Posts

Orphan- (2009)

Image
5 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய என் அன்பு சக பதிவர்களூக்கும்,வாசகர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றிங்கோ... சொந்த காசில சூனியம் வச்சிக்கிறதுன்னு கேள்வி பட்டுருப்பீங்க. இந்த படத்தில கதாநாயகி பண்றது அதுக்கும் மேல. இப்பத்தான் பாராநார்மல் ஆக்டிவிடீ பார்த்துட்டு கொஞ்சம் மூச்சு விட்டோம்னா., அடுத்து ஒரு அசத்தலான படம் orphan. மேலே உள்ள படத்தில் உள்ள பெண்ணை பார்த்தால் கொஞ்சம் சீரியஸான, மெச்சூர்டான பெண்ணைப் போல் தெரிகிறதா..? அப்படி நம்பித்தான் கேட்டும் அவள் கணவனும் அனாதை இல்லத்திலிருது கூட்டி வருகிறார்கள். கேட்டுக்கு பிறந்த மூன்றாவது குழந்தை இறந்தே பிறந்து விட, அதில் மன அமைதி கெட்டுப் போய், குடிகாரியாய் மாறி ஆல்கஹாலிஸ் அனானிமஸில் கவுன்ஸிலிங் எடுத்து தன்னை ஒரு நிலை படுத்த, இசை, வீடு என்று மனதை மாற்ற முயலும் நேரத்தில் தன் குழந்தை இறந்ததுதான் காரணம், அதனால் ஒரு பெண் குழந்தையை எடுத்து வளர்க்கலாம் என்று ஆர்பனேஜிலிருந்து எஸ்தரை அழைத்து வருகிறார்கள். பார்தவுடனேயே அவளையும், அவளின் பேச்சுகளினாலும் மனம் கவர்ந்து, நெகிழ்ந்து போன கேட்டின் கணவன், அவனுக்கு பிடித்ததினால் ஒரு மனதாய் அவளை தன் வீட்ட...

கொத்து பரோட்டா –09/11/09

Image
பதிவர் சந்திப்பு இந்த முறை யாரும் நினையாமலேயே தள்ளி வைக்க பட்டது. வருததமாய்தான் இருந்தது. இரண்டு நாள் தொடர் மழைக்கே சென்னை ரொம்பி போய் மிதக்கிறது. அந்த லட்சணத்தில் இருக்கிறது அரசு. எங்கெங்கு பாரினும் தண்ணீர். அடுத்த பதிவர் சந்திப்பை ரமணன் கிட்ட கேட்டுட்டு வர்ற வாரமோ, அல்லது அடுத்த வாரமோ வச்சிருவோம். பதிவர் சந்திப்பு தள்ளிவைத்த அறிவிப்பை தமிலிஷ் தளம் முகப்பில் போட்டு அறிவித்தமைக்கு நன்றி.. நன்றி.. நன்றி.. ######################################################################## சன் டிவியின் டீலா நோடீலா நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்து பத்து நிமிடஙக்ளூக்கு எல்லாம் போரடிக்க ஆரம்பித்துவிட்டது.  ஆவூன்னா மாத்தி, மாத்தி டீலா, நோடீலான்னு சொல்லி சொல்லி நோகடிக்கிறாங்களே தவிர பெரிசா ஒரு த்ரில்லோ, இல்லை ஒரு பெபோ இல்லை. மொக்கையாய்தான் இருக்கிறது.  சரின்னு சேனலை மாத்தி விஜய்க்கு வந்தா. போன வாரம் பாடின அழுத அம்மணி போனவாரம் விட்டதை தொடர்ந்திருந்தாங்க. இதுல பாடினவரு குரல் நல்லாவே இருந்தததாமா.? ப்ரோக்ராமைவிட பக்கத்தில் உட்கார்ந்திருந்த  ஒரு லேடி, நல்ல கலரா, வாட்டசாட்டமா..< முன்பக்கம...

சா…பூ… த்ரீ…- திரை விமர்சனம்

Image
காதல் திருமணம் செய்து, இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு அதனால் வெறுமையின் உச்சத்தில் இருக்கும் தம்பதிகள், ஒரு பெண்ணை காதலிப்பதுதான் முக்கிய விஷயமாய் நினைத்து அலைந்து, தனக்கு எது வேண்டும், அல்லது வேண்டாம் என்று முடிவெடுக்க முடியாத ஒரு இளைஞன், பிகர்களைவிட ஆண்டிகளிடம் மனதை பறிகொடுக்கும், காலேஜ் பையன் பால் இப்படி ஒரே காலனியில் வேறு வேறு ப்ளாட்டுகளில் வசிக்கும் மூவரை பற்றிய படம். படத்தில் இண்ட்ரஸ்டாய் சொல்ல முயற்சி செய்து வெற்றி பெற்ற கேரக்டர், பால் எனும் பழனியப்பன் என்கிற ஆண்டிகளை சைட் அடிக்கும் கேரக்டர். நல்லா ரீச் ஆகியிருக்கு. மிக இயல்பான நடித்திருக்கிறார். ரியாக்‌ஷன்களை உடனக்குடன் கொடுத்து சிரிப்பை வரவழைக்கிறார். அதே போல் பிரஜன் ஜோடிக்கான பிரச்சனை. இருவ்ருக்குமிடையே ஆன வெறுமையை இன்னும் நன்றாக சொல்லியிருக்கலாம். ரொம்பவும் ஆங்கில பட தாக்கத்தினால் பட்டும் படாமல் காட்சியமைத்திருந்ததால் பெரிதாய் பாதிப்பு ஏற்படுத்த தவறிவிட்டார். இயக்குனர். பிண்ண்னி பாடகி உஜ்ஜெயினி பால் காதலிக்கும் ஆண்டியாய் வருகிறார். நல்லா…… இருக்கிறார். படத்தின் முக்கிய கதையான கதாநாயகனின் காதல் கதை ரொம்ப குழப...

Paranormal Activity –2007

Image
எவ்வளவோ கோரமான பேய் படங்களை பார்த்திருப்பீர்கள், மிரட்டலான கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் நம் வயிற்றை கலக்கிய பேய் படங்களை பார்த்திருப்பீர்கள்.. இது எதுவுமே இல்லாமல் தக்குணியூண்டு பட்ஜெட்டில், மிகப் பெரிய டெக்னாலஜி இல்லாமல் நம்மை சைக்கலாஜிகலாய் கதிகலங்க வைக்கும் படம். காதல் ஜோடிகள் ஒரு வீட்டிற்கு வருகிறார்கள், அதில் வரும் கதாநாயகிக்கு ஒர் பிரச்சனை, அவளை ஏதோ ஒன்று தன்னுடய எட்டு வயதிலிருந்து தொடர்வதாக ஒரு உணர்வு என்று சொல்ல, அவளுடய காதலன் அப்படி ஏதாவது வந்தால் தான் தொடர்ந்து தான் வாங்கிய புதிய வீடியோ கேமராவில் படமெடுத்து பார்த்துவிடலாம் என்று சொல்ல, படம் ஆரம்பிக்கிறது. புதுவீட்டில் குடியேறி தினத்திலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் அவர்களின் தூக்கத்தை கூட தொடர்ந்து கேமராவால் படமெடுக்கிறான். அடுத்த நாள் அதை போட்டு பார்க்கிறார்கள். முதல் மூன்று நாட்களுக்கு ஒன்றுமில்லை. அதன் பிறகு ஒரு நாள் கதவு மட்டும் ஆட, அதிலிருந்து ஆரம்பிக்கிறது நம்முடய அட்ரிலின் பம்பிங். அவர்கள் தூங்குவதை பார்க்கும் போதெல்லாம், எப்போது எது வருமோ என்று நாடி துடிப்பு எகிற, அடுத்தடுத்ததாய் நிகழ்வுகள் நிகழ, நாம் கால்களை எடு...

கொத்து பரோட்டா –02/11/09

நேற்று இரவு விஜய் டீவியில் “நீயா நானா? ” பார்த்து கொண்டிருந்தேன். அதில் ஒரு பெண் தன் காதலர், தனக்கு மனம் கஷ்டமாய் இருக்கும் போது ஒரு பாடலை பாடுவார் என்றும், அதை கேட்டு நான் அழுது மனம் கரைவேன் என்று சொன்னார். உடனே அவர் எதிர் திசையிலிருந்து அவர் பாட, உடனடியாய் இன்ஸ்டெண்டாய் இவரும் பிழிய, பிழிய அழுதார். என்ன கொடுமைடா சாமி என்று சேனலை மாற்றினால் கலைஞர் டிவியில் ரோஸ் நேரம் ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு ஓப்பன் பூங்காவில் இரவு நேரத்தில் உட்கார்ந்திருந்த ஆட்களின் முகத்தில் லைட் அடித்து, காட்டிக் கொண்டிருந்தார்கள்.என்னடாவென பார்த்தால் பேய் இருக்கிறது என்று ஒரு கும்பலும், இல்லை என்று ஒரு கும்பலும் பேசிக் கொண்டிருக்க, அதில் இருக்கு கும்பலில் ஒருவர் தன்னால் பேயை இரண்டு நிமிடத்தில் ஒருவர் மீது பேயை ஏவி விட முடியும் என்று கூற, எதிர் கும்பலில் ஒரு புதுமண தம்பதிகளீல் ஒருவரின் கணவர் பேயே இல்லை என்று முடிந்தால் ஏவி விடுங்கள் என்று கூறி போட்டிக்கு வர, முடிவில் அவர் மீது நேற்று பேயை ஏவி விட்டார்கள். அது 30 நாட்களூக்கு பிறகுதான் தெரியுமாம். நிகழ்ச்சி மிக கேவலமாய் படமாக்க பட்டிருந்தது. சமயங்களில் ரோஸ் தா...

கண்டேன் காதலை – திரை விமர்சனம்

Image
thi தன் அம்மா கம்பெனி ஆடிட்டருடன் ஓடி போய், அப்பா இறந்து கம்பெனியில் சேர்ம்ன் போஸ்டுக்கு நிற்க, அதே நேரத்தில் காதலியும் பரத்தை விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள, மனம் குழம்பி, டிப்ரஸ்டான நிலையில் எல்லாவற்றையும், விட்டு சாகலாம் என்று ஏதோ ஒரு ரயிலில் ஏறும் பரத், லொட,லொட ஓட்டை வாய் தமன்னாவை பார்க்க, அட காதல் வரப்போகிறது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, தமன்னா தான் கெளதம் என்பவனை காதலிப்பதாகவும், ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் சொல்ல, பரத்தினால் தமன்னாவும் ரயிலை விட, அந்த ஒரு நாள் டிராவலில் இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு, நட்பாக , தமன்னா விட்டில் அவரை சந்தானத்துக்கு திருமணம் செய்ய முடிவு செய்ய, வேறு வழியில்லாமல் அவரும் பரத்தும் வீட்டிலிருந்து ஓடிவிடுகிறார்கள். தமன்னா அவரின் காதலரை பார்க்க, பரத் மீண்டும் தன் பாதைக்கு. பிறகு என்ன? பரத் பெரிய கோடீஸ்வர பையன் என்பதை அவ்ர்கள் சொல்வதால் நம்ப வேண்டியிருக்கிறது. என்ன தான் மேக்கப், ஹேர்கட் என்று மெனக்கெட்டாலும் ஆறுமுகம் முகம் தான். அதிலும், மீண்டும் கம்பெனிக்கு வந்து அவர் பேசும் வசன காட்சி இருக்கிறதே. அய்யோ.. ...

This Is It – A Musical Ecstasy

Image
மைக்கேல் ஜாக்ஸன் இறப்பதற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த This is it என்கிற கான்செர்ட்டுக்கான முன் நடந்த ஏற்பாடுகள், ரிகர்சல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு டாகு- மியூசிகல படமாய் வெளிவந்திருக்கிறது. வழக்கமாய் பேக் ஸ்டேஜ் விஷயங்களை பார்ப்பதற்கு எல்லோருக்குமே பிடிக்கும். அதிலும் பிரபலமான ஆட்களின் பேக் ஸ்டேஜ் விஷயஙக்ள் என்றால் நம்முடைய ஆர்வம் இன்னும் அதிகமாய் எகிறும். அப்படியிருக்க, எம்.ஜேவின் பேக் ஸ்டேஜ் ரிகர்சல்கள் என்றால் கேட்க வேண்டுமா..? அதிலும் அவருடய நடக்காத சோல்ட் அவுட் கான்செர்டுக்கான ரிகர்சல் என்றால் ..? உலகம் முழுக்க ரத்தத்தில் அட்ரிலின் எகிற ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர். அதில் நானும் ஒருவன். முதல் காட்சியில் அவருடன் பணியாற்றும் சிலருடய பேட்டியுடன் படம் ஆரம்பிக்கிறது. இளைஞர்கள், மிகவும் இளைஞர்கள், எம்.ஜேவுடன் பணியாற்றுவதே பெரிய பாக்கியமாய் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஓவராய் சிரித்து, பேச முடியாமல் கண்களில் கண்ணீருடன் ததும்ப, This is it என்று டைட்டில் ஆரம்பிக்க உலகின் ஈடு இணையில்லா எண்டர்டெயினரின் படம் ஆரம்பிக்கிறது. தியேட்டர் எங்கும் உற்சாக கூச்சல்கள் தியேட்டர் கூர...

தியேட்டரிலிருந்து மல்டிப்ளெக்ஸ்-2

Image
சென்னையில் அன்றைய காலகட்டத்தில் பிரபலமாயிருந்த திரையரங்குகள், காமதேனு, சித்ரா, கெயிட்டி, கேசினோ, பிளாசா, பைலட்,அலங்கார், மினர்வா, ஸ்ரீகிருஷ்ணா, செலக்ட், க்ரவுன், புவனேஸ்வரி, பாரத், பிரபாத், பிராட்வே, எலிபெண்ட்ன், நட்ராஜ், பத்மனாபா, வெலிங்டன், மகாலஷ்மி, சரஸ்வதி, முருகன் டாக்கீஸ், ராக்ஸி, வீனஸ், சயானி போன்ற தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்கள் இப்போது ஷாப்பிங்க் காம்ப்ளெக்சாகவோ, அல்லது குடோனாகவோ, பூட்டியோ கிடக்கிறது. இவை எல்லாமே சிங்கிள் ஸ்க்ரீன் எனப்படும் ஒற்றை தியேட்டர்களே. இப்படி ஆயிரக்கணக்கான சினிமா ரசிகர்களை தங்கள் வசம் வைத்திருந்த திரையரங்குகள் ஏன் திடீரென மூடப்பட்டது? எதனால்? என்பதுகளில் திரையரங்குகளை தவிர வேறு பொழுது போக்கே இல்லை என்ற நிலையில் வந்த தொலைக்காட்சி பெட்டி தமிழ் சினிமாவை மட்டுமல்ல, இந்திய சினிமாவையே ஒரு ஆட்டு ஆட்டியது என்றால் அது மிகையில்லை.  வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நேரத்திற்காகவே சாயங்காலமே எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ரெடியாகிவிடுவார்கள். திரையரங்குகளீல் மாலை காட்சி காற்றாட ஆரம்பித்தது இந்த காலங்களில் தான். கூடவே ஞாயிற்று கிழமை சினிமா வேறு மக்க...

கொத்து பரோட்டா –26/10/09

Image
சில பேர் தாங்கள் செய்தது தவறு என்று “போதையின்” உச்சத்தில் இருக்கும் போது, தலையில் அடித்து கொண்டு ஒத்து கொண்டதும், அதற்கு சாட்சியாய் தான் போதையின் உச்சத்தில் இருந்ததாய் நிருபிக்க, அங்கிருந்த மருத்துவருக்காக, பின்னூட்ட பெட்டியை திறந்திருப்பதும்,  அடிபட்டவர் நடந்த சம்பவத்தை எழுதிவிட்டார் என்பதும், மேலும் தான் குடித்திருந்ததை நிருபிக்க, வந்திருந்த நண்பர்கள் கூட மதுவருந்தி போதையில் இருந்ததாய் ஆளுக்கொரு ஒரு பீர் அடித்திருந்து, அதுவும் இந்த பிரச்சனையை கேள்விபட்டு டென்ஷனாகி, மூச்சா போய்விட்டு வந்தவர்களை பார்த்து போதையில் இருந்தார்கள் என்று சொன்னது எவ்வளவு மிகைபடுத்தல் என்பதை, கூட இருந்து பீரடித்து, மூச்சா போனவர்கள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட என் பாக்ஸ் திறந்தே இருக்கும். ******************************************************************  செவிக்கினிமை ரொம்ப நாளாகிவிட்டது இந்த பாட்டை கேட்டு, ரட்சகன் படத்தில் நாகார்ஜுன்,  சுஷ்மித சென்னை அலேக்காய் தூக்கிய படி பல மாடி கட்டிடங்களில் படியில் ஏறி போவதாய் காட்சி, “கனவா.. இல்லை காற்றா.?” என்ற ஸ்ரீனிவாஸ் உருகியிருக்கும் அந்த ப...

All The Best- Hindi Film Review

Image
பர்தீனும், அஜெயும், நண்பர்கள், பர்தீனின் பணக்கார அண்ணன் சஞ்செய் தத் மாதம் தரும் லட்ச ரூபாய் பாக்கெட் மணியை வைத்து காலத்தை ஓட்டுபவன். அஜெயும், அவனது மனைவி பிபாஷாவும் ஒரு நொடித்து போன ஸ்டாப் பட்டனை அழுத்தினால் நிற்காத டிரெட்மில்லை வைத்து ஜிம் நடத்தி நொந்து போனவர்கள். பர்தீனும் அவனது காதலியும் கல்யாணம் செய்து கொண்டுவிட்டதாய் அவனது அண்ணனிடம் சொல்லியிருக்க, அதே நேரத்தில் செலவுக்காக லோக்கல தாதா ஜானிலீவரிடம் கடன் வாங்கியிருக்க, அந்த கடனை அடைக்க, பங்களா வீட்டை வாடகைக்கு விட லாட்டரியில் விழுந்த காசினால் பணக்காரனான ஒருவனுக்கு வாடகைக்கு விட அட்வான்ஸ் வாங்கி அந்த பணததை தாதாவிடம் கொடுத்துவிட, அந்நேரத்தில் பர்தினின் அண்ணன், ப்ளைட் கேன்ச்லாகி வெளிநாட்டிலிருந்து வந்து கோவா எர்போர்டிலிருந்து பேச, குழப்பத்துடன் அவரை வீட்டுக்கு கூட்டி வர, வீட்டில் இருக்கும் அஜயின் மனைவி பிபாஷாவை பர்தீனின் மனைவி என்று சஞ்செய் நினைப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது குழப்பம், ஒரே கலாட்டா தான் படம் நெடுக டயலாக் காமெடிதான். பர்தீனை விட அஜய் தூள் பரத்தியிருக்கிறார். க்ளாஸ் டம்பளரில் ஸ்பூனினால் அடித்து சங்கேதமாய் பேசும் தாதா ஜா...