Posts

நிதர்சன கதைகள்–19- நாளைய இயக்குனர்.

Image
சினிமா கனவுகளின் ஆயிரம் வாயில்கள் நிறைந்த ஏரியாவில் கிட்டத்தட்ட வெளிக்கதவு உள்ள இடத்தில் அந்த அலுவலகம் அமைந்திருந்தது. ஒரு குட்டி ப்ளாட். அது ஒரு சினிமா சம்பந்தபட்ட கம்பெனி என்று வாசலில் விட்டிருந்த ஷூக்களையும், செருப்புகளையும் பார்த்தே தெரிந்து கொண்டேன். வாசலில் ஒரு மிக இளைஞன் ஓரமாய் நின்று தம்மடித்துக் கொண்டிருந்தான். பைக்கை வைத்து விட்டு உள்ளே யார் என்று பார்வையால் தேடிக் கொண்டிருந்த போது, அவன் சிகரெட்டை காலால் நசுக்கிவிட்டு “யார் சார்.. யாரை பாக்கணும்?” என்றான். “….. வரச்சொல்லியிருந்தாங்க..” ”அப்படியா.. வாங்க உள்ளே உட்காருங்க.. “ என்று சொல்லி ஒரு சேரை காண்பித்துவிட்டு, ஒரு கதவை திறந்து உள்ளே போனான். அது ஒரு சின்ன ஹால், இரண்டு சோபாக்களூம், சேர்களுமாய் இடத்தை அடைத்துக் கொள்ள, அங்கேயிருந்த டீவியில் டிவிடி முலமாய் அவர்களுடய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. சுவர் முழுவதும், நிகழ்ச்சி தொகுப்பாளர் படமும், சில போஸ்டர்களும் தெரிய, அறையிலிருந்து வெளிவ்ந்து வெகு இளைஞன், “உள்ளே போங்க” என்றான். நான் என் உடைகளை ஒரு முறை நீவி விட்டுக் கொண்டு, லேப்டாப்பை ஒரு முறை சரியாய் மாட்...

அனைவரும் வருக….

கொஞ்சம் தேநீர் நிறைய்ய வானம் www. Thadagam.com & www. chikky mukky .com இணைந்து நடத்தும் தமிழ் இணையதளம் குறித்த சிறு கருத்தரங்கு நாள்: 10 -07 -2010 சனிக்கிழமை காலை 10 மணி இடம்: ஹெக்டே ஹால் ,அண்ணா யூனிவர்சிட்டி அலுமணிகிளப் அடையார் கேட் ஒட்டல் சிக்னல் எதிரே ,போட்கிளப் கோவை மாநாட்டில் நிகழ்ந்த இணையதள ஆய்வரங்கத்தின் குறுக்குவெட்டு பார்வை மற்றும் இணையதளங்களின் வரலாறு எதிர்காலம் மற்றும் தமிழ் எதிர்கொள்ளும் புதிய எழுத்துரு ப்ரச்னைகள் குறித்த கலந்துரையாடல் வரவேற்புரை : தாரா கணேசன் சிக்கி முக்கி.காம் துவக்க உரை தமிழ் இணையதளங்களின் வரலாறு ஓசை செல்லா பதிவர் உலகம் இன்று கேபிள் சங்கர் உண்மைத்தமிழன் யுவ கிருஷ்ணா எப்படி உருவாக்கினேன் தான் உருவாக்கிய ஜீவா எழுத்துரு பற்றி சிறுகதை எழுத்தாளர் ஜி.முருகன் சிறப்பு பங்கேற்பு இணையதளங்களின் துவக்கலாம் எதிர்காலம் சிட்னி பாலா (எ) பாலா பிள்ளை தொடர்ந்து பங்கேற்பாளர்கள் பதிவர்கள் கலந்துரையாடல் நன்றியுரை அமுதரசன் தடாகம். காம் -- பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் வந்திருந்து கருத்தரங்கை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கேபிள் சங்கர்

கடையடைப்பு

Image
ரெண்டு நாள் முன்பு விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து நாடு முழுவதும் கடையடைப்பு அறிவித்திருந்தது. தமிழ் நாட்டில் பெரியதாய் என்ன சின்னதாய் கூட எந்தவிதமான சலசலப்பும் இல்லாமல் புஸ்ஸென போனது கடையடைப்பு. ஒரு வேளை அரசு ஆதரவுடன் நடந்திருந்தால் நிச்சயம் இந்த கடையடைப்பு மாபெரும் வெற்றியாக்கப்பட்டிருக்கும். ஆனால் ஆளும் காங்கிரஸ் அரசை எதிர்த்து விரைவில் தேர்தலை சந்திக்கப் போகும் நேரத்தில் பகைத்துக் கொள்ள மனமில்லாமல் தி.மு.க அரசு அமைதி காத்திருக்கிறது. சரி… இவர்கள் தான் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டோமானால். ப.ம.க வோ… எதுக்கு ஆதரிக்கணும்.. அப்புறம் பின்னாடி சீட்டும், பையனுக்கு ராஜ்ய சபா எம்.பியும், மந்திரி பதவியும் போயிருமோன்னு, எங்க போய் முட்டிகிட்டா பித்தம் தெளியும்னு தெரியாம வாய மூடிட்டு உட்காந்துட்டாங்க. இந்த லட்சணத்துல 2011ல இவங்க ஆட்சின்னு நாலு வருஷம் முன்னாடி அறிக்கை வேற. ஆ..ஊன்னா மைனாரிட்டி திமுக அரசுன்னு சொல்லிட்டிருக்கிற அதிமுக தலைமை எந்தவிதமான பெரிய எழுச்சியையும் ஏற்படுத்தாம வாயை மூடிட்டு எதுக்கோ காத்திட்டிருக்கிற மாதிரி போயிருச்சு. அது சரி ஒருவேளை கூட்டம் கூட்டி வேலை செய்ய ...

I Hate Luv Storys (2010)

Image
காதல் படஙக்ளையும், டெம்ப்ளேட் காதலர்களையும் பிடிக்காத ஜே, என்கிற ஒரு இளமை துள்ளும் இளைஞன்.  சினிமாவில் வருவது போலவே டெம்ப்ளேட் காதலை காதல் என்றும் கொண்டாடும் பெண்ணுக்கு இடையே நிஜமாய் காதல் வருவதுதான் கதை. அதை மிக சுவாரஸ்யமாக செய்திருக்கிறார்கள். தொடர்ந்து காதல் படஙக்ளையே கொடுத்து வெற்றிகரமான இயக்குனராக வலம் வரும், எமோஷனல், இயக்குனர் வீர் கபூரிடம் ஜே அஸிஸ்டெண்ட் டைரக்டராய் வேலை செய்கிறான்.உருகி, உருகி காதல் கதைகளை எடுப்பவரிடம் கொஞ்சம் கூட பிடிக்காமல் வேலை செய்யும் ஜெ, ஒரு காஸனோவா டைப் இளைஞன், பார்த்த மாத்திரத்தில் பப்பிலோ, தியேட்டரிலோ, பார்க்கும் இடத்தில் ஒருத்தியை கரெக்ட் செய்து “மேட்டர்’ முடித்துவிட்டு அடுத்த நாள் காலையில அவளை வீட்டிலிருந்து துரத்துபவன். சிம்ரன், க்யூட்டான, தன் சிறுவயது நண்பனையே காதலனாய் வரித்து, நொடிக்கு ஒரு ஐ லவ் யூ, கிப்ட்டுகள், பார்ட்டி, அவனுக்கு பிடித்ததை தனக்கு பிடித்ததாய் ஏற்றுக் கொண்டு அவனுக்காக உருகுவதாய் உருவகப்படுத்திக் கொண்டு காதல் என்பது ஒரு சந்தோஷ குல்பி என்பதாய் சினிமாத்தனமாய் ராஜ்ஜை காதலிப்பவள். ஜே, சிம்ரனை தியேட்டரில் பார்க்க, அவளை கரெக்ட் செய்ய ...

கொத்து பரோட்டா-05/07/10

Image
சரவணபவன் ஓட்டல் கிளைகள் எல்லாமே கிட்டத்தட்ட சிக்னலுக்கு பக்கத்திலேயோ.. அல்லது மிகவும் ஜன சந்தடியிருக்கும் இடத்திலேயோதான் இருக்கும், மற்ற ஓட்டலுக்கு முன் எப்போது வண்டி நிறுத்த முடியாத நிலையிருந்தாலும், இவர்கள் மட்டும் ஒரு கூர்காவை போட்டு பார்க்கிங் வசதி செய்து கொடுத்திருப்பார்கள். இவர்களது ஓட்டலுக்கு வரும் வண்டிகளை மட்டும் போலீஸ் தூக்கி போகாது அதற்கு காரணமும் இருக்கிறது. ஒவ்வொரு ஏரியாவிலும், உள்ள ஸ்டேஷன் ஆட்கள் தினமும், காலையில் அவர்களூக்கு என்ன தேவையோ அந்த அளவுக்கு டிபன் வகைகள் மற்றும் காபி எல்லாமே ஃபிரி.. வெறும் ட்ராபிக் போலீஸ் வரை கிடையாது. ஏரியா ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிலிருந்து, ஏட்டு வரை அவர்கள் பாட்டுக்கு வந்து உட்கார்ந்து என்ன இருக்குன்னு லிஸ்ட் போட்டு கேட்டுக் கொண்டு ஒரு கட்டு கட்டிவிட்டுத்தான் போகிறார்கள். காசி தியேட்டர் அருகில் உள்ள சரவணபவனில், நோ பார்க்கிங்கில் இருந்த என் வண்டியை அந்த கூர்க்கா எடுத்துக் கொடுக்க, உள்ளே போனார் அங்கே நின்றிருந்த ட்ராபிக் போலீஸ். %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%% தி னத்தந்தியில் ஒரு செய்தி கணவன் குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓ...

அம்பாசமுத்திரம் அம்பானி

Image
திண்டுக்கல் சாரதிக்கு பிறகு கருணாஸ் கதாநாயகனாய் நடித்து வந்திருக்கும் படம். படத்திற்கு ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது என்பதை நிருபிக்கும் வகையில் சந்திரன் தியேட்டர் நேற்று ஹவுஸ்புல். அம்பாசமுத்திரத்திலிருந்து அனாதையான தண்டபாணி, எப்பாடு பட்டாவது அம்பானியாக வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறான். தமிழ் படம் சினிமாவில் வருவது போல் ஒரு காபி எடுத்து வருவதற்குள் நடக்கவில்லை. அவனின் முதல் ஆசை வசந்த் அண்ட் கோ போல தண்டபாணி அண்ட் கோ என்று ஒரு ஷாப்பிங் மாலில் கடை வைப்பதுதான். அதற்காக அவனின் காட்பாதரான அண்ணாச்சியிடம் கொஞ்சி, கூத்தாடி கொஞ்சம், கொஞ்சமாய் பணம் கொடுப்பதாய் சொல்லி ஒரு கடையை பிடிக்கிறான். அவன் கடையை பிடித்தானா?, நடுவில் அவன் வாழ்க்கையில் வந்த காதல், நட்பு, துரோகம் எல்லாம் என்ன ஆயிற்று என்பதை முடிந்தவரை நகைச்சுவையாகவே சொல்ல முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். கதாநாயகனாய் இல்லை.. கதை நாயகனாய் கருணாஸ், சரியாக சூட் ஆகிற கேரக்டரை தான் செலக்ட் செய்திருக்கிறார். படம் நெடுக ஒரு குறிக்கோளோடு அலையும், இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். பல இடங்களில் மிக இயல்பாய் ஜோக் அடித்து சிர...

சாப்பாட்டுக்கடை

Image
ஒரே இடத்தில் சைவம், அசைவம், இரண்டும் கிடைத்தால், அதுவும்  சுமாரான விலையோடு, நல்ல தரமான ருசியோடு, கிடைத்தால் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். சென்னை கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் மெயின் ரோடில் இருக்கும் த்ரினேத்ரா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் இருக்கும் இடத்தில் மூன்று கிஸோக்குகளில் ஸ்பைஸி பாயிண்ட், தோசா பாயிண்ட் என்று  பாஸ்ட் புட் ஜாயிண்டுகளாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்பைசி பாயிண்டில் பிரியாணி, ப்ரைட் ரைஸ், தந்தூரி, மற்றும் சிக்கன், ஸ்பெஷல் கிரேவிகள் என்று வெஜ் மற்றும் நான் வெஜ் அயிட்டங்கள் உடனடியாய் தயாரிக்கப்பட்டு தரப் படுகிறது. அதே தோசா பாயிண்டில் தோசை, பொடி தோசை, பெசரட்டு தோசை, உப்புமா தோசை, வெங்காய ஊத்தப்பம், அடை அவியல் என்று லிஸ்ட் கட்டியம் கூறுகிறது. பிரியாணி டேஸ்ட் நன்றாக இருக்கிறது. அத்துடன் இங்கு தரப்படும் நான் வகைகள் மிக நன்றாக இருக்கிறது. சைட் டிஷ் வகைகளில் செட்டிநாடு வகைகள் சுவையாக இருக்கிறது. சைனீஸ் பற்றி தெரியவில்லை. தோசை வகைகளில் மூன்று விதமான சட்னியுடன், நல்ல திக்கான சாம்பாருடன் தருகிறார்கள். அடையை அவியலுடன் சாப்பிட்டுப் பாருங்கள் ம்…. டிவைன். அவியல் அவ்வளவு ட...

இசையெனும் ‘ராஜ’ வெள்ளம்-5

Image
இளையராஜாவின் இசையை பற்றி எழுதப் போனால் இத்தோடு முடிந்தது என்று முடிக்க முடியாது. போய்க் கொண்டேயிருக்கும். முக்கியமாய் பாடல்களை பற்றி எழுத ஆரம்பித்தால் அவ்வளவுதான். இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களுக்காகவே ஓடிய மொக்கை படங்கள் நிறையவே இருக்கிறது. இன்றளவில் நடக்கும் எவ்வளவோ டேலண்ட் ஹண்ட் போட்டிகளில் முதன்மையாக தங்கள் சங்கீத திறமைகளை முன்னெடுத்து வைக்க பாடப்படும் பெரும்பாலான பாடல்கள் இளையராஜாவின் பாடல்களே. வேற்று மொழியில் நடத்தப்படும் போட்டிகளிலும் இதே நிலைமைதான். ஒரு படத்தில் எல்லா பாடல்களும் அருமையாக வந்திருந்து பெரிதாய் பேசப்படாத படம் பற்றிசொன்னோமானால் அதில் “இன்று நீ.. நாளை நான்” படத்தை சொல்லலாம். சி.ஏ.பாலன் என்கிற எழுத்தாளர் மாலைமதியில் எழுதிய நாவலை, மேஜர் சுந்தர்ராஜன் இயக்கினார். அடல்ட்டரியை மையப்படுத்தி இருக்கும் கதையில் எல்லோருமே போட்டி போட்டு நடித்திருந்தாலும், அக்காலக்கட்டத்தில் இம்மாதிரியான கதைகள் ஒரு விதமான ஒவ்வாமை இருந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் மிக அருமையான பாடல்கள் இருந்தும் பெரிதாய் போகாத பட லிஸ்டில் இப்படம் வந்திருகாது. சுலக்‌ஷணா, சிவகுமார், லஷ்மி, ஜெய்சங்கர் ஆகியோர் ...

மிளகா

Image
மதுரைக்கார பசங்க நட்புக்காக உசுரையே கொடுப்பாய்ங்கனு பஞ்ச் லைன் போட்டிருக்காங்க.. அதுக்காகவே ஒரு கதையை ரெடி பண்ணியிருக்காங்க. ரொம்ப நாளைக்கு பிறகு இயக்குனர் ரவிமரியா இயக்கியிருக்கிற படம். மிளகா நட்ராஜ் மிளகா மண்டி ஓனரோட பையன். வீட்டுல பொறுப்பில்லாம, ஆனா ஊருக்கும், நட்புக்கும் பொறுப்பா இருக்கிறவரு. அவருடய நட்பு கும்பல்,சிங்கம்புலி, ஜெகன், இன்னும் ரெண்டு பேர். அதில் ஒருவர் வாய் பேச முடியாதவர். நண்பனின் கடனை வசூல் செய்ய உதவும் நட்ராஜை பார்த்து ஊரில் உள்ள ரவுடி பிரதர்ஸின் கஸ்டடியில் இருக்கும் ஒரு பெண், நட்ராஜை வைத்து தன்னை காத்துக் கொள்ள நினைக்கிறாள். அதற்காக அவர் தன்னை காதலிப்பதாய் பிரச்சனையை கிளம்பிவிட, அதில் மாட்டுகிறார் நட்ராஜ்.. மீதி என்ன எனபது வெள்ளிதிரையில்.   நட்ராஜ் ஒரு மினி ரஜினி என மனதில் நினைத்துக் கொண்டு, அதே போல பேசுகிறார், சண்டை போடுகிறார், மார்கெட்டில் வடக்கத்தி பெண்ணுடன் நடனம் ஆடுகிறார். எல்லா சகவாசங்கள்  இருந்தாலும், நண்பர்களுக்கு என்றால் உயிரை கொடுக்கிறார். திடீரென கருப்பண்ண சாமி பக்தனாகி உக்கிரம் கொண்டு அருவாளெடுக்கிறார். ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் ஆசையோ...

கொத்து பரோட்டா-29/06/10

Image
வர வர..  நான் எதை எழுதினாலும்  காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுறானுவுக.. இது போல அவ்வப்போது சில சமங்களில் பல பேருக்கு நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது என்றாலும். சமீப காலமாய் என்னுடய திரைவிமர்சனங்களை எல்லாம் கொஞ்சம் கூட மாற்றாமல்  காப்பி பேஸ்ட் எடுத்து பதிவிடும் பதிவர்கள் அதிகமாகிவிட்டார்கள். நான் எழுதறதையெல்லாம் எடுத்து போடுவதை பார்த்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. அவ்வளளளவூ நல்லாவா எழுதறேன்?.  எப்படியும் நீங்கள் எழுதியது இல்லை என்று நீங்கள் அடுத்து எழுதும் முதல் வரியிலேயே தெரிந்து விடும். ஒரு சிறிய வேண்டுகோள் தயவு செய்து என் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையும் காப்பி பேஸ்ட் எடுக்கும் போது சரி செய்து போட்டால் தன்யனாவேன்.. ####################################################### போன வாரம் காரில் பெங்களூர் சென்றோம், ஒரு அழுத்து அழுத்திவிட்டு நிமிர்ந்தால் ஒரு டோல் வந்துவிடுகிறது. 35,40 என்று பணம் வாங்குகிறார்கள். இங்கிருந்து கர்நாடகா எல்லைக்குள் சுமார் நான்கைந்து இடங்களில் கப்பம் கட்டிவிட்டுத்தான் போக முடியும். கணக்கு பார்த்தால் பெட்ரோல் போட்டு தனியாக காரில் போவதற்கு பதிலாய் ...