தில் என்னத்தை கண்டுவிட்டார்கள் என்று அதை ரீமேக் செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த படத்தில் ஒரு பாடல் முழுவதும் முத்தத்தை வைத்து ஒரு சூடான டூயட் எடுத்திருப்பார்கள்.. தமிழில் அதை காணோம். தன் தாயில்லாத ஒரே மகள் மீது மிகுந்த அன்பை வைத்திருக்கும் அப்பா பிரபு, தன் மகளுக்கு கல்யாண வயது வந்துவிட்டதால் அவளை பிரியவும் கூடாது, அதே சமயத்தில் அவளுக்கு நல்ல மாப்பிள்ளையையும் தேர்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில், பக்கத்திலேயே ஒரு அராத்து பணக்காரனின் மகனான இளங்கோவை தேர்ந்தெடுக்கிறார்.நிச்சயமும் செய்துவிடுகிறார்கள். அப்போது மோனிகா, அரவிந்திடம் தான் ஏற்கனவே ஒருவனை காதலித்ததாகவும், அவன் தன்னை பயன்படுத்திவிட்டு போய்விட்டான் என்கிற குண்டை போட, அதிர்ந்து போன அரவிந்த, அவனை தேடி கண்டுபிடிக்க, இதற்கிடையில் மோனிகாவின் தங்கை, அரவிந்தை காதலிக்க.. என்று குழப்படியாய் போகிறது. படம் முழுவதும், ஒவ்வொரு ப்ரேமிலும் முப்பது பேராவது இருக்கிறார்கள். அதிலும் பிர...

ராஜூ

Image
ராஜூவை பார்த்ததுமே எனககு ரொம்ப பிடித்துவிட்டது..அப்பா,தம்பி, தங்கை என்று எல்லோருக்கும் பிடித்துவிட்டது அம்மாவை தவிர.. அம்மாதான் வேண்டா வெறுப்பாய் சரி என்று சொன்னாற் போல் தெரிந்த்து.. மெஜாரிட்டி வின்ஸ்.. ராஜூ என்று எதற்காக பெயர் வைத்தோம் என்று எனக்கு தெரியவில்லை..ஆனால் எல்லோருக்கும் ரொம்பவே பிடித்துவிட்டதால் அதையே வைத்து கூப்பிட.. ஆரம்பிக்க..முதல் முறை கூப்பிடும்போது அது எனக்கென்ன என்று உட்கார்ந்திருக்க.. ச்சூ..சுசூ.. ராஜூ என்று பேர் சென்னதும்.. அவன் திரும்பியது.. சூசூவுக்கா..இல்லை பேரை தெரிந்தா என்று இன்றளவில் தெரியவில்லை. ராஜூவுக்கு பால் கொடுப்பது, வாக்கிங் போகிறேன் பேர்விழி என்று இரண்டொருநாள் அவனுடய கழுத்தில் பட்டை அதில் ஓரு மணி என்று ஜோடித்து போய் விட்டு வெளியே பீத்தி கொண்டவுடன், வாக்கிங் நின்று போயிற்று.. ரொம்ப சீக்கிரமே வளர்ந்துவிட்டான்.. ரொம்ப கோபக்காரனாயிட்டான்.. யாரையும் உள்ளே விடமாட்டான்.. நானோ..அலலது என் அப்பாவோ போய் அவனிடம் போய் காட்டி “ராஜு.. இவரு நம்ம ப்ரண்ட் “என்று அறிமுகத்துக்கு அப்புறமே போனால் போகிறதென்று பக்கத்தில் வந்து உட்கார்ந்து,வாலாட்டிய பிற்கும் சந்தேகத்தோடு பார...

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: அபியும் நானும்.. திரை விமர்சனம்

'கேபிள் சங்கரின்' பக்கங்கள்: அபியும் நானும்.. திரை விமர்சனம்

சக்சஸ் பார்முலா

Image
எந்த ஒரு தொழில் செய்தாலும் அதில் வெற்றி பெற்று நிற்பதற்கு காரணம் அதிர்ஷ்டம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். அந்த வெற்றிக்கு பின்னால் ஒரு மிக சிறிய ஒரு யோசனையும், சரியான திட்டமிடலும், சரியான தரமும்,பெரிய உழைப்பும் கண்டிப்பாய் இருக்கும். உதாரணமாய் நாம் எல்லோரும் விரும்பும் ஒரு உணவகத்தை எடுத்துக் கொள்வோம். அந்த உணவகத்தை பற்றி பல விஷயங்கள் விலை, தரம், அளவு பற்றி பல விமர்சனங்கள் இருக்கிறது,அது மட்டுமில்லாமல் அதன் உரிமையாளரின் தனிமனித நடவடிக்கைககலால் கெட்டு போயிருந்தாலும் இந்த நிமிடம் வரை அந்த உணவகத்தின் பெயரும், வியாபாரமும், இன்னும் கன ஜோராய் நடை பெற்று கொண்டுதானிருக்கிறது. ஏன் அந்த உணவத்தின் சுவையை யாரும் குறை சொல்லாவிட்டாலும், அவர்கள் வாங்கும் காசுக்கு, தரும் அளவைப் பற்றி பல விமர்சனங்கள் உண்டு. பல சமயங்களில் உண்மையும் கூட.. அவர்களின் வெற்றிக்கு பின்னால் நான் ஏற்கனவே சொன்ன யோசனை, திட்டமிடல், தரம், உழைப்பு மட்டுமில்லாமல், கஸ்டமர் சர்வீஸ் என்பதும் மிக முக்கியம். பல வருடங்களுக்கு முன்னால் அந்த உணவகத்தின் ஒரு கிளையில் நான் புல் மீல்ஸ் ஆர்டர் செய்துவிட்டு, சில பண்டங்களை நான் வைத்துவிட்டு...

சட்டம் உன் கையில்

Image
பொது இடத்தில் புகை பிடிக்க தடை போன்ற சட்டங்களை பொது புகை பிடிப்பவர்கள் கூட முணுமுணுத்துக் கொண்டே ஆதரித்தாலும், எல்லோரும் பயப்படுவது அதை நடைமுறை படுத்தும் போது நடக்க போகும் அராஜகத்தை நினைத்துதான். ஏன் என்றால் நம் நாட்டில் குற்றம் நடப்பதை தடுப்பதற்காக காவல் துறை இல்லாமல், அது நடக்க விட்டுவிட்டு அப்புறமாய் வந்து தண்டிப்பது அவர்க்ளது வாடிக்கை.. உதாரணமாய் ஓருவன் ஃபிரி லெப்ட் இல்லாத இடத்தில் திரும்ப முயற்சிக்கும் போதே அந்த டிராபிக் கான்ஸ்டபிள் அந்த தெருவின் முனையிலேயே நின்று அவனை தடுத்து அறிவுறுத்த வேண்டியதுதான் அவர் கடமை. ஆனால் அவர் என்ன செய்கிறார்.. ரோட்டின் உள்பக்கத்தில் ஓளிந்து நின்று கொண்டு அவனை மடக்கி “டேக் த 25” வாங்கி அவனை திரும்ப அனுப்பாமல் தவறான பாதையிலேயே அனுப்பி வைக்கிறார். அதே போல் அவர்கள் போடும் சட்டங்களூம் அவ்வளவு ஈஸியாக மக்களுக்கு புரியும் படி இருக்காது. உதாரணமாய் புகை பிடிக்கும் சட்டத்தை எடுத்து கொள்ளுங்கள், அதில் பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது.. என்று சொல்லி பல இடங்களை சுட்டி காட்டி இருக்கிறார்கள். ஆனால் தெரு, மற்றும் பார்க் எல்லாம் பொது இடம் தானே..அங்கே புகைக்கலாம் என...

எ.வ.த.இ.ம.படம் -Slumdog Millionaire

Image
படம் பார்த்துட்டு ஒரு இரண்டு மணிநேரத்துக்கு என் மனம் முழுவதும் ஜமால் மாலிக், மாலிக், லதிகா என்றே உழன்று கொண்டிருந்தது. What a movie yaar..? படத்தின் கதை ஜமால் மாலிக் என்கிற 18வயது கால்சென்டரில் டீ பாய்யாக வேலை செய்யும், ஒருவன் நமது கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லா கேள்விகளுக்கும் சரியான் பதிலை சொல்லி அசத்துகிறான். நிகழ்ச்சியை நடத்தும் அனில் கபூருக்கு ஒரு சாதாரண குப்பத்தில் அனாதையாய் வளர்ந்த இவனுக்கு எப்ப்டி இந்த பதில்கள் தெரியும், இதற்கு பின்னால் ஒரு சதியிருக்கும் என்று சந்தேகப்பட்டு, கடைசி கேள்வியின் போது நிகழ்ச்சியின் நேரம் முடிய, அன்று இரவு அவனை போலீஸில் பிடித்து கொடுக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அவனை டார்சர் செய்யும் காட்சியிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. டார்சரின் முடிவில், தனக்கு எவ்வாறு அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தெரிந்தது என்று தன் வாழ்கையை சொல்கிறான். முஸ்லிம்கள் அதிகமாய் வசிக்கும் மும்பை குப்பத்தில் இந்துக்கள் கலவரத்தில் தன் தாயை இழந்து அனாதையான சகோதரர்கள், அவர்களுடன் சேரும் லதிகா என்ற சிறுமி, இவர்கள் மூவரும் ஒரு கொடிய மனமுள்ள குழந்தைகளை வைத்து, அவ...

King - Telugu Cinema Review

Image
ராஜ குடும்பத்தின் மகன் கிங் என்கிற ராஜா சந்திரபிரதாப் வர்மா(நாகார்ஜூன்).. தன் தந்தையின் இறப்புக்கு பிறகு, குடும்ப பிஸினெஸ்ஸை எடுத்து நடத்துக்கிறார். வீட்டிற்குள்ளேயே அவருக்கு எதிரிகள் இருக்க, ஆஸ்திரேலியாவில் அவரின் பரம எதிரியான சுவப்னா(மம்தா மோகன்தாஸ்)வால் கொல்லபடுகிறார். இப்போது ஹைதராபாத்தில் பொட்டு சீனு என்கிற பெரிய ரவுடி அசல் கிங்கை போலவே இருக்க, அவர் மிகப் பெரிய பாடகியாக வேண்டும் என்கிற ஆசையில் இருக்கும் ஷரவணியின் (திரிஷா)மேல் காதல் கொள்கிறார். திரிஷாவிடம் தான் ஒரு ரவுடி என்று சொல்லாமல் சாப்ட்வேர் இன்ஜினியர் என்று உட்டாலக்கடி அடித்து மடிக்கிறார். ஒரு கட்டத்தில் கிங்கின் இடத்தில் பொட்டு சீனு இருக்க வேண்டிய கட்டாயம் ஆகிறது. கிங்கை கொலை செய்தது யார்..? அதன் பிண்ணனி என்ன? என்று படம் முடிகிறது. நாகார்ஜூனுக்கு ஏற்கனவே பல படங்களில் செய்த கேரக்டர்தான். மனுசன் இன்னும் கூட இவ்வளவு யங்கா இருக்காறே..? அதிலும் பாடல்கள் காட்சிகளில் சும்மா சூப்பர். திரிஷா வரவர சப்பி போட்ட மாங்கொட்டை கணக்காய் இருக்கிறார். படத்தில் வருகிறார், சிரிக்கிறார், போகிறார். பொட்டு சீனுவாகவும், திரிஷாவிடம் சாப்ட்வேர் இன்ஜின...