
கதை கதை என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிவதில்லை, நம் வாழ்க்கையும், நம்மை சுற்றியுள்ளவ்ர்களின் வாழ்க்கையை பார்த்தாலே நிறைய கதைகள் கொட்டி கிடக்கிறது என்று. அப்படி வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட கதை தான் அங்காடித்தெரு.
தமிழ் சினிமாவில் இதுவரை எக்ஸ்ப்ளாயிட் செய்யப்படாத ஒரு கதை களன். சென்னை தி.நகரில் வியாபித்தீருக்கும் பல ஸ்டோர்களில் வேலை என்ற பெயரில் தன் குடும்பத்துக்காக, அடிமைப்பட்டு, தன் ஆசா, பாசங்களை துறந்து, கிடைக்கிற பொழுதுகளை களவாடி அதில் கிடைக்கும் சந்தோசஷங்களால் வாழ்ந்து கொண்டிருக்கும் கதை மாந்தர்கள்களை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
அதே போல் அடி மாட்டுக்கணக்காய் மனிதர்களை நடத்தும் பல அண்ணாச்சிகளின் மறு பக்கத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார்கள். எவ்வளவு கேரக்டர்கள். அண்ணாச்சி, கடை மேனேஜர், நாயகன், நாயகி கனி, அவளின் தோழிகள் ராணி, சோபியா, ராணியை காதலிக்கும் பையன், ரங்கநாதன் தெருவில் பிச்சையெடுக்கும் குள்ளன், அவனின் பிராஸ்டிட்டியூட் மனைவி, பாய், கண் தெரியாத கர்சீப் விற்கும் பாய், நாயகனின் நண்பன் பாண்டி, பொழைக்க வந்து இலவச கக்கூஸை, கட்டண கக்கூஸாக மாற்றி தனக்கென பொழைப்பை தேடும் இளைஞன் என்று வாழ்க்கையை கண் முன்னே விரிக்கும் கேரக்டரக்ள்.
நாயகன் புதுமுகமாம். ஆனால் மிக அருமையான நடிப்பு. படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டே நாயகி அஞ்சலிதான். கனி யாக வாழ்ந்திருக்கிறார். சின்ன சின்ன பாடி லேங்குவேஜில், கலக்குகிறார். முக்கியமாய் நாயகன் போட்டுக் கொடுத்ததினால், மேனேஜர் தனி அறையில் பாலியல் அத்துன் மீறலை பற்றிசொல்லிக் கொண்டே, வாடிக்கையாளர்களை கவனிக்கும் காட்சியும், வீட்டு வேலை செய்யும் தன் தங்கை வயதுக்கு வந்துவிட, அவளை கொண்டு போய் எங்கு வைத்து சடங்கு செய்வது என்று புரியாமல் நடு ரோட்டில் ஆரற்றும் போதும் , கிளைமாக்ஸ் காட்சியில் அவளின் கண் மொழியும் க்ளாஸ்.
படட்த்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கேரக்டரும், நடிக்கவில்லை கேரக்டராய் வலம் வருகிறார்கள். முக்கியமாய் இயக்குனர் எ.வெங்கடேஷ், அண்ணாச்சி, ராணி அகியோரை குறிப்பிட்டு சொல்லலாம்.
ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு அருமை. முக்கியமாய் கடையில் உள்ளே நடக்கும் காட்சிகளில் லைட்டிங் நச். ஜி.வி.ப்ரகாஷ்குமார், விஜய் ஆண்டனியின் இசையில் முன்று பாடல்கள அருமை. பிண்ணனி இசை தான் படு சொதப்பல்.

படத்தில் பாராட்ட பட வேண்டிய இன்னொரு முக்கிய நபர் வசனகர்த்தா ஜெயமோகன் . அவ்வள்வு இயல்பான வசனங்கள். தேவையில்லாமல் லைவ்வாக டயலாக் பேசுகிறேன் என்று இம்சை படுத்தும் இந்நாளில் இவரின் வசனங்கள் நச்
இயக்குனர் வசந்த பாலனை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படம் முழுக்க, முழுக்க இயக்குனரின் படம். ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்பு தெரிகிறது. ஓரிரு காட்சிகளில் மட்டும் தெரியும் சற்றே மிகைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை தவிர குறையொன்ருமில்லை. பல இடங்களில் இவரின் டிடெயிலிங் மிரட்டலாய் இருக்கிறது. இப்படம் அவருக்கு ம்ட்டுமல்ல, அவரின் தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள் கூட பெருமை கொடுக்கும் படம்.
அங்காடித் தெரு - வாழ்வின் பிரதிபலிப்பு
கேபிள் சங்கர்
Comments
என்ன ரொம்ப பிஸியோ..?
@பட்டர்ப்ளை சூர்யா
அதான் நீங்க பார்த்துட்டு எழுதிட்டீங்களே..:)
மனோ
நன்றி
முரளி
நல்ல படத்தையெல்லாம் என்னைய விட்டு விட்டு போயிடுங்க.//
சங்கத்துல வெச்சிக்கிறேன். :))
-
DREAMER
சின்னச்சின்ன சினிமாத்தனங்கள் படத்தில் இருந்தாலும், படம் முடிந்து தியேட்டரை விட்டு கனத்த இதயத்தோடுதான் வரமுடிகிறது.
-திருவட்டாறு சிந்துகுமார்
இந்த படம் பார்க்கும் போது உங்களுடைய போட்டோவினை 'நீ கேளேன் பதிவில் பார்த்தேன் அதுவும் அருமை...
உங்களின் விமர்சனம் போலவே, அஞ்சலியின் நடிப்பும் சூப்பர்...
KACHERY AARAMPAM Enna aachu....?
அஞ்சலி சான்ஸே இல்லை பொண்ணு, பின்னியெடுக்கிறா, கடைசிகாட்சியில் நாம உடனே திருமணம்பண்ணிக்கலாம்ன்னு அவன் சொல்லும்போது, நிஜமாத்தான் சொல்றியான்னு நானே சொல்லிகிட்டேன்,கற்றதுதமிழ்.
இன்னொருமுறை அஞசலிக்காக பார்க்கனும். அந்த பாண்டி, சோபியா, ஹீரோ எல்லாருமே அருமையா பண்ணியிருக்காங்க. வாழ்த்துக்கள் வசந்தபாலன். காட்சிகளின் பின்புலங்கள் தனியாக கதை சொல்லிக்கொண்டே வருவது, அருமை.
ஆனால் கதாநாயகன் ஏழைன்னு சொல்லிட்டா அவன் வீட்டு நாய் கூட நொண்டியாத்ததான் இருக்கும்ன்னு தல சொன்னதபோல, சோகம் வலிய திணிக்கப்பட்டதாகவே உணர்கிரேன்.
உதாரணமாக ஹீரொவின் தங்கை தன் அண்ணன் வேலை பார்க்கும் கடை விளம்பரமிட்ட பையை வாங்கிக்கொண்டு ஸ்லோமோஷனில் திரும்பிவருவாள், ஒரு அழகான இசைவேறு. அவள் அம்மாவிடம் வந்து சேரும் வரை எனக்கு பதபதைப்பாகவே இருந்தது. எங்கே ஏதாவது பஸ்ஸைவிட்டு இந்த பொண்ணையும் போட்டுதள்லிடுவாங்களோன்னு..
அதனால் எதார்த்தமாக சொல்லவேண்டிய சில காட்சிகளில் சினிமா எட்டிப்பார்க்கிறது.
அடுத்த படத்துல வசந்தபாலன் இந்த சின்ன சின்ன காம்ரமைஸைகூட செய்துக்கமாட்டார் என்று நம்புகிறேன் (விரைவில் ஒரு உலகதிரைப்படம் இவரிடமிருந்து வரும் என்ற நம்பிக்கையில்)
how is comedy in this movie.. or it is very serious movie.
நல்ல படத்தையெல்லாம் என்னைய விட்டு விட்டு போயிடுங்க.//
சங்கத்துல வெச்சிக்கிறேன். :))
சங்கத்த கூட்டுப்பா.
ஆமாம்.
@மனோ
நிச்சயம் பாருங்கள்
@முரளி
நன்றி
@ஷங்கர்
எதை..?
@ஆதிமூல கிருஷ்ணன்
அது என்ன இன்னைக்கு/நாளைக்கு..இப்பவே பாகக்ணும்ம்..
@நாடோடி
நன்றி
@ராம்ஜி யாஹு
அதை பற்றிய கவலை ஏன் உங்களுக்கு..?
@ராஜன்
பார்த்துட்டு சொல்லுங்க
@டிரீமர்
ஆமாம்
@திருவட்டாறு சிந்துகுமார்
ஆமாம் தலைவரே
@சுகுமார் சுவாமிநாதன்
அப்படியா../
@குரு
:)
@நர்சிம்
நிச்சயம்
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நல்ல விஷயஙக்ளைபத்தி பேசும் போது அது எதுக்கு
@சைவக்கொத்துபரோட்டா
ம்
@ஜீவன்
ம்ம்
@டிஸ்கவரி புக் பேலஸ்
நன்றி
@முரளி குமார் பத்மநாபன்
சில இடங்களில் சினிமா செய்யும்போது எக்ஸ்ஸாசரேஷன் நிச்சயம் தேவை.. அதைத்தவ்ரி வேறா வழியில்ல்லை
@சேட்டைக்காரன்
நிச்சயம் பாருங்க
@குரு
பார்த்துட்டு சொல்லுங்க
@முத்துகுமார்
உடனே பார்க்கவும்
@அசோக்
:)
@காவேரி கணேஷ்
கூட்டிட்டாபோச்சு
@ஜோ
ம்
@பிரசன்னா
நன்றி தலைவரே
@இலுமினாட்டி
இந்த படம் கமர்ஷியலாய் வெற்றி பெற்ற மேலும் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகும் ப்டம்..
i never reed jeyamohan, in naan kadavul he inprised me. but in this movie her moved far ahead.
background music also not so bad.
i expecting this kind of movie which touches the human lives often.
எல்லா வலைப்பூக்களிலுமே பாஸிட்டிவான விமர்சனங்களே வந்துள்ளதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
எனக்கு பின்னூட்டமிட்டதற்கு நன்றி தல.
உண்மையிலேயே மிக அருமையானப் படம். ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் வலிகளை தெளிவாக பதிவு செய்துள்ள படம்.
நான் சென்னையில் இருந்த போது சில முறை அந்த அண்ணாச்சிகளின் கடைகளுக்கு சென்றது உண்டு. மிக மட்டரகமான வாடிக்கையாளர் சேவை. கஸ்டமர் கேர் அப்டின்னா என்னான்னே தெரியாத இவனுங்களுக்குன்னு செமக் கோவமாத்தான் வந்துருக்கேன். ஆனா இந்தப் படம் பார்த்ததும், அங்க வேலை பார்கிற ஒவ்வொருவருக்கும் பின்னாடி இப்டித்தான் கதைகள் இருக்குமோ அப்டின்னு தோணுது. இதுமாதிரியெல்லாம் இருக்கதாலத்தான் அவங்களால ஒழுங்கா வாடிக்கையாளர்களை கவனிக்க முடியலையோன்னு கூட தோணுது.
சரவண பவன் உணவக உரிமையாளர் அண்ணாச்சி மேல எத்தனையோ புகார்கள் இருந்தாலும், அவருடைய பணியாளர்களை மிகச் சிறப்பா கவனிச்சுக்கிறவருங்க பெயர் அவருக்கு உண்டு.
கதைகளை தேடும் விழியை
நல்ல விமர்சனம் தல