மீண்டும் ஒரு காமன் மேன் படம். ஆனால் இது வேறு விதம். மூன்று நாட்களில் சம்பந்தமேயில்லாத மூன்று பேர்களுடய வாழ்வில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு. சத்யன்ந்தன் ஒரு பார்மா கம்பெனியில் வேலை பார்ப்பவன். தினமும் நிலையிலிருந்து எர்னாக்குளத்துக்கு இரயில் பயணிப்பவன். தினமும் பயணத்திற்கிடையில் சரியாய் ஒரு இடத்திலிருந்து இறங்கும் வரை தூங்கும் பழக்கம் உள்ளவன்.
அட்வகேட் நந்தன் மேனோன். வக்கீல், ஷோசியல் ஆக்டிவிஸ்ட், மல்ட்டி நேஷனல் கம்பெனி ஒன்றின் மணல் கொள்ளைக்கு எதிராய் மரநாட்டுக்கரா என்கிற இடத்தை ஆக்கிரமிக்க, அரசியல்வாதிகளுடன் போராடுபவன். அவனுக்கு உதவியாய் அவனுடய மனைவி அனுராதா, ஒரு டிவி ஜர்னலிஸ்ட். அமைச்சர் தாமஸ் சாக்கோவுக்கும், மல்டி நேஷனல் கம்பெனிக்ளுக்கு இடையே உள்ள உறவை வெளிபடுத்த மீடியா மூலம் முயற்சிப்பவள்.
ஒரு நாள் அமைச்சர் சாக்கோவின் அறையில் ஸ்பை கேம்வைத்து அவர்களுக்கும், கம்பெனிகளூம் மாநாட்டுகாரா வில ஒரு விமானத்தை விட்டு வெடிக்க வைத்து அந்த இடத்தை காலி செய்ய வைக்கும் ஒரு விஷயத்தை படம்பிடித்துவிட, அதை கண்டுபிடித்த அமைச்சர், அவளை துரத்துகிறார்.
அதே நாளில் ஆபீசிலிருந்து லேட்டாய் வரும் சத்யந்தன் தூங்கி போய் அவனுடய ஸ்டேஷன் தாண்டிவிட, அங்கே ரயிலில் அட்வகேட்டை சந்திக்கிறான். அடுத்த இரயிலுக்கான நேரம் அதிகாலையில்தான் என்பதால் டீ குடிக்க வெளியே வரும் போது, ரவுடிகளால் அட்வகேட் கடத்தப்பட, ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் சத்யந்தன் எப்படி அவர்களுக்கு உதவி, மிகப் பெரிய சதியை முறியடிக்கிறான் என்பதே கதை. சந்யனாக சீனீவாசன். ஒரு மிடில் க்ளாஸ் குடும்பஸ்தனை கண் முன்னே உலவ விடுகிறார். அட்வகேட்டை கடத்தி போவதை பார்த்ததும் அவரால் ஏதும் செய்ய முடியாத நிலையையும், பின்பு தன்னால் முடிந்ததை செய்தாவது தன்னுடன் சில மணி நேரமே பயணம் செய்த சக பயணிக்காக மனித நேயத்துடன் அலையும் கேரக்டரில் மனதில் நிறைகிறார்.
அட்வகேட்டாக திலீப். பெரிய கேரக்டர் இல்லை, ஹிரோயிசம் இல்லை, வில்லன்களால் அடிபட்டு அடைப்பட்டு இருக்கும் கேரக்டரில் நடிப்பதற்கு பெரிய மனது வேண்டும். கொடுத்த வேலையை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் மனைவியாக மம்தா மோகந்தாஸ் அவருடய நடிப்பும் தேவைக்கேற்ப அளவில்.
கதை, திரைக்கதை, இயக்கம், ரஞ்சித் சங்கர். இது அவருடய முதல் படம். நிச்சயம் இமமதிரியான ஒரு கதையை தேர்தெடுத்தமைக்காக பாராட்ட வேண்டும். திலிப் கடத்தப்பட்டவுடன் திரைக்கதையில் வேகம் கூடுகிறது. ரயிலில் சிநேகிதர்களூடன் சீனிவாசன் பேசும் வசனங்களூம், ஆங்காங்கே வீசும் நச் லோக்கல் அரசியல் கிண்டல்களும் அருமை. கடைசி காட்சிகளில் பரபரப்பாக இருக்க வேண்டிய காட்சிகள் சினிமாவாக இல்லாமல் நிதர்சன நேரங்களில் நடப்பது நன்றாக இருந்தாலும். கொஞ்சம் ப்ளோவை குறைக்கத்தான் செய்கிறது.
Passenger - A Film To Watch
டிஸ்கி:
இந்த படம் தமிழில் இயக்குனர் செல்வாவின் இயக்கத்தில் சீனிவாசன் கேரக்டரில் சத்யராஜ் நடிக்க முறியடி என்ற பெயரில் தயாராகிவருகிறது. சீனிவாசன் கேரக்டரில் சத்யராஜ் அங்குதான் கொஞ்சம் இடிக்கிறது.
Comments
எனக்கும் இந்த படம் ரொம்ப பிடிச்சு இருந்தது.
நன்றி ஜி.
//
அதே கவலை தான் எனக்கும்....
*******
கேட்டு பாருங்க... சத்யராஜ் ஜோடி நமீதாவான்னு... அப்புறம் கொஞ்சம் இல்ல... ரொம்ப இடிக்கும்....