சத்யம், தோரணையின் தோல்விகளுக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம் தீராத விளையாட்டு பிள்ளை. முன் வெளியான மசாலா படஙக்ளிலிருந்து விலகி தன்னை ஒரு லவ்வர் பாயாக, காஸனோவாவாக, வெளிப்படுத்த விஷால் முயற்சி செய்திருக்கும் படம்.
விஷால் பேங்க் மேனேஜர் குடும்பத்தின் ஒற்றை மகன். ஒரு பக்கம் அவரை திட்டிக் கொண்டே இருக்கும் அம்மா, இன்னொரு பக்கம் அதை சரிகட்டிக் கொண்டேயிருக்கும் அப்பா என்கிற குடும்பத்திலிருந்து எதிலேயும் பெஸ்டை மட்டுமே அடைவேன் என்ற லட்சியத்துடன் வாழும் விஷால். அதே லட்சியத்தை தன் காதல் விஷயத்திலும் செயல்படுத்த பார்க்கிறார். மூன்று பெண்களை காதலித்து, அதில் ஒருத்தியை செலக்ட் செய்வது என்று முடிவெடுத்து தன் மனசுக்கு பிடித்த மூன்று கேரக்டர்களை தொடர்ந்து, காதல் வலையில் விழ வைத்து, காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் ஒருத்திக்கு தெரிந்துவிடுகிறது. அவள் நீ எப்படி மற்ற இரண்டு பேர்களில் ஒருத்தியை, கல்யாணம் செய்கிறாய் என்று பார்க்கிறேன் என்ற் சவால் விடுகிறாள். சவாலில் அவள் ஜெயித்தாளா? அல்லது விஷால் ஜெயித்தாரா என்பதை.. வெள்ளித்திரையில் முதல் பாதியில் இருக்கிற கேரக்டர்களை எல்லாம் அறிமுகப்படுத்துவதிலேயே கால் மணி நேரம் போய்விடுகிறது. ஒவ்வொரு ஹீரோயின் அறிமுகக் காட்சியையும், சநதானம் கேரக்டரை வைத்தே கிண்டலடிப்பது நல்ல நகைச்சுவை. அதன் பிறகு வரும் காட்சிகள் எல்லாம் சவ சவ என்று இழுக்கிறது. இண்டர்வெல் ப்ளாக்கை தவிர.
படம் நெடுக சந்தானம், சத்யன், மயில் சாமியின் காமெடி பல இடங்களில் தொய்ந்து விழும் படத்தை காப்பாற்றுகிறது என்றே சொல்ல வேண்டும். சந்தானம் தான் முதல் பகுதியை காப்பாற்றுபவர்.
காஸனோவா காதலனாய் விஷால் என்னதான் மீசையெல்லாம் எடுத்துவிட்டு, கருப்பு பையன்களை பொண்ணுங்க லவ் பண்ணாதுன்னு யார் சொன்னது ? என்று பாஸிட்டிவாய் கேள்வி கேட்டு மக்களை ரெடி செய்தாலும், அவரது ஹைபர் ஆக்டிவ் பாடிலேங்குவேஜ் எரிச்சலூட்டுகிறது. லொட,லொடவென நிறைய பேசுகிறார். நிறைய இடங்களில் விஜய்யை பாலோ செய்கிறார். நிச்சயமாய் இந்த கேரக்டருக்கு இவர் ஒரு ராங் காஸ்டிங் என்றே சொல்ல வேண்டும். இரண்டாவது பாதியில் திடீரென ஆணாதிக்கத்தில் உச்சமாய் ஆ..ஊ என்றால் பொண்ணுங்க காதலித்து ஏமாற்றுவதை சொல்லி தான் செய்தது சரி என்று பொம்பளைன்னா இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும் என்று பக்க, பக்கமாய் டயலாக் பேசிவிட்டு, கடைசி காட்சியில் இப்பத்தான் உங்க காதலின் வலியை உணர்கிறேன் என்று ஜல்லியடிப்பது எல்லாமே ஒவர்.
பிரகாஷ் ராஜ் வந்ததும் எதோ செய்யப்போகிறார் என்று நினைத்தால். பெரிய புஸ்.. இருக்கும் மூன்று கதாயகிகளில் நீது சந்திரா மட்டும் மனதில் நிற்கிறார். ம்ற்றவர்கள் பெரியதாய் இம்ப்ரஸ் செய்யவில்லை. அரவிந்த் கிருஷணாவின் ஒளிப்பதிவு தெள்ளத்தெளிவு. யுவனின் பாடல்கள் பெரிய லெட்டவுன் இந்தபடத்தில். இவர் இளையராஜாவின் பையன் என்பதால் அவரின் எல்லா படத்தின் பெஸ்ட் ரீரிக்கார்டிங்கையெல்லாம் யூஸ் செய்யலாம் என்று ஏதாவது ரைட்ஸ் கொடுத்திருகிறாரா ராஜா? அநியாயமாய் ஒரு சூப்பர் ஹிட் படத்தின் பிண்ணனி இசையை அப்படியே எடுத்து படம் முழுக்க உபயோகப்படுத்தியிருக்கிறார். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.
புதிய இயக்குனர் திரு. முதல் பாதியில் சந்தானம் குருப்பை வைத்தும், ஒண்றிரண்டு காதல் முயற்சி காட்சிகளை வைத்து சமாளித்திருக்கும் இயக்குனர், செகண்ட் ஹாப்பில் என்ன செய்வது என்று தெரியாமல், விஷாலை மாஸ் ஹீரோவாக காட்டுவதா? வேண்டாமா என்ற குழப்பம் தெரிந்து கொண்டேயிருக்கிறது. மூன்று பேரில் இரண்டு பேர் கழண்டுவிட்ட பின், இருக்கும் ஒருத்திக்கு விஷயம் தெரிந்து அவள் நம்பாமல் இருக்கும் போதே படம் முடிந்துவிட்டது. அதற்கு பிற்கு ஒரு அரைமணிநேரம் நம்மை போட்டு கொல்வது அநியாயம். அப்படியாவது அவளை ஏமாற்றாத முடிவை எடுத்திருந்தால் பரவாயில்லை. எந்த விதத்தில் விஷால் செய்தது ஞாயம்?. அப்படி ஞாயப்படுத்துவதர்காக, ஆணாதிக்க வசனங்களை பஞ்ச் டயலாக்குள் பேசுவதும் நீ பொம்பளை, நான் என்ன இருந்தாலும் ஆம்பளை என்றெல்லாம் உதார் விடுவது அரத பழசு. நிச்சயமாய் ஹீரோ மேல் தவறு இல்லை, பெண்ணிடம் தான் தவறு இருக்கிறது என்றிருந்தால் நிச்சயம் இம்மாதிரியான டயலாக்குகளுக்கு விசில் பறந்திருக்கும். முக்கியமாய் இவர்களுக்குள் ஏற்படும் காதல் கெமிஸ்ட்ரி படு மொக்கையாய் இருப்பதால் முடிவு முன்பே தெரிந்து விடுகிறது.
தீராத விளையாட்டுப் பிள்ளை – சவலை பிள்ளை
டிஸ்கி: இதே கதை தெலுங்கில் சக்கில்லோ சந்திரடு என்று சித்தார்தும் மூன்று பெண்களை காதலித்து ஒரு பெண்ணை செலக்ட் செய்வார். கிட்டத்தட்ட இதே ட்ரீட் மெண்ட்.. அதில் க்ளைமாக்ஸ் வரை இருக்கும் ஒரு பெப்பும், சித்தார்த்தை ஒரு லவ்வர் பாயாக பார்க்கும் போது, நம்மால் அவரை ஒரு காஸனோவாவாக ஏற்றுக் கொள்ள முடியும்.அவரின் நடிப்பும் மிக இயல்பாய் இருக்கும். அதிலும் தான் காதலிக்கும் பெண் இவள் தான் என்று முடிவானதும் நடக்கும் ஒரு போராட்டம் நன்றாக இருக்கும். என்ன க்ளைமாக்ஸ் தான் ஹம் ஹாப் கே ஹே கோன் போல இருக்கும் ஆனால் இந்த படத்துக்கு அது எவ்வளவோ மேல். இதில் காமெடி என்னவென்றால் இந்த படமும் தெலுங்கில் ரிலிசாகப் போகிறது வருகிற 18 என்று நினைக்கிறேன். தேவுடா..
தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க
Comments
அதானே பார்த்தேன்..விஷால் திருந்த வாய்பே இல்ல
சென்னையில சந்திப்போம்...கூடிய விரைவில்...
தல மலைக்கோட்டையிலயும் இதே தான் பன்னாரு..அடுத்த விஜய்யா வருவாரோ?
சரியா சொன்னீங்க அண்ணா....
அதே படத்த remake பண்ணி இருக்கலாம் !!!
இல்ல atleast bachna haseeno hindi movie remake பண்ணி இருக்கலாம்!!
//கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு கொடுக்கலாம் என்றிருக்கிறேன்//
நெற்றிக்கண்.. மத்த விமர்சனத்துல, எல்லாம் சொல்லிட்டாங்களே.. இருந்தாலும் நீங்க பரிசு கொடுத்தா தப்பா நெனைக்க மாட்டேன் :))
-கார்த்திக் கிருஷ்ணா
www.creativetty.blogspot.com
சன் டி.வி. செய்திகளுக்காக
D.அன்பு.....
:-))))))))))
pala mokkai music pathi ellam positive a eludurappo, yuvan na mattum etho gaandula thittura maadiri irukku
pala mokkai music pathi ellam positive a eludurappo, yuvan na mattum etho gaandula thittura maadiri irukku//
ஸ்ரீனிவாசன். யுவன் எனக்குமிகவும் பிடித்த இசையமைப்பாளர்.. அவரிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். இளையராஜாவின் காப்பி பேஸ்டாக அல்ல. அதனால் தான் சொல்லியிருக்கிறேன். மற்றபடி என் பழைய பதிவுகளை பார்த்தால் நிச்சயம் நான் யுவனை எவ்வள்வு விரும்புகிறேன் என்று உங்களூக்கு புரியும். காண்டு எல்லாம் இல்லை.
இந்தமாதிரி ரசனைக்காகத்தான் நான் அவனில்லை, தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற படங்கள் எடுக்கப்படுகின்றன.
SUN pictures yen ipdi panraanga!!!
ENDHIRAN release aagara varaikkum vera padam vaangaama irundha nalla irukkum.....
ரிலீஸ் பண்ணியிருக்கோம்
அரைமணிக்கு மூணுதடவை விளம்பரம் போட்டுக்கிழிச்சு ஓட்டிக்கிவோம்.
நீங்க என்னவேணும்னாலும் சொல்லுங்க!
சன் செய்திகளுக்காக.....டண்டனக்கா!
:))
நெற்றிக்கண் மியூசிக்...
செம ... சொல்லணும்..
டிரைலர் பாக்கும்போதே நெனச்சேன் அந்தப்படத்தளுவலாத்தான் இருக்கும்னு
தல அந்தப்படத்துல நாயகன்னுக்கு அந்தமூனுபாரையுமே மாத்திமாத்தி ஒவ்வொரு விசையத்துலையும் புடிக்குரமாத்திரில்ல இருக்கும்.
இதுமாதிரி வழியப்போய் லவ்வரமாதிரி இருக்காதுல்ல
லொட,லொடவென நிறைய பேசுகிறார். ///
தல மலைக்கோட்டையிலயும் இதே தான் பன்னாரு..அடுத்த விஜய்யா வருவாரோ?//
//ஜோசப் பால்ராஜ் said...
விஷாலோட பாடி லாங்குவேஜ் பத்தி சரியா சொல்லிட்டிங்க. சன் டிவியில போடுற விளம்பரத்த மட்டும் தான் பார்த்தேன். அதுலயே அவரோட முகபாவனைகள் சகிக்க முடியல. மொத்தத்துல அவருக்கு பொருந்தாத கேரக்டர்ல நடிச்சுருக்காரு.//
அதே தான்..