வம்சம்.
வழக்கம் போல இரண்டு ஊர்காரன் பகை. மறவனுங்க எல்லாரும் வீரனுங்க. அந்த தலைகட்டு, இந்த தலைகட்டு என்று பில்டப். தலைக்கட்டு பஞ்சாயத்து என்று சாதாரண லைன் தான். ஆனால் அதை கொடுத்திருக்கும் விதத்தில் தான் பாண்டிராஜ் நிற்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் பேசிக் கொள்கிறார்கள். திருவிழாவுக்கு பாதுகாப்பு பலமாக போட வேண்டும் என்று.. ஏன் அவ்வளவு முக்கியம் என்று கேட்க, கொஞ்சம், கொஞ்சமாய் களம் விரிக்கப்படுகிறது. திருவிழாவும், அதை வைத்து அங்கு வருடா வருடம் நடக்கும் கொலைகளையும், அப்படி கொலை செய்வதற்கான காரணம். அப்படி செத்தவர்களுக்கு கிடைக்கும் மரியாதை என்று களம் மெல்ல அன்போல்ட் செய்யப்பட்ட பிறகு.. திருவிழாவுக்கு போகிறது காட்சி.. ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் மரியாதை செய்யப்பட, அங்கே கடைசியாய் தன் தலைமுறைக்கே ஒத்தையாய் இருக்கும் அருள்நிதி வர, க்ராஸ் செய்யும் போது வில்லன் ஜெயப்ரகாஷ்.. “டேய்.. இந்த திருவிழாவுக்குள்ளே.. கருவறுத்திரணூம்”என்று சொன்னதும். சும்மா பக்கென பத்திக்குது. எங்கப்பன் சாவுறதுக்குள்ள உன் கையை எடுத்துட்டு வர சொன்னாரு.. என்று அருள்நிதியின் கையை வெட்ட சாவகாசமாய் வந்து நிற்...