Posts

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

Image
60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர் விஜய் சேதுபதிக்கு அடுத்த நாள் திருமணம். அதுவும் காதல் திருமணம். தன் நண்பர்களை பார்க்க சேது அவர்களது வருகிறார். பேசிக் கொண்டிருந்தவர்கள், வா ஒரு ஆட்டம் கிரிக்கெட் ஆடுவோம் என்று ஆட, ஆட்டத்தின் நடுவில் கேட்ச் பிடிக்கப் போய் மல்லாக்க விழுகிறார் சேது. அதன் பிறகு அவருக்கு ஸ்டாப் பளாக் போல கிட்டத்தட்ட ஒரு வருடம் நடந்த சம்பவங்கள் மறந்து போய்விடுகிறது. அவரின் காதல், நாளைய திருமணம் என்று எல்லாமே. இந்த பிரச்சனையை சமாளித்து எப்படி அவரது நண்பர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். எப்படி?

Dhamarukam

Image
  அருந்ததியில் ஆரம்பித்து மகதீராவில் சூடுபிடித்து இப்போது தமருகமில் வந்து நின்றிருக்கிறது. மாய மந்திரம், சாமி, பூஜை, பக்தி, போன ஜென்மம், கெட்ட சக்திகள், நல்ல சக்திகள் இவைகளுக்குள் நடக்கும் போராட்டம் போன்ற கதையம்சம் உள்ள படங்களின் வெற்றி கொடுத்த தைரியம். அந்த தைரியத்தில் தான் இந்த தமருகம்.

தமிழ் சினிமா இந்த மாதம் - செப்டம்பர் 2012

சென்ற மாதம் வரை இந்த வருடம் ரிலீஸான பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ஊத்தி மூடிக் கொள்ள, அட்லீஸ்ட் இந்த மாதம் வரும் பெரிய பட்ஜெட் படமான தாண்டவமாவது முறியடிக்குமா? என்ற கேள்வியோடு ஆரம்பித்தது செப்டம்பர் மாதம்.

கொத்து பரோட்டா - 26/11/12

Image
அரசே டி.டி.எச் தரப்போவதாய் ஒரு புரளி கிளம்பியிருக்கிறது. அது வேறொன்றுமில்லை. சல்லீசான விலையில் கேபிள் டிவி இணைப்பு தருவதாக ஆரம்பிக்கப்பட்ட அரசு கேபிள் டிவியில் ஒவ்வொரு ஆப்பரேட்டர்களிடமும் இருபது ரூபாய் இணைப்புக் கட்டணமாய் வசூலிக்கிறார்கள். அவர்கள் கொடுத்த கணக்கின் படி சுமார் அறுபது லட்சம் இணைப்புகள் மட்டுமே இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆனால் உணமையில் அதிகம் இருக்கும் என்ற பட்சத்தில் ஒவ்வொரு வீடாக சென்று கணக்கெடுக்க முடியாது என்பதற்காக ரேஷன் கார்டுகளை வைத்து கணக்கெடுப்பதற்காக அங்கே ஒரு பாரமை கொடுத்து பில்லப் செய்யச் சொல்வதாய் தகவல்.விலையில்லாமல் எதுவும் கிடைக்காது என்பதை  தெரிவிப்பதற்காகவே இந்த அறிவிப்பு. @@@@@@@@@@@@@@@

Life Of Pi

Image
60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர் Ang Lee. இவரைப் பற்றி தெரியாதவர்கள கூட இவரது படங்களைப் பற்றித் தெரியும். Sense And Sensibility, The Crouching tiger Hidden dragon, Brokeback Mountain, The Hulk, Lust Caution  என்று வரிசையாய் விமர்சகர்களின் பாராட்டும், கமர்ஷியல் வெற்றியும் கலந்த பல படங்களின் சொந்தக்காரர். இந்த படத்தின் ட்ரைலைரைப் பார்த்ததுமே படம் பார்த்தாக வேண்டும் என்று சங்கல்பமே எடுக்கும் அளவிற்கு இம்ப்ரசிவ். இதே தலைப்பில் Yann Martel எழுதிய  நாவலை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலுக்காக 2002ல் மேன் ஆப் புக்கர் பரிசு பெற்றார்.

சாப்பாட்டுக்கடை - சார்மினார்

Image
60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர் ஹைதராபாத் என்றதும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நினைவு வரும் ஆனால் எனக்கு பிரியாணிதான் நினைவுக்கு வரும். பாவர்சி, பாரடைஸ் பிரியாணி, செகந்தராபாத் ஸ்டேஷனின் வாசலில் இருக்கும் ஒரு  பிரியாணி என்று தேடித் தேடி சாப்பிடுவேன். என்னதான் சென்னை முழுவதும் ஹைதராபாத் பிரியாணி என்று போர்டு வைத்து கூவிக் கூவி அழைத்தாலும் ஒரிஜினல் ஹைதராபாத் பிரியாணியை யாரும் கொடுப்பதில்லை. பெரும்பாலும் வழக்கமான பாஸ்மதி பிரியாணியையே தருகிறார்கள். ஹைதை பிரியாணியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்டீர்கள் என்றால்  அதை சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.

கருத்து சொல்லலாமா? வேண்டாமா?

நேற்று ஃபேஸ்புக்கில் மும்பை கடையடைப்புக்கான காரணம் மரியாதையில்லை பயத்தினால் என்று விமர்சித்த பெண்ணையும், அதற்கு லைக் போட்ட பெண்ணையும் மும்பை போலீஸ் கைது செய்திருக்கிறது. இருவரும் இருபது வயதுக்குட்பட்டவர்கள். இம்மாதிரியான கதவடைப்புகளினால் எரிச்சலானவர்கள். இந்தக் கடையடைப்பைப் பற்றி ஊரில் உள்ள யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்கள் இவர்கள் சொன்னதைத்தான் சொல்வார்கள். அது தான் உண்மையும் கூட.ஆனால் வெளியில் சொல்ல பயம். அந்த பயம் இன்றைய இளைஞர்களிடம் இல்லை.

கொத்து பரோட்டா - 19/11/12

Image
கேபிளின் கதை புத்தக வெளியிடு சிறப்பாக நடந்தேறியது. புத்தகத்தைப் படித்துவிட்டு யுடிவி தனஞ்செயன் அவர்கள் ஒரு சினிமா ஸ்கிரிப்டைப் போல இருக்கிறது என்று பாராட்டினார். வெளியிட்ட ஏக்நாத் அவர்கள் புத்த்கத்தைப் பாராட்டிவிட்டு, அவரைப் பற்றி விட்டுப் போன தகவல்களை பட்டியலிட்டார். நிஜமாகவே வருத்தமாக இருந்தது. எழுதிய காலத்தில் அவரை தொடர்பு கொள்ள விழைந்த போது எனக்கு அவருடய தொடர்பு கிடைக்கவில்லை. இருநதாலும் நேற்றைய  நிகழ்வில் அவரைப் பற்றி நிறையவே தெரிந்து கொண்டேன். குட்டிப் புக் போடும் அளவிற்கு அவ்வளவு விஷயங்களை செய்திருக்கிறார். கேபிளின் கதையில் அவரது எபிசோட் கேபிள் தொழிலில் அவர் நுழைய விழைந்ததிலிருந்து ஆரம்பித்திருக்கிறேன். அவரின் சாதனைகளில் பல வீடியோ புரட்சி நாட்கள். அது கேபிளின் வரவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு. நிச்சயம் அடுத்தப் பதிப்பில் அவரைப் பற்றிய தகவல்களை எழுதிவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.  சிறப்புரை ஆற்றிய ஈ.கோ தயாரிப்பாளர் பெரியசாமி ரவிச்சந்திரனின் வெள்ளந்தியான பேச்சு பல பேரை கவர்ந்தது. வ்ந்திருந்து வாழ்த்திய பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். க...

கேபிளின் கதை புத்தக வெளியீடு -அனைவரும் வருக

Image
நாகரத்னா பதிப்பகத்தின் மூலமான் என்னுடய ஏழாவது புத்தகமான “கேபிளின் கதை” இன்று வெளியாகிறது. 2010 பிப்ரவரி 14ஆம் தேதி என்னுடய முதல் புத்தகதகமான “லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்” வெளியானது. அதன் பிறகு இந்த இரண்டு வருடங்களில், சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, தெர்மக்கோல் தேவதைகள், சினிமா என் சினிமா அகிய புத்தகங்கள் வெளியாகி,  ஏழாவதாக இப்புத்தகம் வெளியாவது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது. அந்த சந்தோஷ விழாவில் உங்களையெல்லாம் சந்திக்க ஆவலாய் உள்ளேன்.   உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்கும் உங்கள் - கேபிள் சங்கர்

போடா.. போடி.

Image
  சிம்புவின் படமென்றால், அதுவும் புது இயக்குனர் படமென்றால் அது சாதாரணமாய் வெளிவராது என்கிற ஐதீகத்தை இந்தப் படமும் நிருபித்திருக்கிறது. மூன்று வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்து தயாரிப்பாளர் நொந்து நூலாகிப் போய் படத்தை வெளியிட்டால் போதுமென கொண்டு வந்திருப்பது தெரிகிறது.