Thottal Thodarum

Feb 6, 2010

அசல் – திரை விமர்சனம்

asal1 கிளாடியேட்டர் என்றொரு படம். ராஜா தன் மகனை நம்பாமல் தளபதியிடம் பொறுப்புகளை ஒப்படைப்பார். அது தெரிந்த மகன் தந்தையை கொன்றுவிட்டு, தளபதியின் குடும்பத்தை அழித்துவிட்டு, தளபதியை ஒரு கிளாடியேட்டராய் அலைய விட்டுவார். மகனின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து புரட்சி செய்த தளபதி எப்படி ஆட்சியை பிடிக்கிறான் என்பதுதான் கிளாடியேட்டர் கதை.

அப்பா அஜித் தன் மனைவிக்கு பிறந்த மகன்களை நம்பாமல், கீப்புக்கு பிறந்த மகனான அஜித்திற்கு சொத்தை எழுதி வைத்துவிட, அஜித்தின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் அவரிடம் உதவியை பெற்றுக் கொண்டு அவரையே அவரின் தம்பிகள் கொன்றுவிட, எப்படி அஜித் வெற்றி பெறுகிறார் என்பதே அசலின் கதை.
asal-ajith-sameera-reddy-bhavana  படம் முழுக்க ப்ரான்சிலும், மலேசியாவிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆல்மொஸ்ட் ஒரு ஜேம்ஸ் பாண்ட் பட டைப்பில் ஒரு ஆக்‌ஷன், சேசிங் என்று ஆரம்பிக்கிறது படம். சேசிங் முடிந்தது, ஜேம்ஸ்பாண்ட் பட ஸ்டைலிலேயே சமீரா ஒரு பாட்டூ பாடுகிறார். அஜித்தின் அறிமுகமும், அதற்கான பில்டப்புகளும் அஜீத்தின் ஸ்கிரீன் ப்ரெசென்சும் அட்டகாசம், பல காட்சிகளில் பில்லாவின் தாக்கம் அதிகம்.

அஜித், படம் முழுக்க வியாபித்திருக்கிறார். நிஜமாகவே அந்த சிகார் பிடிக்கும் ஸ்டைலும், சண்டைக்காட்சிகளில் இருக்கும் கேசுவலான பாடி லேங்குவேஜும் நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் அவரின் காஸ்ட்யூமும், ஸ்டைலிஷான ஹேர்ஸ்டைலும், அதிகம் பேசாத சின்ன, சின்ன பாடி லேங்குவேஜுலும் கலக்குகிறார்.  ஹைஸ்பீடில் அடிக்கடி நடக்கும்போது எரிச்சல் வராமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
1203074589275 பிரான்ஸில் அஜித்தின் நிழலாய் சமீரா ரெட்டி. கொஞ்சம் மெலிந்து இன்னும் க்யூட்டாக இருக்கிறார். சில காட்சிகளில் அழகில்லாமல் இருக்கிறார். நடிப்பதற்கு பெரிதாக ஏதும் வாய்பில்லை. பாவனா வழக்கமான தமிழ் சினிமா ஹீரோயின் போல் ஒரு லூசுப்  பெண்ணாய் அறிமுகமாகி நெடுக அதே போல் நடிக்கிறார்.

வில்லன்களாக சம்பத், ராஜிவ் கிருஷ்ணா, பிரதீப் ராவத், கெல்லி. இதில் கெல்லியை தவிர மற்றவர்கள் ரொம்பவே சோப்ளாங்கி வில்லன்கள். யூகிசேது அபூர்வ சகோதரர்கள் ஜனகராஜ் ரேஞ்சில் ஒரு டான் கேரக்டரை செய்திருக்கிறார். ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். பழைய ஹீரோ சுரேஷ் பிரெஞ்சு போலீஸாய் வில்லன்களில் ஒரு ஆளாய் வருகிறார். க்ளைமாக்ஸில் அவர் அப்படியே குண்டு கட்டாய் மாறுவது படு பழைய சினிமா.
asal கதை, திரைக்கதை, வசனத்தில் அஜித்குமாரின் பெயரும் சரண், யூகிசேதுவுடன் போடப்படுகிறது. அஜித் ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டராகவும் பணியாற்றி இருக்கிறார். யூகிசேது, அஜித் காம்பினேஷன் ஏற்கனவே வில்லன் பட ஹிட்டடித்திருப்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. ஆனால் திரைக்கதையில் இரண்டாவது பாதியில் மொக்கை வில்லன்களால் பெரிதாய் ஏதும் ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை என்பது வருத்தமே. முழுக்க,முழுக்க அஜித்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறபடியால் மற்ற விஷயங்களில் கவனக்குறைவு அதிகம்.
asal-0002 பிரசாந்தின் கேமரா, பிரான்ஸையும், மலேசியாவையும், கண் குளிர அழகாய் படமெடுத்திருக்கிறார். ஆரம்ப சேஸிங் காட்சியாகட்டும், மும்பை கடலோர போட் துரத்தலாகட்டும் நச். பல இடங்களில் இவரது அழகான பிரேமிங்கினால் படம் தொய்வில்லாமல் தெரிகிறது என்றால் அது மிகையில்லை.

ஆண்டனியின் எடிட்டிங் நச். மிக ஸ்டைலிஷான ஒரு எடிட்டிங். சண்டை காட்சிகளில் இவரது எடிட்டிங் தான் அஜித்தை தூக்கி நிறுத்துகிறது. பரத்வாஜின் இசையில் ‘துஷ்யந்தன்” பாட்டை தவிர, பெரிதாய் எதுவும் மனதில் நிற்கவில்லை. கமினே “டொட்டடய்ங்”கை லவட்டி ஒரு ட்யூனை போட்டுவிட்டார்.பிண்ணனி இசை ஒன்றும் சொல்லிக் கொள்கிறார் போல் இல்லை.
asal-050210 கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சரண். ரிச்சான லொக்கேஷன், அஜித், சிவாஜி ப்ரொடக்‌ஷன் என்று எல்லாமே கிடைத்திருக்கும் பட்சத்தில் இன்னும் கொஞ்சமேனும் மெனக்கெட்டிருக்கலாம். டெக்னிகலாய் படம் நன்றாக இருந்தாலும், உள்ளடக்க கதையும், திரைக்கதையும் பழசாய் இருப்பதால் விறுவிறு என போக வேண்டிய படம் ப்ளாட்டாக போகிறது. அதிலும் க்ளைமாக்ஸ் மனோகரா சீன் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான். இதையெல்லாம் மீறி அஜித்தினாலும், ப்ரசெண்டேஷனாலும், எரிச்சல் வராமல் இருக்கிறது என்பது உண்மை. அஜித்துக்கான சரியான ரீமேக் படத்தை சொல்கிறேன் முடிந்தால் அடுத்த படமாய் அதை எடுக்கலாம் ஹிந்தி படமான “ரேஸ்”

அசல் – புதிய மொந்தையில் பழைய கள்



தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க
Post a Comment

50 comments:

Muthu said...

மீ தி பர்ஸ்ட் ....

குறை ஒன்றும் இல்லை !!! said...

//அசல் – புதிய மொந்தையில் பழைய கள் //

கள் நல்லா இருந்ததா இல்லையா???

Muthu said...

பில்லா ஹேங் ஓவர் இன்னும் போகல போல...

படம் ரொம்ப மொக்கை இல்லன்னு தெரியுது. அப்ப பிக்கப் ஆகிடும்னு நெனைக்கறேன்.

vivekfx(VFX) said...

Padam out...Better luck nxt Time Ajith and his Fans :D :D :D

ப்ரியமுடன் வசந்த் said...

சொன்னதெல்லாம் அசலா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

படம் நல்லாருக்கு ; பார்க்கலாம் என்று சொல்கிறது உங்க விமர்சனம் .

ARV Loshan said...

ஆகா.. நினைத்தபடியே உங்கள் விமர்சனம். நான் சொன்னதில் பலவற்றையே ஆமோதித்துள்ளீர்கள்..
சரி தான்..
அசல் கதை பழசு ஆனால் களம் புதுசு என்றால் அப்புறம் சரி தானே? :)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

மீண்டும் ஒரு சுடச்சுட விமர்சனம். படம் பார்க்கலாம்னு சொல்லீட்டீங்க. சரி :)

RACE நல்ல படம் தான்.. ஆனால் அந்த ஆள்மாறாட்டக் காதல் எல்லாம் நம்ம ஆட்களுக்கு பிடிக்காதே?

Thenammai Lakshmanan said...

Thanks for the ASAL review cable SHANKAR JI

Unknown said...

Film very nice... good entertainment with racy screenplay... Everyone will love this movie... though they r not Ajith fans... excellent work from Ajith and Cinematographer Prasanth

இராகவன் நைஜிரியா said...

A good review...

kanagu said...

படம் சுமார் தான் -ணா... திரைக்கதை-ல மொக்க பண்ணிட்டாங்க... அஜீத்னா-ல படம் தப்பிக்குது...

Rajesh V Ravanappan said...

THANKS .. தல .. அஜித் ரசிகர்களுக்கு real Treat...

sathishsangkavi.blogspot.com said...

சுமார் தானா...

வெற்றி said...

நம்ப மாட்டேன்..நம்ப மாட்டேன்..நம்ப மாட்டேன் :)

வெற்றி said...
This comment has been removed by the author.
சைவகொத்துப்பரோட்டா said...

//ஹைஸ்பீடில் அடிக்கடி நடக்கும்போது எரிச்சல் வராமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. //

அது... :))

(ரெட் ஸ்டைலில் படிக்கவும்)

kailash,hyderabad said...

படம் அட்லிஸ்ட் 50 நாளாவது ஓடிரும்னு நினைக்கிறேன்.இன்னக்கி உள்ள vcd பிராப்ளம் , தியேட்டர் கட்டணம் அதிகம் இவை நடுவில் இந்தளவுக்கு ஓடினாலே பெரிதுதான்.
( நடுநிலையாக அசலை எழுதினா கூட 2 மைனஸ் குத்தா ?)

Raju said...

அஜித்தின் அறிமுகமும், அதற்கான பில்டப்புகளும் அஜீத்தின் ஸ்கிரீன் ப்ரெசென்சும் அட்டகாசம்,


அஜித், படம் முழுக்க வியாபித்திருக்கிறார். நிஜமாகவே அந்த சிகார் பிடிக்கும் ஸ்டைலும், சண்டைக்காட்சிகளில் இருக்கும் கேசுவலான பாடி லேங்குவேஜும் நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் அவரின் காஸ்ட்யூமும், ஸ்டைலிஷான ஹேர்ஸ்டைலும், அதிகம் பேசாத சின்ன, சின்ன பாடி லேங்குவேஜுலும் கலக்குகிறார். ஹைஸ்பீடில் அடிக்கடி நடக்கும்போது எரிச்சல் வராமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.


முழுக்க,முழுக்க அஜித்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கிறது



இதையெல்லாம் மீறி அஜித்தினாலும், ப்ரசெண்டேஷனாலும், எரிச்சல் வராமல் இருக்கிறது என்பது உண்மை.



ஹி..ஹி..அப்பிடியே மனசுக்குள்ள வெள்ளைக்கலர் தேவதைகள் சுற்ற “ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்”ன்னு பாட்டு கேக்குதுங்கோவ்வ்வ்வ்வ்வ்.

தராசு said...

அப்ப "தல" க்கு பாஸ் மார்க்காண்ணே??

Ganesan said...

அசல் – புதிய மொந்தையில் பழைய கள் .

எப்படியோ, கள் குடிச்சா கிக் ஏற தானே செய்யும்.

அசல்-- வட்டியுடன் சேர்த்து.

Sukumar said...

அப்பாடா 'தல' தப்பிச்சது...!

guru said...

அப்ப அசல் பார்க்கலாமா?

”ரேஸ்” நல்ல சாய்ஸ்தான்..அந்தப் படத்திலுள்ள சயிப் அலிகானின் கேசுவலான கேரக்டருக்கு, அஜித் கேரக்டர் அப்படியே அழகா செட்டாயிரும்னு நினைக்கிறேன்...

க.பாலாசி said...

‘தல’ய காப்பாத்திட்டீங்க...

butterfly Surya said...

ரைட்டு. படம் பாதி மொக்கைன்னு தெரியுது.

நன்றி ஜி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உலக இன்டர்நெட் வரலாற்றில் முதன்முறையாக ரிலீஸ் ஆன ஜக்குபாய் படத்தின் விமர்சனம் எழுதாத அண்ணன் கேபிள் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். எல்லா மொக்கை படத்துக்கும் விமர்சனம் எழுதும் அண்ணன் ஏன் இந்த படத்தை பார்க்க பயப்படுகிறார் என தெரியவில்லை.

Thamira said...

வட போச்சா.? இல்லையா? கொஞ்சம் தெளிவா சொல்லப்புடாதா..

அப்புறம் இந்த வரிகளுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லவும். //கீப்புக்கு பிறந்த மகனான அஜித்திற்கு சொத்தை எழுதி வைத்துவிட, அஜித்தின் பாசத்தை புரிந்து கொள்ளாமல் அவரிடம் உதவியை பெற்றுக் கொண்டு அவரையே கொன்றுவிட, எப்படி அஜித் வெற்றி பெறுகிறார் என்பதே அசலின் கதை.// யாரு எந்த அஜித்தை கொல்கிறார்? ஒருவரைக்கொன்ற பின் இன்னொரு அஜித் அப்படி என்ன வெற்றி பெறுகிறார்? நீங்கள்தான் இவ்வளவு அழகாய் எழுதியிருக்கிறீர்களா? இல்லை, படமே இந்த லட்சணத்தில் இருக்கிறதா?

அப்புறம் தங்கத்தலைவி பாவனா படமும் போடாமல் நல்லவிதமாகவும் எழுதாமல் என்ன விமர்சனம் இது. சே..சே.. மகா மட்டமான விமர்சனம்.! ஐ ஹேட் இட்.!

Athisha said...

படம் பாக்கலாமா வேண்டாமா?

Prasanna said...

Love Aaj kal film was not ready to be remadea s the heroine will opt for some other guy to get married. Race in Tamil if remade, then there will be lot of alterations. Hopefully Yugi Sethu will do Anil Kapoor's role. :)

Romeoboy said...

பாஸ் கரெக்டா சொல்லுங்க படத்தை பார்கலாமா வேண்டாமா.

அத்திரி said...

//இதையெல்லாம் மீறி அஜித்தினாலும், ப்ரசெண்டேஷனாலும், எரிச்சல் வராமல் இருக்கிறது என்பது உண்மை.//

அய்யய்யோ அப்படியா????.................

ஜெட்லி... said...

பார்த்தாச்சா......
படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே....

Anand said...

When u compare with Aegan, this is 1000 times better. We can watch this movie

Anand said...

When u compare with Aegan, this is 1000 times better. We can watch this movie

ILLUMINATI said...

தல!review அருமை.முடிஞ்சா நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க........
ஏதோ உங்க அளவுக்கு இல்லைனாலும் ஏதோ நானும் review பண்ண ட்ரை பண்ணி இருக்கேன்.புதுசுன்றதால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க ப்ளீஸ்.....

அத்திரி said...

//மற்ற விஷயங்களில் கவனக்குறைவு அதிகம். //


படம்.......பார்க்க முடியுமா........முடியாதா???????/

Ashok D said...

தல போல வருமா...

திவ்யாஹரி said...

எந்த படம் நல்லா இருக்குனு சொல்வீங்க உங்க விமர்சனத்துல? இது வரைக்கும் எந்த படத்தையாவது சொல்லிருக்கீங்களா? ஒரு doubt வந்துச்சி. அதான் கேட்டேன். வேற ஒன்னும் இல்ல.. ஹி.. ஹி..

Manoj (Statistics) said...
This comment has been removed by the author.
Manoj (Statistics) said...

////திவ்யாஹரி said...
எந்த படம் நல்லா இருக்குனு சொல்வீங்க உங்க விமர்சனத்துல? இது வரைக்கும் எந்த படத்தையாவது சொல்லிருக்கீங்களா? ஒரு doubt வந்துச்சி. அதான் கேட்டேன். வேற ஒன்னும் இல்ல.. ஹி.. ஹி/////


அவரு இயக்க போற படத்த ரொம்பப நல்ல படம்னு விமர்சனம் பண்ணுவாரு....
ஆங் தமிழ்ப்படத்தையும் நல்ல படம்னு சொன்னாரே.....
ஆனா தல நீங்க சொன்ன மாதிரி.... வேட்டைகாரனுக்கு இது எவ்வளவோ மேல், ஒரு வாட்டியாவது பார்க்கலாம்,ஆனா வேட்டைக்காரன் கிளைமாக்ஸ் வரைக்கும் பார்த்தவன் தைரியசாலி...

பரிசல்காரன் said...

/படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே..../

ஸ்க்ரீனைத் தூக்கித்தான்...

புலவன் புலிகேசி said...

தல நேத்துதான் பாத்து தொலச்சேன்..சுத்தமா புடிக்கல. முதல் பாதி பரவாயில்ல..இரண்டாவது பாதி எந்திரிச்சி ஓடிரலாமுன்னு தோனுச்சி..வழக்கம் போல அரச்சிக்க்ட்டே இருக்கான்க..

RAVI said...

1. வேட்டைகரனை போல் இதிலும் புதிதாய் கதை இல்லை . 2. இரண்டிலும் சண்டை காட்சிகள் சூப்பர் . 3. வேட்டைகரனில் டான்ஸ் சூப்பர். 4. அசலில் கெட்அப் சூப்பர் . 5. அசலில் கடலில் விழுந்த பிறகு 'தலை' முடி படிந்து விடுவது சூப்பர் ச்ரியடிவிட்டி ... 6. ஏற்கனவே எல்லோரும் வில்லன் பிடியில் இருக்கும் பொது 200 பேருடன் மோதும் வரை பொறுமையாய் நிற்கும் இந்த வில்லன் ரொம்ப நல்லவன் ... 7. மகனை கொன்றவனை கொல்லாமல் ஊர் சுத்தி காட்டும் அந்த வில்லனும் ரொம்ப நல்லவன் .
8. சமிரா ரெட்டி சனியன் ரெட்டி (-) ....அனுஷகா அட்டகாச பிகர் (+) 9. கேமரா ரென்டிலும் சூப்பர் 10. பாட்டுக்கு மட்டும் வேறு கெட்டப் (ரென்டு படதிலும் தான்) 11. திரைகதை இடைவேளைகு முன்னால் வரை நல்லா இருக்கும் (ரென்டு படதிலும் தான்) 12. அவதார் படத்தை வசூலை மிஞ்ஞி விட்டாதாய் ரென்டுதரப்பு ரசிகர்கலும் சொல்லுகிரார்கள்(உண்மையில் அசல் வசூலில் நன்றாக உள்ளது)
13.றெட்டி(மும்பாய் வில்லன்) சம்மந்தபட்ட காட்சிகள் படு சூப்பர். சாயல்

gulf-tamilan said...

/படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே..../

ஸ்க்ரீனைத் தூக்கித்தான்...
:)))

Sasi said...

"ஆண்டனியின் எடிட்டிங் நச்" 100 % correct.

வெற்றி said...

மொக்கை படம் பாஸ்..

நம்ம ஊரு அங்காளி பங்காளி சண்டைய பிரான்ஸ்ல போயி எடுத்துருக்காங்க..இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா :))

வெற்றி said...

// பரிசல்காரன் said...

/படத்துக்கு ஒபெநிங் எப்படி தலைவரே..../

ஸ்க்ரீனைத் தூக்கித்தான்...//

டுவிட்டர்ல பண்றது போதாதுன்னு இங்க கூடவா :))

yetAnother said...

good review thala

Cable சங்கர் said...

@muthu

நன்றி

@குறைஒன்றுமில்லை
புளிக்கிறது

@முத்து
ஆமாம்

@விவேக்
:)

@பிரியமுடன் வசந்த்
நிசம்

@ஸ்டார்ஜான்
அப்படியா சொல்லியிருக்கேன்

@லோஷன்
ரைட்டு

@செந்தில்வேலன்
எப்பத்தான் தமிழ் சினிமா க்ளிஷேலேர்ந்து வெளிய வர்றது..

@தென்மெய்லில்லக்‌ஷ்மணன்
நன்றி

@சுரேஷ்பாபு
மிக்க நன்றி

Cable சங்கர் said...

@ர்மேஷ் ரொம்ப நல்லவன்
டைம் கிடைக்கலை.. அதோட வசாபி வேற் திரும்பவும் பார்த்ததால் கொஞ்சம் இண்ட்ரஸ்ட் இலலம போச்சு

@ஆதி
ஐ.. அது சொல்லிட்டா நீங்க போகாம இருந்திருவீங்களே..?

@அதிஷா
பார்க வேண்

பிரசன்னா
அய்யோ.. அந்த யூகி கொடுமையயார் தாங்குறது

@ரோமியோ
அதிஷாவுக்கு சொன்னதுதான்

@அத்திரி
என்ன அப்படியா.?

@ஜெட்லி

பரிசல் சொன்னாமாதிரிதான்

@ஆனந்த
ஏகனுக்கு லட்சம் தடவை மேல்

@இலுமினாட்டி
நிச்சயம்

@திவ்யாஹரி..
தொடர்ந்து என் விமர்சனஙக்ளை படிப்பவர்களுக்கு தெரியும்.. நான் எவ்வளவு படஙக்ளை நல்லாருக்குன்னு சொல்லியிருக்கேன்னு..

@ஸ்டாடிஸ்டிக்

நிச்சயம் நான் இயக்க போகும் படத்தை ப்ளாகர்கள் எலலம் நல்லருக்குனு சொல்ற மாதிரி எடுக்க மாட்டேன்..:0

ஏன்னா.. ப்ளாகர்கள் நல்லாருக்குனு சொல்ற படம் பெரிசா ஓடமாட்டேங்குது..


@:)

@டிமில்பிஜி
சமிராவை சனியன் என்று திட்டியதால்ல்.. :(

@வெற்றி
பின்ன என்னத்தை தான் எடுக்கிறதாம்.. வித்யாசமாப்ரான்ஸ்ல யோசிச்சிருக்காங்க இலலியா..?
@யெட் அனதர்
நன்றி