Thottal Thodarum

Jul 30, 2012

கொத்து பரோட்டா -27/07/12

இன்குபேட்டருக்கு 200 ரூபாய் கொடுக்க முடியாததால் பிறந்து ஐந்தே நாள் ஆன குழந்தை இறந்திருக்கிறது. என்ன கொடுமை இது. அடிப்படை மனிதத்தன்மைக்கூட இல்லாமல் இப்படியெல்லாம் நம்மூரைத் தவிர வேறெங்கும் நடக்கவே நடக்காது. செய்தியைக் கேட்க,  கேட்க மனசு பதைக்கிறது. இந்த லட்சணத்தில் நாம் வல்லரசாக வேண்டும் என்று கனவு வேறு காணச் சொல்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@


இன்னொரு கொடுமை மாணவி ஸ்ருதி ஓடும் பஸ்சின் தரையில் இருந்த ஓட்டை வழியாய் தவறி விழுந்து, அதே வண்டியின் டயர் அந்தப் பிஞ்சின் தலையில் ஏறி மூளை பிதுங்கி இறந்திருக்கிறாள். எழுதும் போதும், கேட்கும் போது என்னால் தாங்க முடியவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் இந்த மாதம் தான் இந்த வண்டிக்கு எப்.சி கொடுத்திருக்கிறார்கள். இந்தியன் படத்தில் வருவது போல காசை வாங்கிக் கொண்டு வண்டிகளுக்கு எப்.சி கொடுத்திருப்பார்கள் போல். அந்த ஆர்.டி.ஓவை சஸ்பெண்டும், கைதும் செய்திருக்கிறார்கள். பள்ளியின் தாளாளரையும் டிரைவரையும் மேலும் இருவரை கைது செய்திருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் ஓடும் பல பள்ளி வேன்கள், தனியார் வேன்களின் கண்டீஷன் படு மோசமாய்த்தானிருக்கிறது. அளவுக்கு அதிகமாய் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களை பறிமுதல் செய்து, அதன் பர்மிட்டையும், ஆட்டோ டிரைவரின் லைசென்சையும், கேன்சல் செய்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற நடவடிக்கைகள் எத்தனை நாளைக்கு தொடர்வார்கள். இந்த நடவடிக்கைக்கே ஒரு மாணவியின் உயிர் தேவையாய் இருக்கிறது. இம்மாதிரியான ஊழல்கள் களைய இன்னும் எத்தனை உயிர்கள் தேவைப்படுமோ? இவ்விபத்தை தொடர்ந்து மேலும் இரண்டு குழந்தைகள் அதுவும் பெண் குழந்தைகள் பஸ்களின் சக்கரங்களில் மாட்டி இறந்திருக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@
பொண்டாட்டி என்றாலே ப்ரச்சனை எனும் போது பொண்டாட்டிகள் என்றால் கேட்கவா வேண்டும். அதுவும் ஆறு பொண்டாட்டிகள் என்றால்? ப்ரச்சனை என்னவென்றால் ஆறாவதாய் திருமணம் செய்த பெண்ணுடன் தினமும் உறவு கொள்வதையும், தங்களுடன் கணவர் இருப்பதில்லை என்று மற்ற ஐந்து மனைவிகளுக்கும் மனத்தாங்கல். சொல்லி பார்த்திருக்கிறார்கள் கேட்கவில்லை. ஒரு நாள் இரவு ஆறாவது மனைவியுடன் படுக்கையறையில் இருந்த போது மற்ற ஐந்து மனைவிகளும் கதவை உடைத்து, உள்ளே புகுந்து இப்போதே எங்கள் எல்லோருடனும் உறவு கொள் என்று கத்தியைக் காட்டி மிரட்ட, ஏற்கனவே ஆறாவதுடன் ஒரு ரவுண்ட் போயிருக்க, மற்ற நால்வருடனும் ஆளுக்க் ரவுண்ட் முடிக்க, ஐந்தாவது ரவுண்டின் போது மனுஷன் மயக்கமாகி இறந்தேவிட்டார். இதைக் கண்ட மனைவிகள் எஸ்ஸாக, அதில் ரெண்டு பேரை பிடித்துக் கொடுத்திருக்கிறார் ஆறாவது மனைவி. என்ன தான் செத்துட்டாலும் மனுஷனின் தாக்கத்தை பாராட்டியே ஆக வேண்டும். 
######################################
மனுஷனுக்கு சாவு எப்படி வரும்னு தெரியவே தெரியாது. பேப்பரத் திறந்தா கள்ளக்காதல் கொலை, அந்தக்கொலை, இந்தக் கொலைன்னு ஆயிரம் விதமான கொலை வந்திட்டிருந்தாலும், நேற்றைய பேப்பரில் வந்த கொலை விஷயம் கொடுமை. எவனோ ஒரு சைக்கோ, சம்பந்தமேயில்லாத மூணு பேரை ஆந்திராவிலிருந்து வந்த பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் நான்கு பேரை கழுத்திலேயும், மார்பிலேயும் குத்தி கொலை செஞ்சிட்டு ஓடிப் போயிருக்கான். இதுல பொழைச்சவர் சொல்றாரு. என்னை யாரோ கத்தியால குத்துறாப் போல தோணிச்சு. அது கனவாயிருக்கும் நினைச்சிட்டிருக்கும் போதே வலிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் நிஜம்னு தெரிஞ்சது என்று சொல்லியிருக்கிறார். விபத்துல சாகலாம், யாராவது வஞ்சம் வச்சி கொல்லலாம். ஆனால் எதுக்காக கொல்லப்பட்டோம்னு தெரியாம சாவுறது எவ்வளவு கொடுமை. ம்ஹும் விதிங்கிறது இருக்குது போலருக்கு
@@@@@@@@@@@@@@@@@@
கார்த்திக் சுப்புராஜ். நாளைய இயக்குனர் முதல் பகுதியில் இரண்டாவதாக வந்தவர். அட்டக்கத்தி படத்தை தயாரித்த நண்பர் சி.வி.குமாரின் தயாரிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது இவரது “பிட்ஸா”. இது இவரது முதல் திரைப்படம். படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது விரைவில் நிஜமாகவே ஒரு நல்ல திரில்லரை பார்ப்பேனென்ற நம்பிக்கை வருகிறது. கார்திக்கை எனக்கு பர்சனலாகவும், அவரது குறும்பங்கள் மூலமாகவும் மிகவும் பிடிக்கும். அதே போல இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் என் நண்பன். சமீபத்தில் வந்த மாலைப் பொழுதின் மயக்கத்திலேவின் மூலம் பேசப்பட்டுக் கொண்டிருப்பவரின் அடுத்த படம். இசை சந்தோஷ் நாராயணன். அட்டக்கத்தியின் “ஆசை ஒரு புல்வெளி” ஒன்றே போது இவரது திறமையை பறைச்சாற்ற.. இதோ உங்களுக்காக “பிட்ஸா’வின் ட்ரைலர்
@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
சென்ற சனியன்று மாலை “மெளன் மொழி” என்ற குறும்பட வெளியிட்டு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். ஏவி.எம். ப்ரிவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்திருந்தார்கள். டெக்னிக்கல் ப்ரச்சனையால் விழா ஒன்னரை மணி நேரம் தாமதமாய் ஆரம்பித்தது. தியேட்டரில் ஏசி வேறு இல்லை. படு மோசமான மெயிண்டெனெஸ். இத்தனைக்கும் காசு  வாங்கிக் கொண்டுதான் படம் போடுகிறார்கள். வந்திருந்தவர்கள் எல்லாம் வேர்த்து வழிந்து கொண்டு ஒரு வழியாய் படம் பார்த்தார்கள். ஒரு சுவாரஸ்யமான குறும்படத்தை அளிக்க முயற்சித்திருந்தார்கள். வாழ்த்துக்கள் ஜெய். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மீண்டும் நான் ஈ
தியேட்டர் நடத்துபவர்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. நல்லா ஓடுற படத்தை எடுத்துட்டு வேற படம் போட்டா பல சமயம் வெளங்காது என்பதுதான் அது. அப்படி நல்லா ஓடிய நான் ஈயை தூக்கிட்டு நம்ம தலயோட பில்லா2 போடப்பட, படத்தின் அபார வெற்றியின் காரணமாய் பல தியேட்டர்களில் மீண்டும் நான் ஈயைப் போட்டிருக்கிறார்கள். சென்னையில் உள்ள பல மல்டிப்ளெக்ஸுகள், சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் நான் ஈ மீண்டும் பறக்க ஆரம்பித்திருக்கிறது அரங்கு நிறைந்த காட்சிகளாய்
@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இளையாராஜாவின் குரலில் பல பாடல்கள் இருந்தாலும், சில பாடல்கள் எப்போது கேட்டாலும் நம்மை கட்டிப் போடும். அதில் இந்தப் பாட்டு மிக முக்கியமான பாட்டாய் நான் கருதுகிறேன். கேட்பதற்கு மிக சாதாரணமாய் இருக்கும் ட்யூன் தான் ஆனால் அதை பாடியிருக்கும் விதமும், பாடல்களின் இடையே வரும் பி.ஜி.எம்மும் அட்டகாசமாய் இருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
நீ என்ன செய்கிறாய், சிந்திக்கிறாய் என்பது உனக்கு மட்டுமே தெரியும் பட்சத்தில், மற்றவர்கள் உன்னை பற்றி நினைப்பதை பற்றி ஏன் கவலைப்படுகிறாய்?

உனக்காக அழாதவர்களுக்காக நீ அழாதே.

உன் பின்னால் ஒருவன் உன்னை பற்றி தப்பு சொன்னால் நீ அவனை விட உயர்ந்து விட்டாய்.அதாவது அவனை விட கொஞ்சமேனும் வளர்த்திருக்கிறாய் :-))))))) ....உன் எதிரில் ஒருவன் உன்னை தப்பாக சொன்னால் நீ அவனுக்கு சமமானவனாய் இருக்கிறாய்.....அவனைவிட வளரவே இல்லை கொஞ்சமாவது வளரனும் :-
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
women are the best goalkeepers, no matter how wide they open, they don't let the balls in

Post a Comment

29 comments:

வவ்வால் said...

//...உன் எதிரில் ஒருவன் உன்னை தப்பாக சொன்னால் நீ அவனுக்கு சமமானவனாய் இருக்கிறாய்.....அவனைவிட வளரவே இல்லை கொஞ்சமாவது வளரனும் :-//

காம்ப்ளான் குடிக்க போறிங்களா அப்போ?

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Jackiesekar said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கேபிள்.

Anonymous said...

Happy Birthday Sankar!

Thozhirkalam Channel said...

nice

கோவை நேரம் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தல..

scenecreator said...

அந்த சேலையூர் பள்ளியின் தாளாளர் ஒரு முன்னால் மிலிடரியாம் .இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு கல்லூரியில் படித்த அவர் மகன் சுற்றுலாவின் போது மரணமடைய ,அவர் அந்த கல்லூரியை எதிர்த்து போராட்டம்,மீடியாக்களில் பேட்டி என்று குரல் கொடுத்திருக்கிறார்.அது மட்டுமில்லாமல் கல்வி பிரச்சனைகளில் முதல் ஆளாக முழக்கம் இட்டு வந்திருக்கிறார்.அந்த ஞாயவான் தன் பள்ளியின் பஸ்கள் பற்றி இப்போது தனக்கு எதுவும் தெரியாது .எல்லாம் பஸ்களும் ஒப்பந்தத்தில் ஓடுகின்றது என்று நழுவ பார்த்திருக்கிறார்.

காவேரிகணேஷ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவரே..

மணிஜி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேபிள்..இந்த வருடம் வெற்றிகரமாக அமையவும் கூடுதல் வாழ்த்துக்கள்...

யுவகிருஷ்ணா said...

பிறந்தநாள் வாழ்த்துகள் கேபிள். அப்துல்லாவுக்கும் இங்கிட்டே வாழ்த்துகளை சொல்லிக்கறேன்.

யுவகிருஷ்ணா said...

பிறந்தநாள் வாழ்த்துகள் கேபிள். அப்துல்லாவுக்கும் இங்கிட்டே வாழ்த்துகளை சொல்லிக்கறேன்.

எனது கவிதைகள்... said...

"உன் பின்னால் ஒருவன் உன்னை பற்றி தப்பு சொன்னால் நீ அவனை விட உயர்ந்து விட்டாய்.அதாவது அவனை விட கொஞ்சமேனும் வளர்த்திருக்கிறாய்"!நல்ல வரிகள் மற்றும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே!

உண்மைவிரும்பி.
மும்பை.

CS. Mohan Kumar said...

ஆறு பேர் மேட்டர் எந்த ஊருன்னு சொல்லவே இல்லையே ? வெளிநாடா? இந்தியாவா?

arul said...

many many happy returns of the day cable anna

Ivan Yaar said...

Happy Birthday Mr.Cable Sankar. I was thinking you must be less than 25 years. But after seeing your sons photo in facebook only I came to know about your age.

பிறந்தநாள் வாழ்த்துகள்

இளம் பரிதி said...

happy birth day sir....

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

ஜோதிஜி said...

வாழ்த்துக்கள்...

அமர பாரதி said...

Happy birh day and many more happy returns of the day Cable.

Unknown said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Balaganesan said...

last tweet inspired me.......

Shyam Sundar said...

கேபிள் சங்கர்!
ஒரு நாள் எத்தனை முறை
வந்துபோவது!
ஓய்வாக இருத்தலும், ஓய்ந்து போயிருந்தாலும்,
நான் தொலைவது உனது பதிவுகளுக்குள் மட்டுமே!
(தியேட்டர்)
முன் பதிவை தவித்து
உன் பதிவை எதிர்பார்க்க வைக்கின்றாய்!
சுவையாய் இருக்கிறது
பரோட்டா!
ஒரு சில கார்னர் தவிர்த்து!
நான் உந்தன் ஜால்ரா இல்லை!
ஒரு சில பார்வைகளை ரசிப்பவன்!
தொடரட்டும் உனது பணி!
நீ தூவும் வரிகளை
சந்தோஷ கீற்றாய் பார்கிறேன்!

வாழ்க பல்லாண்டு!

ஷ்யாம் சுந்தர்

குரங்குபெடல் said...

பீட்சா டீசெர் மிகவும் அருமை . . .

பகிர்வுக்கு நன்றி

வாழ்த்துக்கள்

CrazyBugger said...

On your b'day india won bronze machi,.ungala eppidi ellaam happy panraanga badhilukku neenga oru nalla padam produce pannungoo

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பரே!

நேசமித்ரன் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவரே :)

Anonymous said...

பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...

R.Gopi said...

Wish you Very Many More Happy Returns of the Day Shankar ji...

மாதேவி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.