Posts

உறவெனும்..

எனக்கு முன்னால் ஷைன் பைக்கில் , சட்டி ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு போனவர் , திடீரென வண்டியை ப்ரேக் அடித்து , விரைத்து , விதிர்த்துப் போய் வண்டியோடு சாய்ந்ததை பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது . கீழே விழும் போது ஹெல்மெட் தலையிலிருந்து விலகி ரோட்டில் ஓடியதால் அவரது தலை தரையில் மோதிய சத்தம் , அத்தனை ட்ராபிக்கிலும் துல்லியமாய் எனக்கு கேட்டது . பதறியடித்து என் பைக்கை நிறுத்திவிட்டு, அவரை தூக்க ஓடினேன். பைக்கின் ப்ரேக்கை அழுந்த பிடித்திருந்ததில் அவரது வலி தெரிந்தது. நடு வயது ஆளாயிருந்தார். மீசையில் டை ஆங்காங்கே வெளிறியிருந்தது. “காதுல ரத்தம் வருதுங்க” என்று ஒருவர் சொன்னதும், பதறிப் போய் ரத்தம் வந்த இடத்தை சோதித்தேன். இடது காதில் மேல் உள்ள தலை பாகத்தில் அடிப்பட்டிருந்தது. அதிலிருந்து காதோரத்தில் ரத்தம் வடிந்திருந்தது.   சட்டையின் தோள் பட்டை சைடில் ரத்தக்கரை ஆகியிருந்தது. சடுதியில் மக்கள் கூடிவிட, வண்டியோடு அவர் வீழ்ந்திருந்ததால், வண்டியையும் அவரையும் கிட்டத்தட்ட பிரித்து எடுக்க வேண்டியதாகிவிட்டது. எழுப்ப, எழுப்ப துவண்டு கொண்டேயிருந்தார். “தண்ணி....

நடிகையர் திலகம் வெற்றியா?

நடிகையர் திலகம் வெற்றியா? நடிகை சாவித்திரியின் வாழ்கையை பற்றிய படம் என்று ஆரம்பிக்கப்பட்ட போதே பரபரப்பு ஏற்படுத்திய படம். கொஞ்சம் கொஞ்சமாய் அதன் காஸ்டிங் பற்றி தெரிய வர, கீர்த்தி சுரேஷ் தான் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார் என்றதும் சோஷியல் மீடியாக்களில் ட்ரோல் செய்தவர்கள் ஏராளம். ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் அவரது நான்கைந்து எக்ஸ்பிரஷன்களை வைத்து கலாய்க்கப்படுகிறவர். அப்படிப்பட்டவர் எப்படி சாவித்திரியாக நடிக்க முடியும்? தப்பான காஸ்டிங் என்றார்கள். சாவித்திரியின் வாழ்க்கை என்று வரும் போது அவரது வாழ்க்கை பயணத்தில் ஏறி இறங்கிய அத்துனை சம்பவங்களையும சொல்ல விழைந்தால் நிச்சயம் வாழும் வாரிசுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்ப அதிக வாய்ப்பிருக்கிற நிலையில், எப்படி ஒரு சுவாரஸ்யமான கதையாய் நடிகையர் திலகத்தை உருவாக்க முடியும்? என்கிற கேள்வியும் பலருக்கு இருந்தது. ஏனென்றால் பயோ பிக் எனும் வாழ்க்கை வரலாற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை கையாளும் லாவகம் தெரிந்த இயக்குனர்கள் மிகவும் குறைவு. அதுவும் அரசியல் பிரமுகர்கள் என்றால் அவர்களைப் பற்றிய காரசாரமான நெகட்டிவ் விமர்சனங்களை காட்டவே முடியாது. இந்திய அள...

இருட்டு அறையில் “சென்சார்” குத்து

இருட்டு அறையில் “சென்சார்” குத்து ஆம் சென்ஸார் குத்துதான். அது ஏ படம். வயது வந்தவர்களுக்கான படம். அதில் ஆபாசமான காட்சிகள் அனுமதிக்கப்பட்டவைதானே? இதில் என்ன பிரச்சனை? என்று கேட்டீர்களானால், நிச்சயம் எல்லா படங்களையும் ஒரே தராசில் வைத்து அவர்கள் பார்ப்பதில்லை என்றே சொல்ல வேண்டும். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்திற்கு அனுமதி அளித்ததே தவறு என வாதிட்டுக் கொண்டிருக்கிறவர்களுக்கு மத்தியில் ஏன் எங்கள் படங்களுக்கு இவ்வளவு ஸ்ட்ரிக்டு என கேள்வி வைக்கும் இந்த கட்டுரை அபத்ததின் உச்சமாய் கூடத் தெரியும். ஆனால் நிஜத்தை பேசியே ஆகவேண்டும். வசவு வார்த்தைகள், குழந்தைகள் மீதான வன்புணர்வு, டபுள் மீனிங் வார்த்தைகள் பெண்களின் க்ளீவேஜ், மற்றும் பின்புற பாகங்கள் ஆட்டுவதை காட்டுவது, உடலுறவை வெளிப்படையாய் காட்டுவது, முத்தக்காட்சி என பல லெவல்களில் சென்சார் தன் வேலையை செய்ய அரசு சட்டம் வகுத்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் அந்த சட்டங்கள் எல்லா படங்களுக்கும் ஒரே விதமாய் யாரும் பார்ப்பதில்லை. உதாரணமாய் எங்களுடய “6 அத்தியாயம்” படத்திற்கு சென்சாரில் “ஏ” சர்டிபிகேட் கொடுத்தார்கள். எங்களின் படத்தில் உள்ள க...

தமிழ் சினிமா இன்றைய நிலை.

தமிழ் சினிமா இன்றைய நிலை. புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழ் சினிமாவின் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டீர்களானால், ரெண்டு மாதத்திற்கு முன் என்ன நிலையோ அதை விட கொஞ்சம் மோசம் என்றே சொல்ல வேண்டும். சென்ற வாரம் ரிலீஸான மெர்க்குரி, முந்தல் போன்ற படங்களின் வசூல் நிலை மோசம் என்பதுதான் தகவல். படம் வெளியான பிறகு அதன் தகுதிகேற்ப படத்தின் வசூல் அமைவது ஒன்றும் தவறில்லை. ஆனால் பிரபல இயக்குனரின் படம் ஒன்று வெளியாகும் போது அட்லீஸ்ட் மல்ட்டிப்ளெக்ஸுகளிலாவது நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் கூட அம்மாதிரியான விஷயம் நடக்க வில்லை. என்பதை பார்க்கும் போது பயமாகவே இருக்கிறது. இந்த வாரம் வெளியான தமிழ் படங்கள் தியா, பக்கா, பாடம் ஆகியவை. கூடவே ரெண்டு மலையாள படங்கள், ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ். மக்கள் திரைப்படம் பார்க்கவே விரும்பவில்லையோ, என்று சந்தேகப்படும் காலத்தில், அவெஞ்சர்ஸ் வெளியான அத்துனை திரையரங்குகளிலும் காலைக் காட்சியே கிட்டத்தட்ட ஹவுஸ்புல். ஆனால் வெளியான தமிழ்சினிமாவின் நிலை மிகப் பரிதாபம். படத்தின் கண்டெண்ட் ஒரு பக்கம் நன...

#Me Too

உலகெங்கும் மீடூ கூக்குரல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இது தேவையானதும் கூட. ஏன் லேட்டாய் சொன்னாய் போன்ற கேள்விகளுக்கு பதிலாய், அட்லீஸ்ட் இப்பவாவது சொல்ல வழி பிறந்திருக்கிறதே என்று சந்தோஷப்பட வேண்டிய நேரம். எனக்கு நெருக்கமான தோழிகள் சில பேருக்கு இம்மாதிரியான பாலியல் தொல்லைகள் குறித்த அனுபவம் இருக்கிறது. சொல்லியும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் அம்மாதிரியான அனுபவங்கள் கிடைக்கப் பெற்றவர்களிடமிருந்து அடுத்த முறை விலகியும் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனதில் ஆறாத வடுவாய் உறைந்திருக்கும், அச்சம்பவத்திலிருந்து வெளிவர இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மீடூ இயக்கம் மூலமாய் அவர்களுக்கு எதிராய் கேள்விகள் எழுப்புவதும், அவர்கள் குரல் வளையை நெருக்க, நினைப்பதும் நாம் நம் சமூகத்துக்கு செய்யும் துரோகம். நம் வீட்டு பெண்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.  ஆனால் இதே நேரத்தில் இதை பழிவாங்கும் நடவடிக்கையாய் கையில் எடுக்கும் பெண்கள் இல்லாமல் இல்லை. தாய்மையை போற்றும் இதே இடத்தில் தான் பிறந்த குழந்தையை வீசி எறிவது முதல், கணவனை போட்டுத்தள்ளுவது வரை நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.  ...

சாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி

Image
தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாதீங்க நல்ல டிபன் கடைக்கு கூட்டிட்டு போறேன் என்றார். நான் போய் சேர்ந்த போது மணி ஒன்பது. பஸ் பயணம் என்பதால் இரவு உணவை தவிர்த்து விடுவேன். அதனால் வயிறு கபகபவென இருந்தது.  நான் குளிச்சு, இவரு வந்து என கொஞ்சம் அங்கலாய்ப்பாய் இருந்தாலும், என் ரசனை தெரிந்தவர் நிச்சயம் ஒர் நல்ல கடைக்குத்தான் கூட்டிப் போவார் என்று ஆவலாய் சடுதியில் குளித்து ரெடியானேன். ராஜனும், நண்பர் அரண்மனை சுப்புவும் வந்தார்கள். அல்லி நகர் போகும் வழியில் உள்ள ஒர் சின்னக் கடையில் நிறுத்தினார்கள். சின்னக் கடை என்றால் நிஜமாகவே சின்னக்கடைதான். மொத்தமாய் ஒரு எட்டு பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய கடை தான் செல்வம் மெஸ். ப்ரைட் ரைஸ் போன்ற ஒரு சாதத்தை கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அது என்னவென்று கேட்டேன் பொங்கல் என்றார்கள். என்னாடா இது இப்படி உதிரி உதிரியாய் பொங்கலா என்று அதை ஒரு கை பார்ப்போம் என்று ஆர்டர் செய்தோம். நெய்யும், இல்லாமல் டால்டாவும் இல்லாமல் சீர...

Raatchasan -One Shot Review

Image

செக்க செவந்த வானம் - விமர்சனம்

Image

தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் வெற்றியா?

இந்தக் கேள்வியை சினிமா ஆர்வலர்கள் பலர் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஏனென்றால் தயாரிப்பாளர் சங்கம் ஸ்டரைக் அறிவுக்கும் போது, தியேட்டர்காரர்களும் ஸ்ட்ரைக் அறிவித்தார்கள். அவர்களது முக்கிய கோரிக்கை, தமிழக அரசின்  கேளிக்கை வரி விலக்கு, மற்றும், ஏற்கனவே ஒப்புக் கொண்ட தியேட்டர் பராமரிப்பு தொகையை உயர்த்தி அரசாணை பெறுவது போன்றவை தான். ஏற்கனவே தியேட்டரை  மூடி ஆள் வர காத்திருந்த நாட்கள் பலருக்கு நியாபகம் வந்தது ஒருபுறம் என்றால் மறுபுறம், வரிசையாய் மல்ட்டிப்ளெக்ஸை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் சிட்டி திரையரங்கு உரிமையாளர்கள், தமிழ் படம் இல்லையென்றால் என்ன? இருக்கவே இருக்கு, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில படங்கள் என்ற குஷன் இருக்கும் போது அதை விட மனசில்லை. அதனால் ஸ்ட்ரைக் ஆட்டத்திற்கு வர வில்லை என்று அவர்களது ஸ்டரைக் பிசுபிசுத்துப் போக முக்கிய காரணம். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் மிக வலுவாய் இம்முறை இந்த ஸ்ட்ரைக்கை நடத்தியது. வி.பி.எப் கட்டணத்தை முன்னிருத்தி ஆரம்பிக்கப்பட்டாலும்,  முறையான கணக்கு வழக்குக்காக, கம்ப்யூட்டரைஸ்ட் டிக்கெட்ங், எல்லாவற்றிலும் வெளிப்படைத் தன்மை என...

சாப்பாட்டுக்கடை - பக்ரா பிரியாணி

Image
பிரியாணிக்கடை என்றதும் ஒரு விதமான சலிப்பு கூட ஏற்படும் அளவுக்கு சென்னையெங்கும் பிரியாணி கடைகள். ஹைதராபாத் பிரியாணி, சீரக சம்பா பிரியாணி, ஆற்காடு பிரியாணி, என வகை வகையாய் பிரியாணி கடைகள். மக்களின் பாஸ்ட் புட்டாக மாறிவிட்டது பிரியாணி கடைகள். இத்தனை பிரியாணிக்களில் வெகு சில பிரியாணிக்களே பிரபலம். அதற்கு காரணம் அதன் தனிச்சுவையும் சர்வீஸும் என்றே சொல்ல வேண்டும். இப்படியான பிரியாணிப் போட்டிக் காலத்தில் புதிய பிரியாணிக்கடை பக்ரா பிரியாணி. வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் ஏறாமல், இடது பக்கம் சர்வீஸ் லேனில் நுழைந்தால் சின்னதாய் இருக்கிறது இந்த பிரியாணிக்கடை. ப்ளாக் அண்ட் வொயிட் காம்பினேஷனில் வித்யாசமான லுக்கில் ஒர் பிரியாணிக்கடை. டேக்கவே மட்டுமே அங்கு இருக்கிறது. அதனால் சூடான மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கோலா, என கலந்து கட்டி வாங்கி வந்தோம். அலுவலகத்துக்கு வந்து முதலில் சாப்பிட ஆரம்பித்தது மட்டன் பிரியாணியை. நன்கு வெந்த மட்டன் பீஸ்கள். நெஞ்சைக் கரிக்காத மசாலா என ஜமாய்த்தது. உடன் தொட்டுக் கொண்டு சாப்பிடக் கொடுத்த கத்திரிக்காய் அட்டகாசம். அதன் சுவை பிரியாணியை இன்னும் ...