Thottal Thodarum

Jul 4, 2012

சாப்பாட்டுக்கடை - சஞ்சீவனம்

ஏற்கனவே ஒரு முறை சென்றிருக்கிறேன்.அப்போதே எழுத வேண்டும் என்று நினைத்து விட்டுப் போனது. ஆனால் இம்முறை நான் சென்ற போது சாப்பிட்டுவிட்டு எழுதியே தீர வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். சஞ்சீவனம் மெடிமிக்ஸ் நிறுவனத்தார் நடத்தும் அற்புதமான உணவகம்.  மிக அருமையான வித்யாசமான உணவுகளை அவர்கள் இயற்கையான சமையல் முறைகளை பயன்படுத்தி, எண்ணெய் இல்லாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை படைக்கிறார்கள். நாங்கள் சாப்பிட்டது ராஜகீயம் எனும் மதிய உணவு.


முதலில் இலையைப் போட்டுவிட்டு, ஐந்து குட்டிக் குட்டி க்ளாஸ்களில் பல விதமான நிறங்களில் திரவங்கள் வைக்கப்பட்டது. இடதிலிருந்து வலதாய் குடிக்க வேண்டும் என்று சொன்னார் அதைப் பரிமாறியவர். நான்கு வகையான, சுவையான பானங்கள். இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, கசப்பு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அடுத்ததாய் ஒர் பவுலில் புட்டு தந்தார்கள். சுவையான கேரள புட்டு, அதிக ஸ்வீட் இல்லாமல் வாயில் போய் ஈஷிக்கொள்ளாமல் அற்புதமாய் இருந்தது. அடுத்த லைனப்பாக வேக வைத்த கூட்டு வகைகளில் நான்கு அயிட்டங்களை வைத்தார்கள். சும்மா சொல்லக்கூடாது ஒவ்வொரு அயிட்டமும் காரம், மணம், குணம் எல்லாவற்றையும் கலந்தடித்திருந்தது. அடுத்ததாய்,  காய் கறி வகைகள் தேங்காய் போடாமல், வேக வைத்த காய்கறிகள் இதுவும் அசத்தலாய் இருந்தது. இந்த அயிட்டங்களில் நீங்கள் எது கேட்டாலும் ரிபீட் செய்யப்படுகிறது. 

அடுத்ததாய், சாம்பார், மோர்குழம்பு, ரசம், ஆகியவற்றுடன் சாதமும் போடப்படுகிறது.. இது இல்லாமல் கேரள சிவப்பரிசி சோறு வேறு. இப்படி பார்த்துப் பார்த்து ஒவ்வொரு உணவையும் தயார் செய்திருக்கிறார்கள் என்பதை இவ்வளவு அயிட்டங்களையும் சாப்பிட்டுவிட்டு திணறிக் கொண்டிருக்காமல் மிக இலகுவாய் நமக்குள் ஜீரணிக்க, அன்று முழுவதும் ஒரு விதமான புத்துணர்ச்சி உடலில் இருந்தது. நாம் சாதாரணமாய் இவ்வளவு உணவுகளை சாப்பிட்டோம் என்றால் அன்று முழுவதும் அதிகம் சாப்பிட்டு விட்டோமே என்கிற ஒர் குற்ற உணர்வும், உடல் முழுவதும் வெயிட்டாகவும், டயர்டாகவும் இருக்கும். ஆனால் இந்த உணவை முழு கட்டு கட்டி அரை மணி நேரத்தில் ஜீரணமாகி உடல் இலகுவாகிவிடுகிறது. விலையும் ஓரளவுக்கு சகாய விலைதான். 220 ரூபாய். இது இல்லாமல் குறைந்த விலையில் கூட இதே உணவுகளில் ஏதோ ஒரு அயிட்டத்தை மட்டும் தருகிறார்கள். அது மட்டுமில்லாமல் மாலை வேலைகளில் தோசை வகைகள், பிரியாணி வகைகள் கூட தருகிறார்கள் உடல் ஆரோக்கியத்துக்கான முறையில் சமைக்கப்பட்டு. அதையும் ஒரு நாள் சாப்பிட்டுப் பார்ப்போம். நிச்சயம் மாதம் ஒரு முறையாவது இம்மாதிரி உணவை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பேணுவோம். சஞ்சீவனம் உணவகம் நுங்கம்பாக்கம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருக்கிறது.
கேபிள் சங்கர்


Post a Comment

15 comments:

Philosophy Prabhakaran said...

இங்கே வருடாவருடம் நடைபெறும் தோசா நைட்ஸ் எனக்கு விருப்பமானது...

நமக்கு ஹெல்த் கான்ஷியஸ்நெஸ் வெளக்கெண்ணையெல்லாம் கிடையாது என்பதால் இவர்களுடைய மற்ற உணவு வகைகள் பிடிப்பதில்லை...

துளசி கோபால் said...

சென்னை வாசத்தில் ஒரு முறை ஓண சத்யைக்குப் போய்வந்தோம்.

அடையார்.

தரக்கேடில்லா கேட்டோ:-)


மேல்விவரம் இங்கே.

http://thulasidhalam.blogspot.co.nz/2009/09/blog-post.html

சுரேகா said...

கேபிள் ஜி!

சஞ்சீவனம் விஸிட் கன்ஃப்ர்ம் ஆகிவிட்டது. தங்கமணி படித்துவிட்டு தேதியும் குறித்துவிட்டார்கள்.
4 டிக்கட் உறுதி! :)

அந்த வகையில்... ‘நீங்க நல்லா வருவீங்க!’

பிரபாகரா..
உங்களுக்கு எதுக்குப்பா ஹெல்த் கான்ஷியஸ்..? தனுஷெல்லாம் லிப்போ செஞ்சா என்ன ஆகும்? :)

Anonymous said...

I am a regular customer to Sanjeevanam for the past 8 yrs. When they introduced the Rajakeeyam meal I think it was Rs 95. They are still maintaining the taste and quality. I tried their body massage some years back which was not worthy.

வவ்வால் said...

cableji,

//விலையும் ஓரளவுக்கு சகாய விலைதான். 220 ரூபாய். //

one meal just "220" rs??!!

very unhealthy food for my purse , body strong but purse weak :-))

P.K.K.BABU said...

ONE MORE OUTLET AT MUGAPPAIR NEAR D A V GIRLS SCHOOL......... YOU FORGOT THE PURE HONEY GIVEN AT THE END OF THE MEAL.(WILL BE POURED IN HAND AND MUST LICKED..................

Cable சங்கர் said...

vavvaal.. நிச்சயம் இது கொஞ்சம் சீப் தான்

rajamelaiyur said...

சென்னை வரும் பொது கண்டிப்பா போய் சாபிடுறேன்

rajamelaiyur said...

இன்று

தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் மட்டமா ?

”தளிர் சுரேஷ்” said...

நல்ல அறிமுகம்! சென்று சுவைக்க தூண்டும் பதிவு!

Damodar said...

Menu Card - Chennai

http://www.cholayilsanjeevanam.com/menu_chennai.html

வே.நடனசபாபதி said...

சஞ்சீவனம் உணவு விடுதி முகப்பேரில் திருவள்ளுவர் சாலையில் AMM Towers என்ற கட்டிடத்திலும் செயல்படுகிறது.

sundar said...

ஏற்கனவே கேள்விப் பட்டும் போய் வரத் தோது படவில்லை நுங்கம்பாக்கம் மட்டும் தான் என்று நினைத்திருந்தேன். இப்போது தான் தெரிகிறது திருவான்மியூர் மற்றும் முகப்பேரில் கூட இருக்கிறதென..அதுவும் உங்கள் போஸ்ட் படித்த பிறகு. நாக்கு எழுந்து நாட்டியமே ஆடுகிறது

பகிர்ந்தமைக்கு நன்றி

சென்னை பித்தன் said...

அடையாரிலும் இருக்கிறது!

Nat Sriram said...

சஞ்சீவனம் மீல்ஸ் 1500 கேலரிஸ் தான் என நடத்துபவர் ஒரு பேட்டியில் சொன்னார். இது கிட்டத்தட்ட நமக்கு ஒருநாளைக்கு தேவையான 2000 கேலரி உணவின் 3/4 பங்கு. அதாவது ஒரே வேளைக்கு. இதெப்படி ஆரோக்ய உணவு என எனக்கு புரியவில்லை. அதுவும் சாப்பிடுபவர்களுக்கு சுகர் இருக்கா,இல்லையா என்ற எந்த கவலையுமில்லாமல் கையில் தேனை விடுவது என்னத்துக்கு?