Posts

தமிழ் சினிமா இன்றைய நிலை.

தமிழ் சினிமா இன்றைய நிலை. புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழ் சினிமாவின் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டீர்களானால், ரெண்டு மாதத்திற்கு முன் என்ன நிலையோ அதை விட கொஞ்சம் மோசம் என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ரிலீஸான மெர்க்குரி, முந்தல் போன்ற படங்களின் வசூல் நிலை மோசம் என்பதுதான் தகவல். படம் வெளியான பிறகு அதன் தகுதிகேற்ப படத்தின் வசூல் அமைவது ஒன்றும் தவறில்லை. ஆனால் பிரபல இயக்குனரின் படம் ஒன்று வெளியாகும் போது அட்லீஸ்ட் மல்ட்டிப்ளெக்ஸுகளிலாவது நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கூட அம்மாதிரியான விஷயம் நடக்க வில்லை. என்பதை பார்க்கும் போது பயமாகவே இருக்கிறது. இந்த வாரம் வெளியான தமிழ் படங்கள் தியா, பக்கா, பாடம் ஆகியவை. கூடவே ரெண்டு மலையாள படங்கள், ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ். மக்கள் திரைப்படம் பார்க்கவே விரும்பவில்லையோ, என்று சந்தேகப்படும் காலத்தில், அவெஞ்சர்ஸ் வெளியான அத்துனை திரையரங்குகளிலும் காலைக் காட்சியே கிட்டத்தட்ட ஹவுஸ்புல். ஆனால் வெளியான தமிழ்சினிமாவின் நிலை மிகப் பரிதாபம். படத்தின் கண்டெண்ட் ஒரு பக்கம் நன...

#Me Too

உலகெங்கும் மீடூ கூக்குரல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இது தேவையானதும் கூட. ஏன் லேட்டாய் சொன்னாய் போன்ற கேள்விகளுக்கு பதிலாய், அட்லீஸ்ட் இப்பவாவது சொல்ல வழி பிறந்திருக்கிறதே என்று சந்தோஷப்பட வேண்டிய நேரம். எனக்கு நெருக்கமான தோழிகள் சில பேருக்கு இம்மாதிரியான பாலியல் தொல்லைகள் குறித்த அனுபவம் இருக்கிறது. சொல்லியும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் அம்மாதிரியான அனுபவங்கள் கிடைக்கப் பெற்றவர்களிடமிருந்து அடுத்த முறை விலகியும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனதில் ஆறாத வடுவாய் உறைந்திருக்கும், அச்சம்பவத்திலிருந்து வெளிவர இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மீடூ இயக்கம் மூலமாய் அவர்களுக்கு எதிராய் கேள்விகள் எழுப்புவதும், அவர்கள் குரல் வளையை நெருக்க, நினைப்பதும் நாம் நம் சமூகத்துக்கு செய்யும் துரோகம். நம் வீட்டு பெண்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.  ஆனால் இதே நேரத்தில் இதை பழிவாங்கும் நடவடிக்கையாய் கையில் எடுக்கும் பெண்கள் இல்லாமல் இல்லை. தாய்மையை போற்றும் இதே இடத்தில் தான் பிறந்த குழந்தையை வீசி எறிவது முதல், கணவனை போட்டுத்தள்ளுவது வரை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.  ...

சாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி

Image
தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாதீங்க நல்ல டிபன் கடைக்கு கூட்டிட்டு போறேன் என்றார். நான் போய் சேர்ந்த போது மணி ஒன்பது. பஸ் பயணம் என்பதால் இரவு உணவை தவிர்த்து விடுவேன். அதனால் வயிறு கபகபவென இருந்தது.  நான் குளிச்சு, இவரு வந்து என கொஞ்சம் அங்கலாய்ப்பாய் இருந்தாலும், என் ரசனை தெரிந்தவர் நிச்சயம் ஒர் நல்ல கடைக்குத்தான் கூட்டிப் போவார் என்று ஆவலாய் சடுதியில் குளித்து ரெடியானேன். ராஜனும், நண்பர் அரண்மனை சுப்புவும் வந்தார்கள். அல்லி நகர் போகும் வழியில் உள்ள ஒர் சின்னக் கடையில் நிறுத்தினார்கள். சின்னக் கடை என்றால் நிஜமாகவே சின்னக்கடைதான். மொத்தமாய் ஒரு எட்டு பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய கடை தான் செல்வம் மெஸ். ப்ரைட் ரைஸ் போன்ற ஒரு சாதத்தை கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அது என்னவென்று கேட்டேன் பொங்கல் என்றார்கள். என்னாடா இது இப்படி உதிரி உதிரியாய் பொங்கலா என்று அதை ஒரு கை பார்ப்போம் என்று ஆர்டர் செய்தோம். நெய்யும், இல்லாமல் டால்டாவும் இல்லாமல் சீர...

Raatchasan -One Shot Review

Image

செக்க செவந்த வானம் - விமர்சனம்

Image

தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் வெற்றியா?

இந்தக் கேள்வியை சினிமா ஆர்வலர்கள் பலர் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஏனென்றால் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டரைக் அறிவுக்கும் போது, தியேட்டர்காரர்களும் ஸ்ட்ரைக் அறிவித்தார்கள். அவர்களது முக்கிய கோரிக்கை, தமிழக அரசின்  கேளிக்கை வரி விலக்கு, மற்றும், ஏற்கனவே ஒப்புக் கொண்ட தியேட்டர் பராமரிப்பு தொகையை உயர்த்தி அரசாணை பெறுவது போன்றவை தான். ஏற்கனவே தியேட்டரை  மூடி ஆள் வர காத்திருந்த நாட்கள் பலருக்கு நியாபகம் வந்தது ஒருபுறம் என்றால் மறுபுறம், வரிசையாய் மல்ட்டிப்ளெக்ஸை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் சிட்டி திரையரங்கு உரிமையாளர்கள், தமிழ் படம் இல்லையென்றால் என்ன? இருக்கவே இருக்கு, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்கள் என்ற குஷன் இருக்கும் போது அதை விட மனசில்லை. அதனால் ஸ்ட்ரைக் ஆட்டத்திற்கு வர வில்லை என்று அவர்களது ஸ்டரைக் பிசுபிசுத்துப் போக முக்கிய காரணம். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் மிக வலுவாய் இம்முறை இந்த ஸ்ட்ரைக்கை நடத்தியது. வி.பி.எப் கட்டணத்தை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டாலும்,  முறையான கணக்கு வழக்குக்காக, கம்ப்யூட்டரைஸ்ட் டிக்கெட்ங், எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மை என...

சாப்பாட்டுக்கடை - பக்ரா பிரியாணி

Image
பிரியாணிக்கடை என்றதும் ஒரு விதமான சலிப்பு கூட ஏற்படும் அளவுக்கு சென்னையெங்கும் பிரியாணி கடைகள். ஹைதராபாத் பிரியாணி, சீரக சம்பா பிரியாணி, ஆற்காடு பிரியாணி, என வகை வகையாய் பிரியாணி கடைகள். மக்களின் பாஸ்ட் புட்டாக மாறிவிட்டது பிரியாணி கடைகள். இத்தனை பிரியாணிக்களில் வெகு சில பிரியாணிக்களே பிரபலம். அதற்கு காரணம் அதன் தனிச்சுவையும் சர்வீஸும் என்றே சொல்ல வேண்டும். இப்படியான பிரியாணிப் போட்டிக் காலத்தில் புதிய பிரியாணிக்கடை பக்ரா பிரியாணி. வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் ஏறாமல், இடது பக்கம் சர்வீஸ் லேனில் நுழைந்தால் சின்னதாய் இருக்கிறது இந்த பிரியாணிக்கடை. ப்ளாக் அண்ட் வொயிட் காம்பினேஷனில் வித்யாசமான லுக்கில் ஒர் பிரியாணிக்கடை. டேக்கவே மட்டுமே அங்கு இருக்கிறது. அதனால் சூடான மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கோலா, என கலந்து கட்டி வாங்கி வந்தோம். அலுவலகத்துக்கு வந்து முதலில் சாப்பிட ஆரம்பித்தது மட்டன் பிரியாணியை. நன்கு வெந்த மட்டன் பீஸ்கள். நெஞ்சைக் கரிக்காத மசாலா என ஜமாய்த்தது. உடன் தொட்டுக் கொண்டு சாப்பிடக் கொடுத்த கத்திரிக்காய் அட்டகாசம். அதன் சுவை பிரியாணியை இன்னும் ...

கொத்து பரோட்டா 2.0-66

கொத்து பரோட்டா 2.0-66 Raju Kari Gadhi 2 முதல் பாகம் முழுவது சிறு நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டது. அதிரிபுதிரி வெற்றியின் காரணமாய் அதே தயாரிப்பாளர் இம்முறை மாமனார் மருமகளை வைத்து எடுத்திருக்கிறார்கள். நாகார்ஜுன், சமந்தாவைத்தான் சொல்கிறேன். வழக்கம் போல ஒரு தனி பங்களா. அதை விலைக்கு வாங்கி ரிஸார்ட் நடத்தும் மூன்று இளைஞர்கள். மூன்று இளைஞர்களில் ஒருவர் ஒரு பிகரை உசார் செய்து அறைக்கு போகும் போது வித்யாசமான அனுபவங்கள் கிடைக்கிறது. போர்ன் படம் பார்க்க விரும்பும் போதும், இன்னொரு இளைஞர் தன் காதலியுடன் ஸ்கைப்பில் அவரை டாப்லெஸாக காட்டு என்று கேட்கும் போதும், அமானுஷ்யங்கள் நடக்க, வியாபாரம் படுத்து விடும் என்று பயப்பட ஆர்மபிக்கிறார்கள். அப்போது வருகிறார் நம் நாகார்ஜுன். பேய் ஓட்டுகிறவர் என்று சொல்லாமல் அவரை மெண்டலிஸ்ட் என்கிறார்கள். பேசும் போதே எதிராளியின் மனங்களை படித்து, போலீஸுக்கு ஒரிஜினல் குற்றவாளிகளை பிடித்துக் கொடுக்குமளவுக்கு மிகுந்த திறமைசாலி. அவரை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். அங்கேயிருப்பது பேய் தானா? அப்படியானால் ஏன் அது அங்கேயிருக்கிறது. கில்மா விஷயங்கள் நடக்கும் போது மட்டும் ஏன் ஆ...

கும்பகோணம் டூ சென்னை

நேற்று மதியம் கும்பகோணம் டூ சென்னை மதிய பஸ். ரதி மீனாவின் ஸ்லீப்பர் கம் சீட் பஸ். 600 சொச்சம் டிக்கெட். மனசுக்கு கஷ்டமாய் தான் இருந்தது. பஸ்ஸுக்காக காத்திருந்த நேரத்தில் ஒரே கூட்டமாய் கல்லூரி பெண்கள் வர, அனைவரும் அதே பஸ்ஸுக்கு என்று தெரிந்த போது 600 சொச்சம் கஷ்டமாய் இல்லை. வண்டி ஏறி லோயர் பர்த்தில் செட்டிலாவதற்குள் “ஏய்.. நீ இங்க வாடி. நான் அங்க போறேன். அய்யோ.. ஆ.. எப்படி ஏறுறது? ம்ம்.. தனியா வா சொல்லித் தரேன்” என்று கூச்சலும் குழப்பமுமாய் களேபரமாய் இருந்தது. இன்னொரு மஞ்சள் சூடிதார் அணிந்திருந்த மித வயது பெண் இவர்களின் அத்தனை களேபரக் கூச்சல்களையும் பார்த்து மெல்லிய சிரிப்பை உதிர்த்தபடி இருந்தாள். பக்கத்து சீட்டில் ஒருவர் வண்டியேறி அடுத்த செகண்ட் தன் ஸ்லீப்பரில் ஏறி படுத்த மாத்திரத்தில் லேசான குரட்டை விட ஆரம்பித்தார். இந்த பெண்கள் கும்பலில் தன் தாயோடு வந்திருந்த பெண் மட்டும் மிக அடக்க ஒடுக்கமாய் அம்மா பக்கத்தில் உட்கார்ந்தபடி, திரும்பித் திரும்பி தோழிகளை பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்லீக்காய் ஜீனும், கருப்பு டீ சர்டும் போட்ட இளம் பெண் மூக்கருகில் கர்சீப்பை வைத்தபடி இரு...

சாப்பாட்டுக்கடை - கூரைக்கடை (எ) விக்னேஷ் மெஸ் - தேனி

Image
சமீபத்திய தேனி பயணத்தில் முக்கியமாய் போக வேண்டிய இடங்கள் என்று லிஸ்டில் முதலிடம் இருந்தது இந்த உணவகம். நண்பர்கள் நிறைய பேர் சொல்லியிருந்தார்கள். காலை உணவை ஒர் அருமையான 50 வருட பாரம்பரிய குட்டியூண்டு மெஸ்ஸில் முடித்துவிட்டு, வெளிப் பயணங்களை முடித்துக் கொண்டு சரியாய் ஒரு மணிக்குள் போய் சேர்ந்தோம். அந்த மெஸ்ஸைப் பற்றி விரிவாய் தனி பதிவில். ”சீக்கிரம் போகலைண்ணா.. காலியாயிரும்ணே” என்று சொல்லிக் கொண்டே வண்டிய வேகமாய் விரட்டினார் மேற்கு தொடர்ச்சி மலை “அரண்மனை சுப்பு”. போகிற வழியில் அப்படத்தின் இயக்குனர் டீம் லீஸுக்கு எடுத்து தங்கியிருந்த வீட்டை காட்டினார். கொஞ்சம் தூரத்தில் விக்னேஷ் மெஸ். ஹை வே ரோட் கடை போன்ற தோற்றத்தில் தான் இருந்தது கூரைக்கடை என்கிற விக்னேஷ் மெஸ். நெருங்க நெருங்க. கோழியின் வாசனை மூக்கை துளைத்தது.  சீக்கிரம் போயிருந்த படியால் கூட்டமில்லை. சாப்பாடு என்றதும் தலைவாழை இலை போடப்பட்டது. ஒரு கூட்டு, தயிர் வெங்காயம், வழக்கம் போல நான் வெஜ் உணவகப் பெரியல்.  நாட்டுக்கோழி ஆர்டர் செய்தோம். நல்ல தொக்காய் வந்தது. நல்லெண்ணெய் மணம் வேறு கமகமத்தது. சாதம் பரிமாறப்ப...